Archive for 'இலங்கை'
எரியும் நினைவுகள் - யாழ் நூலகம்!
எரியும் நினைவுகள்!
எமது யாழ்நூலக எரிப்பு பற்றி, சோமீதரன் என்ற இளைஞனின் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் ‘எரியும் நினைவுகள்’ என்ற விவரணப் படம் பார்த்தேன்.
நாட்டின் அமைதியற்ற சூழ்நிலையில், யாழ் நூலகம்பற்றி பல்வேறுபட்ட தகவல்களையும் சேகரித்து, இவ் விவரணப் படத்தை அவர் தயாரித்ததே பெரிய விடயம் என தோன்றியது. யாழ் நூலக எரிப்புக்கு சில நாட்கள் முன்னரே பிறந்த இவருக்கு, இப்படி ஒரு வரலாற்றுப் பதிவை ஆவணப் படுத்த வேண்டும் என்று தோன்றியது நிச்சயம் பாராட்டப் படவேண்டிய விடயமே.
பிரசித்தி பெற்ற, பழம் பெருமை வாய்ந்த [...]
Posted: November 3rd, 2008 under அறிமுகம்!, இலங்கை, சமூகம், படங்கள்.
Comments: none
இலங்கைத் தமிழர் பிரச்சனையில்!
இன்று காலையில் மின்னஞ்சல் பெட்டியை திறந்தால் ஒரே ஒரு மின்னஞ்சல். கூடப் படித்த ஒரு சிங்கள நண்பரிடமிருந்து வந்திருந்தது. அந்த நண்பர்பற்றி கூற வேண்டுமானால், மிகவும் நல்லவர். கூடப் படித்த காலங்களில் சக தமிழ் மாணவர்களுக்காக எல்லா விதத்திலும் பேசவும், உதவிகள் செய்யவும் தயங்காதவர். தமிழர்களுக்கு எங்கே துன்பம் நேர்ந்தாலும், எங்களுக்கு முதலேயும், எங்களை விடவும் அதிகமாயும் அதற்காக கவலை கொள்பவர்.
சில காலத்திர்கு முன்னர், அவருடனும், வேறு சில அவரைப் போன்ற சில சிங்கள நண்பர்களுடனும், மின்னஞ்சல் மூலமாக இலங்கைப் பிரச்சனைபற்றி ஒரு பெரிய தொடர் விவாதம் போய்க் கொண்டிருந்தது. Australia வில் வாழும், தமிழர்களுக்காக குரல் [...]
Posted: October 14th, 2008 under இலங்கை.
Comments: 2



