மொக்கை பத்தின மொக்கை!!

by கலை on September 23, 2008

நீண்ட நாள் கழிச்சு, 3 நாட்களுக்கு முன்னால, நான் ஒரு இடுகை போட்டிருந்தேன். அதைப் பாத்துட்டு என் தம்பி எனக்கு சொன்னது “உன்னோட இடுகை பார்த்தேன்கா, ஆனா அது ஒரு பெரிய மொக்கை”. மொக்கைன்னா என்னன்னு ஓரளவுக்கு புரிஞ்சிருந்ததுனால, “என்னோட இடுகைகள் எல்லாமே மொக்கைதானேடா. இதுல புதுசா என்ன மொக்கை போட்டுட்டேன்”னு கேட்டேன். “அப்படியில்லை, உன்னோட இடுகைகள்ல ஏதாவது ஒண்ணு சொல்லியிருப்பதான” அப்படின்னு சொன்னான். அப்படியே அசந்து போய்ட்டேன் :) . ஏன்னு கேக்கிறீங்களா? அட, எனக்கே தெரியாம நான் ஏதேதோ சொல்லியிருக்கேன் போல இருக்கேன்னுதான் :) .

சரி, அப்ப அதைப் பத்தியும் ஒரு மொக்கை பதிவு போடலாமேன்னுதான் இப்போ இந்த இடுகை எழுத வந்தேன். மொக்கைன்னா என்னன்னு சரியா தெரிஞ்சுக்காம எதையும் எழுதிடக் கூடாதின்னுட்டு, “மொக்கைன்னா என்ன?” அப்படிங்கிற மிக முக்கியமான கேள்வியை கூகிளிடம் கேட்டேன். அவர் கொடுத்த பதில் ஒண்ணே ஒண்ணுதான். அது இதுதான். என்னோட தம்பி எனக்கு சொன்னதன் முழு அர்த்தமும் அந்த இடுகையின் முதல் வரியிலேயே புரிந்து போனது :) . அந்த முதல் வரியில இருந்தது, இதுதான். “பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு. ஆனா சரக்கு எதுவும் இல்ல. அதனால இந்த மொக்கை :) ”. நானும் பதிவு எழுதி ரொம்ப நாளாச்சே, எதையாவதுபத்தி எழுதுவமேன்னுதான் அந்த இடுகையை எழுதினேன் :). அப்ப மொக்கைதான்.

மொக்கை + அகராதி ன்னு போட்டு இன்னொரு தடவை கூகிளிடம் கேட்டேன். அங்கே  முதலாவதா இது  வந்தது.  ‘கணிமை:  தமிழ்  வலைப்பதிவர்  கலைச்சொல்’  னு  வந்தது.  அங்கே போய் அழுத்தினால், ஒன்றையும் காணோம் :( . இத்துடன் மொக்கைக்கான தேடல் முடிவடைந்தது. :)

பி.கு. > இப்படி ஒரு இடுகை போடப் போவதுபத்தி சொன்னதுக்கு தம்பியின் comment, “அப்ப நீ எதையுமே எழுதாம இருந்துடுக்கா” :) . நல்லதை யாரும் சொல்லி கேக்கலாமா? அதான் இடுகையை போட்டுட்டேன். :)

Related posts

Leave a Comment

Previous post:

Next post: