வயதும், அனுபவமும்!!

by கலை on November 12, 2009

உண்மையிலேயே வயதுக்கும், அனுபவத்துக்கும் தொடர்பிருக்கா?

நம்மைவிட பெரியவர்களின் பார்வையில், ”அவருடைய (அல்லது என்னுடைய) வயதென்ன? அவருக்கிருக்கிற (அல்லது எனக்கிருக்கிற) அனுபவம், முதிர்ச்சி உனக்கிருக்கா?” என்ற வார்த்தைகளையும், நம்மைவிட சிறியவர்களின் பார்வையில்,  ”உங்களுக்கு என்னைவிட வயசும் அனுபவமும் அதிகம்தானே, நீங்கதான் சொல்ல வேணும்” என்ற வார்த்தைகளையும், வாழ்க்கையில் ஒரு முறையாவது ஒவ்வொருவரும் கேள்விப்பட்டிருப்போம், இல்லையா? அது உண்மைதானா என்பதில் இன்றைக்கு எனக்கு பலத்த சந்தேகம் வந்திருக்கு :) .

வயசென்னவோ எங்களைவிட மிகவும் அதிகமாக இருந்தாலும், அவர்கள் வாழ்க்கையில் நம்மைவிட அதிகமானவர்களை சந்தித்திருந்தாலும், அவர்கள் வாழ்க்கை அனுபவம் மிக அதிகமாக இருந்தாலும், ஒருவரைப் பற்றி அல்லது ஒரு விடயத்தைப் பற்றி எடை போடுவதில் அவர்களை விட நாம் சில (அல்லது பல சமய்ங்களில்) மிகச் சரியாக இருக்க முடியும் என்பது நான் இன்றைக்கு கண்டு பிடித்த உண்மை :) . இதில் ஆச்சரியம் என்னவென்றால், ஒருவருடன் அதிக காலம் ஒன்றாக வாழ்ந்தவரை விட, ஒரு சில நாட்கள் மட்டுமே நேரில் கண்டு தெரிந்த எனக்கு அவரைப் பற்றி அதிகமாக தெரிந்திருக்கிறது என்பதுதான். எப்படி இது சாத்தியம்? ஏனோ அவர் இப்படித்தான் நடப்பார் என்பதை நான் முன் கூட்டியே கூறினாலும் நம்பத் தயாராக இல்லாமல் இருந்தார்கள். ஆனால் நான் சொன்னதே நடந்தது.

இன்று நடந்த ஒரு நிகழ்ச்சி இந்த பலத்த சந்தேகத்தை எழுப்பியிருந்தாலும், இதைப் பல தடவைகள் உணர்ந்திருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

* என்ன ஏதோ தலையுமில்லாம, காலுமில்லாம கதை சொல்லிக் கொண்டு போறேனோ?? இதுல நான் சொல்ல வாறது என்னெண்டா, வயசுக்கும் அனுபவத்துக்கும் தொடர்பில்லை என்பதுதான் :) . ‘அதுக்கென்ன இப்ப’ எண்டு கேட்டால், இனிமேல் மகளிடம், ”என்ரை வயசென்ன, இதெல்லாம் எனக்குத் தெரியாதா?” எண்டு சொல்லுறதை நிப்பாட்டப் போறன். நல்ல முடிவு, என்ன? :)

Related posts

{ 3 comments… read them below or add one }

ஷ்ரேயா November 13, 2009 at 5:21 am

என்ன நடந்தது என்டு தெரியாம ஒன்டும் சொல்லேலாமக் கிடக்கு :D

Reply

கலை November 13, 2009 at 6:48 am

நடந்தது என்னெண்டு தெரியாட்டாலும், நடக்கப் போறது என்னெண்டு விளங்கிச்சுதானே? அதான் அஞ்சலியிட்ட இனிமேல், ”எனக்குத் தெரியாதா இதெல்லாம்?” என்றோ, ”உங்கட வயசெல்லாம் தாண்டித்தான் நாங்கள் வந்தம்” என்றோ சொல்லாமல் இருக்கிறதுதான் நடக்கப் போவது :)

Reply

ரவி November 13, 2009 at 8:30 am

உண்மை தான். சில பேர் வயதுக்கு மீறிய அப்பாவியாகவும் சில பேர் பிறக்கையிலேயே விசத்துடனும் பிறக்கிறார்கள் :) ஆட்களை எடை போடுவது ஒரு கலை.

Reply

Leave a Comment

Previous post:

Next post: