உயிர்ப்பு » குழந்தை

என் செல்லக் குட்டிம்மா!
நேற்றைக்கு என் செல்லக் குட்டி மகளுடன் சின்னதாய் ஒரு குட்டிச் சண்டை.

அந்தச் சண்டையின் காரணமாய், என்னுடைய அறைக்குள்ளே போய் இருக்கும்படி சொன்னேன். இல்லை வெளியே வரப் போகிறேன் என்றாள். வேண்டாமென்றும், ஒரு 15 நிமிடங்கள் இருந்துவிட்டு வரும்படியும் கூறினேன். நடந்த விடயத்தை அவள் மட்டுமல்லாமல், நானும் மீண்டும் யோசிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் அது. 15 நிமிடத்தின் பின்னர் அவள் வெளியே வந்தபின்னர், நான் எதையோ எடுக்க உள்ளே போனேன். அங்கே கிடைத்த ஒரு குட்டி தாளில், அங்கே கிடைத்த ஒரு பேனாவை எடுத்து, ‘I love you, I love you’ என்று எழுதி எனது புத்தகம் ஒன்றின் மேல் வைத்திருந்தாள்.

பின்னர் இருவரும் வெளியே போனோம். ஒரு மணி நேரத்தின் பின்னர், வீடு திரும்பும்போது ஆறுதலாய், நடந்த விடயங்களைப்பற்றி அவளிடம் சமாதானமாகப் பேசினேன். பின்னர் வீடு வந்து குளித்து, சாப்பிட்டு படுக்கைக்குப் போனதும், அவசரமாய் ஒரு தாள் எடுத்து எழுதினாள். ”அப்படி என்ன எழுதுறீங்க?” என்று கேட்டேன். பதிலில்லை. எனக்கு காட்டாமல் ஒளித்து ஒளித்து எழுதினாள். எழுதி முடித்ததும் என்னிடமே கொண்டு வந்து தந்தாள்.

அதில் சின்னதாய் ஒரு கடிதம்.

To my dear mother,

You always love me and kiss me,

But will never, ever miss me.

You are nice and pretty,

and you are also witty.

You are posh and kind,

And you have good thought in your mind,

I do not know what to write,

But one thing

WE SHOULD NOT FIGHT

By: Amma’s favourite Kutty

அன்பாக அணைத்து முத்தமிட்டேன். “நான் அப்பிடி செய்ததுக்கு Sorry அம்மா” என்று சொல்லி முத்தம் தந்து விட்டு, அந்தக் கடிதத்தை கடைசிவரை தொலைக்காமல் வைத்திருக்க வேண்டும் என்று அன்பாய் உத்தரவிட்டுவிட்டு, படுத்து, உடனேயே தூங்கி விட்டாள் என் செல்ல மகள்.

10 Comments

At February 5, 2010, Vidhoosh wrote:

ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கு. வாழ்த்துக்கள்.

At February 5, 2010, Varadaradjalou wrote:

நெகிழவைத்துவிட்டது உங்கள் இந்த பதிவு.

குட்டியுடன் இனி சண்டை போடாதீர்கள், ப்ளீஸ்

At February 5, 2010, sandanamullai wrote:

Very touchy!!

At February 5, 2010, aruna wrote:

ஆஹா...குட்டிம்மா கலக்குறாங்க!

At February 5, 2010, `மழை` ஷ்ரேயா wrote:

நல்லாருக்கு.

இதெல்லாம் பொக்கிசச் சாமான்... பத்திரமா வைச்சிருப்பீங்க என்டு தெரியும். அம்மாமாருக்குக் கை வந்த கலை இது. :)

At February 7, 2010, விஜயநரசிம்மன் wrote:

கவிதை அழகென்றால், அந்தக் குட்டிக் கவிதாயினி அதைவிட அழகு...

அழகான நிகழ்வு... ஒரே ஒரு சின்ன வருத்தம், குழந்தை ஆங்கிலத்தில் எழுதியது, ”குழந்தைக்கு தமிழ் கற்றுக்கொடுங்கள் - கவிதை எழுதும் அளவிற்கு” -என்று நான் உங்களைக் கேட்டுக்கொண்டால் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன்! அழகான ஒரு குட்டிக் கவிதாயினி கிடைக்கப்பெற்றால் தமிழ் மிகவும் பேறுபெறும் - அதற்காகவே சொல்கிறேன்!

பதிவிற்கும் பகிர்விற்கும் மிக்க நன்றி!

விஜய் :)

At February 9, 2010, கலை wrote:

பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் நன்றிகள்.

விஜயநரசிம்மன்!

மகள் தமிழில் நன்றாக கதைக்கவும், அத்தோடு கொஞ்சமாய் எழுதவும், வாசிக்கவும் தெரிந்து வைத்திருக்கிறாள். சின்ன சின்ன கவிதைகள்கூட எழுதியிருக்கிறாள். அம்மம்மா, தாத்தாவிற்கு, (தனக்குத் தெரிந்த) அழகு தமிழில் குட்டிக் கவிதை கூட எழுதிக் கொடுத்திருக்கிறாள். தொடர்ந்து தமிழில் எழுத உற்சாகப்படுத்தி வருகின்றேன். பார்க்கலாம்.

At March 6, 2010, Karitha Shalee wrote:

மிகவும் அருமையான பதிவு

வாழ்த்துக்கள்

At April 24, 2010, பாலாஜி (மேம்) wrote:

என் குட்டிம்மா நினைவு வந்து விட்டது!

மனமார்ந்த நன்றி!

At April 24, 2010, VELU.G wrote:

அருமையான பதிவு

இது போல் குழந்தைகளைப் பற்றி எவ்வளவு வேண்டுமனாலும் படிக்கலாம்

நன்றி

Related posts

No related posts.

என் குட்டித் தேவதையின் நாடு!
“அம்மா! நான் எனக்கு ஒரு country வைச்சிருக்கிறன்” என்று மகள் வந்து என்னிடம் சொன்னபோது, எனக்கு சரியாகப் புரியவில்லை. பிறகு ‘என்ன அது’ என்று விளக்கமாக கேட்டபிறகு புரிந்தது. அவள் தனக்கு பிடித்தமான வகையில் ஒரு நாட்டை கற்பனையில் உருவாக்கி வைத்திருக்கிறாள்.

அந்த நாடு ஒரு மழைத்துளி வடிவமாம். அழகாத்தான் இருக்கும். நாங்க இலங்கையை மாங்காய் வடிவம் என்று படித்தது நினைவுக்கு வந்தது. அதன் பெயர் ”தாய் மிலோ கனாய் ரோ’ (Thai Milo Canai Ro) வாம். ”என்னம்மா இப்படி ஒரு வாயில நுழையாத பெயராக்கிடக்கு? என்று நான் கேட்டேன். “அது Chinese மாதிரி ஒரு language. ஆனா Chinese இல்லை. அதான் அப்பிடிப் பேர்” என்று பதில் கிடைத்தது. அட, ஏதோ புரியாத மொழியில் (அவளுக்குமே தெரியாத மொழிதான்,   ) அந்த நாட்டின் பெயரை எழுதி வேறு காட்டினாள். ஏதோ கோடுகோடா எழுதினாள். (இந்த இடுகையை எழுதிக் கொண்டிருந்தபோது, திடீரெனத் தோன்றியதால், அந்தப் பெயரை கூகிளின் மொழி மாற்றியில் போட்டுப் பார்த்தேன். இப்படி வந்திருக்கு 泰国米洛煎饼滚装 .   யாராவது சீனமொழி தெரிந்தவர்கள் இதற்கு என்ன அர்த்தம் என்று சொல்லிட்டுப் போங்கப்பா).

மகள், அவளுடைய மாமாக்கும் தன்னுடைய நாட்டைப் பற்றி சொல்லியிருந்தாள். மாமா அவளுக்கு அனுப்பின வாழ்த்து அட்டையின் உறையில The Little Princess, Thai milo kanai ro என்று எழுதியிருந்தார். பார்த்து அவவுக்கு நல்ல மகிழ்ச்சி.

சரி, அவளுடைய அந்த நாட்டின் பெயருக்கு அவள் கொடுத்த ஆங்கிலப் பெயர் The Dragen City. நானும் Thai Milo Canai Ro என்ற பெயர் எதை குறிக்கும் என்று தேடிப் பார்த்தேன். வேறு என்ன வேலையில்லாத வேலைதான்  . Thai என்பதை தேடியபோது, அது முதலாவதா, ஆங்கில விக்கிப்பீடியாவில் தாய்லாந்து பற்றின கட்டுரையில் கொண்டுபோய் விட்டது. அங்கே இப்படி Thai க்கு விளக்கம் கொடுத்திருக்கு.

The word Thai (ไทย) is not, as commonly believed, derived from the word Tai (ไท) meaning “freedom” in the Thai language; it is, however, the name of an ethnic group from the central plains (the Thai people).[citation needed] A famous Thai scholar argued that Tai (ไท) simply means “people” or “human being” since his investigation shows that in some rural areas the word “Tai” was used instead of the usual Thai word “khon” (คน) for people.[13] The phrase “Land of the free” is derived from Thai pride in the fact that Thailand is the only country in Southeast Asia never colonized by a European power.

பரவாயில்லை, என்னமோ தேடிப் போய், இன்றைக்கு புதுசா ஒரு விசயம் தெரிந்து கொண்டன். தென்கிழக்காசிய நாடுகளிலேயே காலனியாதிக்கத்துக்கு உட்படாத ஒரே நாடு தாய்லாந்தாம். ‘Thai’ என்பது ‘சுதந்திரம்’ என்பதைக் குறிக்குமாக இருந்தால், மகள் தன்ரை நாட்டுக்கு மிகப் பொருத்தமாத்தான் பெயர் வைச்சிருக்கிறாள்  .

அடுத்து Milo க்கு அவள் சொன்ன உச்சரிப்பு ‘மிலோ’. ஆனால் எனக்கு இதைப் பார்த்தால் நினைவு வருவது மைலோ. Chocolate கலந்த பால் மா. இலங்கையில இருக்கேக்கை அது குடிச்சிருக்கிறன். அதை தேடினால், அதுவும் அந்த பானம்பற்றி சொல்கிறது. மகளும் தன்னுடைய நாட்டு chocolate பற்றி சொல்லியிருக்கிறாள். அது பிறகு சொல்லுறன்.

அடுத்தது, Canai என்னெண்டு தேடினால், சிங்கப்பூர், மலேசியாவின் ஒரு வகை ரொட்டி உணவாம். அடுத்தது Ro வைத் தேடினால் என்னவோ முக்கியமில்லாமல் வந்தது. அதனால அவளுடைய நாட்டை அவள் விபரிச்ச விதத்துக்கு இப்ப போவம்.

அடடா, நான் எழுதியதில் ஒரு பிழை விட்டிட்டேனாம். ம்ம்ம். தன்னுடைய நாடு எப்படி என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறாள்  . Thai milo kanai ro என்று எழுத வேண்டுமாம். எழுத்துப் பிழையில்லாம, சின்ன எழுத்து பெரிய எழுத்து வேறுபாட்டோட எழுத வேணுமாம்  . Kanai என்று தேடினால், Mika Kanai என்ற யப்பான் நாட்டு பாடகரைப் பற்றி வருகிறது.

அவளுடைய நாட்டுல Government என்று பெரிதாக ஒன்றுமில்லையாம். ஏனெண்டால் ஆக்களெல்லாம் நல்ல சுதந்திரமா இருக்கினம். ரெண்டே ரெண்டு பேர்தானாம் Govt. ல ஒன்று அவள். இன்னொரு ஆளை இப்பதான் தேடிக் கொண்டு இருக்கிறாவாம். அங்க எல்லாம் எல்லாருக்கும் சொந்தமாம்.

எல்லா பழங்களும் ஒரே மரத்தில காய்க்குமாம். தனித்தனி மரமெல்லாம் இல்லையாம். அங்க Chocolate மாதிரி வெள்ளை நிறத்தில ஒரு உணவு இருக்காம். அது இனிப்பாக இருந்தாலும், அதிகம் உண்டால், உடலுக்கு தீங்கு தரக்கூடிய sugar இல்லையாம். அங்க பொதுவான இடங்களிலெல்லாம் மரக்கறி பயிரிட்டிருக்குமாம். யாரும் எங்கயிருந்தும் எடுத்துக் கொண்டு போகலாமாம். அதனால கடையில் மரக்கறி வாங்கத் தேவையில்லையாம். தனிய மீன், இறைச்சி வகைகள்தான் கடையில வாங்க வேணுமாம். அந்த நாட்டில அடிக்கடி Food festival நடக்குமாம்.

அங்க மின்சாரம் எடுக்க solar energy, geothermal energy, windmill, biomass தான் பாவிக்கிறாங்களாம். மோட்டார் வண்டிகளில எல்லாம் solar panels பூட்டி இருக்குமாம். அதுல இருந்து எடுக்கிற சக்தியிலதான் வண்டிகள் ஓட்டப்படுமாம்.

அங்க மரமெல்லாம் வெட்ட சட்டம் அனுமதிக்காதாம். அதால ஒருவரும் வெட்டுறதில்லையாம்.

நாட்டு தேசிய உடையை என்னவோ நிறைய சொல்லி விபரித்தாள். அது கொஞ்சம் யப்பான் உடையும், கொஞ்சம் இலங்கை உடையும் கலந்து இருக்குமாம்.

நாட்டின் காலநிலை, இலங்கையில் மாதிரி நிறையநாள் சூரியன் வருமாம். சில நாட்கள் மட்டும் மழை பெய்யுமாம். சில இடங்களில snow உம் இருக்குமாம். அப்பதானே snow விளையாட்டுகளும் விளையாடலாம்.

Currency பற்றியும் நிறைய விளக்கம் கொடுத்தாள். அந்த currency க்குப் பெயர்… (ம்ம்ம், இப்ப மறந்து போனன், பிறகு கேட்டு எழுதுறன்).

இப்படி இன்னும் என்னென்னவோ இரசிக்கும்படியான விசயங்கள் எல்லாம் நடக்குது அவளின்ரை நாட்டில.

நல்ல நாடுதான், இல்லையா?

10 Comments

At December 16, 2009, kavitha wrote:

ungal kutti devathaiyin naadu migavum alagu

knjm recomment pannunga

engalukkum konjam idam koddukka solli

At December 16, 2009, kavitha wrote:

alaguuuuuuuuuuuuuuuuu

At December 16, 2009, kavitha wrote:

knjm recommend pannunga

engalukkum konjam idam kodukka solli

ungal kutti devathaiyidam

At December 16, 2009, திரு wrote:

泰国米洛煎饼滚装 = Thailand Milo pancake Ro-Ro (source: google translator) :)

குழந்தைகளின் கற்பனைகளில் தான் எவ்வளவு சமத்துவமும், இயற்கை பேணலும்.  குழந்தைகளால் மட்டுமே இத்தகைய உலகை உருவாக்க முடிகிறது. ஆனாலும்  வாசிப்பு, கேள்வி, அனுபவ அறிவுகளின் பாதிப்பு குழந்தைகளின் கற்பனைகளிலும் இருக்கிறது.

மகளின் கற்பனை வளம் அருமை. குழந்தைகளிடமிருந்து அறிய நிறையவே இருக்கிறது.

At December 16, 2009, sandanamullai wrote:

மிகவும் அருமையான கற்பனை!

மகளின் கற்பனைத்திரண் வியக்க வைக்கிறது! வாழ்த்துகள்!!

At December 16, 2009, அடலேறு wrote:

குழந்தைகளின் உலகம் தான் எவ்வளவு அழகானது.

At December 16, 2009, `மழை` ஷ்ரேயா wrote:

அந்த நாட்டில குடியேற என்ன செய்ய வேணும்? :O)

At December 16, 2009, கலை wrote:

ஆம், உண்மைதான், குழந்தைகளின் உலகம் மிக மிக அழகானது. அதை மீண்டும் அடைய முடியாதா என்ற ஏக்கம் எப்போதும் என்னிடம் இருக்கிறது.

//அந்த நாட்டில குடியேற என்ன செய்ய வேணும்? :O)//

கொஞ்சம் பொறுங்கோ, மகளிட்டை கேட்டுச் சொல்லுறன். ஏனெண்டா, அவள்தான் அங்க Govt. ல இருக்கிற ஒரே ஆள் :)

At December 16, 2009, ரவி wrote:

//எல்லா பழங்களும் ஒரே மரத்தில காய்க்குமாம். தனித்தனி மரமெல்லாம் இல்லையாம்.//

இந்த மாதிரி யோசனை எல்லாம் ஏன் நமக்கு வர மாட்டேன்குது? உண்மையிலேயே பெரியவர்கள் கற்பனை வறண்டு போனவர்கள் தான்.

ஆனா, எனக்கு இப்ப ஒன்னு தோணுது.

அவங்கட நாட்டில் ஒரே ஒரு இறுவட்டு வாங்கினா உலகின் எல்லா படம் காட்டுற மாதிரி, ஒரே ஒரு புத்தகம் வாங்கினா உலகின் எல்லா இலக்கியங்களும் படிக்கிற மாதிரி வசதி உண்டா :)

//அங்க பொதுவான இடங்களிலெல்லாம் மரக்கறி பயிரிட்டிருக்குமாம். யாரும் எங்கயிருந்தும் எடுத்துக் கொண்டு போகலாமாம். அதனால கடையில் மரக்கறி வாங்கத் தேவையில்லையாம்.//

இப்பவும் உலகின் பழங்குடிப் பகுதிகளில் இப்படித்தான்.  நகர நாகரிகம் தான் சமத்துவத்தைக் குலைத்து விட்டது.

At December 19, 2009, Karitha shalee wrote:

Really Nice, Dream of your girl will come true.

Related posts

No related posts.

குட்டி இளவரசன்!
‘The Little Prince’ புத்தகம் வாசித்தேன். மீண்டும் நிறைய வாசிக்க ஆரம்பிக்க வேணும் என்று சொல்லிவிட்டு, சும்மா இருக்காம, நான் வாசிக்கத் தொடங்கினதே பெரிய விசயம். கதை என்னவோ சிறுவர்களுக்கான கதை போல இருந்தாலும், மிகப் பெரிய விசயங்கள் எல்லாம் சொல்லப்பட்டிருப்பதாகவே தோன்றுகின்றது. பெரிய விசயங்களை மிகவும் எளிமையாக சொல்லியிருக்கு. சின்ன சின்னதாய் வரையப்பட்ட படங்களுடன் கதை அழகாக பயணிக்கிறது.

The little Prince கதையில, கதையைச் சொல்பவர், தான் 6 வயதில் ஒரு படம் வரைந்ததாகவும், அந்தப் படம் பெரியவர்களுக்குப் புரியவில்லை என்றும் சொல்லிவிட்டு, பெரியவர்களுக்கு எதுவும் இலகுவாக புரியாதென்றும், அவர்களுக்குப் புரியுற மாதிரி எதையும் செய்யுறது இலகுவான காரியமில்லை என்றும் சொல்கிறார். பெரியவர்களுக்கு புரிய வைக்கிறதென்றால், பெரிய விளக்கங்கள் எல்லாம் கொடுக்க வேணுமாம்  . மகள் சில விசயங்களை எனக்கு சொல்ல முயற்சித்துவிட்டு, “என்ன நான் சொல்லுறது உங்களுக்கு விளங்கேல்லையா” என்று பொறுமையிழந்து கேட்பதுதான் எனக்கு நினைவில் வந்தது.

ஆறு வயதில தான் வரைந்த படத்தை ஒருவரும் பொருட்படுத்தாமல் விட்டதால, தான் பெரிய ஒரு ஓவியராக வரும் ஆசையை, தனக்கு மிகப் பிடித்த தொழிலை தான் துறந்துவிட்டதாகக் குறிப்பிடுகிறார். பிறகு பெரியவர்களுக்குப் பிடித்த மாதிரி நான் ஒரு விமான ஓட்டியாக ஆகிவிட்டேன் என்கிறார். இந்த இடத்தில மகள் முதன் முதலில் வரைந்த படத்தை மிகவும் கவனமாக வைத்திருந்து, இப்போது 8 ஆண்டுகளுக்குப் பிறகு, அவளுடைய பாடசாலை வேலைக்காக, ‘Time line of my life’ செய்வதற்கு கொடுத்தது மகிழ்ச்சியாக இருந்தது. அதற்கு முதலும் வரைந்திருந்தாலும் (அல்லது கிறுக்கியிருந்தாலும்), இன்னதுதான் என்று சொல்லி வரைந்த முதல் படங்கள் இவைதான்.

இது ஒரு மரமாம்.

இது ஒரு பெண்மணியின் முகமாம்.

அது மட்டுமில்லை, The Little Prince கதையில அவர் மேலும் சொல்கிறார், பெரியவர்களுக்கு எதையும் எண்களுடன் சேர்த்துத்தான் யோசிக்கத் தெரிகிறதாம். அதுக்கு ஒரு உதாரணமும் சொல்கிறார். ஒரு புதிய நண்பனைப் பற்றி பெரியவர்களிடம் சொன்னால், “அவனது குரல் எப்படி இருக்கும்? அவனுக்கு என்ன விளையாட்டுகள் பிடிக்கும்? அவன் வண்ணத்துப் பூச்சிகள் சேகரிக்கிறானா?” என்றெல்லாம் கேட்பதை விடுத்து, “அவனுக்கு எத்தனை வயது? அவனுக்கு எத்தனை சகோதரர்கள்? அவனது அப்பா எவ்வளவு உழைக்கிறார்?” என்று ஏதாவது எண்களுடன் தொடர்பாகவே பேசிகிறார்களாம். பலர் பேசும்போது இதை உண்மையிலேயே இலகுவாக அவதானிக்க முடியும். வெறும் எண்களையே அவர்கள் மனம் சிந்திக்கிறது. அப்படி பலரும் பேசுவதுடன் நின்று விடாமல், எண்களை நோக்கியே தமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்கின்றார்கள். குழந்தைகள் உலகம் தனித்துவமானது. எத்தனை எளிமையானது. பெரியவர்களானதும் எப்படி நாமும் குழந்தைகளாக இருந்தோம் என்பது மறந்து போகிறது.

ஒருவர் எத்தனை பெரிய காரியத்தைச் செய்தாலும் சூழலுக்கேற்ற அவரது நடை, உடை, பாவனை முக்கியம் என்பதை, 1909 இல் B-612 என்ற சிறுகோளை கண்டுபிடித்த ஒரு துருக்கி வானியலாளரின் அறிக்கையை, அவர் துருக்கி ஆடையில் சென்று வெளியிட்டபோது முதலில் ஏற்றுக் கொள்ளாதவர்கள், பின்னர் நாகரீகமான உடையில் சென்று வெளியிட்டபோது, அதே அறிக்கையை ஏற்றுக் கொண்டார்கள் என்கிறார்.

கதையைச் சொல்பவர் விமான ஓட்டியாக இருக்கையில் ஒரு விபத்தில், யாருமற்ற ஒரு பாலைவனத்தில் தனியாக இருக்க வேண்டி வரும் சூழலில் கதை ஆரம்பிக்கிறது. அங்கே அவர் மிகச் சிறிய உருவத்தில் ஒரு குட்டி இளவரசனை சந்திப்பதாகவும், அந்தக் குட்டி இளவரசன் ஒரு குட்டியூண்டு கிரகத்தில் இருந்து வந்தவனாகவும், அந்த குட்டி இளவரசனும், கதை சொல்பவரும் சேர்ந்து செலவளிக்கும் நாட்களிலும், அந்த இளவரசன் சொல்லும் அனுபவங்களையும் வைத்தே கதையும் போகின்றது.

அந்த குட்டி இளவரசன் இவரிடம் ஆடு வரைந்து தரச் சொல்லிக் கேட்கிறார். முதலில் ஒவ்வொரு குறை சொல்லிய பின்னர், ஒரு பெட்டியை வரைந்து, அதனுள் ஆடு இருப்பதாகச் சொல்ல, அது இளவரசனுக்கு பிடித்துப் போவதுடன், புரியவும் செய்வது அவருக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. பெரியவர்களுக்குப் போல் விளக்கம் கொடுக்கத் தேவையில்லாமல் இருப்பதுவே காரணம்.

அந்த குட்டி இளவரசன் கேள்விகளுக்கு சரியாக பதில் கொடுக்காவிட்டாலும், அவன் கூறும் விசயங்களில் இருந்து விமான ஓட்டி சிறிது சிறிதாய் அவனது கோளைப் பற்றியும், அவனது வாழ்க்கை பற்றியும் புரிந்து கொள்கிறார். குட்டி இளவரசன் ஒரு பூவை தனது இடத்தில் வளர்த்து வந்ததையும், அதனை மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டதையும், ஆனால் அந்த பூ சொன்ன சில வார்த்தைகள் அவனது மனதை சிறிதாய் காயப்படுத்தியதையும் புரிந்து கொள்கிறார். ஆனாலும் அவர் வரைந்து கொடுக்கும் ஆடு ஒருவேளை தனது பூவை உணவாக எடுத்துக் கொள்ளுமோ என்று இளவரசன் பயப்படுகின்றான். அதனால் ஆட்டுக்கு வாய்க்கட்டு ஒன்றையும், அத்துடன் பூவைச் சுற்றி வேலியும் வரைவதன் மூலம் பூவை பாதுகாக்க உதவுவதாக விமான ஓட்டி இளவரசனுக்கு உறுதி அளிக்கிறார்.

அந்த குட்டி இளவரசன் பூமிக்கு வந்து இவரைச் சந்திக்க முன்னர் வெவ்வேறு கிரகங்களுக்குப் போய் வந்த அனுபவங்களில் பல்வேறுபட்ட மனிதர்களின் இயல்புகளை கதை காட்டுகின்றது.

முதலாவது கிரகத்தில், தன்னைத் தவிர வேறெவரும் இல்லாத கிரகத்தை ஆட்சி செய்ய நினைக்கும் ஒரு அரசன். அரசனின் கட்டளைகள் விசித்திரமானவை. ஒருவரால் எதை செய்ய முடியுமோ, அதை மட்டுமே கட்டளையாகப் பிறப்பிக்கும் அபூர்வ, புரிந்துணர்வுள்ள அரசன். இந்த குட்டி இளவரசன் எதை செய்ய விருப்பமில்லை என்றாலும், அதுபற்றிய தனது கட்டளையை மீளப் பெறும் அந்த அரசன், குட்டி இளவரசன் செய்ய விரும்புவதை மட்டுமே கட்டளையாக சொல்கிறான். அந்த அரசன் சொல்லும் முக்கியமான ஒரு விசயம் ‘எவருக்கும் இன்னொருவரை judge பண்ணுவதை விட தன்னைத்தானே judge பண்ணுவதுதான் மிகவும் கடினமானது. எப்போது ஒருவனால் தன்னைத்தானே சரியாக எடைபோட /சீர்தூக்கிப் பார்க்க முடிகிறதோ, அப்போதே அவன் ஒரு உண்மையான அறிவுள்ள/விவேகமுள்ள மனிதனாகிறான்’. ஆனால் அரசனுக்கு தனது அதிகாரத்தை மற்றவர்மேல் செலுத்துவதில் அத்தனை விருப்பம். சிலருக்கு தன்னுடைய அதிகாரத்துக்கு கீழ் மற்றவர் இருப்பதில் அத்தனை விருப்பம். ஏன் குடும்ப அமைப்புக்களிலும் இதை நாம் பார்க்க முடிகிறதே. வெறும் அதிகாரம் செலுத்த உரிமை கொடுத்தாலே அவர்கள் சமாதானமாகி இருப்பார்கள். அந்தக் குட்டி இளவரசன் அந்த கிரகத்திலிருந்து புறப்பட ஆயத்தமாகும்போது, அரசன் அவனைத் தடுக்கிறான். மறுக்கும் இளவரசனிடம் “உன்னை இந்தக் கிரகத்தின் Ambassador ஆக்குகிறேன் என்கிறான். குட்டி இளவரசன் நினைக்கிறான் ‘இந்த பெரியவர்களே விசித்திரமானவர்கள்தான்’.

அகம்பாவம் அல்லது போலித் தற்பெருமை கொண்ட ஒரு மனிதனை அடுத்த கிரகத்தில் இளவரசன் சந்திக்கிறான். தன்னைப்பற்றி மற்றவர் புகழ்பாடுவது தவிர வேறெதையும் கேட்க அவனுக்கு ஆர்வமில்லை. இதுக்கு உதாரணமாக தற்போதைய பல அரசியல் தலைவர்கள் மனதில் வந்து போனார்கள். அந்த தற்பெருமைக்காரனைப் பார்த்து இளவரசன் நினைக்கிறான் ‘பெரியவர்கள் நிச்சயமாய் விநோதமானவர்கள்தான்’.

அடுத்த கிரகத்தில் ஒரு குடிகாரன். அவன் ஏன் குடிக்கிறான் என்று கேட்டால், தான் குடிப்பதையிட்டு வருந்துவதாயும், அந்த கவலையை மறக்க குடிப்பதாயும் கூறுகிறான். சிலபேர் குடிப்பதற்காகவே தமக்கு கவலையை /காரணத்தை உருவாக்கிக் கொள்வதை கண்டிருக்கிறேன். ஊரில் வாழ்ந்த நேரத்தில் பக்கத்து வீட்டில் ஒரு குடிகாரன். தினமும் குடித்து விட்டு வந்து ஏதாவது ஒரு குறை கண்டு பிடித்து, மனைவிக்கு அடிப்பது. மனைவி தன் பெற்றோரிடம் போய் விட்டால், மறுநாள் அந்தக் கவலையில் குடிப்பதாகச் சொல்லி குடிப்பது. அல்லது தங்கைமாரிடம் ‘உங்களாலதான் அவள் போய்ட்டாள்’ என்று சொல்லி அடிப்பது. ‘சே என்ன மனிதன் இவன்’ என்று வெறுப்பாக இருக்கும். கவலையில் குடிக்கிறேன் என்பவர்களிடம் கேட்கத் தோன்றும், ‘குடித்த பின்னர் கவலையில்லாமல் இருக்கிறீர்களா’ என்று. குடித்துவிட்டு கவலையில் அரற்றிக் கொண்டுதானே இருக்கிறார்கள். அந்தக் கிரகத்தை விட்டு வெளியேறும்போது, இளவரசன் நினைக்கிறான் ‘பெரியவர்கள் சந்தேகமேயில்லாமல் மிக மிக விசித்திரமானவர்கள்தான்’.

அதற்கடுத்து குட்டி இளவரசன் செல்லும் கிரகத்தில் சந்திப்பது வணிகர் ஒருவரை. குட்டி இளவரசன் வந்ததைக் கூட நிமிர்ந்து பார்க்க நேரமில்லாமல், ஏதோ கணக்குப் போட்டுக் கொண்டே இருக்கிறார். அவர் நட்சத்திரங்கள் தனக்கு சொந்தமானவை என்றும் அவற்றை எந்நேரமும் எண்ணிக் கொண்டிருப்பதிலுமே பொழுதை கழிக்கிறார். குட்டி இளவரசனுடன் பேசக் கூட நேரமில்லாமல் நட்சத்திரம் எண்ணுகிறார். அவருக்கு சொந்தமான அந்த நட்சத்திரங்களை வைத்து அவர் என்ன செய்வார் என்றால் மேலும் நட்சத்திரங்கள் வாங்குவாராம். அவர் தனக்கு ‘முடிவுகளை அல்லது பலன்களைப் பற்றி (matters of consequence) மட்டுமே அக்கறை’ என்கிறார். பல பணம் சேர்க்க விரும்பும் பணக்காரர்கள் கதையும் இதுதானே? ஓடி ஓடி கோடிக்கணக்கில் சேர்க்கிறார்கள். பேசக் கூட நேரமில்லாமல் அப்படி சேர்ப்பதில்தான் என்ன பலன்? இளவரசன் அவரிடம் ”அதெப்படி நட்சத்திரங்கள் உனக்கு சொந்தமாகும்?” என்று கேட்பதற்கு அவர் கூறும் பதில் “யாருக்கும் சொந்தமில்லாத வைரத்தை நீ கண்டெடுத்தால், அது உனக்கு சொந்தமாகும். யாருக்கும் சொந்தமற்ற தீவை நீ கண்டு பிடித்தால் அது உனக்குச் சொந்தமாகும். எவருக்கும் வராத யோசனை உனக்கு வந்தால், அதற்கான உரிமை உனக்குத்தான். அதேபோல் நட்சத்திரங்களை உரிமையாக்கும் எண்ணம் எனக்கே முதலில் வந்ததால், நட்சத்திரங்கள் எனக்கே சொந்தமானவை’. எமக்கு பிடித்தவற்றை நமக்கே சொந்தமாக்கிக் கொள்ளவே விரும்புகிறோம். அங்கிருந்து புறப்படும் இளவரசன் தனக்குள் ‘பெரியவர்கள் மிக நிச்சயமாய் அசாதாரணமானவர்கள்தான்’ என்று நினைத்தபடி போகின்றான்.

இன்னொரு சிறுகோளில், கடமையே கண்ணாக இருக்கும் ஒரு விளக்குப் போட்டு அணைப்பவரை சந்திக்கிறான் குட்டி இளவரசன். ஆரம்பத்தில் அந்தக் கோள் மெதுவாகச் சுற்றியபோது இரவில் விளக்குப் போட்டு, காலையில் அணைத்துக் கொண்டிருந்த அவர், அந்தக் கோள் மிக விரைவாக சுற்ற ஆரம்பித்த பின்னர் தொடர்ந்து விளக்குப் போடுவதும், அணைப்பதுமாகவே இருக்கிறார். அந்த கோள் ஒரு நிமிடத்துக்கு ஒருமுறை முழுச்சுற்றை செய்வதால், அவருக்கு ஓய்வெடுக்கவே நேரமற்றுப் போகிறது. குட்டி இளவரசனுக்கு அவனே அபத்தமில்லாதவனாகத் தெரிகின்றான். காரணம் அவன் தன்னைப்பற்றி மட்டும் எண்ணாமல் வேறு விடயங்களுக்கும் முக்கியத்துவம் தருகின்றான். எனக்கும்தான் அவனை மிகவும் பிடித்துப் போனது  . குட்டி இளவரசனுக்கு அவனுடன் நட்பாகி அங்கேயே தங்கி விட விருப்பமிருந்தாலும், அந்த கோள் மிகச் சிறியதாக, இரண்டு பேருக்கு இடமற்று இருப்பதால், தனது பயணத்தை தொடர்கின்றான்.

அதற்கும் அடுத்த கிரகத்தில் அவன் சந்தித்தது ஒரு புவியியல் ஆராய்ச்சியாளர். அவர் தனக்கு நிறைய விடயங்கள் தெரியும் என்று நம்புகிறார். ஆனால் ஒரே இடத்தில் இருந்தபடியே எல்லாவற்றையும் செய்யப் பார்க்கிறார். மற்றவர்களின் உழைப்பில் தான் பெயரைப் பெற்றுச் செல்ல விரும்பும் மனிதர்களை நினைவு படுத்தினார். சில ஆராய்ச்சியாளர்களும் இப்படி இருக்கிறார்கள். தமக்கு கீழ் வரும் மாணவர்களின் உழைப்பில் தாம் பெயரைத் தட்டிச் செல்வார்கள்.  சில அமைப்புக்கள், நிறுவனங்களின் பெரிய பொறுப்பில் இருப்பவர்களும் தாம் எதையுமே செய்யாமல், கீழ் உள்ளவர்களின் உழைப்பை தமதாக பிரகடனப்படுத்திக் கொள்வார்கள். அந்த புவியியலாளரே குட்டி இளவரசனுக்கு பூமிக்குப் போகும்படி அறிவுரை சொல்கின்றார்.

இறுதியில் பூமிக்கு வரும் அந்தக் குட்டி இளவரசன் முதலில் ஒரு பாம்பை சந்திக்கிறான். பாம்பிடம் மனிதர்கள் எங்கே என்று விசாரிக்க, பாம்பு அது பாலைவனமென்றும், மக்கள் அங்கே இல்லை என்றும், பூமி மிகப் பெரியது என்றும் கூறுகின்றது. அதன் பின்னர் ஒரு பூக்கன்றை கண்டு ‘மனிதர்கள் எங்கே?’ என்று விசாரிக்கிறான். அதற்கு பூக்கன்று, மனித இனம் அழிந்துகொண்டு போகும் இனமாக கூறுகின்றது. ஒருவேளை எதிர்காலத்தை கற்பனையில் கண்டு எழுதியிருப்பாரோ? மனிதர்களுக்கு வேர்கள் இல்லாமையால், அவர்கள் காற்றோடு எடுத்துச் சொல்லப்படுவதாகவும், அதனால் அவர்களது வாழ்க்கை சிக்கல் நிறைந்ததாய் இருப்பதாகவும் அந்த பூக்கன்று சொல்கின்றது.

பின்னர் ஒரு மலையில் ஏறும் அந்தக் குட்டி இளவரசனுக்கு அவன் சொல்லும் வார்த்தைகளே எதிரொலியாக கேட்கின்றது. அப்போது அந்தக் குட்டி இளவரசன் ‘இந்தப் பூமி மிகவும் வரண்டதாகவும், அங்குள்ளவர்கள் கற்பனையற்றவர்களாகவும் இருக்கிறார்கள்’ என்று நினைத்துக் கொள்கின்றான். பிறகு நெடுந்தூரம் நடந்து சென்று, குட்டி இளவரசன் ஒரு பெரிய ரோசாப்பூத் தோட்டத்தை அடைகின்றான். அப்போது தன்னுடைய கிரகத்தில் தனியாகத் தான் விட்டு வந்த பூவை நினைக்கிறான். அந்தப் பூவோ தான் மட்டுமே இந்த முழு பிரபஞ்சத்திலும் இந்த வகையிலுள்ள ஒரே ஒரு பூ எனக் கூறியிருந்தது. அவனும் தன்னிடம் தனித்துவமான ஒரு ஒரு பொருள் இருப்பதாக பெருமை கொண்டிருந்ததையும், ஆனால் அது ஒரு பொதுவான ரோசாதான் என்றும் எண்ணிக் கொள்கின்றான். அதேவேளை அந்த ரோசாவை தனியே விட்டு வந்ததை எண்ணி கவலையும் கொள்கின்றான்.

அதன் பின்னர் அவன் சந்திக்கும் ஒரு நரி அவனுக்கு பெரிய தத்துவத்தையே சொல்லிக் கொடுக்கிறது. நரி அவனை, தன்னுடன் நட்பாகும்படியும், மனிதர்கள் எதையும் புரிந்து கொள்ளும் மனநிலையை இழந்து விட்டார்கள் என்றும், தயார் செய்யப்படும் பொருட்களை (ready-made) கடைகளில் வாங்குகின்றார்கள், ஆனால் நட்பை வாங்கும் கடைகள் இல்லாமையால் நட்பை மறந்து விட்டதாகவும் கூறுகின்றது. நட்பாவதற்கு எதையும் பேசாமல் இருப்பதே நல்லது என்றும், வார்த்தைகளே மனவேற்றுமைகளுக்கு காரணம் என்றும் அந்த நரி சொல்கின்றது. ஆனால் ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாய் அண்மித்து வருவதனால் நட்பாகலாம் என்று நரி சொல்வது போலவே, குட்டி இளவரசன் நரியுடன் நட்பாகின்றான். ஆனால் குட்டி இளவரசன் போக வேண்டிய நேரம் வரும்போது நரி நட்பை விட்டுப் பிரிவதை எண்ணி கவலை கொள்கின்றது. அப்போது, குட்டி இளவரசன் ”நான் உனக்கு எந்த கெடுதலும் செய்ய நினைக்கவில்லை. ஆனால், நீதான் என்னை நட்பு கொள்ளச் சொன்னாய்” என்று நரியிடம் சொல்கின்றான். நரியோ “ஆம், அது அப்படித்தான். நீ இப்போது அந்த ரோசாத் தோட்டத்துக்கு போய் வா” என்று சொல்கிறது. அங்கே போனபோதுதான் அவனுக்குப் புரிகிறது, ‘அங்கே ஆயிரக் கணக்கில் ரோசாக்கள் இருந்தாலும், அவனது ரோசா தனித்துவமானதுதான். காரணம் அந்த ரோசாமேல் அவன் கொண்டிருக்கும் பாசம். நரியிடம் நட்பு கொண்டதாலேயே, பார்க்கும் எல்லா நரிகளைப் போல அல்லாமல், குறிப்பிட்ட அந்த நரி தனித்துவமானது ஆகியதைப் போல’. அவன் மீண்டும் நரியிடம் வந்தபோது நரி ஒரு இரகசியத்தை சொல்வதாக சொல்கின்றது “இதயத்தால் மட்டுமே சரியாகப் பார்க்க முடியும். கண்களுக்கு முக்கியமானவை தெரியாது. மனிதர்கள் இந்த உண்மையை மறந்து விட்டார்கள். நீ உனது ரோசாவுக்காக செலவு செய்த நேரமே, அந்த ரோசா உனக்கு எவ்வளவு முக்கியமானது என்பதைச் சொல்லும். உனக்கு அந்த ரோசாவில் உள்ள அன்பினால், நீ அந்த ரோசாவுக்கு பொறுப்புள்ளவனாகின்றாய்”. நாங்கள் யார்மேல் உண்மையான அன்பைச் செலுத்துகிறோமோ, அவர்களே எங்களுக்கு மிகவும் முக்கியமானவர்களாகவும், தனித்தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

பின்னர் ஒரு தொடர்வண்டி நிலையத்தை அடையும் அந்தக் குட்டி இளவரசன், ஒரு தொடர்வண்டியில் ஏராளமான மனிதர்கள் போவதைக் கண்டு ”இவர்கள் எங்கே அவசரமாகப் போகின்றார்கள்?” என்று அங்கிருப்பவரிடம் கேட்க, அவர் ”அது யாருக்கும் தெரியாது” என்று சொல்கின்றார். பின்னர் மறு புறமிருந்து ஒரு தொடர் வண்டி வர, ”போனவர்கள் ஏன் திரும்பி வருகின்றார்கள்?” என்று கேட்க, ”இவர்கள் வேறு மனிதர்கள்” என்று பதில் கிடைக்கிறது. ”ஏனப்படி” என்றதற்கு, “அவர்கள் தாம் இருக்குமிடத்தில் திருப்தி அடைவதில்லை” என்கின்றார். ‘இக்கரை மாட்டுக்கு, அக்கரை பச்சை’  . அப்போது குட்டி இளவரசன் நினைக்கிறான், ‘குழந்தைகளுக்கு மட்டுமே தமக்கு என்ன வேண்டும் என்பது தெளிவாகத் தெரியும்’.

ஒரு வியாபாரி, தாகம் எடுப்பதைத் தவிர்க்க குழிகைகள் விற்பதைக் காண்கின்றான். ஏனிப்படி என்று கேட்டால், ”தாகம் தீர்க்க எடுக்கும் நேரத்தை மிச்சப்படுத்தி அந்த நேரத்தில் விரும்பியதைச் செய்யலாம்” என்று வியாபாரி சொல்கின்றார். அப்போது அந்த குட்டி இளவரசன் நினைக்கிறான், அப்படி தனக்கு அந்த நேரம் மிச்சப்படுமானால், ‘அந்த நேரத்தில் நன்னீர் கிடைக்கும் இடத்தை நோக்கி அமைதியாக நடந்து செல்லலாம்’ என்று. நாம் சில சமயம் (அல்லது பல சமயம்) நேரத்தை மிச்சம் பிடிப்பதற்கு ஏதேதோ செய்வோம். ஆனால் அந்த மிச்சம் பிடித்த நேரத்தில் உருப்படியாக எதையும் செய்வதில்லை.

இந்த அனுபவங்களைக் கேட்ட விமான ஓட்டி (கதையை சொல்ல ஆரம்பித்தவர்), குட்டி இளவரசனின் அனுபவங்கள் சுவாரசியமானவை என்கிறார். அந்த அனுபவங்கள் மூலம் நிறைய உண்மைகளை அந்த குட்டி இளவரசன் அவருக்குப் புரிய வைக்கிறான். சில சமயம் எல்லோரையும் ஒரே விதமாகப் பார்த்து, ஒரே விதமாக நட்புகொள்வது நல்லதுதான். இந்த கருத்து வந்த இடத்தை வாசித்தபோது என் செல்ல குட்டி மகள் ஒருநாள் என்னிடம் வந்து “அம்மா, ஒரு best friend இருக்கிறது நல்லதா? அல்லது எல்லாரோடயும் ஒரே மாதிரி friends ஆ இருக்கிறது நல்லதா?” என்று கேட்டது நினைவில் வந்தது. நான் அதற்கு பல விதமாய் யோசித்தேன். அதற்கு அவளே சொன்னாள் “நான் நினைக்கிறன் எல்லாரோடயும் friends ஆ ஒரே மாதிரி இருக்கிறதுதான் நல்லது. ஏனெண்டா நாங்கள் ஒராளோட மட்டும் best friend ஆ இருந்தால், அவ எங்கயாவது போய்டால், கவலையா இருக்கும்தானே?”. நல்ல ஆழமாத்தான் யோசிக்கிறாள் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் எல்லோரிடமும், எல்லாத்தையும் பகிர்ந்து கொள்ள முடியாதே? அதனால் இரண்டும்தான் சரியாகத் தெரிகிறது. என்னுடைய ஒரு நெருங்கிய தோழியை விட்டுப் பிரிந்து கவலைப்பட வேண்டி வந்த ஒரு தருணத்தில் நான் எடுத்த முடிவும் எனது மகளுடையதுதான் என்பதும் கூடவே நினைவு வந்தது. அதற்குப் பின்னர் எவருடனும் நெருங்கி அன்பு செலுத்துவதில்லை என்பதுதான் அந்த முடிவு. ஆனால் அதை என்னால் சரி வர செய்ய முடியவில்லை என்பதும் உண்மையே.

[சரி என்ரை கதையை விட்டுட்டு குட்டி இளவரசனின் கதையின் முடிவுக்கு வாறன்  .]

அந்தக் குட்டி இளவரசனை காண முடியாமல் போன ஒரு காலைப் பொழுதில் அந்த விமான ஓட்டி, அவன் தனது கோளுக்கு திரும்பிப் போய், தனது ரோசாவை கவனமாகப் பார்த்துக் கொள்வான் என்று நம்புவதாக கதையை முடிக்கிறார்.

Matters of importance must be given the priority over the matters of consequence.

எனக்கு கதை மிகவும் பிடித்தது. கதை இணையத்தில் கிடைக்கிறது. The Little Prince (pdf file) ஐத் தரவிறக்கிப் படித்துப் பாருங்களேன்!

நான் இந்தக் குட்டி இளவரசன் கதை வாசிக்க முன்னர் என் குட்டித் தேவதை தனது ”கற்பனை நாடு’ பற்றிய கதை ஒன்று சொன்னாள். அந்த அழகான நாடுபற்றி அடுத்த பதிவில்……

1 Comments

At December 16, 2009, ரவி wrote:

நானும் குட்டி இளவசரன் படித்த பிறகு குழந்தைகளின் உலகத்தை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால், கூடி வரும் ஊடக ஆக்கிரமிப்புகள் குழந்தைகளின் குழந்தைப் பருவத்தைச் சீக்கிரமே சாகடித்து விடுகின்றன :(

Related posts

No related posts.

குழந்தை வளர்ப்பு!
இன்றைக்கு குழந்தை வளர்ப்புபற்றி ஒரு பேச்சு வந்தது.

ஒவ்வொரு குழந்தையும் வளர வளர பிரச்சனை கூடிக் கொண்டே போவதாக ஒருவர் குறைப்பட்டார். உண்மையில் பிள்ளைகளால் பிரச்சனை என்பதை விட, நாமே அதை பிரச்சனையாக உருவாக்கிக் கொள்கிறோமோ என்றுதான் எனக்குத் தோன்றியது.

”நாமெல்லாம் இப்படியா இருந்தோம். அப்பா, அம்மா சொல்வதெல்லாம் கேட்டு அப்படியே இருக்கவில்லையா” என்றார். நாம் வாழ்ந்த காலம், இடம், சூழ்நிலை எல்லாவற்றையும், தற்போதைய காலம், சூழல், இடத்துடன் எப்படி ஒப்பிட்டுப் பேச முடிகிறது. எத்தனை வேறுபாடுகள் இருக்கும்போது, குழந்தைகளில் இயற்கையாக இருக்கக் கூடிய வேறுபட்டை எப்படி உணர முடியாமல், ஏற்றுக் கொள்ள முடியாமல் போகிறது.

வளர்ந்து வரும் குழந்தைகளை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை என்றும், அவர்களை இப்படிச் செய்யாதே, அப்படிச் செய்யாதே என்றால் கேட்கிறார்கள் இல்லை என்றும், அவர்களுக்கு சொல்லிப் புரிய வைக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார். நான் சொன்னேன், “இந்த புலம்பெயர் சூழலில், இது பெற்றோருக்கு மட்டுமே பிரச்சனையில்லை. பிள்ளைகளுக்கு அதை விட பிரச்சனை உண்டு. பெற்றோரை அனுசரித்துப் போவதா, அல்லது வேறு கலாச்சாரம் கொண்ட நண்பர்களை அனுசரித்துப் போவதா என்று அவர்கள் நிலையும் கடினம்தான், சிலவற்றை செய்தால் பெற்றோர் வெறுக்கிறார்கள், செய்யாவிட்டாலோ நண்பர்கள் ஒதுக்கி விடுகிறார்கள், எல்லாவற்றையும் சமநிலைப்படுத்தி செய்ய வேண்டிய கட்டாய சூழல் பிள்ளைகளுக்கு” என்று.

இப்போது வந்து Google Reader ஐ திறந்தால், முதலில் கண்ணில் பட்ட இடுகை ‘பெற்றோர்களுக்கான விதிகள்’ – புதிய நோக்கு. அங்கே ஒரு அறிமுகம் மட்டுமே கிடைத்தது. எனவே Google இல் தேடி, Richard Templar எழுதிய, அந்த 100 எளிய விதிகளையும் (விளக்கமாக இல்லாவிட்டாலும்) பார்த்துவிட்டேன். விளக்கமாக பார்க்கும் ஆவலை தூண்டியுள்ளது. புத்தகம் வாங்கிப் படிக்க வேண்டும்.

இன்று பேசியபோது குறைப்பட்டுக் கொண்ட அந்த நபர், குழந்தைகளை எந்தவொரு வேலையும் வீட்டில் தான் செய்ய விடுவதில்லை என்றும், அவர்கள் தங்களுடன் இருக்கும்வரை எதுவும் செய்து சிரமப்படாமல் இருக்க வேண்டும் என்றும் நினைப்பதுடன், அதை பெருமையாகவும் எண்ணுபவர். அப்படி செய்வதால் பிள்ளைகள் தமது சுயசார்பு (வெங்கடேஷ் க்கு நன்றி   தமிழ்ச் சொல்லுக்கு), நிலையை விரைவில் பெறுவதற்கான வழியை அடைத்து விடுகிறோம் என்றுதான் எனக்குத் தோன்றியது. இதுபற்றி பல தடவைகள் அவருக்கு எடுத்துக் கூறியும் அவர் புரிந்து கொள்ள மறுக்கிறார்.

அன்றொருநாள் அவரது மகளிடம் (வயது 18 ஆகி விட்டது), பேசிக் கொண்டிருந்தபோது, ”அம்மா எதுக்கு இருக்கிறா செய்து தரத்தானே. இதெல்லாம் செய்வது அம்மாவின் கடமை” என்று சொல்கிறார். எனக்கென்னவோ அப்படி சொன்னது மகளின் குற்றமல்ல. அப்படி நினைக்கும்படி செய்யும் பெற்றோரின் தவறுதான் என்றே தோன்றியது. நான் அவருக்கு சில விடயங்களை சொல்லி புரிய வைக்க முயன்றேன்.

இன்னொருவர் கூறினார், சில குழந்தைகள் நமக்குத் தெரியாது என்று நினைத்துக் கொண்டு, தனது (வெளிநாட்டு) நண்பர்கள் வீட்டில் இப்படித்தான் என்று கூறி தமது பொறுப்பை தட்டிக்கழிக்கப் பார்க்கிறார்கள் என்று. அதுவும் உண்மைதான். சில பிள்ளைகளும் புத்திசாலிகள்தான்  . சில விசயங்களுக்கு தமது வெளிநாட்டு நண்பர்களை உதாரணம் காட்டி, அவர்கள் மாதிரி தாமும் செய்ய வேண்டும் என்பவர்கள், தமக்கு சாதகமாக வரக் கூடிய வேறு விடயங்களில் இது நமது கலாச்சாரம், அதன்படி செய்யலாம் என்கிறார்கள். பெற்றோரின் உதவியுடன் வாழ்வது அவர்களுக்கு இலகுவான முறையாக இருக்கிறது.

நான் அறிந்த அளவில், நோர்வே நாட்டினர் அதிகமானோர் (வேறு எதைச் சரியாக செய்கிறார்களோ, இல்லையோ   ) தமது பிள்ளைகளை சுயசார்பு நிலையில் வளர்ப்பதில் வெற்றியே கண்டிருக்கிறார்கள். பொதுவாக 18 வயதில், பிள்ளைகள் தாமாகவோ, சில சமயம் பெற்றோரின் ஊக்கப்படுத்துதலாலோ, தனியாக சென்று வாழத் தொடங்குகிறார்கள். என்னுடன் வேலைபார்க்கும் ஒருவரின் மகன், அவர்களுடைய வீட்டிலேயே, basement apartment இல், பெற்றோருக்கு வாடகை கொடுத்து வாழ்கிறார். அதனால் பெற்றோருக்கு அவர்மேல் அக்கறையில்லை, அல்லது சரியான அன்பில்லை என்று சொல்லவும் முடியாது. அந்த அம்மாவும் நானும் ஒரே அறையில் வேலை செய்வதால் அவரை என்னால் நன்றாக கவனிக்க முடிகிறது.  அடிக்கடி பிள்ளைகளுக்கு தொலைபேசி கதைப்பதும், அவர்களுடைய ஒவ்வொரு செயலிலும் காட்டும் அக்கறையும், அவரது அன்பை சொல்கிறது. ஏதோ ஒரு பிரச்சனையில் அன்று மகள் தொலைபேசியில் எடுத்துச் சொன்னபோது, அதற்கு தன்னால் முடிந்த புத்திமதியையெல்லாம் பொறுமையுடன் கூறிவிட்டு, அவர் இறுதியில் சொன்னது இன்னும் நினைவில் நிற்கிறது. அவர் சொல்கிறார் ”இது நான் உனக்கு கூறக் கூடிய புத்திமதி மட்டுமே. ஆனால் பிரச்சனைக்கேற்றவாறு, உன் மனநிலைக்கு ஏற்றவாறு முடிவெடுத்து, செயலாற்ற வேண்டியது நீதான்.” என்று.

இப்படி நம்மில் எத்தனைபேர் நினைக்கிறோம். ‘நாங்கள் சொல்கிறோம், பிள்ளைகள் கேட்கத்தான் வேண்டும். நாம் அவர்களுக்கு நன்மைக்குத்தானே சொல்வோம். இத்தனை அன்பு வைத்திருக்கிறோம், அவர்களுக்காக என்னவெல்லாம் செய்கிறோம். இதிலும் நாம் சொல்வதைக் கேட்டால் என்ன?” இதுதான் நம்மில் பலரின் மனநிலை. அவர்களுக்கு எது நன்மை என்பதை அவர்களே உணர்ந்து செய்யும் மனநிலையில் அவர்களை விடுவதுதானே நல்லது.

பிள்ளையிடமே வாடகை வாங்குவதெல்லாம் சரியா என்பது தெரியவில்லை. அந்த அளவுக்கெல்லாம் என்னால் போக முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் தன்காலில் தானே நிற்பதற்கான ஒரு நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதில் இதுவும் ஒரு முறையே என்பதை ஏற்காமலும் இருக்க முடியவில்லை. சில விசயங்கள் நமக்கு மிகவும் குழப்பமாகத்தான் இருக்கிறது. நாம் வளர்ந்த சூழல் நம்மை இப்படி குழப்புகிறது என நினைக்கிறேன்.

தற்போதைய போட்டிகள் நிறைந்த அவசர யுகத்தில், எவ்வளவுக்கெவ்வளவு பிள்ளைகள் தாமே சுயமாக முடிவெடுக்கவும், தன் சொந்தக் காலில் நிற்கவும் பழக்கி விடுகிறோமே, அவ்வளவுக்கவ்வளவு பிள்ளைக்கு நல்லது என்றே நானும் நம்புகிறேன்.

3 Comments

At October 8, 2009, அடலேறு wrote:

//பெற்றோரை அனுசரித்துப் போவதா, அல்லது வேறு கலாச்சாரம் கொண்ட நண்பர்களை அனுசரித்துப் போவதா என்று அவர்கள் நிலையும் கடினம்தான், சிலவற்றை செய்தால் பெற்றோர் வெறுக்கிறார்கள், செய்யாவிட்டாலோ நண்பர்கள் ஒதுக்கி விடுகிறார்கள், எல்லாவற்றையும் சமநிலைப்படுத்தி செய்ய வேண்டிய கட்டாய சூழல் பிள்ளைகளுக்கு” என்று// மற்ற கருத்துக்களை என்னால் புரியமுடிந்து உள் வாங்க இயலவில்லை.

மேலே மேற்கோள் காட்டின வரிகள் மட்டும் தேடலின் முடிவில் மனதில் பதிந்தவை அக்கா. இது வயது குறைவால் வந்த பிணக்குனு நினைக்கற. சிறப்பான , தேவையான பதிவு, பகிர்வு.

At October 18, 2009, சயந்தன் wrote:

நல்ல பதிவு.. பயன்படும் :)

At October 18, 2009, கலை wrote:

நன்றி அடலேறு.

சயந்தன், உங்களைப்போல ஆட்களுக்கு பயன்படத்தானே இப்படிப் பதிவெல்லாம் எழுதுறது :). எதுக்கும் அந்த 100 விதிகளை மறக்காம வேண்டிப் படிச்சுப்போடுங்கோ.

Related posts

No related posts.

குழந்தையின் பெயர்!
இன்றைக்கு இந்தப் பதிவைப் பார்த்தேன். நகைச்சுவையோட நிறைய விசயம் சொல்லியிருந்தார். அங்கே ஒரு பின்னூட்டம் போடப் போன இடத்தில, அட இதை என்னுடைய பதிவேட்டிலயும் (அதான் என்னுடைய வலைப்பதிவு) ஒரு இடுகை  போடலாமே என்ற எண்ணம் வந்தது. நானும்தான் எத்தனை நாளுக்கு என்னுடைய  வலைப்பதிவில எதுவுமே எழுதாமல் இருக்கிறது  .

ரவி கீழ்வருமாறு எழுதியிருந்ததுதான் இந்தப் பதிவுக்கு காரணம்  .

//பிள்ளை பிறந்த பிறகு எழுத்துப் பார்த்து பெயர் வைக்கிறத விட பிள்ளை பிறக்கிறதுக்கு முன்னாடியே அம்மாவும் அப்பாவும் இந்தப் பேர் தான்னு யோச்சிச்சு வைச்சு பேர் வைச்ச பிள்ளைங்களையும் பார்த்து இருக்கேன். அந்த குழந்தைகள்ட்ட ஒரு சந்தோஷத்தையும் பார்த்திருக்கேன். //

குழந்தை கிடைப்பதற்கு 4 வருடத்திற்கு முதலே பிறக்கப் போகும் குழந்தைக்கு ஒரு பெயர் நினைத்தாயிற்று. ஆசைப்பட்டது பெண் குழந்தை. பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்று பார்க்காமலே, பெண்ணாக இருக்க வேண்டும் என்ற ஆசையிலும், பெண்தான் பிறக்கும் என்ற ஏதோ ஒரு  நம்பிக்கையிலும்  குழந்தைக்கு அதே பெயரை வைப்பது என்று குழந்தை 3 மாதக்கருவாக இருக்கும்போதே முடிவாகி மற்றவர்களிடம் சொல்லியுமாச்சு.

என்ன குழந்தை என்று அறிய வேண்டுமா என்று வைத்தியர் கேட்டதற்கு, வேண்டாம் என்றும் சொல்லியாச்சு. நாள் செல்ல செல்ல, என்ன குழந்தை என்று பார்த்திருக்கலாமோ, கடைசி நேரத்தில் பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையாக இருந்தால், அது ஏமாற்றமாகப் போய் விடுமோ என்று சின்னதாய் ஒரு தவிப்பும் வந்தது. அப்படி என்னதான் பெயர்? அந்தப் பெயர் ”அஞ்சலி“.

ஆனால், நல்ல வேளையாக ஆசைப்பட்டபடியே பிறந்தது பெண் குழந்தை. குழந்தை பிறந்தபோது நான் மயக்கத்தில். கண்விழித்த முதல் கணத்தில், அரைகுறை மயக்கத்தில் நான் கேட்ட முதல்கேள்வி, “அஞ்சலிதானே?”. “ஆம்” என்ற பதில் தந்த ஆனந்தத்திற்கு அழவேயில்லை  .

கண்விழித்தபோது குழந்தையை என்னிடம் காட்டினார்கள். தலை நிறைந்த தலை முடியுடன் இருந்த மகளுக்கு தாதிமார், ribbon எல்லாம் கட்டி, அலங்காரம் செய்திருந்தார்கள். மகளை முதன்முதல் பார்த்த அந்த நேர உணர்ச்சியை வார்த்தைகளில் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.

குழந்தை பிறக்கப்போவதுபற்றி மற்றவர்களிடம் அறிவித்தபோது, “அஞ்சலி பிறந்திட்டாள்”, என்று சொல்ல முடிந்தது. அதைவிட குழந்தை பிறந்ததுபற்றி அறிந்த ஒருவர் தொலைபேசியில், “என்ன, அஞ்சலி பிறந்தாச்சா?” என்று கேட்டது மிகுந்த மகிழ்ச்சி.

மகளுக்கு, தனக்கு பெயர் வைத்த விதம்பற்றி கேட்கும்போது பெருமையும், மகிழ்ச்சியும். அவளுக்கு தான் பிறந்த கதையை மீண்டும் மீண்டும் கேட்பதில் இப்போதும் தணியாத ஆர்வம். நல்ல வேளையாய் அவளுக்கும் அந்தப் பெயர் மிகவும் பிடிச்சிருக்கு  .  மற்றவர்கள் அவளது பெயரைக் கேட்டுவிட்டு, “அழகான பெயர்” என்று சொன்னால் அவள் முகத்தில் மகிழ்ச்சிப் புன்னகை வரும். தமிழ் தெரியாதவர்கள்கூட, ஒரு தடவை பெயரை மீண்டும் சொல்லிப் பார்த்து ‘அழகான பெயர்’ என்று சொல்லும்போது மகிழ்ச்சி. தவிரவும் ஒரு சிலர் “It sounds like ‘angel’” என்று சொல்வார்கள். அதில் அவளுக்கு இன்னும் பெருமை கூடிவிடும்.

எனக்கும் அழகான தமிழ் எழுத்துக்களுடன் கூடிய தமிழ்ப் பெயர்கள்தான் அதிகம் பிடிக்கிறது  .

2 Comments

At December 20, 2008, திகழ்மிளிர் wrote:

/எனக்கும் அழகான தமிழ் எழுத்துக்களுடன் கூடிய தமிழ்ப் பெயர்கள்தான் அதிகம் பிடிக்கிறது :). /

எனக்கும் தான்

At August 13, 2010, bala wrote:

poda.....

Related posts

No related posts.

சங்கடமான கேள்வி!
அண்மையில் ஒருவர் என்னிடம் சொன்னார் “உங்கட மகள் உங்களை மாதிரியே இருக்கிறா. உங்களை மாதிரியே புன்னகைக்கிறார்”. நான் சிரித்தேன். அவர் மேலும் கேட்டார் “இப்படி நிறையப் பேர் உங்களிடம் சொல்லி இருப்பார்கள் என்று நினைக்கிறேன், இல்லையா?” என்று. நானும் சொல்லியிருக்கின்றார்கள் என்று சொன்னேன். இந்த கதையை நான் மகளிடம் பேசும்போது சொன்னேன். அவளுக்கு 9 வயது ஆகப் போகின்றது. அங்கேதான் பிரச்சனை ஆரம்பித்தது.

அவள் வேறு யாரெல்லாம் சொல்லி இருக்கின்றார்கள், எப்படி சொன்னார்கள் என்று பெரிய விளக்கங்கள் கேட்டாள். நானும் சொல்லிக் கொண்டு வந்தேன். முன்னொரு தடவை அவளையும் என்னையும் ஒன்றாகச் சந்தித்த, என்னுடன் வேலை செய்யும் ஒருவர் “மகளை குளோனிங் செய்து எடுத்திருக்கிறாயா?” என்று கேட்டதை நினைவு கூர்ந்தேன். இப்படியே கதை போனபோது, குழந்தைகள் அப்பா மாதிரியோ, அம்மா மாதிரியோ இருப்பார்கள் என்று சொன்னேன் (தேவையா எனக்கு??). அவள் உடனே கேட்டாள், “நான் உங்கட வயித்தில இருந்துதானே வந்தேன். நான் எப்படி அப்பா மாதிரி இருக்க முடியும்?”. அதுக்கு நான் “அப்பாவுடைய cell இல இருக்கிற DNA யும், அம்மாவுடைய cell இல இருக்கிற DNA யும் சேர்ந்துதான் குழந்தையுடைய cell and DNA வரும். பிறகு அந்த cells பிரிந்து பிரிந்துதான் குழந்தை உருவாகின்றது” என்று சொன்னேன். ஏதோ மாட்டிக் கொள்ளாமல் குழந்தைக்கு சொல்லிவிட்டேன் என்ற இறுமாப்பு வேறு. விடுவாளா அவள், கேட்டாள் அடுத்த கேள்வியை. “நான் உங்கட வயித்துக்குள்ளே இருந்துதானே வந்தேன். பிறகெப்படி அப்பாடை cell and DNA வரும்.” தேவையா எனக்கு என்று என்னை நானே நொந்து கொண்டேன்.

எனக்கு ஒரு சின்ன idea வந்தது. “உங்களுக்கு DNA என்றால் என்ன என்று தெரியுமா?” என்று கேட்டேன். அதற்கு “அது ஒரு blood என்று பதில் வந்தது.” அது blood இல்லை என்று சொல்லி, DNA என்றால் என்ன என்று எளிமையாக விளக்க ஆரம்பித்தேன். பல இடங்களில் அவள் ‘விளங்கேல்லை’ என்று சொன்னாள். “இப்ப உங்களுக்கு விளங்குறது கொஞ்சம் கஷ்டம். நீங்க இன்னும் கொஞ்சம் வளர்ந்தால், அடுத்தடுத்த வகுப்புக்கு போனால் கொஞ்சம் easy யா விளங்கப்படுத்தலாம். அதால நான் பிறகு உங்களுக்கு விளங்கப்படுத்துறேனே” என்று கேட்க அவளும் சரியென்று விட்டாள். அப்பாடா, இப்போதைக்கு தப்பியாச்சு. ஆனால் இது நீண்ட நாட்களுக்கு இல்லையென்றே தோன்றுகின்றது.

குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு விளக்கம் கொடுத்தே ஆக வேண்டும் என்கின்றோம். அதை செயல்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போதுதான் அதிலுள்ள பிரச்சனை புரிகின்றது.

3 Comments

At December 21, 2007, vizhiyan wrote:

சிரமம் தாங்க..

At January 18, 2008, சினேகிதி wrote:

At August 18, 2008, sandanamullai wrote:

உண்மைதான்! கேள்வி கேட்க சொல்லியா தரணும்..:-) ..ஆனாலும், நல்லா சமாளிச்சிருக்கீங்க!! ;-)

Related posts

No related posts.

என் குட்டி சினேகிதி!
என் பிரியமான குட்டி சினேகிதி!

நேற்று அவசரம் அவசரமாக பஸ் பிடிப்பதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டேன். வீட்டை பூட்டி விட்டு கிளம்புவதற்காக கைப் பையினுள் வீட்டுச் சாவியை தேடினேன். மோபைல் போன், பஸ் கார்ட், சுவிங்கம், பேனா, இப்படி சின்ன சின்ன பொருட்கள் கையில் அகப்பட்டது. அத்துடன் ஒரு சின்ன காகிதத் துண்டு. இது என்னது? இப்படி கிளிந்த காகித துண்டு எனது கைப்பையுனுள் வரும் சாத்தியமில்லையே. நினைத்தபடி, அதை பார்க்க அவகாசமில்லாமல், அதை அப்படியே உள்ளே வைத்து விட்டு (நல்ல வேளையாய் வீசவில்லை), வீட்டுச் சாவியை தேடிப் பிடித்து, வீட்டைப் பூட்டிக் கொண்டு ஒரே ஓட்டமாய் ஓடி, பஸ்ஸில் ஏறியாச்சு.

இடம் தேடி அமர்ந்ததும், மீண்டும் அந்த காகிதத் துண்டு நினைவில் வந்தது. அதை தேடி எடுத்துப் பார்த்தால், அதில் இப்படி இருந்தது.

ஆஹா, என் குட்டித் தேவதையினுடைய வேலைதான் என்று எண்ணியபடியே, மறு பக்கத்தைப் பார்த்தேன். அங்கே இந்த sticker ஒட்டி இருந்தது.

எனக்கு புரிந்து போனது. அன்றொருநாள், இந்த குட்டி, எனது பொறுமையை கொஞ்சம் அதிகமாகவே சோதனைக்குட்படுத்தி, என்னைக் கொஞ்சம் கோபப்படுத்திய பிறகு, அவசரம் அவசரமாக ஓடிப் போய், இரண்டு stickers எடுத்து வந்து என்னுடைய பையில் ஒட்டினாள். ஒரு smiley face sticker ஒட்டிக் கொண்டது. மற்றது ஒட்டவில்லை. ஒட்ட முடியாமல் போன அந்த மற்ற sticker தான், எனது கைப்பையினுள், அவளது சொந்தக் கையெழுத்துடன் உள்ளே உட்கார்ந்து கொண்டிருக்கிறது.

3 Comments

At January 18, 2008, சினேகிதி wrote:

ahhh that's so cute :-))) உங்கட மகளா அந்தத் தேவதை?

At June 19, 2008, Premkumar wrote:

வலைச்சரத்தில் உங்கள் பதிவின் சுட்டி சேர்க்கப்பட்டது

http://blogintamil.blogspot.com/2008/06/blog-post_19.html

At June 19, 2008, ராமலக்ஷ்மி wrote:

வலைச்சரம் சுட்டிய வழியில் வந்தேன்.

மழலை மனது மல்லிகைப் பூ போன்றது.

Related posts

No related posts.

மதம் பிடிக்காதவர்கள்!
மதம் பிடிக்காதவர்கள்!

மகளின் பாடசாலையில் அன்று பெற்றோர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டம். ‘ஆரம்ப வருட திட்டம்’ (primary Year program) பற்றி விளக்கம் தந்தார்கள். பாடசாலையில் ஆரம்ப வகுப்பிலிருந்து, ஐந்தாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கான திட்டம் இது. அவர்களது தொடர்ச்சியான, முழுமையான வளர்ச்சியை ஏற்படுத்தும் முகமாக இந்த திட்டம் ஒரு சில வருடங்களாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், குழந்தைகளுக்கு பாடங்களை வெறுமனே கற்பித்துவிட்டுச் செல்லாமல், கூட்டாக கேள்விகள் கேட்டு பதில் பெறும் முறை மூலம், குழந்தைகளின் பங்களிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து, சமூகவியல், பெளதீகவியல், மனவியல் ரீதியாக தேவைகளைத் தெரிந்து, அவர்களது அறிவை வளர்ப்பது இலகுவானது என்று சொன்னார்கள். தொடர்ந்து விரைவாக மாறிக் கொண்டு வரும் இந்த உலகத்தில், அவர்கள் தமது திறமைகளை வெறும் பாடப் புத்தகங்களுடன் நிறுத்திக் கொள்ளாமல், வாழ்க்கையை திறமையுடன் எடுத்துச் செல்லவும், சமூகத்தில் அவர்களது பங்களிப்பை சரியான முறையில் செய்யவும் இந்த திட்டம் உதவும் என்று சொன்னார்கள்.ஒரே குறிப்பிட்ட தலைப்பில், ஒவ்வொரு வகுப்பின் தரத்திற்கும் ஏற்ப, ஓரிரு மாதங்கள், வெவ்வேறு பாடங்களையும், அந்த தலைப்புக்கு தொடர்புபடுத்தி, பாடங்களை சேர்ந்து உருவாக்குதலே இந்த திட்டத்தின் நோக்கம். உதாரணத்துக்கு, ‘உலக வெப்பமயமாதல்’ என்ற தலைப்பில், ஒவ்வொரு வயது குழந்தைகளுக்கும் ஏற்ற தரத்தில், அவர்களுக்கு புரியக் கூடிய வகையில், அந்த வயதுக் குழந்தைகளின் தொழிற்பாடுகளை அடிப்படையாக வைத்து, அவர்களது பங்களிப்புடன் கற்பித்தலை ஒழுங்கு செய்தல்.

இதில் பெற்றோர்களும், தமக்கு தெரிந்த விடயங்கள் பற்றி, அல்லது தங்கள் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களுடன் பாடசாலை நேரத்தில் போய் பங்களிப்பு செய்யலாம். தவிர, பெற்றோர்களுக்கு முதலே கொடுக்கப்படும் அந்த தலைப்பின் அடிப்படையில், தங்கள் குழந்தைகளுடன் நாளாந்த நடவடிக்கைகளின் போது அதை அவர்களுக்கு புரிய வைக்க முயற்சிக்கலாம்.

முன்னோட்டம் போதும். இதில் என் மனதில் பதிந்த, சொல்ல வந்த விடயத்துக்கு வருகின்றேன்.

அதில் இந்த வருடத்துக்கான தலைப்புகளில் ஒன்று, ‘உலகிலுள்ள மதங்கள்’. இந்த விடயம் சம்பந்தமாக, பெற்றோர்களும் வந்து வகுப்பில், குழந்தைகளுக்கு வெவ்வேறு மதங்களை அறிமுகம் செய்து வைக்கலாம் என்று ஆசிரியை கூறினார். அப்படி வந்து வகுப்பில் பகிர்ந்து கொள்ளும்போது, அது மதப் பிரச்சாரமாக அமையாமல், ஒவ்வொரு மதங்கள் பற்றிய வெறும் அறிமுகமாக அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தினார். அப்போது அவர் சொன்ன ஒரு விடயம்தான் இந்த பதிவை எழுத தூண்டியது.

மதங்கள் பற்றி குழந்தைகளிடம் பேசியபோது, அதிக வீதத்திலான குழந்தைகள், தான் எந்த மதம் என்று தெரியாது என்றோ, அல்லது தான் எந்த மதத்தையும் சார்ந்தவனல்ல என்றோ கூறினார்களாம். அது மட்டுமல்ல, அப்படி அதிக வீதமான குழந்தைகள் கூறியது தனக்கு மிகுந்த ஆறுதலைத் தந்தது என்றும் சேர்த்துக் கூறினார். நான் பல பெற்றோர்களின் முகத்தையும் பார்த்தேன். அநேகமானோரின் முகத்தில் அதே ஆறுதல் தெரிந்தது போல் இருந்தது. மதத்தின் பெயரில் நடக்கும் குளறுபடிகளைப் பார்த்தால், இப்படி மதம் பிடிக்காத மனிதர்கள் அதிக அளவில் வருவது நன்மைக்கே என்று தோன்றுகின்றது.

2 Comments

At October 1, 2007, ரவிசங்கர் wrote:

என்ன ஒரே ஜோதிடம், மதம், மூட நம்பிக்கை பற்றிய இடுகைகளாகத் தொடருது :)

At October 1, 2007, கலை wrote:

சும்மா அப்பப்போ காதுல விழுறதை எழுதி வைச்சிருக்கேன். அவ்வளவுதான். :)

Related posts

No related posts.

கள்ளமில்லா கள்ள சிரிப்பு!!
கள்ளமில்லா கள்ள சிரிப்பு!!

அண்மையில் எங்கள் வீட்டிற்கு எனது சினேகிதியின் குடும்பத்தினர் வந்து தங்கினார்கள். அவருக்கு இரு பெண் குழந்தைகள். இரண்டாவது குழந்தை செளம்யாவுக்கு நான்கு வயது. அந்தக் குழந்தையை இப்போதுதான் முதன் முதலாய் சந்தித்தேன்.

அவர்கள் வந்து சேர்ந்த நேரம் இரவு 10.30 மணி, வந்து இறங்கிய நேரத்தில் செளம்யா நித்திரையாகி இருந்தாள். வந்து இறங்கியதும் அவளை எழுப்பினார்கள். அவள் கண்ணை விழித்து எங்களைப் பார்த்தாள். அப்போது நான் அவளிடம் “என்னை தெரியுமா?” என்று (meaningless?) கேள்வி ஒன்றைக் கேட்டேன். அவள் அதுக்கு ஒரு சிரிப்பு சிரித்தாளே பார்க்கலாம். அழகான ஒரு கள்ளச் சிரிப்பு. அந்தச் சிரிப்பை பிறகு பல தடவை எங்கள் வீட்டில் இருந்த பொழுதுகளில் பார்த்தேன். அதுபற்றி கவிதை (அல்லது வழமையான எனது கிறுக்கல்) ஒன்று எழுத வேண்டும் என்று ஆசை வந்தது. இதுபற்றி இன்னொரு சினேகிதி (எம் இருவருக்கும் பொதுவான சினேகிதிதான். குழந்தை செளம்யாவையும், அவளது கள்ளச் சிரிப்பையும் அறிந்த சினேகிதிதான்), தானே ஒரு கவிதை வடித்து விட்டாள். அந்த கவிதை இங்கே.

வீட்டிற்கு விஜயம் செய்த கவிதை இங்கே>

நண்பியின் கவிதை இங்கே>

கள்ளச் சிரிப்பில் என் கற்பனையை தூண்டி

சிறு கவிதை புனைய வைத்த கண்மணியே

கற்றவர்கள் பெற்றெடுத்த கருவிழி நீ – உன்

மேனிதான் கறுப்பு, உன் உள்ளம் வெள்ளையடி

நாலாண்டென்ன, நாற்பது ஆனாலும்

உன் சிரிப்பு மாறக்கூடாது

கற்பதைக் கற்று கால்நூற்றாண்டில் பெறும்

கல்வி பேரொளியாய் வர

கந்தனை வேண்டுகிறேன்

கவிதைக்கு நன்றி சொர்ணா.

(கவிதைக்கு மட்டுமில்லை. பல காலமாய் தொடப்படாமல் இருந்த இந்த பக்கத்தை தொட வைத்ததுக்கும் நன்றி.  )

2 Comments

At December 4, 2006, sooryakumar wrote:

தங்கள் பதிவுகள் மிக மிக அருமையாய் இருக்கின்றன. நான் காலங்கடந்து அவற்றைப் பார்த்தாலும்..காலத்தால் அழியாத படைப்புகள் என்பதும் இவைதானோ..!
எனது வலைப் பூ பற்றிய ..தங்கள் கருத்தறிய ஆவல்.

At January 16, 2007, வல்லிசிம்ஹன் wrote:

கலை ,
அருமையான  கவிதை.அழகியைப்  பார்த்தால்  கவிதை  தானெ  வருமே.

இவல்  வளம்  பெற்றூ  வாழ  வாழ்த்துகள்.
உங்கள்  பக்கம்  வரத்  தோன்றிய  தருணத்திற்கும்  நன்றி.

Related posts

No related posts.

என் குட்டித் தேவதைக்கு….
என் குட்டித் தேவதைக்கு….

நீ கண்டுபிடிக்க வேண்டுமென்பதற்காகவே

இலகுவான இடத்தில் ஒளிந்து

“எப்படியடி தெரிந்தது?” நான் பிரமிக்கையில்,

பெருமிதத்தில் நீ சிரிக்கும் பத்துப்பல் சிரிப்பு…

வேண்டுமென்றே கை விரல்களைத் தவறுதலாய் எண்ணி,

“ஐயோ! தெரியலியே” தவிக்கையில்,

குழந்தை மொழியில் நீ கூட்டிக் கழித்துச் சொல்லி

ஜெயித்து விட்டதாய் கையுயர்த்தும் அழகு…

பஞ்சுப் பொம்மையைத்

தூக்க முடியாமல் கீழே போட்டு

கைவலிப்பதாய் நடிக்கையில்,

தூக்கிக்கொண்டு ஓடும் உன் துறுதுறு குறும்பு…

இப்படி ஒன்றும் தெரியாதவளாய்

நான் நடிப்பதெல்லாம்

உன்னை எல்லாம் தெரிந்தவளாய்

ஆக்கத்தான் என் குட்டி தேவதையே!

நன்றி: லதா பிரபாகர், அவள் விகடன்

10 Comments

At January 18, 2006, இளந்திரையன் wrote:

எங்கள் பெற்றோரும் எங்கள் சிறு வயதில் இதையே தான் செய்தார்கள். நாம் வளர்ந்த பின்னும் அது உண்மை என்று நம்பி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

At January 18, 2006, சத்தியா wrote:

ஓ! .... தாம் பெற்ற செல்வத்தின் சிரிப்பில், வெற்றியில் ஆனந்தம் காணும் பெற்ற உள்ளம்.

நல்லதோர் கவிதை என் மனதையும் தொட்டுச் சென்றது.

At January 18, 2006, தேவன்கள் wrote:

எல்லார்வீட்டிலும் நடக்கிற விஷயம்தான் என்றாலும், அத ரொம்ப நல்லா சொல்லிருக்கிங்க. மனசதொட்டுவிட்டது.
அதுக்கு ஒரு உதாரணம் கொடுக்கணும்னு தோணுது. நான் அடிக்கடி chinese restaurant போவேன்.           ஒருஒரு தடவையும் chopstick உபயோகிக்க முயற்ச்சிப்பேன். ஆனா வரவேவராது.      அப்படி ஒருதடவை போனபோது chopstick கேட்டா, rubber band attached chopstick கொடுத்தாங்க. அப்பிடியே அசந்து போய்ட்டேன். அதுவும் சின்னவிஷயம்தான், ஆனா உங்களுக்கு தெரியாது நான் எவ்வளவு சந்தோஷபட்டேன் என்று.
அந்த மாதிரி உங்க கவிதையும் ரொம்ப நல்லாயிருக்கு.

At May 22, 2006, rahini wrote:

m..arumaiyaana kavithai kalai

anpudan rahini

At May 22, 2006, கலை wrote:

ஐயோ இது என்னுடைய கவிதையல்ல. "நன்றி: லதா பிரபாகர், அவள் விகடன்"
என்று போட்டிருக்கிறேனே, கவனிக்கவில்லையா ராஹினி? ஆனாலும் நான் ரொம்ப ரொம்ப ரசித்த கவிதைகளில் இதுவும் ஒன்று. (அதுசரி, எங்கிருந்து இந்த வலைப்பதிவை தேடிப் பிடித்தீர்கள்?) என்னுடைய வலைப்பதிவெல்லாம் தூங்கிக் கொண்டிருந்தது. திடீரென்று இப்போது எழுந்து வந்திருப்பது  ஆச்சரியமாக இருக்கு. :)

At May 22, 2006, பரஞ்சோதி wrote:

சகோதரி,

மிகவும் இனிமையான கவிதை தேடி கொடுத்திருக்கீங்க.

நான் சக்தியிடம் இக்கவிதை போலவே நடந்து கொள்கிறேன். மருமகள் எப்படி இருக்கிறார் ?

At May 22, 2006, கலை wrote:

குழந்தை சக்தி கொடுத்து வைத்தவர்தான். அருமையான அப்பா கிடைத்திருக்கிறாரே.

மருமகளும் நலமே. மருமகளும் கொடுத்து வைத்தவர்தான். :)

At December 21, 2006, ரவிசங்கர் wrote:

ஆஹா..இது என்ன இப்படி ஒரு அருமையான கவிதை என்று படிக்க ஆரம்பிக்கும்போது, பதிவின் தலைப்பான ரசித்த கவிதைகள் என்பதை கண்டு ஏமாற்றமாய் போய்விட்டது. இருந்தாலும், இணையத்தில் இப்படி நல்ல கவிதைளை காட்சிப்படுத்தும் தளங்கள் குறைவு தான்..தொடர்ந்து நீங்கள் படித்ததை பகிர்ந்து கொள்ளுங்கள்.

At December 21, 2006, கலை wrote:

தொடர்ந்து படிக்கவும், பகிர்ந்து கொள்ளவும் எனக்கும் ஆசைதான். என்ன செய்வது, எல்லாவற்றுக்கும் நேரம்தான் கிடைப்பதில்லை. :)

At April 4, 2007, Maha wrote:

நல்ல கவிதை.  என் வீட்டிலும் ஒரு குட்டி தேவதை வளர்கிறாள். ரசித்துப் படித்தேன்.

எல்லா இதழ்களும் எல்லாரும் படிப்பதில்லை. உங்கள் சேவை. நாட்டுக்குத் தேவை.

Related posts

No related posts.