கட்டிக் கொஞ்சும் அம்மா!!!!!

கட்டிக் கொஞ்சும் அம்மா!!!!!
பிஞ்சு மலர்கள்
கொஞ்சும் மொழியில்…..
பாடம் கற்றுத்தந்த
பாடலை
பாங்காய் பாடினர்……
வண்ணங்களை
வார்த்தையில் குழைத்து
வசந்தமாய் வீசினர்………
“காலைத் தூக்கி
கண்ணில் ஒற்றி
கட்டிக் கொஞ்சும் அம்மா”……
தேனைத் தீயில்
தெளித்ததுபோல்….
மனம் கனத்தது
மெளனமாய் அழுதது….
கண்களில் கண்ணீர்…..
காரணம்………
பாடிய பாலகர்கள்…..
அம்மாவின்
அரவணைப்பை,
அர்த்தத்தை,
அன்பை,
அறிந்திராத
அநாதை குழந்தைகள்!

வனக்கம், தங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை…. வாழ்த்துக்கள்.. !
வீ. எம்
http://arataiarangam.blogspot.com/
நன்றி வீ.எம்.
கலை,
கவிதை எங்கள் மனத்தையும் கனக்கச் செய்கிறது.
அழகிய கவிதை கலை. இந்தப்பாடல் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றிகள்.
நன்றிகள் முத்து, கயல்விழி.