வானவில்!!


வானவில்!!

வண்ணங்களை குழைத்து
அங்கே அழகாய்
வானத்தில் தெளித்தது யார்?

வெயிலும் மழையும்
காதலில் நெருங்கி வர….
ஒளிக்கதிர் எனும்
தளிர்க்கரம் நீட்டி…..
மழைத்துளியை
வெயில் இதமாய் தழுவிட…..
ஒளிச்சிதறல்கள் அங்கே…
வானில் தெறித்தது
வண்ண கோலமாய்……

நேரத்தின் அவசரத்தில்…
மழைதுளி – தன்
இனிய அனுபவத்தில்..
தன்னையே இழந்து செல்ல
கோலங்கள் கரைகிறது
துளிகளினூடே……..

Related posts

Leave a comment

Your comment