உயிர்ப்பு » சோகம்

இன்றைய கனவு!
வவுனியாவிலுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கான முகாம்களில் ஒன்றில் நானும் போய் இருக்க கனவு கண்டேன்  . நான் அங்கே போனபொழுது, ஏற்கனவே அங்கே சில சினேகிதிகளும் இருந்தார்கள். கனவு முடிந்து விழித்தபோது, அந்த கடினமான சூழலை சில மணித்தியாலங்கள் அனுபவித்து விட்டு வந்ததான உணர்வு. கனவில் கண்ட எனக்கே இப்படி வேதனையாக இருக்குமென்றால், அதை உண்மையில் அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்களின் நிலையை நினைத்தால்……. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

3 Comments

At September 8, 2009, சின்னம்மணி wrote:

இந்த கனவுக்கு பதில் கண்ணீர் மட்டும்தான் கலை. :(

At September 10, 2009, அடலேறு wrote:

வணக்கம் கலை ,

நான் அடலேறு ,(http://adaleru.wordpress.com) லும் என்னை காணலாம், நண்பர் வினைஊக்கியின் வலைப்பக்கம் வாயிலாக தங்களின் அறிமுகம் கிட்டியது. நோர்வே தேசத்தில் படிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் தங்களுடைய தனி மின் மடல் முகவரி கிடைக்கவில்லை, தயவு செய்து தங்களுடைய தனி மின்மடல் முகவரியை விருப்பத்திற்கு இணங்க என்னுடைய infosat06@gmail.com என்ற  இந்த முகவரிக்கு அனுப்பவும்.

அழியாத அன்புடன்

அடலேறு

At September 20, 2009, கலை wrote:

//இந்த கனவுக்கு பதில் கண்ணீர் மட்டும்தான் கலை. :( //

ம்ம்ம்ம். அதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியுமான்னு தெரியலை. :(

Related posts

No related posts.

மரணத்தின் வாசனை!
இணையம் மூலமாக நான் சில புத்தகங்கள் வாங்கியிருந்தேன். ஈழத்து எழுத்தாளர்களான த.அகிலன், கருணாகரன் ஆகியோரின் புத்தகங்கள். அகிலனின் ‘மரணத்தின் வாசனை’, ‘தனிமையின் நிழல்குடை’ ஆகியவையும், கருணாகரனின் ‘பலி ஆடு’ ம் வாங்கியிருந்தேன். வடலி வெளியீடாக வந்த அந்த புத்தகங்கள் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டு நேற்று என் கைக்கு வந்து சேர்ந்தன.

புத்தகம் வாங்கும்போதே, மனமெல்லாம் குழப்பமும், கொந்தளிப்புமாக இருக்கும் இந்த சூழ்நிலையில் வாங்குகின்றேன், வாசிப்பேனா என்று எண்ணினேன். எத்தனையோ புத்தகங்கள் தொடப்படாமலே தூங்கிக் கொண்டு இருக்கின்றன. அதனால் இவை இப்போது அவசியமா என்று தோன்றினாலும், ஏதோ ஒரு உந்துதலில் வாங்கினேன்.

புத்தகம் கிடைத்ததுமே ‘மரணத்தின் வாசனை’ வாசிக்க வேண்டும்போல் இருந்தது. இப்போ இருக்கும் வலிகளுடன் கூடிய மனநிலையில், இந்தப் புத்தகம் வாசிக்கவே வேண்டுமா என்று தோன்றிய எண்ணத்தை புறந்தள்ளி விட்டு, முன்னுரையை பார்த்து விட்டு, முதலாவது கதையான ‘ஒரு சின்னப் பையனின் அப்பா செத்துப் போனார்’ ஐ வாசித்தேன். முதலே ஓரளவு இந்தக் கதையின் கரு தெரிந்திருந்தாலும், வாசித்த பொழுதில் கண்ணீர் என் அனுமதியின்றி வழிந்ததை தடுக்க முடியவில்லை. அகிலன் தனக்கே உரிய பாணியில் மனதை தொடும் விதத்தில் எழுதியிருந்தார்.

இரு நாட்கள் முன்னாலும், நேற்றும் என் மனது மரத்துப் போனதா என்ற கேள்வியை நான் பல தடவை கேட்டுக் கொண்டேன். காரணம் உறவினர் ஒருவரின் மரணம் என் கண்ணில் நீரை வரவழைக்கவில்லை. எனக்கே வியப்பாக இருந்தது. அது மட்டுமல்லாமல், கேள்விப்பட்ட உடனே ஏதோ ஒரு கவலை வந்தாலும், சிறிது நேரத்திலேயே, ஓரளவு நிதானத்துடன் அந்த மரணத்தை மனது ஏற்றுக் கொண்டது எனக்கே ஆச்சரியத்தை தந்தது. இதற்கெல்லாம் காரணம் என்னவென்று நினைத்துப் பார்க்கிறேன். தொடர்ந்து ஈழ மண்ணில் நடந்தேறியி்ருக்கும் ஆயிரம் ஆயிரம் மரணங்களாக இருக்குமோ? மரணத்தின் வாசனையை மட்டுமே தற்போது கொண்டிருக்க கூடிய வன்னிப் பகுதி நினைவிலும், உணர்விலும் கலந்து கிடப்பதாக இருக்குமோ?

மரணம் என்பது தவிர்க்க முடியாததுதான். ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதும்தான். ஆனாலும், இப்படியா கொத்துக் கொத்தாக, ஏதுமறியா அப்பாவிகளின் உயிர் போயிருக்க வேண்டும். உலகிலேயே மனிதாபிமானம் என்பது செத்துக் கொண்டிருக்கிறது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

1 Comments

At May 25, 2009, ரவி wrote:

ரொம்ப நாள் கழித்து ஒரு இடுகையைக் கண்டதில் மகிழ்ச்சி. ஆனால், எழுதிய விடயம் :(

என்னுடைய மிக நெருங்கிய உறவினர்கள் சிலர் இறந்த போது எனக்கு அழுகை வரவில்லை. அப்போதிருந்த என் மன உணர்வுகளை எதிரொலிப்பதாக இருக்கிறது..

Related posts

No related posts.

பெண்கள் அடக்கி வைக்கப்படுகிறார்களா?
நான் நீண்ட காலமாக ‘என்னைப் பாதித்தவை ‘ யில் எதுவும் எழுதவில்லை. அதனால் என்னை எதுவுமே பாதிக்கவில்லை என்பது அர்த்தமல்ல. பாதித்தவை, பாதிப்பவை என்று நிறையவே இருந்தாலும், எழுத முடியவில்லை. காரணங்கள் பல. அது எதற்கு இங்கே. இப்போ, என்னை பாதித்த ஒரு விடயத்தை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

இந்தியாவில் தமிழ் நாட்டில் இருந்து ஒரு தாதி தொழிலில் இருக்கும் ஒரு பெண், ஒரு 3 மாத காலம் பிரத்தியேகமான பயிற்சிக்காக இங்கே வந்திருந்தார். இயற்கையாகவே இந்தியா என்றதும் அவருடன் பேசுவதற்கு ஒரு ஆர்வமும், அவர் தமிழ் என்றதும் ஒரு மேலதிக ஆர்வமும் வந்து தொற்றிக் கொண்டது. பேசக் கிடைத்த முதல் சந்தர்ப்பத்தில், வழமையான அறிமுகக் கேள்வியாக பெயரைக் கேட்டதும், அவர் “வேண்டா” என்றார். ‘என்ன இது பெயரைக் கேட்க வேண்டாம்’ என்று சொல்கின்றாரா என்று யோசித்த படியே பார்த்தபோது, அவரது பெயரே ‘வேண்டா’ என்பதுதான் என்பதை அழுத்திக் கூறினார். “வித்தியாசமான பெயராக இருக்கிறதே” என்று கேட்டபோது, அவர் சொன்னது, என்னை அப்படியே அதிர்ச்சி அடைய வைத்தது. அவர் வீட்டில் அவர் 5 வது பெண் குழந்தையாம், அதனால் பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் ‘வேண்டா’. அந்த பெயரை உச்சரிக்கும் போதெல்லாம், அந்த பெண்ணுக்கு எப்படி இருக்கும் என நினைத்துப் பார்த்தேன். ‘நீ எங்களுக்கு வேண்டாத பிள்ளை’ என்று பெற்றோரே சொல்வதுபோல் இருக்காதா? வேதனையாக இருந்தது. பயிற்சிக் காலம் முடிந்து அவர் இந்தியா திரும்பிய வரையில், அவரை நான் பெயர் சொல்லி அழைத்ததே கிடையாது.

இந்த பதிவை எழுத தூண்டியது, இந்த ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல. சில மாதங்களுக்கு முன்னர் இங்கே தொலைக்காட்சியில் ஒரு விவரணப் படம் பார்க்க நேர்ந்தது. அந்த விவரணப் படம் பேசிய பொருள், ஆசிய நாடுகளில் பெண்களை அடக்கி வைப்பது பற்றியது.

இதை வாசிப்பவர்கள் சிலரது மனதில், “இந்த காலத்துலே போய் இப்படி பேசலாமா?” என்றோ, “என்ன எங்க வீட்டுல என்னை யாரும் அடக்கி வைக்கலையே”, என்றோ, “ஏன் எங்க அப்பா, அம்மா காலத்துலே கூட பெண்கள் சுதந்திரமாத்தானே இருந்தாங்க” ஏன்றோ தோன்றலாம். அட, நான் கூட அப்படி யோசிப்பேன். ஆனால், உண்மையாவே பெண்கள் அடக்கித்தான் வைக்கப் படுகிறார்கள் என்று புள்ளி விபரம் சொல்கின்றது. அதுவும் எப்போது அடக்கப் படுகிறார்கள் என்றால், கருவிலேயே அடக்கப்படுகிறார்கள். இங்கே நான் ஒன்றும் புதிதாக சொல்லவில்லை. பெண் குழந்தைகள் என்று தெரிந்ததும், அந்த குழந்தைகளை அழித்து விடுவது பற்றித்தான் சொன்னார்கள்.

பாகிஸ்தான், இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இந்த விவரணப் படம் எடுக்கப் பட்டிருந்தது. பாகிஸ்தானில் எடுத்த பகுதியில் ஒரு காட்சியில், ஒரு வீட்டில் புதிதாய் பிறந்த குழந்தையும், குழந்தையைச் சுற்றி உறவினர்களும். ஆண் குழந்தை பிறந்தால் (மட்டும்) எவ்வளவு மகிழ்ச்சி என்பதை ஒரு ஆண்மகன் சொல்லிக் கொண்டிருக்கிறார். குழந்தை ஆண்தான் என்பதை ஆடையை விலக்கி காட்டி மகிழ்ந்து கொள்கின்றார். கூடவே, அங்கிருக்கும் பெண்களும் சேர்ந்து ஆண்குழந்தை பிறப்பதில் உள்ள மகிழ்ச்சியையும், அதுவே பெண் குழந்தையாக இருந்து விட்டால், ஏற்படும் கவலையயும், ஆண் குழந்தையாக இருந்து விட்டதில் உள்ள மகிழ்ச்சியுடன் சொல்கின்றார்கள். ஆண் குழந்தை பிறந்தால் கொண்டாட்டம் எப்படியெல்லாம் இருக்குமென்பதையும், பெண் குழந்தையாகி விட்டால், குழந்தை பெற்றுக் கொண்ட தாய்க்கு நடக்கவிருக்கும் அபாயங்களையும் சொன்னார்கள். அந்த தாயிடம் “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்கப்பட்ட போது, அவர் சொல்கின்றார் “என் கணவருக்கு எது வேண்டுமோ, எது விருப்பமோ, அதை செய்வதுதானே என் கடமை. அதனால் எனக்கும் பெண் குழந்தை பிறப்பது விருப்பமில்லை”.

இந்தியாவில் எடுத்த பகுதியில் ஒரு காட்சியில், ஒரு பெண்ணுக்கு பெண் குழந்தை என்று தெரிந்ததும், வற்புறுத்தலின் பேரில் கருச்சிதைவு செய்து விட்டு வந்திருக்கிறார். கூடவே பல பெண்கள் துக்கம் விசாரிக்க வந்திருக்கிறார்கள். அவர் அழுதபடியே சொன்னது, “நான் என்ன செய்ய முடியும். அந்தக் குழந்தையை நான் பெற்றுக் கொள்ள முடிவு எடுத்திருந்தால், என்னை என் வீட்டுக்கு அனுப்பி விடுவார் எனது கணவர். எனக்கு குழந்தையை இழக்க விருப்பமில்லை. ஆனாலும் வேறு வழி தெரியவில்லை”. இவர்கள் ஓரளவு படிக்காத குடும்பத்தில் இருந்து வந்தவர்களாகத் தோன்றினார்கள்.

அட, படிக்காத நிலையில்தான் பெண்கள் இந்த முடிவுக்கு போக வேண்டி வருகின்றது என்று பார்த்தால், இல்லவே இல்லையாம். படித்தவர்கள் பலரும் கூட இதையே செய்கின்றார்களாம். ஒரு வைத்தியசாலைக்கு (பஞ்சாப் மாநிலத்தில் என்று நினைக்கின்றேன், சரியாக நினைவில் இல்லை) ஸ்கானிங் செய்து பார்க்க ஒரு பெண் வந்திருக்கிறார். படித்தவராகத் தெரிந்தார். அவரது கணவரின் தாயார் கூட்டி வந்திருக்கிறார். முதலில் வைத்தியரிடம், ஸ்கானிங் இல் பெண் குழந்தை என்று தெரிந்தால் என்ன நடக்கும் என்று கேட்ட போது, அவர் சொன்னார் “இங்கே வருபவர்களில் பலரும், பெண் குழந்தை என்று தெரிந்ததும், கருவை கலைத்து விடச் சொல்லி கேட்கிறார்கள். முக்கியமாக, கணவரின் உறவினர்கள் இதை வலியுறுத்திச் செய்கின்றார்கள். இப்போது அந்தப் பெண்ணுடன் வந்திருப்பவரும், அதையேதான் கேட்பார். நாங்கள் என்ன செய்வது?” என்று கவலையோடு அந்த ஆண் வைத்தியர் சொன்னார். ஸ்கானிங் செய்து கொள்ள வந்த பெண்ணிடம் “என்ன குழந்தை வேண்டும் என்று விரும்புகின்றீர்கள்” என்று கேட்டபோது, ஒளிப்பதிவாளரையும், வைத்தியரையும் மாறி மாறிப் பார்த்து விட்டு, மாமியார் அருகில் இல்லை என்பதையும் உறுதி செய்து கொண்ட பின்னர், மிகுந்த தயக்கத்தின் பின்னர் “எந்தக் குழந்தை என்றாலும் சரிதான்” என்று பதில் சொன்னார். மாமியாரிடம், அதே கேள்வி கேட்கப்பட்ட போது, எந்த வித தயக்கமுமின்றி “ஆண் குழந்தைதான்” என்ற பதில் வந்தது. “பெண் குழந்தை என்றால் என்ன செய்வீர்கள்?” என்ற கேள்விக்கு முதலில் சிறிய தயக்கம் தெரிந்தது. பின்னர் சிரித்த முகத்துடன், “கருவைக் கலைத்து விடுவோம்” என்று சாதாரணமாக ஒரு பதில் வந்தது அதிர்ச்சியை தந்தது. என்னத்தை சொல்ல, பெண்களே பெண் குழந்தைகளை வேண்டாத பொருளைப் பார்ப்பதைப் போல் பார்ப்பதற்கு, சமூகம் காரணங்களையும் ஏற்படுத்தி, பழக்கப்படுத்தி வைத்திருக்கிறது, ம்ம்ம். சீதனம் ஒரு முக்கிய காரணமாக பேசப் பட்டது.

இங்கே இப்படி என்றால் சீனாவில் வேறு ஒரு காரணம். ஒரே ஒரு குழந்தைதான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றதும், அது ஆண் குழந்தையாகவே இருக்கட்டும் என்று முடிவு எடுக்கிறார்களாம். அது ஏன் ஆணாக இருக்க வேண்டும் என்று அங்கே நினைக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அங்கேயும் சீதனப் பிரச்சனை உண்டா என்பது தெரியவில்லை. யாராவது தெரிந்தால் கூறுங்கள்.

இதனால் இந்த நாடுகளில் பெண்கள், ஆண்களுக்கிடையிலான விகிதம் 50:50 ஆக இல்லாமல், சமநிலையில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாம். அந்த சமநிலைக் குழப்பம் அபாயமான கட்டத்துக்கு போகலாம் என்றும் சொன்னார்கள். சீனாவில் இந்த one-child-policy யால், பிறக்கும் குழந்தைகளை பதிவு செய்யாமல் இருப்பதும், இந்த விகிதம் தவறாக பதிவு செய்யப்பட்டிருப்பதற்கு ஒரு காரணமாம்.

“பெண்களின் சம உரிமையையும் சுதந்திரைத்தையும் வாழ்வின் அனைத்து மட்டங்களிலும் உறுதிப்படுத்துவது முக்கிய முன்னுரிமையாக இருக்க வேண்டும்” என்று சொல்கின்றார்களே. இப்படி உலகிற்கு காலடி எடுத்து வைக்க முன்னரே, பெண்கள் சம உரிமையற்றுப் போவதை என்னவென்று சொல்லலாம்?

11 Comments

At March 8, 2007, ரவிசங்கர் wrote:

வேண்டா - இந்தப் பெயரை கேள்விப்பட்டதில்லை. போதும் பொண்ணு என்று பெயர் வைப்பார்கள். ஆனால், அதை விட அதிர்ச்சியாக இருக்கிறது இந்தப் பெயர். ஹ்ம்ம்..

உண்மையில் உலகம் எங்கும் பெண் அடக்கி வைக்கப்பட்டே இருக்கிறாள். பல இடங்களில் இது உடலளவில் மோசமாக வெளிப்படுகிறது. மேலை நாடுகள் உள்ளிட்ட சில இடங்களில் மனதளவில் நுணுக்கமாக வெளிப்படுகிறது. பண்பாடு, குடும்பம், உடல் திறன், சமூகம் என்று பல தளைகள் இன்னும் பெண்களை சுற்றிக் கொண்டு தான் உள்ளன.

ரொம்ப philosophicalஆ பார்த்தா :) ஒவ்வொருவரும் யாரோ இன்னொருவரை ஏதோ ஒரு காரணத்துக்காக அடக்கி வைக்க நினைக்கிறோம் என்பது தான் உண்மை. ஆண்-பெண், முதலாளி-தொழிலாளி, பெற்றோர்-குழந்தை, சமூகம்-தனியாள், வெள்ளை-கறுப்பு, மேல்சாதி-கீழ்சாதி, பணக்காரன்-ஏழை, என்று நீளும் அடக்கு முறைகள் அதிகம்...

At March 8, 2007, தமிழ்நதி wrote:

'வேண்டா'என்று பெயர் வைப்பதற்கு எவ்வளவு கொடுமையான மனம் இருக்கவேண்டும்... அப்படிப் பெயர் வைத்த தந்தையின் அன்னையும் ஒரு பெண்ணல்லவா...? பெண்கள் வீதம் குறையும்போது என்ன நடக்குமென்கிறீர்கள்...? ஒரு பெரிய சண்டையே வரும். அதிலும் பாதிக்கப்படுபவள் பெண்ணாகத்தான் இருப்பாள்.

At March 8, 2007, கலை wrote:

வருகைக்கு நன்றி ரவி. ஏதோ ஒரு வகையில் ஒவ்வொருவரும் அடக்கப்படுகிறார்கள் என்ற தத்துவம் (philosophy க்கு தமிழ் அதுதானே? :)) சரியாக இருந்தாலும். பெண்கள் கருவிலேயே அடக்கப்படுவது கொடுமையா இருக்கு.

At March 8, 2007, கலை wrote:

வருகைக்கு நன்றி தமிழ்நதி.

ம்ம்ம். கொடுமைதான். தந்தை மட்டுமே பெயர் வைத்தாரா, தாயும் சேர்ந்து அந்த பெயரை முடிவு செய்தாரா என்பது தெரியவில்லை. பெண்களே பெண் என்பதால், கருவில் அழிக்கும் கொடுமையை செய்யும் காலமாயிருக்கிறது. என்ன செய்யலாம்?

At March 8, 2007, ரவிசங்கர் wrote:

உங்களை பாதித்த நல்ல, postiveஆன விசயங்கள் குறித்தும் எழுதுங்களேன் :)

At March 8, 2007, கலை wrote:

அதுதானே. ஏன் நான் அப்படி எழுதவில்லை. ஒருவேளை எதிர்மறையான விஷயங்கள்தான் என்னை அதிகம் பாதிக்கிறதோ? :), நேரமும், விஷயமும் வந்தால் எழுதுகின்றேன். ஏற்கனவே நான் கூறியதுபோல, பாதித்தவை ஏராளம். அதில் ஒரு சில மட்டுமே இங்கே.

At March 8, 2007, டிசே தமிழன் wrote:

/சிலரது மனதில், "இந்த காலத்துலே போய் இப்படி பேசலாமா?" என்றோ, "என்ன எங்க வீட்டுல என்னை யாரும் அடக்கி வைக்கலையே", என்றோ, "ஏன் எங்க அப்பா, அம்மா காலத்துலே கூட பெண்கள் சுதந்திரமாத்தானே இருந்தாங்க" ஏன்றோ தோன்றலாம்./

பாதிக்கப்பட்ட பெண்களோ அல்லது தலித்துக்களோ தங்கள் வலிகளைப் பேசும்போது இப்படித்தான் பல எதிர்க்குரல்கள் எழும்புகின்றன எனபதுதான் இன்னும் வேதனையானது.

At March 8, 2007, கலை wrote:

வருகைக்கு நன்றி! உண்மைதான். இன்னமும் நிலை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

At March 12, 2007, திரு wrote:

நல்ல கட்டுரை கலை.

//தந்தை மட்டுமே பெயர் வைத்தாரா, தாயும் சேர்ந்து அந்த பெயரை முடிவு செய்தாரா என்பது தெரியவில்லை. பெண்களே பெண் என்பதால், கருவில் அழிக்கும் கொடுமையை செய்யும் காலமாயிருக்கிறது. என்ன செய்யலாம்?//

நமது சமூகம் ஆணாதிக்க கருத்துக்களால் கட்டப்பட்டிருக்கிறது. இந்த ஆதிக்கத்தை உணராமலே ஆதரிக்கும் மனநிலையில் பெண்களும் தள்ளப்பட்டிருக்கிறார்கள். உணர்ந்தும் குரல் கொடுக்க முடியாத அளவு பொருளாதார சூழ்நிலையும் அது சார்ந்த அச்சங்களும் பெண்ணை அடிமையாக வைத்திருக்கிறது.

பெண் கருக்களை அழிக்கும் செயலில் தனது மனம் விரும்பும் முடிவுகளை எடுக்க இயலாத சூழலில் பெண் இருப்பதும், கணவன் மற்றும் குடும்பத்தினரது முடிவுகளை ஏற்கவேண்டிய நிலையிலும் இருப்பது வேதனையான உண்மை. இந்த நிலை மாறவேண்டும். இது எளிய விசயமல்ல.

கல்வியும் பொருளாதார பலமும் கொண்ட பெண்கள் இந்த விசயங்களில் மாறுபடுகிறார்கள். படிப்பும், வேலையும் பெண்ணுக்கு விருப்பமான முடிவை எடுக்க ஓரளவு மனபலத்தை கொடுக்கும்.

அச்சம் தவிர்த்து 'எழுந்து நிற்கும்' மனபலம் விடுதலைக்கான முதல் படி!

At March 13, 2007, துளசி கோபால் wrote:

எனக்குத்தெரிஞ்சு ஒரு வீட்டில் 'மங்களம்' என்று பெயர் வைத்திருந்ததைப் பார்த்தேன்.

அது போகட்டும். குழந்தை உண்டாகறது இவர்கள் பொறுப்பில்தானே இருக்கு. அதைக்
கடைப்பிடிச்சிருக்கலாம்தானே?  மனக்கட்டுப்பாடு இல்லாத மக்கள்(-:

At March 13, 2007, கலை wrote:

நன்றி திரு. நீங்கள் சொல்வது உண்மைதான். சமூக அமைப்பு, சில தேவையற்ற நம்பிக்கைகள் எல்லாமாக பெண்களை இந்நிலைக்கு ஆளாக்கி உள்ளது.

நன்றி துளசி. சிலர் ஆண் குழந்தை வேண்டுமென்றே நினைத்து குழந்தை மேல் குழந்தையாக பெற்றுக் கொள்கின்றார்கள். அது பெண்ணாகப் போய் விடும்போது, இந்த பரிதாப நிலமை.

Related posts

No related posts.

ஆறுதல் வார்த்தைகள்!!
பல சமயங்களில் எழுத எத்தனையோ இருந்தாலும், எதையும் எழுத தோன்றுவதில்லை. ஆனால் இன்று தமிழ்நதியின் ‘மரணம் பற்றிய குறிப்பு’, பார்த்ததும் எழுதத் தோன்றியது.

தமிழ்நதி, தனக்கேயுரிய நடையில் தற்கொலை மரணம் ஒன்றின் பாதிப்பை வெளிக் கொண்டு வந்திருக்கிறார். அவர் அங்கே எழுதியிருப்பது அனைத்தும் மனதில் மெல்லிய வலியை தந்தாலும், சில வரிகள் கவனத்தை கொஞ்சம் அதிகமாகவே ஈர்த்தது. காரணம் அந்த வரிகளில் உள்ள விடயம்பற்றி சில நாட்களாக நானும் யோசித்துக் கொண்டிருப்பதுதான். அந்த வரிகள்….

&&“இந்த ஆறுதல் வார்த்தைகளை நான் பேசவேண்டுமா வேண்டாமா…?” என உங்களில் எவருக்கும் தோன்றினால், தயவுசெய்து பேசுங்கள். இல்லையெனில், பேசவேண்டிய சமயத்தில் பேசாமற் தங்கிவிட்ட வார்த்தைகள் முள்ளாக உள்ளிருந்து கிழிக்கும். மலமாக நாற்றமடிக்கும். யார் கண்டது…? ஒரு புன்னகையில், ஒரு சொல்லில், ஒரு கையின் வெப்பத்தில், ஒரு ஆழமான பார்வையில், ஒரு தலை தடவலில் ஒரு மரணம் தவிர்க்கப்படலாம்.&&

தற்கொலையை நோக்கி நகரும் ஒருவருக்கு, சில சமயம் தமிழ்நதி கூறியிருப்பதுபோல, வெற்று வார்த்தைகள் எதுவும் இல்லாமல், சில சின்ன சின்ன செயல்கள் கூட அவரை மரணத்தின் பிடியிலிருந்து மீட்டு வரலாம். இந்த வார்த்தைகள் தற்கொலை செய்து கொள்ளப் போகும் நபர்களுக்கு மட்டுமல்ல. அனைவருக்கும் பொருந்தும் என்று தோன்றுகின்றது. இந்த ஆறுதல் வார்த்தைகள் உதவுவது மரணத்தை நோக்கிச் செல்பவர்களுக்கு மட்டுமல்ல. மரணத்தைப் பற்றி சிந்திக்காத, உடலால் வாழ்ந்து கொண்டு, உணர்வால் இறந்து கொண்டிருக்கும் சிலருக்கு கூட இப்படி சில ஆறுதல் வார்த்தைகளோ, அன்றில், வார்த்தைகள் எதுவுமற்ற செயல்களோ அவருள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

நிரந்தரமற்ற இந்த வாழ்வில், எவரும், எப்போதும் இல்லாமல் போகலாம். அப்படி இருக்கையில், ஒருவர்மேல் ஒருவருக்கு எதற்கு தேவையற்ற ஆதங்கங்கள், கோபங்கள். சில சமயம் உண்மையான அன்பால் பிணைக்கப்பட்டவர்களே கூட கோப தாபங்களால் ஒருவரை ஒருவர் வருத்திக் கொள்கின்றார்கள். இப்படி ஒரு நிலையில் ஒருவருக்கு ஏதாவது ஆகி விட்டால், மற்றவரின் நிலை என்ன? நாம் வாழும் குறுகிய வாழ்க்கை காலத்தை, ஏன் நல்ல விதமாக அமைத்துக் கொள்ளக் கூடாது?

8 Comments

At January 5, 2007, tamilnathy wrote:

நன்றி கலை, என் பதிவு உங்களைப் பாதித்து அது தொடர்பாய் எழுதியிருப்பது நிறைவைத் தருகிறது. எழுத்து என்பது ஒரு மனதுள் புகுந்து ஒரு சிறு மாற்றத்தை ஏற்படுத்தினாலும் அது வெற்றியல்லவா...?

At January 5, 2007, SK wrote:

//இந்த வார்த்தைகள் தற்கொலை செய்து கொள்ளப் போகும் நபர்களுக்கு மட்டுமல்ல. அனைவருக்கும் பொருந்தும் என்று தோன்றுகின்றது. இந்த ஆறுதல் வார்த்தைகள் உதவுவது மரணத்தை நோக்கிச் செல்பவர்களுக்கு மட்டுமல்ல. மரணத்தைப் பற்றி சிந்திக்காத, உடலால் வாழ்ந்து கொண்டு, உணர்வால் இறந்து கொண்டிருக்கும் சிலருக்கு கூட இப்படி சில ஆறுதல் வார்த்தைகளோ, அன்றில், வார்த்தைகள் எதுவுமற்ற செயல்களோ அவருள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். //

I totally agree wit your post and especially with the above!

Very nice one!

At March 17, 2007, மங்கை wrote:

//இந்த வார்த்தைகள் தற்கொலை செய்து கொள்ளப் போகும் நபர்களுக்கு மட்டுமல்ல. அனைவருக்கும் பொருந்தும் என்று தோன்றுகின்றது. இந்த ஆறுதல் வார்த்தைகள் உதவுவது மரணத்தை நோக்கிச் செல்பவர்களுக்கு மட்டுமல்ல. மரணத்தைப் பற்றி சிந்திக்காத, உடலால் வாழ்ந்து கொண்டு, உணர்வால் இறந்து கொண்டிருக்கும் சிலருக்கு கூட இப்படி சில ஆறுதல் வார்த்தைகளோ, அன்றில், வார்த்தைகள் எதுவுமற்ற செயல்களோ அவருள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். //

உண்மை கலை..அருமையான பதிவு

At March 17, 2007, கலை wrote:

வருகைக்கு நன்றி தமிழ்நதி, SK, மங்கை.

At May 8, 2007, ரவிசங்கர் wrote:

அன்பை வெளிப்படையாகக் காட்டாததாலேயே மனித உறவுகளில் பல பிரச்சினைகள். " சொன்னால் தான் தெரியுமா" என்று வெற்று வாதத்தை வைத்திருப்பார்கள். இருந்தாலும், சொல்லாமலே, காட்டாமலே இருப்பதால் என்ன பயன்?

At May 8, 2007, கலை wrote:

உண்மைதான் ரவி. என்னைப் பொறுத்த அளவில் இருக்கும் அன்பை எல்லாம் வெளியே அவரவரிடம் கொட்டி விட வேண்டும். நாம அதை நமக்குள்ளே வைச்சிருந்து என்ன பண்ணப் போறோம். :)

ஆனாலும் சில சந்தர்ப்பங்களில் நமக்குள்ளேயே வைத்திருக்க வேண்டியும் வந்து விடுகின்றது. :(

At May 8, 2007, ரவிசங்கர் wrote:

எதிர்த் தரப்பில் எதிர்ப்பார்ப்பு இருந்தால் தாராளமாக காட்டலாம் தானே? இல்லாவிட்டால் குப்பையில் கொட்டிய மாணிக்கமாகி விடும் :(

இரு தரப்பிலும் எதிர்ப்பார்ப்பு இருந்தும் வெளிப்படையாய் காட்ட முடியாத சமயங்களும் நிறைய உண்டு..எல்லாம் வீணாய்ப் போன சமூக அமைப்புகள், உறவு முறை, பண்பாடு, மரபு முதலியத் தடைகளால்

At May 8, 2007, கலை wrote:

உண்மைதான்.

Related posts

No related posts.

பூக்கள் மட்டும்!!
இன்றைக்கு நடந்து போய்க் கொண்டிருந்தபோது, இந்த செடி வித்தியாசமாக கண்ணில் பட்டது. அதை கைத்தொலைபேசியில் கிளிக்கிக் கொண்டேன்.

இந்த செடியை, அதில் நீலமும், வெள்ளையும் கலந்த நிறத்தில் அழகழகாய் தொங்கும் பூங்கொத்துக்களை பல தடவை இரசித்துப் பார்த்திருக்கிறேன். இலையுதிர் காலத்தின் மாற்றத்தால் இப்போது இப்படி இருக்கிறது. பாருங்கள் மரத்தில் இலைகள் எல்லாமே உதிர்ந்து போய் விட்டன. ஆனால் பூக்கொத்துகள் மட்டும் (நிறம் மாறி விட்டாலும் கூட) மரத்தில் ஒட்டிக் கொண்டிருப்பதை.எனக்கு ஏனோ (சம்பந்தமே இல்லாமல்) ஒரு விஷயம் மனதில் தோன்றியது. சில உறவுகளும், நட்புகளும் கூட இப்படித்தான் என்று தோன்றியது. தொடர்புகள் அற்றுப் போய் விட்டாலும், மனதின் ஆழத்தில் அன்பு மாறாமல் ஒட்டிக் கொண்டிருக்கும். சில உறவுகளும், நட்புகளும் நம்மை மறந்து விட்டுப் போய் விட்டாலும், நம்மால் விலகிச் சென்று விட முடிவதில்லை.

7 Comments

At December 7, 2006, tamilnathy wrote:

உங்களை நான் முன்பு வாசித்ததில்லை. ஆனால், நிறம் உதிர்ந்தாலும் உதிராமல் இருக்கும் பூக்களை உறவுகளோடு ஒப்பிட்டு எழுதியிருந்ததில் உங்கள் மென்மையான இதயம் அறிந்தேன். மிக எளிமையாக ஒரு ‘தேவதைக்குத் தாயான சாதாரண பெண்’என்று உங்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டது… என்னை அசாதாரணமாக ஈர்த்தது. நல்லவர்களோடு நட்பு இனிது.

At December 8, 2006, சேதுக்கரசி wrote:

இன்னொரு வகைச் செடியுண்டு, அதில் சின்னச் சின்ன சிகப்புப் பழங்கள் இருக்கும் (செர்ரிப் பழம் போல, ஆனால் இன்னும் சிறியதாக) அந்தச் செடியிலும் இலைகள் உதிர்ந்தபின்னும் அந்தப் பழங்கள் குளிர்காலம் முழுவதும் விழாமல் நிற்பது பிரமிப்பாயிருக்கும்.

//தொடர்புகள் அற்றுப் போய் விட்டாலும், மனதின் ஆழத்தில் அன்பு மாறாமல் ஒட்டிக் கொண்டிருக்கும்.//

வாவ். உண்மை தான்.

At December 8, 2006, கலை wrote:

பின்னூட்டத்துக்கு நன்றிகள் தமிழ்நதி, சேதுக்கரசி.

At December 21, 2006, ரவிசங்கர் wrote:

//சில உறவுகளும், நட்புகளும் கூட இப்படித்தான் என்று தோன்றியது. தொடர்புகள் அற்றுப் போய் விட்டாலும், மனதின் ஆழத்தில் அன்பு மாறாமல் ஒட்டிக் கொண்டிருக்கும். சில உறவுகளும், நட்புகளும் நம்மை மறந்து விட்டுப் போய் விட்டாலும், நம்மால் விலகிச் சென்று விட முடிவதில்லை. //

At December 21, 2006, கலை wrote:

நன்றி ரவிசங்கர்.

என்ன நான் சொன்னது உண்மைதான் என்பதால் இப்படி போட்டுச் சென்றிருக்கிறீர்களா?

At May 8, 2007, ரவிசங்கர் wrote:

ஆமா

At December 19, 2009, Karitha shalee wrote:

//"சில உறவுகளும், நட்புகளும்"

தொடர்புகள் அற்றுப் போய் விட்டாலும்,

மனதின் ஆழத்தில்

"அன்பு "

மாறாமல் ஒட்டிக் கொண்டிருக்கும்//

Azhagu Aarumai

Related posts

No related posts.

சினேகிதியின் கதி!
[QUOTE]இன்னொரு தோழி பேபி இறந்துவிட்டாள் என்பதை உஷா மூலம் அறிந்துகொண்டேன். அவளின் இறப்பு ஒரு அதிர்ச்சி நிறைந்தது. அதைப் பற்றி இன்னொரு பதிவில் சொல்லலாம்.[/QUOTE]

தொடர்ந்து மூன்று வருடங்கள் ஒரே வகுப்பில் நாங்கள் தோழிகள் ஐவர் இருந்து வந்தோம். இடை இடையே ஏதாவது கோப தாபங்கள், சின்ன சின்ன சண்டைகள் இந்த ஐவருக்கிடையேயும் வராமல் இருக்காது. அப்படி வந்தாலும் ஒரு சில மணி நேரங்களில், மிஞ்சிப் போனால் ஒரிரு நாட்களில் அந்த குழப்பம் தீர்ந்து ஒன்று கூடி விடுவோம். இருவருக்குள் குழப்பம் வந்தால், மற்றவர்களுடன் சேர்ந்து விளையாடும்போது, இந்த கோபம் காணாமல் போய் விடும்.இந்த ஐவரில் ஒருவரின் பெயர்தான் பேபி. அவள் வீட்டில் அவள் எட்டாவது கடைசிப்பிள்ளை. அப்பா, அம்மா, அண்ணாமார், அக்காமார் எல்லோருக்கும் செல்லக் குழந்தை. அவள் கேட்பதெல்லாம் வாங்கிக் கொடுப்பார்கள். பாடசாலைக்கு தனது புதிய புதிய விளையாட்டுப் பொருட்கள் எல்லாம் எடுத்து வருவாள். எல்லோருமாக விளையாடுவோம்.

ஒருதடவை அவளுக்கு சமையல் விளையாட்டுக்கு அவர்கள் வீட்டில் குட்டி குட்டி பாத்திரங்கள் வாங்கி கொடுத்திருந்தார்கள். அதை அவளும் தனது ஸ்கூல் பாக்கில் போட்டு எடுத்து வந்திருந்தாள். ஏதாவது ஃபிரீ பீரியட் வராதா, அவற்றை வைத்து விளையாட என்று பார்த்துக் கொண்டே இருந்தோம். நல்ல வேளை ஒரு பாடத்துக்கு ஆசிரியர் வரவில்லை. அப்படி வராவிட்டாலும், வேறு யாராவது ஆசிரியர் வந்து சிலசமயம் எம்மை சங்கடத்தில் மாட்டி வைப்பார். நல்ல வேளையாக அன்று யாரும் அந்த வேண்டாத வேலையை செய்யவில்லை, ஹி ஹி.

நமது மேசைக்கு கீழே புத்தகங்கள் வைக்க கூடிய மாதிரி திறந்த பெட்டி மாதிரி (drawer?) ஒரு அமைப்பு இருந்தது. அந்த வகுப்பில் மூன்று மூன்று பேராக இருக்கும் மேசைகள். எங்களில் ஐந்து பேரில் மூவர் ஒரு மேசையிலும், மற்ற இருவர் அடுத்த மேசையிலும் இருப்போம். அந்த மேசையில் இருக்கும் மூன்றாமவர், நம்மை எல்லாம் விட ஒரு வயது கூடியவர். அவர் எமது குரூப்பில் இல்லை, அவரது குரூப் தனி. ஆனாலும் நல்லவர். ஒரு மேசையில் இருப்பவர்கள் மூவரும் ஒரு வீட்டினர் என்றும், அடுத்த மேசையில் இருந்த இருவரும் அவர்களது உறவினர் என்று பிரித்துக் கொண்டோம். ஒருவர் வீட்டுக்கு மற்றவர்கள் விசிட் போகப் போகிறோமாம். அதுபற்றி கடிதம் போடுவோம். நமது குரூப்பில் இல்லாதவர்தான் பியோன், அதாவது நமது கடிதம் எடுத்துச் சென்று அவர்களிடம் கொடுப்பார்.

அந்த விசிட்டுக்கு அந்த வீட்டில் சமையல் தடபுடலாய் நடக்கும். எதை சமைப்பது என்று கேட்கிறீர்களா? முதல் நாளே பேசி வைத்துக் கொண்டபடி, சாப்பிடக் கூடிய பொருட்கள், அவரவர் இஷ்டத்துக்கு எடுத்து வந்திருந்தோம். அந்த சமையல் பொருட்களில் கொய்யாக்காய், பிஞ்சு போஞ்சிக்காய் (பச்சையாய் சாப்பிடக் கூடியது), கரட் போன்ற பொருட்கள் அடக்கம். அவர்கள் சமைப்பார்கள். நாங்கள் விருந்துக்குப் போய் சாப்பிடுவோம். ஒரு மேசையிலேயே ஐவரும் நெருக்கி அடித்து உட்கார்ந்துதான் விருந்துச் சாப்பாடு. பிறகு அவர்களை நமது வீட்டுக்கு வரும்படி அழைப்பு வைத்து விட்டு வருவோம். பாத்திரங்கள் இடம் மாறி நமது வீட்டு கிச்சனுக்கு (அதுதான் மேசைக்கு கீழே, ஹி ஹி) வந்து விடும்.

இந்த நிலையில் ஆசிரியர் ஒருவர் வகுப்பில் நுழைந்ததும், அப்படி எல்லோரும் ஒரு மேசையில் உட்கார்ந்து என்ன செய்கிறோம் என்று கேட்டதும், இனிமேல் எந்த விளையாட்டுப் பொருட்களும் ஸ்கூலுக்கு எடுத்து வரக் கூடாது என்று சத்தம் போட்டதும் தனிக் கதை. அவர் சொன்னதுக்காக நாங்கள் கொண்டு போகாமல் விட்டு விட முடியுமா என்ன? அது எல்லாம் தொடர்ந்தும் நாங்கள் விளையாடிக் கொண்டுதான் இருந்தோம்.

சரி, அந்த பேபிபற்றி எழுத வந்து எதை எதையோ சொல்கிறேன் நான். என்ன செய்வது பழைய நினைவுகளுக்குப் போனால், இப்படித்தான். ஒன்றுடன் ஒன்று தொடுத்துக் கொண்டு, மாலை கோர்த்தது மாதிரி, ஒராயிரம் நினைவுகள் வரும்.

நான் சொல்ல வந்தது அந்த பேபிக்கு நடந்த கொடுமை பற்றியதாச்சே. நான் அந்த ஸ்கூலில் இருந்து விலகியதும், புதிய இடத்துக்குப் போனதும், அதன் பிறகு சில காலத்தில் அவர்களது தொடர்பு விட்டுப் போனதும் பற்றித்தான் ஏற்கனவே சொல்லி விட்டேனே. ஒரு சினேகிதியின் மூலம் நான் அறிந்த சோகக் கதைதான் இது. நான் அந்த ஸ்கூலில் இருந்து விலகி வந்து பல காலத்தின் பின்னர், அந்த விஷயத்தை எனது அடுத்த சினேகிதி மூலம் அறிந்த போது எனக்கு நம்பவே முடியவில்லை. அத்தனை செல்லமாக வளர்ந்த பேபிக்கா இந்தக் கதி என்று மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது, என்னை மிகவும் பாதித்தது. இவற்றிற்கு எல்லாம் காரணம் இந்த காலத்திலும் மக்கள் மத்தியில் இருக்கும் சில மூட நம்பிக்கைகள். அதுவும் சில சமய சம்பந்தமான மூட நம்பிக்கைகள் என்பதுதான் வருந்தக் கூடிய விடயம்.

பேபி மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டதாலேயோ என்னவோ, அவள் படிப்பில் பெரிய ஆர்வமில்லாது இருந்தாள். விளையாட்டு, விளையாட்டு, எந்த நேரமும் விளையாட்டுத்தான். அதனால், அவளால் படிப்பிலும் கெட்டிக்காரியாக வர முடியவில்லை. அவள் அதைப் பற்றி கவலைப்பட்டதும் இல்லை. விளையாடுவதற்காகவே ஸ்கூலுக்கு வருவதுபோல் வந்து போவாள்.

அவளுக்கு மிக இளம் வயதிலேயே திருமணமும் நடந்து விட்டதாம். திருமணம் முடிந்த சில காலத்தில் ஏதோ காரணத்தால், பேபிக்கு மன நிலை பாதிப்படைந்திருக்கிறது. அத்துடன் அவளுக்கு உடல் சுகவீனங்களும் வர ஆரம்பித்திருக்கிறது. அந்நிலையில் இதற்கெல்லாம் காரணம் ஒரு தீய சக்திதான் என்று நம்பிய அவர்களது உறவினர்கள், அவளை வைத்தியரிடம் அனுப்பாமல், அவர்களது மதம் சம்பந்தப்பட்ட ஒருவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் என்ன மதம் என்பது அவசியமற்றது என நினைக்கிறேன். ஏனென்றால் வேறு பட்ட மதங்களிலும் இதே போன்ற நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அவரும் இது ஒரு தீய சக்திதான் என்றும், இதற்கு தமது மத முறைப்படி சிலவற்றை செய்ய வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார்.

பேபியை அதற்குப் பிறகு, வீட்டை விட்டு வேறு ஒரு இடத்தில் ஒரு அறைக்குள் அடைத்து வைத்திருந்ததாகவும், அவளை அடித்து எல்லாம் துன்புறுத்தியதாகவும் கூட சொல்கிறார்கள். ஒரு நிலையில் அவளால் கதைக்க கூட முடியாமல் போய் விட்டதாகவும், இப்படியே அவளது நிலை மிகவும் மோசமாகி, இறுதியில் இறந்தே போனாளாம்.

ஒரேயடியாக இறந்து போயிருந்தாலாவது பரவாயில்லை. இப்படி கொஞ்சம் கொஞ்சமாய் இறந்து போயிருக்கிறாள் என்பதை நினைத்தால் மிகவும் கவலையாக இருக்கும். உண்மையில் இதுவும் ஒருவகையில் கொலைதானே?

இதில் அதிகம் வருத்தம் தரக்கூடிய விடயம், கணவனும், அவளை அத்தனை செல்லமாக வளர்த்த அப்பா, அம்மா, சகோதரர்கள் கூட அவளது கஷ்டத்தை புரிந்துகொண்டு, அவளைக் குணப்படுத்த வேறு முயற்சிகளை எடுக்காமல், அது எல்லாம் தீய சக்தியால் வந்த விளைவு, அதற்கு இதுதான் முடிவு என்று நம்பிக் கொண்டு இருந்ததுதான்.

அவளது அந்த அழகிய, குழந்தைத்தனமான முகம் இன்னும் என் நினைவில் பதிந்துள்ளது. .

6 Comments

At November 4, 2005, கயல்விழி wrote:

ஆரம்ப நாள் லூட்டிகளை வாசித்து சிரித்தேன். எங்கள் சிறட்டைச்சமையல் நினைவில் வந்தது.

உங்கள் தோழியின் நிலை அறிந்து வருத்தம். பேய் சூனியம் இன்று இன்னும் தான் நேரத்தை வீணாக்கி நோயை முத்தவைத்துக்கொண்டிருக்கிறார்கள். உங்கள் தோழியின் நிலை எத்தனை கவலைக்கிடமானது என்று புரியமுடிகிறது. பெற்றவர்கள் சகோதரர்கள் எப்படியோ குணம் ஆனால் சரி என்று எதிர்பார்த்திருப்பார்கள். அவர்களது பதட்டம் மற்றவர்கள் அறிவுரை வைத்தியரை நாடவிட்டிருக்காது. மூடநம்பிக்கையால் நடைபெறும் இப்படியான விடயங்கள் வேதனையைத்தான் அழிக்கிறது.

At November 4, 2005, கலை wrote:

கருத்துக்கு நன்றி கயல்விழி.

At December 21, 2006, ரவிசங்கர் wrote:

ஹ்ம்..வேதனையான நிகழ்வு தான்..ஆனால், பொதுவா எனக்கு ஒரு சந்தேகம். ஏன் உங்க எல்லா பதிவுகள்லயும் மற்ற பெண் பதிவர்களே அதிகம் கருத்து சொல்லி இருக்கிறார்கள். நீங்கள் எழுதி இருப்பது பெண்களுக்குத் தான் பிடித்திருக்கிறதா..இல்லை, பெண் பதிவர்களுக்குள் ஒருவரை ஒருவர் வாசித்து ஊக்கமளிக்கும் வழக்கமா? இல்லை, ஆண் பதிவர்கள் அளவுக்கு வெட்டி கோதாவில் இறங்கி பெண் பதிவர்களால் அரசியல் செய்ய இயலவில்லையா? துளசி, பொன்ஸ் இருவர் தவிர்த்து வலைப்பதிவில் பெண்கள் பெயரை நான் அதிகமாக காணவில்லை. இவர்களும் serious-ஆன விஷயங்களை அவ்வளவாக தொட்டுச் செல்வது கிடையாது. அந்த வகையில் நீங்கள் உங்கள் "என்னை பாதித்தவை" பதிவை தொடர்ந்து எழுத வேண்டும். அத்தோடு இந்த சும்மா சும்மா பதிவையும் எழுத வேண்டும். எப்ப பார்த்தாலும் சீரியசாவே எழுதிக்கிட்டு இருந்தா எப்படி?

இந்த பதிவில் நிறைய எழுதி வைத்திருக்கிறீர்கள். எல்லாவற்றையும் பொறுமையாகப் பார்த்து நாளைக்கு பின்னூட்டு தருகிறேன். எப்படி பார்த்தாலும், ஒரே நாளில் நீங்கள் அதிக பின்னூட்டுகளை வெவ்வேறு இடுகைகள்ல இருந்து பெற்றது இன்னிக்கா தான் இருக்கும்னு என் நம்பிக்கை. ஏதோ தூங்கிக்கிட்டு இருக்கிற எழுத்தாளர தட்டி எழுப்பலாம்னு தான் ..ஹா ஹா..

At December 21, 2006, கலை wrote:

ஐயய்யோ தூங்கிகிட்டிருக்கிற எழுத்தாளரா? நல்லா சொன்னீங்க. தூங்கிட்டிருக்கிற, சரி ஆனால் எழுத்தாளரெல்லாம் கிடையாது. அப்பப்போ மனசுல வாறதை பதியணும்ன்னுதான் (கிறுக்கணுன்னு) ஆசை. மத்தபடி எழுத்தாளராகணும் என்ற ஆசையெல்லாம் கிடையாது. :)))

அதையும் செய்ய இப்போவெல்லாம் நேரம் கிடைப்பதில்லை. நீங்கதான் தூங்கிட்டிருந்த பதிவுகளை தட்டி எழுப்பியிருக்கிறீங்க. உண்மைதான், இத்தனை பின்னூட்டம் ஒரே நாளில் நான் பெற்றதில்லை. நன்றிகள் எல்லா பின்னூட்டங்களுக்கும்.

At March 17, 2007, சினேகிதி wrote:

title a parthathum oru nimisam payantiden...apuram thodakathila palaya ninavukalai varavalachidenega.
intha mooda nambikayila irunthu epathan vidupadaporamo

At March 17, 2007, கலை wrote:

நான் பழைய நினைவை பதிவு செய்திருந்தேன். நீங்க பழைய இந்த பதிவையே தூசி தட்டி எடுத்திருக்கிறீங்க.

Related posts

No related posts.

நிலாச்சோறு!!!
பால் நிலா.. அங்கே

பகிர்ந்துண்ட உணவு

அம்மாவின் கையால்

ஆசையாய் நிலாச்சோறு

அன்பினையும் பகிர்ந்து

ஆவலுடன் உண்டோம்….

அது மட்டுமா?

போர்க் காலச் சூழலிலும்… அதே

பால் நிலாத்தான்.. ஆனாலும்

பகிர்ந்துண்ட உணவு

பாரமாய் மனத்திரையில்…

மனைகளுக்கு

மின்சாரமில்லை

மண்ணெண்ணை விலையிலோ

மலை போன்ற உயர்வு

வீட்டிற்குள்

விளக்குமில்லை

வெளிச்சமுமில்லை

ஆதலால் நமக்கு

நிலாச்சோறு

கட்டாயமானது…

13 Comments

At September 2, 2005, `மழை` ஷ்ரேயா(Shreya) wrote:

மனைகளுக்கு மட்டுமா வெளிச்சமில்லை?

At September 2, 2005, கலை wrote:

உண்மைதான் ஷ்ரேயா. மனைகளில் மட்டுமில்லை, மனங்களிலும்தான் வெளிச்சமில்லை.

At September 2, 2005, Go.Ganesh wrote:

// ஆதலால் நமக்கு நிலாச்சோறு கட்டாயமானது...//
ஒரு டயலாக் ஞாபகம் வந்தது. வெளிநாட்டுக்காரன் நிலாவில கால் வச்சப்புறமும் கூட நாம நிலா சோறு தான் ஊட்டிக்கிட்டு இருக்கோம். ரெண்டு விஷயம் புலனாச்சு. வெளிநாட்டுக்காரன் செல்வச்செழிப்பில இருக்கான். நம்மாளுங்களுக்கு கற்பனை அதிகம். ஆனா பாருங்க உங்க கவிதையைப் படிச்சப்புறம் தான் புரிஞ்சுது நம்மாளுங்க கற்பனை திணிக்கப்பட்ட ஒன்று.

At September 3, 2005, திரு wrote:

கலை,

கவிதைகள் அனைத்தும் அருமை! அனுபவமே கவிதை! யுத்தகால நினைவுகளை உணர்வுமிக்க வரிகளில்...வாழ்த்துகள்

அன்புடன்
திரு

At September 13, 2005, கலை wrote:

நன்றிகள் கணேஷ், திரு.

At September 16, 2005, Dharumi wrote:

"போர்க் காலச் சூழலிலும்... அதே
பால் நிலாத்தான்.. ஆனாலும்
பகிர்ந்துண்ட உணவு
பாரமாய் மனத்திரையில்..."

இந்த வரிகளையும், இன்னும் ஸ்றீரங்கன் அவர்களது(கலை/மதி பதிவுகளில் எழுதிய) பின்னூட்டத்தையும் தொடர்ந்து படித்ததாலோ என்னவோ மனசுக்கு ரொம்பவே கஷ்டமாயிருக்கு.

At October 27, 2005, ரவிசங்கர் wrote:

யுத்த பாதிப்பின் வலியை நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது..ஹ்ம்ம்..சீக்கிரம் விடிவு பிறக்கட்டும்

At October 27, 2005, கயல்விழி wrote:

நாம் காவோலையில் நெருப்பெரித்து. மாலை நேர பணிகளை முடிந்த நினைவு நினைவிற்கு வருகிறது. :((

At October 29, 2005, கலை wrote:

நன்றிகள் தருமி, ரவிசங்கர், கயல்விழி.

At December 11, 2005, றெனிநிமல் wrote:

போர் சிதைவுகளை பார்க்கும் போது, மனம் ஒடிந்து போவதைப் போன்ற ஓர் பிரமை. உங்கள் கவிதையை காண்கின்ற போது!

At January 8, 2006, கலை wrote:

நன்றி றெனிநிமல். மீண்டும் இது போன்ற, வலுக்கட்டாயமாக நிலாச் சோறு உண்ணும் நிலமை எவருக்கும் வரகூடாது என்று மனம் வேண்டிக் கொள்கிறது.

At October 5, 2006, à®¯à®¾à®´à¯_à®à®à®¤à¯à®¤à®¿à®¯à®©à¯ wrote:

மனைகளுக்கு
மின்சாரமில்லை
மண்ணெண்ணை விலையிலோ
மலை போன்ற உயர்வு
வீட்டிற்குள்
விளக்குமில்லை
வெளிச்சமுமில்லை

ஆதலால் நமக்கு
நிலாச்சோறு
கட்டாயமானது...

உணர்வுமிக்க வரிகளில்...வாழ்த்துகள்

At December 9, 2006, கலை wrote:

நன்றி காண்டீபன்.

Related posts

No related posts.

கண்ணீர்ப்பூக்கள்!!
போன வார விடுமுறையில் கண்ணாடிப்பூக்கள் படம் பார்த்தேன். அதை இப்பத்தான் பார்த்தீர்களா என்று பலரும் சலித்துக் கொள்வதுபோல் எனக்கு ஒரு தோற்றம். என்ன செய்வது நானிருக்கும் இடத்தில் தமிழ்ப்படங்கள் எடுப்பது இலகுவல்லவே. லண்டன் போயிருந்தபோது ஒரு படத்துக்கு 3 பவுண்ஸ் (மட்டுமே) கொடுத்து DVD கொஞ்சம் வாங்கி வந்தோம். அதுலே ஒன்றுதான் இந்தக் கண்ணாடிப்பூக்களும்.

நிறைய நாளைக்குப் பிறகு நல்ல ஒரு கருத்துள்ள படம் பார்த்த திருப்தி. இரண்டாவது குழந்தை பிறந்ததும், முதல் குழந்தை மேல் வைத்திருக்கும் கவனங்கள் குறைந்து விடுவதும், அதனால் அந்த குழந்தைகள் மனதில் எழும் பிரச்சனைகளையும் கதை எடுத்துக் காட்டுகிறது. இரண்டாவது குழந்தைக்கு தயாராகும் எல்லா அம்மா, அப்பாக்களும் கவனத்தில் எடுக்க வேண்டிய விஷயம்.

படத்தில் பல இடங்கள், மனதை ஆழமாகத் தொட்டது. ஒரு பக்கம் இறந்து போன குழந்தை, மறு பக்கம் அந்தக் குழந்தையின் இறப்புக்கு தமது மற்ற குழந்தையே காரணம் என்பதை அறிந்ததில் அதிர்ச்சி, அந்தக் குழந்தையை சட்டத்தின் பிடியிலிருந்து எப்படி பாதுகாப்பது என்பது புரியாத குழப்பம், தமது குழந்தை தப்பு செய்வதற்கு தாமே காரணமாகி விட்டோமே என்ற தவிப்பு…. இப்படியே அந்தப் பெற்றோர் படும் அவஸ்தைகள் யதார்த்தமாக சொல்லப்பட்டு இருந்தது.

அந்தக் குட்டிப்பையனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பியதும், அங்கே அந்த வில்லனை பொறுப்பாளராகப் பார்த்ததுமே, நெஞ்சுக்குள் படபடப்பு. அந்த நபர் கொஞ்சம் இடக்கு மடக்காக ஆரம்பத்தில் இருந்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு கடுமை அங்கே தொடர்ந்து வரவில்லை (நல்ல வேளையாக).

எனக்கு ஒரு சின்ன சந்தேகம்… உண்மையிலேயே இந்தியாவில் இருக்கும் சிறுவர் சீர் திருத்தப் பள்ளிகளில் இப்படித்தான் குழந்தைகளிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்களா? அப்படியானால் சீர்திருத்தப் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பி வைக்கும் நோக்கமே பாதிப்புக்கு உள்ளாகாதா? இந்தக் கேள்விதான் மனதை அதிகம் பாதித்தது.

7 Comments

At August 18, 2005, நிலவு நண்பன் wrote:

அந்த திரைப்படம் இளகிய நெஞ்சங்களில் ஒரு விதமான சோகம் தரும் என்பது உண்மைதான் சகோதரி

இதயம் நெகிழ்வுடன்

ரசிகவ் ஞானியார்

At August 18, 2005, வீ. எம் wrote:

padam paarka villai... parthuvittu vandhu ungalukku karuthu solkiren  :)

At August 18, 2005, கலை wrote:

சரிதான். நான் நினைத்திருந்தேன் நான் தான் படம் பார்க்கிறதுல லேட் ன்னு. :)

At August 18, 2005, கயல்விழி wrote:

யாரும் இந்த படம் பார்க்கலாம் என்று சிபார்சு செய்தால் மட்டுமே நான் படம் பார்ப்பேன். அப்படி சிபார்சில் பாத்த படம் கண்ணாடிப்பூக்கள். அந்த சிறுவன் அற்புதமாய் நடித்திருந்தான். படம் பார்க்கும் படியிருந்தது.

At August 23, 2005, வீ. எம் wrote:

marakkama aduththa leave la  sivakavi, magakavi kaalidhaas, kappalotiya thamizhan ponra pudhiya padangalai paarthudunga kalai

VM

At August 23, 2005, திரு wrote:

கலை,

மகிழ்ச்சி படைப்புகளை வாசிக்கும் வேளை. நானும் இன்னும் இந்த படம் பார்க்கவில்லை! வாய்ப்பு கிடைக்கும் போது பார்க்கிறேன்.

தொடர்ந்து எழுதுங்கள். நல்ல முயற்சி... இந்தியாவில் சீர்திருத்த பள்ளிகளில் மட்டுமல்ல, காவல்துறை, ஆசிரியர்கள் என எல்ல இடமும் இப்படிபட்ட வன்கொடுமைகள் நடக்கிறது. மனிதநேயம் எங்கே?

அன்புடன்,
திரு

At August 25, 2005, கலை wrote:

//sivakavi, magakavi kaalidhaas, kappalotiya thamizhan ponra pudhiya padangalai paarthudunga kalai//
என்ன சொல்லுறீங்க நீங்க? உண்மையாவே இவை எல்லாம் புதிய படங்களா? ஹி ஹி.

நன்றி திரு.

Related posts

No related posts.

சுனாமி அழிவுகள்………
சுனாமி அழிவுகள்………

(தை மாதம் 11 ஆம் திகதி எழுதியது.)

சீற்றத்துடன் கொந்தளித்த கடல் ஆயிரமாயிரம் மக்களை கொலை செய்து விட்டதுமல்லாமல், மீதி இருந்த மக்களையும் நிலை குலையச் செய்துவிட்ட அனர்த்தத்தால் மனது மிகவும் களைத்து இருக்கிறது. இது பற்றி ஏதாவது எழுத வேண்டும் என்று பல தடவை தோன்றினாலும், எதுவுமே எழுத முடியாமல்…. முயற்சிகள் வீணாகியது. எண்ணங்கள் முட்டி மோதிக் கொண்டபோது, அவற்றினிடையே வார்த்தைகளும் சிக்கிக் கொண்டது போல் உணர்ந்தேன். எத்தனை கொடுமை நடந்து விட்டது. செய்திகளைக் கேள்விப்படும்போது மனது பாரத்தால் கனத்துப் போகின்றது. கண்கள் குளமாகின்றன. நடந்து விட்ட கொடூரம் மனதை பிசைகிறது. கடந்த வருடத்தின் கடைசி ஞாயிறு எல்லோர் மனதிலும் கவலையை விதைத்துச் சென்று விட்டது. நெஞ்சமெல்லாம் வெறும் மேக மூட்டம் மட்டுமே மிஞ்சி நிற்கிறது. துயரத்துடன் இதை எழுத ஆரம்பிக்கிறேன்.

நடந்து முடிந்துவிட்ட கொடூரத்தை நினைத்தால் யாருக்கும் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லக் கூட மனதிற்கு தைரியமில்லாமல் இருந்தது. கோரமான இந்த அழிவில் இறந்துபோன உயிருடன் சித்திரவதை அனுபவித்துக் கொண்டிருக்கிற எத்தனை எத்தனை மனிதர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் கிடைத்திருக்கும். ஆனால் அவர்களது தற்போதைய நிலை என்ன என்பதை நினைத்துப் பார்க்கையில், வாழ்த்துக்கள்கூட எந்த அர்த்தமும் இல்லாதவையாக மனதிற்கு தோற்றம் தந்தது. இயற்கையின் கொடூரம் இத்தனை பயங்கரமாக இருக்கக் கூடும் என்பதன் அர்த்தம் இப்போதுதான் புரிந்தது போல் இருக்கிறது. நமது நிலத்தில், நமது இனத்தில், அதுவும் ஏற்கனவே பல வழிகளாலும் நொந்து போயிருக்கும் ஒரு சமூகத்திலும் இது நேர்ந்திருக்கிறது என்பதை எண்ணும்போது மேலும் மேலும் துன்பம் அதிகரிக்கிறது.

எத்தனை ஆயிரம் குழந்தைகள்… அப்பப்பா.. நினைக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. உயிரிழந்தவர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு அதிகமாய் குழந்தைகள் என்று அறிகையில். பாதிக்கப்பட்ட இடங்களில் எப்படி எதிர்காலம் அமைய போகின்றது என்ற கேள்வி மனதை குடைகிறது. எதிர்காலச் சந்ததியின் முக்கியமான பகுதியையே கடல் கொண்டு போய் விட்டது என்பதை நினைக்கையில் சமுதாயத்தின் எதிர்காலமே கேள்விக் குறியானது போல் இருக்கிறது.நமது எந்த ஆறுதலும் தமது குழந்தைகளை, கணவனை, மனைவியை என பல நெருங்கிய உறவுகளையும் பறி கொடுத்து விட்டுத் தவிக்கும் மக்களுக்கு உண்மையான ஆறுதலாக அமைய முடியாமா என்பது தெரியவில்லை. பலரும் மனிதாபிமானத்துடன் செய்யும் பண உதவிகள், பொருள் உதவிகள் அவர்களது தொடரப் போகும் வாழ்க்கையை கட்டி எழுப்ப உதவும்தான். ஆனால் அவர்களது இழப்பை ஈடு செய்யுமா என்பது தெரியவில்லை. நம்மாலும் வேறு எதைத்தான் செய்துவிட முடியும் என்பதும் புரியவில்லை. எத்தகைய கொடூரம் நடந்து முடிந்து விட்டது. எத்தனை ஆயிரம் மனிதர்கள் ஒரு சில நிமிடங்களில் கடல் அலைகளினுள் காணாமலே போய் விட்டனர். நினைக்க நினைக்க மனது ஆறுவதாயில்லை. செய்திகளைப் பார்க்கையில் உள்ளம் குமுறுகிறது. அதற்காக பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை. இன மத பேதம் எதுவுமே இல்லாமல், கடல் இப்படி ஒரு அட்டூழியத்தை நிறைவேற்றிச் சென்றுவிட்டது.

கடலின் கோரத்தாண்டவத்தில் இருந்து பாதுகாக்க, தனது மூன்று குழந்தைகளில், இரண்டை மட்டுமே தனது இரு கரங்களால் இழுத்துப் பிடிக்க முடிந்ததாகவும், மூன்றாவது குழந்தையை கடல் இழுத்துச் செல்வதைப் பார்த்திருந்தும், தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று கதறும் ஒரு தாய். மூன்று குழந்தைகளில் ஒன்றை விட்டு ஒன்றை தெரிவு செய்வது ஒரு தாயால் முடிகின்ற காரியமா? இந்த சூழ்நிலையில் அந்த தாயின் மன நிலையை நினைத்தாலே மனம் பதறுகிறது. தனக்கு மூன்று கைகள் இருந்திருக்கக் கூடாதா என்று நொந்து கொள்ளும் அந்த தாய்…

பொங்கி வரும் கடல் அலை கண்டு, இனி ஓடி தப்ப முடியாது என்பதை உணர்ந்து, அருகில் இருந்த தோணிகளை இழுத்துக் கட்டும் இரும்புக்கம்பியை கட்டிபிடித்தபடி இருந்த ஒருவர், தன்னை மூழ்கடித்த அலை திரும்பிப் போன பின்னர், மறுபுறம் திரும்பிப் பார்த்தால், கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை, தன்னை கடந்து சென்ற அலை, இழுத்துக் கொண்டு கடலினுள்ளேயே திரும்பி விட்டது என்கிறார். கண்முன் விளையாடிக் கொண்டிருந்த சின்னஞ்சிறு பாலகர்களை ஒரு சில வினாடிகளில், அடித்துச் சென்று விட்ட கடலை சபிக்கும் அந்த நபர்…

பெரிய கடல் அலை வருகிறது என்று ஐந்து வயதுக் குழந்தை ஓடி வந்து எச்சரிக்கை கொடுத்ததில், ஆலயத்தில் இருந்து ஒடியதில் பல பெரியவர்கள் தப்பித்துக் கொள்ள, எச்சரிக்கை கொடுத்த குழந்தை உட்பட பல குழந்தைகளை கடல் அலை அடித்துச் சென்ற பரிதாபம். என்னைக் காப்பாற்றிய குழந்தையால், தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியவில்லையே என்று முணுமுணுக்கும் பாதிரியார்…

தனது தாய் இறந்து விட்டார் என்பதை உணராத நிலையில், அருகிலேயே இருந்து கவனிப்பாரற்று அழுது கொண்டிருக்கும் மூன்று வயது குழந்தை…

சில சம்பிரதாயங்களை நிறைவேற்ற கடற்கரைக்கு வந்த புது மணத்தம்பதிகளை, கடல் இழுத்துச் செல்வதைப் பார்த்தும், காப்பாற்ற முடியாத வருத்ததில் கரையில் இருந்து ஓடித் தப்பிய உறவினர்கள்…

திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த தனது துணையை கடல் கொண்டு சென்றுவிட்ட நிலையில், கடலை கேள்வி கேட்டபடி கடற்கரையிலேயே உலாவிக் கொண்டிருக்கும் ஒரு மனிதன்…

இப்படி எத்தனை எத்தனை செய்திகள்… தாங்கவே முடியவில்லை. காலங்காலமாய் நடத்தி வந்த நிகழ்வுகளையே இயற்கை இப்போதும் நடத்தி முடித்திருக்கிறது என்பது இந்த அறிவுக்கு புரிகிறது. உலக வரைபடத்தில், நாட்டின் எல்லைகள், நாட்டின் எண்ணிக்கைகள் எல்லாம் மாற்றி அமைக்கப்பட்டு வந்ததே இத்தகைய இயற்கை அழிவுகளுடன் இணைந்துதான் என்பதும் கூட அறிவுக்குப் புரிகிறது. ஆனாலும் என்ன, இந்த மனதுக்கு அதை எல்லாம் ஏற்றுக் கொள்ளும் சக்தியோ, ஏற்றுக் கொள்ளும் பக்குவமோ இல்லாமல்தானே இருக்கிறது. இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்டுள்ள இந்த கொடூரத்தை சகித்துக் கொள்ள முடியாமல் இருக்கிறதே.

ஆக்கியவன் அழிக்கிறான், இது ஆண்டவன் நியதி என்கிறது ஆன்மீகம். அழிப்பவன் இப்படி கொடூரமாகவா அழிக்க வேண்டும் என மனது கேள்வி கேட்கிறது. உயிரை இழந்தவர்களை விடவும், இதை எல்லாம் நேரில் அனுபவித்துவிட்டு, பரிதாபமான சூழ்நிலையில், பெற்றோரை இழந்த குழந்தை, குழந்தையை இழந்த பெற்றோர், இன்னும் கணவனை இழந்த மனைவி, மனைவியை இழந்த கணவன்.. இப்படி எத்தனை பேர் இருக்கிறார்கள். கண்முன்னாலேயே கடலுக்கு காவு கொடுத்து விட்டு இருக்கும் அவர்களது இழப்பு, அவர்களால் வாழ்க்கையில் மறக்க கூடியதா என்ற கேள்வி தீயாய் தகிக்கிறது. உலகின் நியதி, இயற்கையின் நியதி, ஆண்டவன் நியதி என்ன பெயர் சொல்லி அழைத்துக் கொண்டாலும் அறிவுக்கு புரிவது மனதுக்குப் புரிவதாயில்லை. அறிவியலும் சரி, ஆன்மீகமும் சரி இப்படி நிலைகளில் அடிபட்டுத்தான் போகின்றது. மனமெல்லாம் வெறுமையாய் இருப்பது போல் உணர்வு, என்ன இது வாழ்க்கை என்றுதான் தோன்றுகிறது.

இது எல்லாம் ஒரு புறமிருக்க, இந்த வேதனையான நிலைகளிலும் சிலரது கருத்துக்களும், வேறு சிலரது நடவடிக்கைகளும் ஆச்சரியமாகவும், மிகவும் வேதனையை தருவதாகவும் இருக்கிறது. இந்த இயற்கையின் கொடூரத்தை எப்படி எல்லாம் தமக்கு சாதகமாக பாவித்துக் கொள்ள விளைகிறார்கள் என்று எண்ணும்போது ஆத்திரமும் கூடவே வருகிறது. சிவ அடியாரை (அதாவது ஜெயேந்திரரை) நிந்தித்ததால், இந்த இயற்கை அழிவின் மூலம் சிவன் உலக மக்களுக்கு பாடம் கற்பித்து விட்டார் என்பதுபோல் ஜெயேந்திரருக்கு ஆதரவான சில ஆத்மாக்கள் கருத்துச் சொல்லி இருக்கிறார்களாம். இப்படி எல்லாம் சொல்வதற்கும், அதை கேட்பதற்கும் முட்டாள்கள் இருக்கிறார்களே என்று எண்ணும்போது, சிரிப்பதா, அழுவதா, ஆத்திரப்படுவதா, அவர்களின் முட்டாள்தனத்தை எண்ணி பரிதாபப்படுவதா என்று புரியாமல் இருக்கிறது. இத்தனை கொடூரமாய் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இறந்து போனார்களே என்ற எண்ணம், தவிப்பு சிறிதளவாவது இருந்திருந்தால், அவர்கள் இப்படி சொல்லி இருப்பார்களா என்று எண்ணிப் பார்க்கிறேன். சே….. என்ன மனிதர்கள் இவர்கள் எல்லாம். ஒரு தனி மனிதனுக்கு ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சியில் இத்தனை உயிர்களை சித்திரவதை செய்யும் அளவுக்கு தரம் தாழ்ந்தவரா ஆண்டவர். இந்த மனிதர்கள் எதற்கு இப்படி எல்லாம் சிந்திக்கிறார்களோ தெரியவில்லை.

ஒரு வலைப்பூவில், அமெரிக்காவில் வசிக்கும் ஒரு இந்தியன் எல்லோரிடமும் வேண்டுகோள் விடுக்கிறார்… ஜெயேந்திரருக்கு இப்படி செய்ததற்கு தமிழ் நாட்டுக்கு கிடைத்திருக்கும் தண்டனையே இது, அதனால் தயவு செய்து யாரும் அங்கே இருக்கும் மக்களுக்கு (அதாவது தப்பி பிழைத்த மக்களுக்கு) எந்த ஒரு உதவியும் செய்யாதீர்கள் என்று. இவர்கள் எல்லாம் படித்தவர்களாம். யாரிடம் சொல்லி அழுவது. ஆண்டவன்தான் வாய்மூடி மெளனமாகவே எப்போதும் இருக்கிறாரே.

அது மட்டுமல்ல. நடந்து முடிந்த பரிதாப நிலையை தமது சுய இலாபத்திற்கு பாவித்துக் கொள்ளும் இரக்கமற்ற மனிதர்கள். நிவாரணப் பொருட்களை உரியவர்களுக்கு வழங்காமல் சொத்துச் சேர்க்க நினைக்கும் அதிகாரிகள். தனித்து, தவித்திருக்கும் குழந்தையை விற்று, பணம் பார்க்க விரும்பும் கொடூர உள்ளம் படைத்தவர்கள். அழுதுகொண்டிருக்கும் பெண்களை (குழந்தைகளை) பாலியல் கொடூரம் செய்ய நினைக்கும் கல் நெஞ்சக்காரர்கள், பெரிய மட்டத்தில் பார்க்கப் போனால் பாரிய அரசியல் சூதே நடக்கிறது. இத்தனையும் பார்க்கையில் மனம் கொதிக்கிறது.

9 Comments

At May 30, 2005, சுந்தரவடிவேல் wrote:

இதுவும் இதனோடு இருக்கும் மற்ற இரு பதிவுகளும் நன்று. நியாயமான எண்ணவோட்டம்.
குழந்தைகளின் கேள்விகள் மிகவும் நேர்மையானவை. அவைகளுக்கு வெற்றுச் சமாளிப்புகளின் மூலம் நாம் விடையிறுக்க முயலும்போது எத்தனையோ கதவுகளை அடைத்து விடுகிறோம்!

At May 31, 2005, கலை wrote:

நன்றி சுந்தரவடிவேல்! நீங்கள் சொல்வது உண்மைதான், நம்மில் பலரும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், நமக்கு நாமே வெற்று சமாளிப்புகளைச் சொல்லி, நம்மை நாமே ஏமாற்ரிக் கொண்டு வருகிறோம்.

At January 24, 2006, lucykline7123 wrote:

I read over your blog, and i found it inquisitive, you may find  My Blog  interesting. So please Click Here To Read My Blog

http://pennystockinvestment.blogspot.com

At May 18, 2006, சீனு wrote:

தலீவா...font size-அ கொஞ்சம் கூட்டுங்களேன்.

At May 18, 2006, கலை wrote:

தலீவாவா????? ஓண்னுமே புரியலையே.

At May 18, 2006, கலை wrote:

எங்கோ தூங்கிக் கொண்டு இருந்த பதிவை எப்படியோ கண்டு பின்னூட்டமிட்டிருக்கிறீர்கள். நன்றி சீனு. நான் font size ஐ கூட்டுவதற்கு முயற்சி செய்தபோது, எழுத்துக்கள் பல காணாமல் போகின்றன. காரணம் புரியவில்லை. அதுபற்றி இப்போது யோசிக்க நேரமும் இல்லாமல் இருப்பதால், நேரம் கிடைக்கும்போது, அதை கட்டாயம் பார்க்கிறேன். பொறுத்துக் கொள்ளுங்கள்.

At December 21, 2006, ரவிசங்கர் wrote:

கலை,

ஆழிப் பேரிடர் வந்து இரண்டு முடியப் போகிற நேரத்திலும் அதன் கொடுமை மனசை தைக்குது.

//மூன்று குழந்தைகளில் ஒன்றை விட்டு ஒன்றை தெரிவு செய்வது ஒரு தாயால் முடிகின்ற காரியமா?//

//அழிப்பவன் இப்படி கொடூரமாகவா அழிக்க வேண்டும் என மனது கேள்வி கேட்கிறது.//

//நம்மில் பலரும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், நமக்கு நாமே வெற்று சமாளிப்புகளைச் சொல்லி, நம்மை நாமே ஏமாற்ரிக் கொண்டு வருகிறோம்//

ரொம்ப சரி.

அப்புறம், எழுத்துரு அளவு கூட்ட வேணும் தான்..நான் என் உலாவியில் அமைபுக்கள மாத்தி படிச்சுக்கிட்டேன்

At December 21, 2006, கலை wrote:

நன்றி ரவிசங்கர். இரவு எனக்கு ஒரு சுனாமி கனவு வந்தது. இன்னைக்கு  மெயில் திறந்தால், தூக்கத்தில் இருந்த சுனாமிப் பதிவில் உங்க பின்னூட்டம். :))

At March 21, 2007, பொன்ஸ்~~Poorna wrote:

//ஒரு வலைப்பூவில், அமெரிக்காவில் வசிக்கும் ஒரு இந்தியன் எல்லோரிடமும் வேண்டுகோள் விடுக்கிறார்... ஜெயேந்திரருக்கு இப்படி செய்ததற்கு தமிழ் நாட்டுக்கு கிடைத்திருக்கும் தண்டனையே இது, அதனால் தயவு செய்து யாரும் அங்கே இருக்கும் மக்களுக்கு (அதாவது தப்பி பிழைத்த மக்களுக்கு) எந்த ஒரு உதவியும் செய்யாதீர்கள் என்று//
இந்தக் கொடுமையெல்லாம் வேற நடந்துச்சா! முன்னமே பலபேர் சொல்லி இருப்பது போல், முந்தைய மூன்று பதிவுகளுமே அருமை!

தொடர்ந்து எழுதுங்கள் கலை..

Related posts

No related posts.

கட்டிக் கொஞ்சும் அம்மா!!!!!
கட்டிக் கொஞ்சும் அம்மா!!!!!

பிஞ்சு மலர்கள்

கொஞ்சும் மொழியில்…..

பாடம் கற்றுத்தந்த

பாடலை

பாங்காய் பாடினர்……

வண்ணங்களை

வார்த்தையில் குழைத்து

வசந்தமாய் வீசினர்………

“காலைத் தூக்கி

கண்ணில் ஒற்றி

கட்டிக் கொஞ்சும் அம்மா”……

தேனைத் தீயில்

தெளித்ததுபோல்….

மனம் கனத்தது

மெளனமாய் அழுதது….

கண்களில் கண்ணீர்…..

காரணம்………

பாடிய பாலகர்கள்…..

அம்மாவின்

அரவணைப்பை,

அர்த்தத்தை,

அன்பை,

அறிந்திராத

அநாதை குழந்தைகள்!

5 Comments

At May 20, 2005, வீ. எம் wrote:

வனக்கம், தங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை.... வாழ்த்துக்கள்.. !

வீ. எம்

http://arataiarangam.blogspot.com/

At May 26, 2005, கலை wrote:

நன்றி வீ.எம்.

At May 31, 2005, Muthu wrote:

கலை,
கவிதை எங்கள் மனத்தையும் கனக்கச் செய்கிறது.

At July 26, 2005, கயல்விழி wrote:

அழகிய கவிதை கலை. இந்தப்பாடல் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றிகள்.

At August 25, 2005, கலை wrote:

நன்றிகள் முத்து, கயல்விழி.

Related posts

No related posts.