ஊமை உள்ளம்!!

உதடுகள்தான் சொன்னது,
உன்னை மறந்து விட்டேனென்று…
உணர்வுகள் அதை மறுத்தும்,
உள்ளம் ஊமையானது….
கண்மூடி இருக்கையிலே,
கன்னத்தில் வழிந்தோடும்
கண்ணீரில்தான் புரிகிறது..
காதலின் தவிப்பும், இந்த
காயத்தின் வலியும்….
Related posts
October 27th, 2005 in
காதல், கிறுக்கியவை

இரண்டாம் பத்தி பரவாயில்லை..இன்னும் மெனக்கெட்டால் நல்ல கவிதையாக வடிக்கலாம்
நன்றி ரவிசங்கர்!
காதல் சமுத்திரத்தில் மூழ்கி முத்தெடுக்க முனைகின்றாள் இவள்!