அஞ்சலியின் இடுகையை மதிக்காத பதிவர் ஹேமா(சுவிஸ்)

by கலை on November 26, 2009

’நான் ஒரு பதிவு பாத்தன்’! – ’இப்படியும் நடக்கிறது’

இப்படி ஒரு இடுகையை நான் எழுத வேண்டி வந்தது கவலையாக உள்ளது :( . எழுதுவோமா வேண்டாமா என்று பல தடவை யோசித்தேன். ஆனாலும் எழுதத்தான் வேண்டும் என்று தோன்றியதால் எழுதுகிறேன்.

எனது இந்த இடுகையை வாசிக்க முன்னர் தயவு செய்து இங்கே இருக்கும் இணைப்புக்களை முதலில் பாருங்கள்.

அஞ்சலியின் ‘ஒரு குட்டித் தோட்டம்’ வலைப்பதிவில், March of the Penguins இடுகை (10.09.2006 எழுதியது).

உப்பு மடச்சந்தி என்ற வலைப்பதிவில் ‘நான் ஒரு படம் பாத்தன்’ இடுகை (23.11.2009 எழுதியது). இந்த இடுகை முதலில் பதிவு செய்யப்பட்டபோது அங்கே இறுதியில் சிவப்பு நிறத்தில் இருக்கும் வரிகள் இருக்கவில்லை. இடுகை ஒரு தடவை முழுமையாக அகற்றப்பட்டு, மீண்டும் பதிவு செய்யப்பட்டபொதே, அந்த வரிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டிருந்தன.

…………………………………………………………………………………………………………………………………………………

23.11.09 காலையில் நான் ஒரு இடுகை பாத்தன். அந்த இடுகையின் தலைப்பு ”நான் ஒரு படம் பாத்தன்”. எழுதியவர் ஹேமா(சுவிஸ்). எழுதியிருந்தது ’உப்பு மடச்சந்தி’ என்ற வலைப்பதிவில். அதில் ‘நானும், அப்பாவும், அம்மாவும் ஒரு பென்குயின் படம் பாத்தம். அது ஒரு நல்ல…’ என்று ஆரம்பித்திருந்தது. முதலில் ‘எங்கேயோ வாசித்த நினைவாயிருக்கே’ என்று தோன்றியது. பின்னர் அந்த இடுகையை திறந்து வாசிக்க ஆரம்பித்தபோது, அஞ்சலியின் இடுகைபோல இருக்கே என்று தோன்றியது. முழுமையாக வாசித்தபின் அஞ்சலியின் குறிப்பிட்ட அந்த இடுகையையும் எடுத்து வாசித்தபோது, அஞ்சலியின் இடுகையில் ஆங்கிலச் சொற்களையும், வேறு சில சொற்களையும் மட்டும் மாற்றி அந்த இடுகை உருவாக்கப்பட்டிருப்பது (மெருகேற்றியது :) என்பது இதுதான்) புரிந்தது. முதலில் அஞ்சலியின் இடுகை பிடித்துப் போய் அதை இங்கே தனது இடுகையில் போட்டிருக்கிறார் என்றே நினைத்தேன். ஆனால் தேடிப் பார்த்ததில் அஞ்சலி பற்றி எந்த ஒரு வார்த்தையும் அங்கே இருக்கவில்லை. அதே வேளை அஞ்சலியின் இடுகைக்கு இணைப்பும் கொடுக்கப்படவில்லை. எனவே இப்படி செய்வது நியாயமல்லவே என்று தோன்றியது. அந்த இடுகையை வாசிக்கும் எவரும் அந்த இடுகை ஹேமாவினால் எழுதப்பட்டது என்றே நினைப்பார்கள். நான் பார்த்தபோது, அங்கே முதல் ஆறு பின்னூட்டங்கள் இருந்ததென நினைக்கிறேன். அதில் அழகாக எழுதியிருக்கிறீர்கள் என்று பாராட்டியிருந்தார்கள். அதற்கும் ஹேமா எந்த மறுப்பும் தெரிவித்திருக்கவில்லை. எனவே  உடனடியாக நேரமில்லாமையால், ஹேமாவிற்கு இதுபற்றி பின்னர் எழுத வேண்டுமென நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் சிறிது நேரத்தில் பதிவர் ரவி அங்கே ஒரு மறுமொழி போட்டிருந்தார். அந்த மறுமொழி பின்வருமாறு இருந்தது.

வணக்கம்,
இந்த இடுகை
http://anjalisplace.blogspot.com/2006/09/march-of-penguins.html என்ற முகவரியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. தயவு செய்து இந்த இடுகையை நீக்குங்கள். அல்லது, மூல இடுகைக்கு இணைப்பு தாருங்கள்.
நன்றி.

ஆனால் அந்த மறுமொழி அங்கே வந்த கொஞ்ச நேரத்தின் பின்னர், ‘நான் ஒரு படம் பாத்தன்’ என்ற அந்த இடுகையே முழுமையாக நீக்கப்பட்டிருந்தது. அஞ்சலியின் இடுகைக்கு இணைப்பு கொடுக்காமல் தனது இடுகையையே முழுமையாக நீக்கியிருந்தார். அவரது அந்தச்செய்கை உறுத்தலாக இருந்தது. அவருக்கு அதுபற்றி தனிப்பட்ட முறையில் எழுத வேண்டுமென எண்ணி மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா எனப் பார்த்தேன் இருக்கவில்லை.

மேலும் பின்னர் அவருடைய வலைப்பதிவில் மட்டிறுத்தல் நடை முறைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. எனவே அன்றிரவே அவருக்கு ஒரு நீண்ட பதில் எழுதினேன். குறிப்பிட்ட அந்தப் பதிவு அகற்றப்பட்டிருந்தமையால், அவரது அதற்கு முந்தைய பதிவான ‘இப்படியும் நடக்கிறது’ (என்ன பொருத்தமான :) தலைப்பு) என்ற பதிவில் எனது பதிலை இட்டேன்.

அதில் அந்த இடுகையின் உள்ளடக்கம் அஞ்சலியின் இடுகையிலிருந்து எடுக்கப்பட்டது என, அஞ்சலி என்ற பெயரைக் குறிப்பிட்டு, அஞ்சலியின் அந்த குறிப்பிட்ட இடுகைக்கான இணைய முகவரியையும் மீண்டும் கொடுத்திருந்தேன் (முதலில் ரவியும் கொடுத்திருந்தார்).

மறுநாள் (24.11.09) பார்த்தால், அதே ”நான் ஒரு படம் பாத்தன்” இடுகை மீண்டும் அங்கே இருந்தது. ஆனால், ரவியின் மறுமொழி அங்கே இல்லை. என்னுடைய மறுமொழியும் அடுத்த பதிவில் வரவில்லை. பதிலாக இடுகையின் இறுதியில் கீழ்வருமாறு இருந்தது. இது புதிதாக அவர் சேர்த்துக் கொண்டது.

”யாரோ ஒரு எங்கள் ஊர்க் குழந்தை எழுதியதாக இருக்கலாம் இது. கற்பனையாகவும் இருக்கலாம். எனக்கு மெயிலில் வந்தது. நான் என்னை அக்குழந்தையாக்கி அதை மெருகேற்றிக்கொண்டது இப்பதிவு.”

ஹேமாவுக்கு உண்மையில் வேறு யாரோ அஞ்சலியின் இடுகையை மின்னஞ்சலில் அனுப்பியதாகவே நம்பினாலும், மின்னஞ்சல் அனுப்பியவர் அஞ்சலியின் இடுகைக்குரிய இணைப்பை இவருக்கு கொடுக்கவில்லை என்றே எடுத்துக் கொண்டாலும், அதை முதலே தனது இடுகையில் அவர் குறிப்பிட்டிருக்கலாம். சரி, அதைத்தான் தவறுதலாகச் செய்யாமல் விட்டு விட்டார் என்றே வைத்துக் கொண்டாலும், ரவியும், நானும் மிகத் தெளிவாக அஞ்சலியின் இடுகையின் முகவரியும் கொடுத்து, அஞ்சலி என்ற பெயரையும் கொடுத்த பின்னரும் கூட, ”யாரோ ஒரு எங்கள் ஊர்க் குழந்தை எழுதியதாக இருக்கலாம் இது” என்றும், ”கற்பனையாகவும் இருக்கலாம்” (கற்பனை என்று எதைச் சொல்கிறார் என்று புரியவில்லை) என்றும் எழுதியது ஏன் எனப் புரியவில்லை.

பின்னர் சிறிது நேரத்தில் பார்த்தால் ஹேமாவின் மறுமொழி ஒன்று இவ்வாறு இருக்கிறது.

ஹேமா said…

இப்பதிவுக்கு அஞ்சலி என்கிற குழந்தையின் பதிவு என்று ஒருவர் அறியத் தந்திருக்கிறார்.நன்றியும் வாழ்த்தும். முடிந்தால் அஞ்சலியின் லிங்க் தர முயற்சிக்கிறேன்.

ரவியும், நானும் அந்த இணைப்பை கொடுத்த பின்னரும், ‘லிங்க் தர முயற்சிக்கிறேன்‘ என்று அவர் எழுதியிருப்பதைப் பார்த்தால் ‘இப்படியும் நடக்கிறது’ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது :) . வேறென்ன சொல்ல?

இதையெல்லாம் பார்த்த பின்னரே எனக்கு அவர் மிகவும் நேர்மையின்மையுடன் நடந்து கொண்டதாய் தோன்றியது. அதுவே இப்பதிவை எழுதத் தூண்டியது. அவர் எங்களது பதில்களைப் பார்த்த பின்னராவது, அவற்றை மட்டிறுத்தியிருந்தாலும் கூட, பின்னர் புதிதாய் பதிவேற்றியபோது, அஞ்சலியின் இடுகைக்கு இணைப்பை கொடுத்திருக்கலாம். அப்படி செய்திருந்தால், அவரின் நேர்மையை எண்ணி இந்தப் பதிவை எழுதாமல் தவிர்த்திருப்பேன்.

ரவியுடன் இது விடயமாகத் தொடர்பு கொண்ட போது, தான் மறுமொழி போட்டபோது அங்கே மட்டிறுத்தல் இருக்கவில்லையென்றும், தான் பின்னூட்டங்களை மின்னஞ்சலில் பெற தெரிவு செய்திருந்தமையால், தனது மறுமொழிபற்றிய அறிவித்தல் தனது மின்னஞ்சலுக்கே வந்துள்ளதென்றும் கூறினார். எனவே அவரிடம் அவர் போட்ட மறுமொழிக்கான அத்தாட்சி உள்ளது. அந்த மின்னஞ்சலின் screenshot அனுப்பியிருந்தார். அதன்படி, ரவி ஏற்கனவே ஹேமாவுக்கு அஞ்சலியின் இடுகைக்கான இணைப்பு கொடுத்திருப்பது தெரிகிறது. நான் போட்ட மறுமொழிக்கு என்னிடம் அத்தாட்சி எதுவும் இல்லை.

ஒரு குழந்தையின் இடுகையில் மாற்றங்களைச் செய்து தனது வலைப்பதிவில் போட்டுவிட்டு, அதற்கு இணைப்பு கொடுக்கவும் தயங்குவது ஆச்சரியமாகவும், அவரது இந்த நேர்மையின்மை அயர்ச்சியாகவும் உள்ளது.

இப்படியுமா இருப்பார்கள்?

Related posts

{ 12 comments… read them below or add one }

ரவி November 26, 2009 at 3:40 am

திருடராய் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. நாம் சுட்டிக்காட்டிய பின்னும் அங்கு மறுமொழிகளில் பாராட்டுகளை அனுமதித்துக் கொண்டு இருப்பது எரிச்சலாக இருக்கிறது.

**

நேற்று இரவு ஓய்வு பெற்ற வழக்கறிஞர் ஒருவர் என்னை அழைத்து, அவருடைய பதிவில் என் இடுகைகள் சிலவற்றை இட அனுமதி கேட்டார். இப்படியும் கூட சிலர் இருக்கிறார்கள்.

Reply

Karthik Murugan November 26, 2009 at 3:57 am

உங்கள் முயற்சிக்கு நன்றிகள். இந்த மாதிரி காப்பியடித்த பதிவுகளை தொடுக்கும் போது rel=”nofollow” என்ற சேர்க்கவும். உங்களை அறியாமலே இப்பதிவுகளுக்கு SEO rank-ஐ கொடுக்குறீர்கள் :)

Reply

ரகுநாதன் November 26, 2009 at 4:04 am

அஞ்சலியின் பதிவை படித்தேன். அது ஒரு படித் தேன்! :)
ரவி அதில் பின்னூட்டம் போட முடியவில்லை . அதனால்தான் இதிலய போட்டன்.
குழந்தை எழுதுவதை பாராட்டாமல், திருடி தன்னுடயை பதிவு போல காட்டிக் கொண்ட அந்த பதிவரை என்ன சொல்லித் திட்டுவது….

Reply

கௌபாய்மது November 26, 2009 at 4:34 am

உண்மையில் இவ்வாறான செய்யகைகள் எனக்குக் கவலையையே தோற்றுவிக்கிறது. தொடர்ந்த ஓரிரு நாள் பாராட்டுக்களுக்காக கேவலம் இவ்வாறான களவுகள். வேறெப்படி இதைச் சொல்வது நீங்கள் சுட்டிக்காட்டியபிறகும் பாராட்டு வெறிக்காக இப்படி நடப்பது.

ம்ம்ம்.. நிச்சயமாக ஹேமா அமைதியாக இருக்கமுடியாது…

Reply

கலை November 26, 2009 at 4:51 am

மறுமொழிகளுக்கு நன்றி.

கார்த்திக்! நீங்கள் குறிப்பிட்ட மாற்றம் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது.

ரகுநாதன், கெளபாய்மது! ஹேமா அஞ்சலியின் அந்தப் பதிவிலிருந்துதான் எடுத்தாரா, அல்லது அவர் சொல்லியிருப்பதுபோல், யாராவது மின்னஞ்சலில் அனுப்பினார்களா என்பது தெரியாது. மின்னஞ்சலில் அனுப்புகிறவர் அஞ்சலியின் இடுகைக்கான இணைப்பை கொடுக்கவில்லை என்பதும் சந்தேகமானதே. ஆனாலும், குறிப்பிட்ட இணைப்பு அவருக்கு ரவியாலும் என்னாலும் கொடுக்கப்பட்ட பின்னரும், அது தனக்கு தெரியாது என்பதுபோல் எழுதியதும், தொடர்ந்து வரும் பாராட்டுக்களை தனக்கானதுமாக ஏற்றுக் கொள்வதுமே எனக்கு மிகவும் உறுத்தலாக இருந்தது. அதனாலேயே இந்தப் பதிவு.

Reply

கண்மணி November 26, 2009 at 4:53 am

ம்ம் என்னத்தைச் சொல்ல?இப்படியும் உண்டு மனிதர்கள்

Reply

திரு November 26, 2009 at 7:22 am

நானும் அவரது ‘இப்படியும் நடக்கிறது’ பதிவில் 24ம் தேதி ஒரு பின்னூட்டம் போட்டிருந்தேன். அது வெளியிடப்படாமல் இருக்கிறது. அதற்கு பிறகு மீண்டும் அந்த பதிவுக்கு ஒரு குறிப்புடன் உயிரூட்டி, பல பின்னூட்டங்களும் வந்துள்ளன. அதனால் அவர் அறிந்தே இதை செய்வதாகவே கருதுகிறேன். வெளியிடப்படாத எனது பின்னூட்டம்…

//கடன் வாங்கின காசு வராததுக்கு கோபப்படும் நீங்க, ஒரு குழந்தை எழுதிய பதிவை உங்க பெயரில் போட்டது மட்டும் சரியா? சம்பந்தப்பட்டவங்க சுட்டிக்காட்டியதும் கமுக்கமா பதிவையே எடுத்திட்டீங்க. ஆனாலும் நீங்க செய்தது பெரும் தவறு. பிறரது படைப்புகளை பயன்படுத்தும் போது அவர்கள் பெயரோடு போடுவது தான் படைப்புரிமையை மதிக்கும் செயல். ஒரு வரியாக இருந்தாலும் அது பொருந்தும். சின்ன பிள்ளையின் பதிவை எடுத்து மாற்றங்கள் செய்து உங்க பெயரில் போட்டது எந்தவிதத்திலும் நியாயமில்லை.//

மீண்டும் மறுநாள் அவருக்கு எழுத நினைத்து, நான் போடாமல் விட்டது… இங்கேயே பதிவு செய்கிறேன்..

//ஹேமா,

இந்த பதிவு அஞ்சலியுடையது. மூலப்பிரதியை மாற்றி சில வார்த்தைகளை மட்டும் சொருக அஞ்சலியிடம் அனுமதி வாங்கினீர்களா? இது அஞ்சலியின் பதிவு என்று சுட்டி கொடுப்பதில் என்ன தயக்கம் உங்களுக்கு?

அஞ்சலியிடமிருந்து இந்த பதிவு எடுக்கப்பட்டுள்ளதை நேற்று (24 ம் தேதி) பின்னூட்டம் வழியாக தெரிவித்தும், அந்த பின்னூட்டத்தை நீங்கள் இதுவரையில் வெளியிடவில்லை. அது போகட்டும்.

ஆனால், ஒரு குழந்தையின் ஆக்கத்தை உங்கள் பெயருக்கு மாற்றுவது குற்றமில்லையா? அதை சுட்டிக்காட்டியதும் மீண்டும், மீண்டும் பூசி மொழுகுவது நீங்கள் அறிந்தே இந்த குற்றத்தை செய்வதை காட்டுகிறது.//

==
படைப்புரிமை விசயத்தில் தமிழர்கள் மிக மோசமானவர்களென்றே கருதுகிறேன். பதிப்பகங்கள், படைப்பாளிகள், ஊடகங்கள், தலைவர்கள், வலைப்பதிவாளர்கள் எவரும் இதற்கு விலக்காக இல்லை. அடுத்தவர் ஆக்கங்களை பயன்படுத்துகிற போது குறைந்தபட்சம் ஒரு தகவலை/நன்றியை தெரிவிக்கும் நேர்மையும் இருப்பதில்லை. வலைப்பதிவுகள் அதிகமான இக்காலத்தில் இவை மிக சாதாரணமாக நிகழ்கிறது.

Reply

லோஷன் November 26, 2009 at 10:30 am

ஈனத் தனமான செயல்.. இப்போது இது சர்வசாதாரணமாக மாறி வருகிறது..
மற்றவர் உழைப்பில் தாம் பெருமை தேடும் இந்த செயலை வெளிக்கொண்டுவர நாம் ஒன்று படவேண்டும்..

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்..
இனிமேலும் இந்த திருட்டுப் பதிவர்களின் பதிவுகளை நாம் அனைவரும் புறக்கணிக்க வேண்டும்.

Reply

கௌபாய்மது November 26, 2009 at 11:59 am

நான் அவவுக்கு இரண்டு பின்னூட்டங்கள் போட்டும் அவற்றை அனுமதிக்கவில்லை. என்ர அடுத்த பதிவில இதைப் பற்றி எழுதுவன். கீழ இருக்கிறதெல்லாம் அவவின்ர “இப்படியும் நடக்குமா” என்ற பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள். அப்படியே இங்கும் பொருந்துகின்றன்.

நிரம்ப கடுப்பாயிருக்கு கலை. இவ்வளவு குறிப்பிட்டும் கமுக்கமாய் இருக்கிறதை நினைக்க. :(

நையாண்டி நைனா said…
இது சில பேருக்கு பொழுது போக்கு…

16 November, 2009

S.A. நவாஸுதீன் said…
இப்படியுமா நடக்கிறது?

16 November, 2009

க.பாலாசி said…

அடக்கொடுமையே….பெண்களிலும் இப்படி இருக்கிறார்கள். நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கிறது.

நல்ல பாடம் உங்களுக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது என்றே எண்ணுகிறேன்.

16 November, 2009

கேசவன் .கு said…
உஷார்ர்ர்ர் ………….. படுத்தியமைக்கு நன்றி!

16 November, 2009

16 November, 2009

அன்புடன் அருணா said…
:(

16 November, 2009

தேவன் மாயம் said…
we have to be cautious!

16 November, 2009

சந்ரு said…
சிலர் இதனை ஒரு பிழைப்பாகவே வைத்திருக்கின்றனர் அவர்களை திருந்தினால்தான்.

16 November, 2009

டம்பி மேவீ said…
ரொம்ப கொடுமையல இருக்கு…… என்னை கூட நிறைய பேர் ஏமாற்றி இருக்கிறார்கள்…… .

16 November, 2009

டம்பி மேவீ said…
“திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் ; திருட்டை ஓழிக்க முடியாது” அன்றே பட்டு கோட்டை சொல்லிவிட்டார்

16 November, 2009

16 November, 2009

பிரியமுடன்…வசந்த் said…
ம்ம்..இப்படியும் சிலர்…

பொழுதுபோக்காய் செய்கிறார்களா?

இல்லை இதுவே தொழிலா?

நாமதான் ஜாக்கிரதையா இருக்கணும்

16 November, 2009

ber, 2009

16 November, 2009

தமிழ்ப்பறவை said…
எத்தனை பேரு இப்படிக் கிளம்பிருக்காங்கன்னு தெரியலையே.. இதுக்கு ஒரு முடிவே கிடையாதா…?

16 November, 2009

கவிக்கிழவன் said…
நான் இருவரிடம் ௨ இருவரும் நன்றாக உளைபவர்கள் என்ன பண்ண மறந்திடன்

16 November, 2009

இராகவன் நைஜிரியா said…
மிக அழகாக உங்களை மட்டுமல்ல, எல்லோரையும் ஏமாற்றி இருக்கின்றார்.

கொடுமை.. கொடுமை..

16 November, 2009

சின்ன அம்மிணி said…

நம்ம எவ்வளவு ஜாக்கிரதையா இருந்தாலும் இந்த மாதிரி ஒரு சிலர் ஏமாத்திடறாங்க.

16 November, 2009

16 November, 2009

கவிநயா said…
truth is stranger than fiction – என்பது திரும்பத் திரும்ப நிரூபிக்கப் படுகிறது. கவனமாய் இருங்கள்.

16 November, 2009

Reply

கலை November 27, 2009 at 1:36 am

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கண்மணி, திரு, லோஷன், கெளபாய்மது

Reply

கலை November 27, 2009 at 8:35 am

மது! நீங்கள் உப்பு மடச்சந்தி பதிவில் குறிப்பிட்ட இடுகையில் உங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்ததைப் பார்த்தேன். நன்றி.
அதற்கு ஹேமா கொடுத்திருந்த மறுமொழியையும் பார்த்தேன்.
ரவியின் மறுமொழியை அவர் பார்த்து விட்டு, உடனடியாக தனது இடுகையை அன்று நீக்கிவிட்டார். அந்த இடுகை அங்கே இல்லாத காரணத்தால், அன்றே, நான் வேறொரு இடுகையில் போய் எனது பதிலைப் போட வேண்டி வந்தது. நானும் அஞ்சலியின் பதிவுக்கான இணைப்பை அவருக்கு கொடுத்திருந்தேன். இத்தனைக்கும் பின்னர் ‘யாரோ ஒரு குழந்தை எழுதியது’ என்ற குறிப்புடன் மீண்டும் அதையே பதிவு செய்தார். பதிவு செய்துவிட்டு, பின்னர் ‘அஞ்சலி எழுதியது என்று யாரோ ஒருவர் அறியத் தந்திருக்கிறார்’ என்கிறார். அந்த ஒருவர், அல்லது இருவர் :) அஞ்சலியின் பக்கத்துக்கான இணைப்பையும்தானே தந்தார்கள். அப்படியிருக்க, ‘முடிந்தால் அஞ்சலியின் லிங்க் தர முயற்சிக்கிறேன்’ என்றிருக்கிறார். இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? இதில் ‘செய்யாத பிழைக்கு கிடைத்த அடி’ என்று குறைப்படுகிறார். என்னத்தை சொல்ல. இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்வதைத் தவிர :)

Reply

எம்.கே.முருகானந்தன் November 29, 2009 at 6:53 pm

திருட்டுப் பதிவு பற்றி வெளிப்படுத்தியதற்கு நன்றி.

Reply

Leave a Comment

Previous post:

Next post: