உயிர்ப்பு » பாசம்

வீட்டிற்கான வழி!
The Way Home

நான் அண்மையில் பார்த்த ஒரு கொரியன் படம் இது.

ஒரு பாட்டிக்கும், பேரனுக்குமிடையில இருக்கிற உறவுபற்றிய கதை. சின்ன குழந்தைகளும் பார்க்க பிரியப்படக் கூடிய கதை. மகளுடன் சேர்ந்து பார்த்தேன்.

கணவனைப் பிரிந்து இருக்கும் குட்டிப் பையனின் அம்மா, நகரத்திலிருந்து மகனையும் கூட்டிக் கொண்டு பின்தங்கிய கிராமத்திலிருக்கும் பாட்டி (அம்மம்மா) வீட்டுக்கு வருகிறார். அங்கேயே குட்டிப் பையனை சிலநாட்கள் பாட்டியுடன் இருக்கும்படி விட்டுவிட்டு, புதிய வேலை ஒன்று தேடி நகரத்துக்குப் போய் விடுகிறார்.

அங்கே பையன் பாட்டியுடன் இருக்கும் நாட்களில், அவர்களின் உறவில் ஏற்படும் மாற்றங்களை படிப்படியாக சொல்கிறது படம். பின்தங்கிய கிராமத்து சூழலில் ஒட்டிக் கொள்ள முடியாமல் இருக்கும் பையன், நகரத்து நாகரீக வாசனையே அறியாத பாட்டியை ஆரம்பத்தில் உதாசீனம் செய்கிறான்.  சில நாட்கள் அங்கே வாழ்ந்து பின்னர் பாட்டியின் தூய்மையான அன்பில் படிப்படியாக பையனிடம் ஏற்படும் மாற்றமும், மீண்டும் அவன் அம்மாவுடன் நகருக்கு செல்லத் தயாராகும் நிலையில், பாட்டியுடன் மனதளவில் ஏற்பட்ட நெருக்கமும், மிக மிக அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

கிராமத்து சூழலிலேயே இருந்துவிட்ட பாட்டிக்கு, பையனுக்குத் தெரிந்த நாகரீக வாழ்க்கையின் தடங்கள் பற்றி எதுவுமே சொன்னாலும் புரிவதுமில்லை. நகர வாழ்க்கையில் பழக்கப்பட்ட பையனுக்கு கிராமத்தில் பொழுது போவதே கடினமாக உள்ளது. தனது மின்சார விளையாட்டுப் பொருளான Game Boy உடனேயே பொழுதைக் கழிக்கும் பையனுக்கு, தொடர்ந்து அதிலேயே விளையாடிக் கொண்டிருந்ததால், அதன் மின்கலம் தனது தொழிற்பாட்டை நிறுத்தியதும், மிகவும் வருத்தமாகி விடுகிறது. பையனின் தேவையை அல்லது அவசியத்தை பாட்டியாலேயும் புரிந்துகொண்டு நிவர்த்தி செய்ய முடியவில்லை. அவனாலும் அதை வாங்க முடியாமலேயே போய் விடுகிறது.

பையன் தனக்கு Kentucky Fried Chicken வேண்டும் என்று சொல்லி, புரிய வைக்க முடியாமல், புத்தகத்தில் இருக்கும் கோழியின் படத்தை எடுத்துக் காட்ட, பாட்டியும், தன்னால் பேரனுக்குப் பிடித்ததை செய்து கொடுக்க முடியும் என்றெண்ணிக் கொண்டு, கூனல் விழுந்த முதுகுடன், நடந்து சென்று கோழி வாங்கி வந்து, தனக்கு தெரிந்தபடி, அதை முழுவதுமாய் போட்டு அவித்து வைக்க, பையன் Kentucky Chicken கிடைக்காத வருத்தத்தில் வேண்டாம் என்று சொல்லிவிட்டு சோர்ந்து படுத்து விடுகிறான். ஆனாலும் பாட்டி தூங்கிய பின்னர் எழுந்து, பசி தாங்காமல் பாட்டி அவித்து வைத்த கோழியையே உண்கிறான்.

இதில் முக்கியமான விசயம், பாட்டிக்கு குரல் எழுப்பி பேசவும் முடியாது. சைகைகளினாலேயே படம் முழுமைக்கும் பாட்டி பேசும் மெளனமொழி, மனதை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்கிறது. ஆரம்பத்தில் பாட்டியுடன் முரண்டு பிடிக்கும் பையன் கொஞ்சம் கொஞ்சமாய் பாட்டியின் அன்பிற்கு கட்டுப்பட்டுப் போவதாய் படம் முடிகிறது.

பையன் கிராமத்தை விட்டு போவதற்கு முன்னர், பாட்டிக்கு பேச முடியாது, சுகவீனம் ஏற்பட்டாலும் தொலைபேசியில் தகவல் சொல்ல முடியாதென்பதால், பாட்டிக்கு எழுதப் பழக்கி கடிதம் போடச் சொல்கிறான். I’m sick’, ’Miss you என்ற இரண்டையும் எழுதப் பழக்கி, அது கடினம் என்று புரிந்ததும், சுகவீனம் ஏற்பட்டால், வெற்றுத் தாளை தனக்கு அஞ்சல் செய்யும்படியும், பாட்டிக்கு சுகவீனம் எனப் புரிந்து கொண்டு தான் விரைந்து வருவதாகவும் பாட்டியிடம் சொல்கிறான். இருவரும் அழும்போது நமக்கும் அழுகை வருகிறது.

பாட்டிக்கு எழுதப் புரியாதென்பதால், படங்கள் மூலம் சில வாழ்த்து அட்டைகள் தயார் செய்து பாட்டிக்கு கொடுத்துவிட்டுப் போவான். (குழந்தைகளுக்கு படம் வரைய சொல்லியா தர வேண்டும். கற்பனையை எல்லா இடமும் விட்டு என்னென்னமோ எல்லாம் வரைவார்கள். என் குட்டிப் பெண் எனக்கு செய்து கொடுக்கும் வாழ்த்து அட்டைகள் யாவும் பத்திரமாக வைத்திருக்கிறேன்).

சில தடவைகள் கண் சரியாகத் தெரியாத பாட்டி தனக்கு ஊசியில் நூல் கோற்றுத் தரும்படி பையனைக் கேட்பாள். மனம் சோர்ந்த நிலையிலிருக்கும் அவன் மறுத்து விடுவான். ஆனால், பையன் பாட்டியை விட்டு போகப் போகும் நேரத்தில் பாட்டிக்குத் தேவை என்பதைப் புரிந்து கொண்டு சில ஊசிகளை எடுத்து நூலைக் கோத்து தயாராக வைத்து விட்டுப் போவான்.

பாட்டியை விட்டுப் பிரிந்து போவது பையனுக்கு மிகக் கடினமாக இருக்கிறது என்பதை, அவன் எந்த வார்த்தையும் சொல்லாமலேயே புரிந்து கொள்ள முடிகிறது. (அதைப் பார்த்தபோது, பல வருடங்கள் முன்னால் நடந்தது நினைவுக்கு வந்தது. நான் மிகவும் நேசிக்கும், என்னுடைய ஒரு குட்டித் தம்பியும், அவனை விட்டு ஒவ்வொரு தடவையும் நான் பயணப்படும்போதெல்லாம், எந்த ஒரு வார்த்தையுமே சொல்லாமல், மெளனமாக தனது துக்கத்தை வெளிப்படுத்துவது நினைவில் வந்தது. அப்போது அவன் சின்னப் பையன்). கடைசியாக bus இல் ஏறியபின்னர், எதுவும் சொல்லாமல் உட்கார்ந்திருந்து விட்டு, Bus கிளம்பியதும், ஓடி வந்து பின்பக்க கண்ணாடி வழியாகப் பார்த்து, பாட்டியின் சைகை மொழியிலேயே தான் அவர்மேல் வைத்திருக்கும் அன்பை நெஞ்சை தடவி காட்டுகிறான். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், அவர்கள் இருவரும் ஒருவர்மேல் ஒருவர் வைக்கும் அன்பு மனதை மிகவும் நெகிழ்வடையச் செய்கிறது.

பாட்டியும், பையனும் இயல்பாக இருந்தபோது, படம் பிடிக்கப்பட்டார்களா என்று ஆச்சரியப்பட வைக்கிறார்கள். உண்மையிலேயே அப்படித்தான் எடுத்திருப்பார்களோ? நடித்திருக்கிறார்கள் என்று சொல்லவே மனம் இடம் கொடுக்கவில்லை.

இவையெல்லாம் வார்த்தைப் பூச்சுக்கள் எதுவும் இல்லாமல், படத்தில் வரும் சின்ன சின்ன காட்சிகள் மூலமும், மெளன மொழிகள் மூலமுமே சொல்லி விடுகிறார்கள். அருமையான படம். அனைவரும் பாருங்கள். ஆங்கில மொழிபெயர்ப்புடன் படம் பார்த்தாலும், இந்தப் படத்தைப் பார்க்க எந்த மொழியும் அவசியமே இல்லை.

5 Comments

At April 25, 2010, திரு wrote:

திரைப்படத்தை அவசியம் பார்க்க வேண்டுமென்று தூண்டுகிறது. அதோடு முதியவர்களின் பாசத்தையும் நினைவூட்டுகிறது...

At April 26, 2010, ரவி wrote:

ஒவ்வொரு முறை என் அக்கா மகன் எங்கள் அம்மாவைப் பார்க்க ஊருக்கு வரும்போதும் இந்நப் படம் நினைவுக்கு வருகிறது...

At May 20, 2010, மணிவர்மா wrote:

நல்ல திரைபடத்தை அறிமுகப்படுத்தியுள்ளீர், உங்கள்  படம் பற்றிய விமர்சனம் சிறப்பு. படம் பார்த்த அனுபவம் கிடைத்தது.

At May 26, 2010, சுந்தர் wrote:

கண்களில் நீர் நிறைந்து விட்டது. அலுவலகத்திலேயே இப்படி என்றால் வீட்டில் வைத்து இந்தப் படத்தைப் பார்த்தால் எப்படி இருக்குமோ தெரியவில்லை. :)

At August 1, 2010, Kesavan wrote:

Dear Mrs. Kalaiyarasi. Thank you very much for reviewing the movie "Jib-Buro". I have seen already and its a heart breaking. Right now i am in Korea and ofcourse i know korean language. I have seen so many korean movies which are awesome. I have experienced different kind of love and romance after seeing korean movies. Korean movies are either fun or heart breaking. Even now some of our directors making movies as like of korean movies. If u want, i can suggest some good korean movies.

Kesavan, Seoul, South Korea.

Related posts

No related posts.

என் செல்லக் குட்டிம்மா!
நேற்றைக்கு என் செல்லக் குட்டி மகளுடன் சின்னதாய் ஒரு குட்டிச் சண்டை.

அந்தச் சண்டையின் காரணமாய், என்னுடைய அறைக்குள்ளே போய் இருக்கும்படி சொன்னேன். இல்லை வெளியே வரப் போகிறேன் என்றாள். வேண்டாமென்றும், ஒரு 15 நிமிடங்கள் இருந்துவிட்டு வரும்படியும் கூறினேன். நடந்த விடயத்தை அவள் மட்டுமல்லாமல், நானும் மீண்டும் யோசிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் அது. 15 நிமிடத்தின் பின்னர் அவள் வெளியே வந்தபின்னர், நான் எதையோ எடுக்க உள்ளே போனேன். அங்கே கிடைத்த ஒரு குட்டி தாளில், அங்கே கிடைத்த ஒரு பேனாவை எடுத்து, ‘I love you, I love you’ என்று எழுதி எனது புத்தகம் ஒன்றின் மேல் வைத்திருந்தாள்.

பின்னர் இருவரும் வெளியே போனோம். ஒரு மணி நேரத்தின் பின்னர், வீடு திரும்பும்போது ஆறுதலாய், நடந்த விடயங்களைப்பற்றி அவளிடம் சமாதானமாகப் பேசினேன். பின்னர் வீடு வந்து குளித்து, சாப்பிட்டு படுக்கைக்குப் போனதும், அவசரமாய் ஒரு தாள் எடுத்து எழுதினாள். ”அப்படி என்ன எழுதுறீங்க?” என்று கேட்டேன். பதிலில்லை. எனக்கு காட்டாமல் ஒளித்து ஒளித்து எழுதினாள். எழுதி முடித்ததும் என்னிடமே கொண்டு வந்து தந்தாள்.

அதில் சின்னதாய் ஒரு கடிதம்.

To my dear mother,

You always love me and kiss me,

But will never, ever miss me.

You are nice and pretty,

and you are also witty.

You are posh and kind,

And you have good thought in your mind,

I do not know what to write,

But one thing

WE SHOULD NOT FIGHT

By: Amma’s favourite Kutty

அன்பாக அணைத்து முத்தமிட்டேன். “நான் அப்பிடி செய்ததுக்கு Sorry அம்மா” என்று சொல்லி முத்தம் தந்து விட்டு, அந்தக் கடிதத்தை கடைசிவரை தொலைக்காமல் வைத்திருக்க வேண்டும் என்று அன்பாய் உத்தரவிட்டுவிட்டு, படுத்து, உடனேயே தூங்கி விட்டாள் என் செல்ல மகள்.

10 Comments

At February 5, 2010, Vidhoosh wrote:

ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கு. வாழ்த்துக்கள்.

At February 5, 2010, Varadaradjalou wrote:

நெகிழவைத்துவிட்டது உங்கள் இந்த பதிவு.

குட்டியுடன் இனி சண்டை போடாதீர்கள், ப்ளீஸ்

At February 5, 2010, sandanamullai wrote:

Very touchy!!

At February 5, 2010, aruna wrote:

ஆஹா...குட்டிம்மா கலக்குறாங்க!

At February 5, 2010, `மழை` ஷ்ரேயா wrote:

நல்லாருக்கு.

இதெல்லாம் பொக்கிசச் சாமான்... பத்திரமா வைச்சிருப்பீங்க என்டு தெரியும். அம்மாமாருக்குக் கை வந்த கலை இது. :)

At February 7, 2010, விஜயநரசிம்மன் wrote:

கவிதை அழகென்றால், அந்தக் குட்டிக் கவிதாயினி அதைவிட அழகு...

அழகான நிகழ்வு... ஒரே ஒரு சின்ன வருத்தம், குழந்தை ஆங்கிலத்தில் எழுதியது, ”குழந்தைக்கு தமிழ் கற்றுக்கொடுங்கள் - கவிதை எழுதும் அளவிற்கு” -என்று நான் உங்களைக் கேட்டுக்கொண்டால் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன்! அழகான ஒரு குட்டிக் கவிதாயினி கிடைக்கப்பெற்றால் தமிழ் மிகவும் பேறுபெறும் - அதற்காகவே சொல்கிறேன்!

பதிவிற்கும் பகிர்விற்கும் மிக்க நன்றி!

விஜய் :)

At February 9, 2010, கலை wrote:

பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் நன்றிகள்.

விஜயநரசிம்மன்!

மகள் தமிழில் நன்றாக கதைக்கவும், அத்தோடு கொஞ்சமாய் எழுதவும், வாசிக்கவும் தெரிந்து வைத்திருக்கிறாள். சின்ன சின்ன கவிதைகள்கூட எழுதியிருக்கிறாள். அம்மம்மா, தாத்தாவிற்கு, (தனக்குத் தெரிந்த) அழகு தமிழில் குட்டிக் கவிதை கூட எழுதிக் கொடுத்திருக்கிறாள். தொடர்ந்து தமிழில் எழுத உற்சாகப்படுத்தி வருகின்றேன். பார்க்கலாம்.

At March 6, 2010, Karitha Shalee wrote:

மிகவும் அருமையான பதிவு

வாழ்த்துக்கள்

At April 24, 2010, பாலாஜி (மேம்) wrote:

என் குட்டிம்மா நினைவு வந்து விட்டது!

மனமார்ந்த நன்றி!

At April 24, 2010, VELU.G wrote:

அருமையான பதிவு

இது போல் குழந்தைகளைப் பற்றி எவ்வளவு வேண்டுமனாலும் படிக்கலாம்

நன்றி

Related posts

No related posts.

பகிர்ந்துகொள்வதற்கு சில!
1. கனவு!

என் கடைசி கனவு. நம்ம வீட்டுக்கு பக்கத்துலயே ஒரு காடு. அந்தக் காட்டுக்கு வேலியெல்லாம் போட்டு, நம்ம வீட்டு காணியிலே இருந்து பிரிச்சு வைச்சிருக்காங்க. அந்த வேலியோரத்துல நின்னு, எனக்கு சிங்கம் bye எல்லாம் சொல்லி, tata எல்லாம் காட்டிட்டு போச்சு  . என்னோட கனவுகளை நினைச்சால் எனக்கே சிரிப்பா இருக்கு. அது எப்படி எனக்குன்னு பாத்தி இப்படி கனவுகள் வருது??

மேலும் எனது கனவுகளைப் பார்க்க விரும்பினால்?  இன்றைய கனவு, வெறும் கனவா, எனது விசித்திரங்கள்.

2. ராசி பலன்!

ஏதோ ஒரு தொலைக்காட்சியில், தினமும் காலையில், யாரோ ஒருவர் ‘இன்றைய ராசி பலன்’ சொல்கிறார். காலையில் தொலைக்காட்சியை வீட்டுப் பெரியவர் போட்டு விடுவார். காலையில் மகளை பாடசாலைக்கு தயார்ப்படுத்தி, வேலைக்கு புறப்படுவதற்கான ஆயத்தங்களில் இருக்கும்போது, இந்த ராசிபலன்கள் காதில் விழும். எந்த ராசிக்கு என்ன பலன் என்று கேட்கா விட்டாலும் (அதில் ஆர்வமோ இல்லாததால்), அவர் சொல்லும் பலன்கள் காதில் விழும். இன்றைக்கு காலை என்ன பலன், மாலை என்ன பலன் என்று கூடச் சொல்கிறார். இன்னும் எத்தனை மணிக்கு என்ன பலன் என்று சொல்லாததுதான் குறை என எனக்குள் நினைத்துக் கொண்டேன். இந்த ராசி பலனை கேட்டபோது, எனக்குள் ஓடிய எண்ணம்…. வன்னியில் போர்ச் சூழலின் இறுதிக் கால கட்டங்களில், அங்கே அகப்பட்டிருந்த ஆயிரம் ஆயிரம் மக்களில் எல்லா ராசிக்காரர்களும்தானே இருந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அனைவருக்கும், ஒரே மாதிரியான வாழ்க்கைதானே இருந்திருக்கும்? அல்லது எல்லோருமே ஒரே ராசிக்காரர்களா? இப்படி ஒரே மாதிரியான கடினமான சூழல்களில் அகப்பட்டுக்கொள்ளும் அத்தனை மனிதர்களுக்கும் எப்படி பல ராசியின் பலன்கள் பொருந்திப் போகிறது?

3. அன்பு

மங்கை என்ற வலைப்பதிவில, அவங்க குறிப்பிட்டிருக்காங்க “வையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு”. எனக்கென்னமோ யோசிச்சுப் பாத்தா, அதன் நேரெதிர்தான் சரின்னு தோணுது. அன்பை வைச்சு நடக்கிறவங்களுக்குத்தான் எல்லா கவலைகளும். அன்பில்லாதவங்க குறைஞ்ச கவலைகளோட வாழ்ந்திட்டுப் போவாங்க. அன்பு வைத்தல் குறைவுன்னு சொன்னால், அது ஒரு பற்றற்ற நிலைதானேன்னு தோணுது. அப்படி ஒரு நிலையில் துக்கம் வருவதும் குறைவுதானே?

3 Comments

At September 18, 2009, kanmani wrote:

//அன்பை வைச்சு நடக்கிறவங்களுக்குத்தான் எல்லா கவலைகளும். அன்பில்லாதவங்க குறைஞ்ச கவலைகளோட வாழ்ந்திட்டுப் போவாங்க. அன்பு வைத்தல் குறைவுன்னு சொன்னால், அது ஒரு பற்றற்ற நிலைதானேன்னு தோணுது. அப்படி ஒரு நிலையில் துக்கம் வருவதும் குறைவுதானே?//

மிக வாஸ்தவமான உண்மை.அதிக  ஆசைஅன்பு வைத்தல் துன்பம்னுதானே புத்தர் ஆசையைத் துறந்தார்.

At September 18, 2009, kanmani wrote:

நீங்கள் கருவிப் பட்டை இணைக்கலயா?தமிழ்மண்முகப்பில் காணோமே

At September 20, 2009, கலை wrote:

கருவிப் பட்டையெல்லாம் இன்னமும் இணக்கவில்லை கண்மணி.

Related posts

No related posts.

குழந்தையின் பெயர்!
இன்றைக்கு இந்தப் பதிவைப் பார்த்தேன். நகைச்சுவையோட நிறைய விசயம் சொல்லியிருந்தார். அங்கே ஒரு பின்னூட்டம் போடப் போன இடத்தில, அட இதை என்னுடைய பதிவேட்டிலயும் (அதான் என்னுடைய வலைப்பதிவு) ஒரு இடுகை  போடலாமே என்ற எண்ணம் வந்தது. நானும்தான் எத்தனை நாளுக்கு என்னுடைய  வலைப்பதிவில எதுவுமே எழுதாமல் இருக்கிறது  .

ரவி கீழ்வருமாறு எழுதியிருந்ததுதான் இந்தப் பதிவுக்கு காரணம்  .

//பிள்ளை பிறந்த பிறகு எழுத்துப் பார்த்து பெயர் வைக்கிறத விட பிள்ளை பிறக்கிறதுக்கு முன்னாடியே அம்மாவும் அப்பாவும் இந்தப் பேர் தான்னு யோச்சிச்சு வைச்சு பேர் வைச்ச பிள்ளைங்களையும் பார்த்து இருக்கேன். அந்த குழந்தைகள்ட்ட ஒரு சந்தோஷத்தையும் பார்த்திருக்கேன். //

குழந்தை கிடைப்பதற்கு 4 வருடத்திற்கு முதலே பிறக்கப் போகும் குழந்தைக்கு ஒரு பெயர் நினைத்தாயிற்று. ஆசைப்பட்டது பெண் குழந்தை. பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்று பார்க்காமலே, பெண்ணாக இருக்க வேண்டும் என்ற ஆசையிலும், பெண்தான் பிறக்கும் என்ற ஏதோ ஒரு  நம்பிக்கையிலும்  குழந்தைக்கு அதே பெயரை வைப்பது என்று குழந்தை 3 மாதக்கருவாக இருக்கும்போதே முடிவாகி மற்றவர்களிடம் சொல்லியுமாச்சு.

என்ன குழந்தை என்று அறிய வேண்டுமா என்று வைத்தியர் கேட்டதற்கு, வேண்டாம் என்றும் சொல்லியாச்சு. நாள் செல்ல செல்ல, என்ன குழந்தை என்று பார்த்திருக்கலாமோ, கடைசி நேரத்தில் பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையாக இருந்தால், அது ஏமாற்றமாகப் போய் விடுமோ என்று சின்னதாய் ஒரு தவிப்பும் வந்தது. அப்படி என்னதான் பெயர்? அந்தப் பெயர் ”அஞ்சலி“.

ஆனால், நல்ல வேளையாக ஆசைப்பட்டபடியே பிறந்தது பெண் குழந்தை. குழந்தை பிறந்தபோது நான் மயக்கத்தில். கண்விழித்த முதல் கணத்தில், அரைகுறை மயக்கத்தில் நான் கேட்ட முதல்கேள்வி, “அஞ்சலிதானே?”. “ஆம்” என்ற பதில் தந்த ஆனந்தத்திற்கு அழவேயில்லை  .

கண்விழித்தபோது குழந்தையை என்னிடம் காட்டினார்கள். தலை நிறைந்த தலை முடியுடன் இருந்த மகளுக்கு தாதிமார், ribbon எல்லாம் கட்டி, அலங்காரம் செய்திருந்தார்கள். மகளை முதன்முதல் பார்த்த அந்த நேர உணர்ச்சியை வார்த்தைகளில் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.

குழந்தை பிறக்கப்போவதுபற்றி மற்றவர்களிடம் அறிவித்தபோது, “அஞ்சலி பிறந்திட்டாள்”, என்று சொல்ல முடிந்தது. அதைவிட குழந்தை பிறந்ததுபற்றி அறிந்த ஒருவர் தொலைபேசியில், “என்ன, அஞ்சலி பிறந்தாச்சா?” என்று கேட்டது மிகுந்த மகிழ்ச்சி.

மகளுக்கு, தனக்கு பெயர் வைத்த விதம்பற்றி கேட்கும்போது பெருமையும், மகிழ்ச்சியும். அவளுக்கு தான் பிறந்த கதையை மீண்டும் மீண்டும் கேட்பதில் இப்போதும் தணியாத ஆர்வம். நல்ல வேளையாய் அவளுக்கும் அந்தப் பெயர் மிகவும் பிடிச்சிருக்கு  .  மற்றவர்கள் அவளது பெயரைக் கேட்டுவிட்டு, “அழகான பெயர்” என்று சொன்னால் அவள் முகத்தில் மகிழ்ச்சிப் புன்னகை வரும். தமிழ் தெரியாதவர்கள்கூட, ஒரு தடவை பெயரை மீண்டும் சொல்லிப் பார்த்து ‘அழகான பெயர்’ என்று சொல்லும்போது மகிழ்ச்சி. தவிரவும் ஒரு சிலர் “It sounds like ‘angel’” என்று சொல்வார்கள். அதில் அவளுக்கு இன்னும் பெருமை கூடிவிடும்.

எனக்கும் அழகான தமிழ் எழுத்துக்களுடன் கூடிய தமிழ்ப் பெயர்கள்தான் அதிகம் பிடிக்கிறது  .

2 Comments

At December 20, 2008, திகழ்மிளிர் wrote:

/எனக்கும் அழகான தமிழ் எழுத்துக்களுடன் கூடிய தமிழ்ப் பெயர்கள்தான் அதிகம் பிடிக்கிறது :). /

எனக்கும் தான்

At August 13, 2010, bala wrote:

poda.....

Related posts

No related posts.

என் குட்டி சினேகிதி!
என் பிரியமான குட்டி சினேகிதி!

நேற்று அவசரம் அவசரமாக பஸ் பிடிப்பதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டேன். வீட்டை பூட்டி விட்டு கிளம்புவதற்காக கைப் பையினுள் வீட்டுச் சாவியை தேடினேன். மோபைல் போன், பஸ் கார்ட், சுவிங்கம், பேனா, இப்படி சின்ன சின்ன பொருட்கள் கையில் அகப்பட்டது. அத்துடன் ஒரு சின்ன காகிதத் துண்டு. இது என்னது? இப்படி கிளிந்த காகித துண்டு எனது கைப்பையுனுள் வரும் சாத்தியமில்லையே. நினைத்தபடி, அதை பார்க்க அவகாசமில்லாமல், அதை அப்படியே உள்ளே வைத்து விட்டு (நல்ல வேளையாய் வீசவில்லை), வீட்டுச் சாவியை தேடிப் பிடித்து, வீட்டைப் பூட்டிக் கொண்டு ஒரே ஓட்டமாய் ஓடி, பஸ்ஸில் ஏறியாச்சு.

இடம் தேடி அமர்ந்ததும், மீண்டும் அந்த காகிதத் துண்டு நினைவில் வந்தது. அதை தேடி எடுத்துப் பார்த்தால், அதில் இப்படி இருந்தது.

ஆஹா, என் குட்டித் தேவதையினுடைய வேலைதான் என்று எண்ணியபடியே, மறு பக்கத்தைப் பார்த்தேன். அங்கே இந்த sticker ஒட்டி இருந்தது.

எனக்கு புரிந்து போனது. அன்றொருநாள், இந்த குட்டி, எனது பொறுமையை கொஞ்சம் அதிகமாகவே சோதனைக்குட்படுத்தி, என்னைக் கொஞ்சம் கோபப்படுத்திய பிறகு, அவசரம் அவசரமாக ஓடிப் போய், இரண்டு stickers எடுத்து வந்து என்னுடைய பையில் ஒட்டினாள். ஒரு smiley face sticker ஒட்டிக் கொண்டது. மற்றது ஒட்டவில்லை. ஒட்ட முடியாமல் போன அந்த மற்ற sticker தான், எனது கைப்பையினுள், அவளது சொந்தக் கையெழுத்துடன் உள்ளே உட்கார்ந்து கொண்டிருக்கிறது.

3 Comments

At January 18, 2008, சினேகிதி wrote:

ahhh that's so cute :-))) உங்கட மகளா அந்தத் தேவதை?

At June 19, 2008, Premkumar wrote:

வலைச்சரத்தில் உங்கள் பதிவின் சுட்டி சேர்க்கப்பட்டது

http://blogintamil.blogspot.com/2008/06/blog-post_19.html

At June 19, 2008, ராமலக்ஷ்மி wrote:

வலைச்சரம் சுட்டிய வழியில் வந்தேன்.

மழலை மனது மல்லிகைப் பூ போன்றது.

Related posts

No related posts.

ஆறுதல் வார்த்தைகள்!!
பல சமயங்களில் எழுத எத்தனையோ இருந்தாலும், எதையும் எழுத தோன்றுவதில்லை. ஆனால் இன்று தமிழ்நதியின் ‘மரணம் பற்றிய குறிப்பு’, பார்த்ததும் எழுதத் தோன்றியது.

தமிழ்நதி, தனக்கேயுரிய நடையில் தற்கொலை மரணம் ஒன்றின் பாதிப்பை வெளிக் கொண்டு வந்திருக்கிறார். அவர் அங்கே எழுதியிருப்பது அனைத்தும் மனதில் மெல்லிய வலியை தந்தாலும், சில வரிகள் கவனத்தை கொஞ்சம் அதிகமாகவே ஈர்த்தது. காரணம் அந்த வரிகளில் உள்ள விடயம்பற்றி சில நாட்களாக நானும் யோசித்துக் கொண்டிருப்பதுதான். அந்த வரிகள்….

&&“இந்த ஆறுதல் வார்த்தைகளை நான் பேசவேண்டுமா வேண்டாமா…?” என உங்களில் எவருக்கும் தோன்றினால், தயவுசெய்து பேசுங்கள். இல்லையெனில், பேசவேண்டிய சமயத்தில் பேசாமற் தங்கிவிட்ட வார்த்தைகள் முள்ளாக உள்ளிருந்து கிழிக்கும். மலமாக நாற்றமடிக்கும். யார் கண்டது…? ஒரு புன்னகையில், ஒரு சொல்லில், ஒரு கையின் வெப்பத்தில், ஒரு ஆழமான பார்வையில், ஒரு தலை தடவலில் ஒரு மரணம் தவிர்க்கப்படலாம்.&&

தற்கொலையை நோக்கி நகரும் ஒருவருக்கு, சில சமயம் தமிழ்நதி கூறியிருப்பதுபோல, வெற்று வார்த்தைகள் எதுவும் இல்லாமல், சில சின்ன சின்ன செயல்கள் கூட அவரை மரணத்தின் பிடியிலிருந்து மீட்டு வரலாம். இந்த வார்த்தைகள் தற்கொலை செய்து கொள்ளப் போகும் நபர்களுக்கு மட்டுமல்ல. அனைவருக்கும் பொருந்தும் என்று தோன்றுகின்றது. இந்த ஆறுதல் வார்த்தைகள் உதவுவது மரணத்தை நோக்கிச் செல்பவர்களுக்கு மட்டுமல்ல. மரணத்தைப் பற்றி சிந்திக்காத, உடலால் வாழ்ந்து கொண்டு, உணர்வால் இறந்து கொண்டிருக்கும் சிலருக்கு கூட இப்படி சில ஆறுதல் வார்த்தைகளோ, அன்றில், வார்த்தைகள் எதுவுமற்ற செயல்களோ அவருள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

நிரந்தரமற்ற இந்த வாழ்வில், எவரும், எப்போதும் இல்லாமல் போகலாம். அப்படி இருக்கையில், ஒருவர்மேல் ஒருவருக்கு எதற்கு தேவையற்ற ஆதங்கங்கள், கோபங்கள். சில சமயம் உண்மையான அன்பால் பிணைக்கப்பட்டவர்களே கூட கோப தாபங்களால் ஒருவரை ஒருவர் வருத்திக் கொள்கின்றார்கள். இப்படி ஒரு நிலையில் ஒருவருக்கு ஏதாவது ஆகி விட்டால், மற்றவரின் நிலை என்ன? நாம் வாழும் குறுகிய வாழ்க்கை காலத்தை, ஏன் நல்ல விதமாக அமைத்துக் கொள்ளக் கூடாது?

8 Comments

At January 5, 2007, tamilnathy wrote:

நன்றி கலை, என் பதிவு உங்களைப் பாதித்து அது தொடர்பாய் எழுதியிருப்பது நிறைவைத் தருகிறது. எழுத்து என்பது ஒரு மனதுள் புகுந்து ஒரு சிறு மாற்றத்தை ஏற்படுத்தினாலும் அது வெற்றியல்லவா...?

At January 5, 2007, SK wrote:

//இந்த வார்த்தைகள் தற்கொலை செய்து கொள்ளப் போகும் நபர்களுக்கு மட்டுமல்ல. அனைவருக்கும் பொருந்தும் என்று தோன்றுகின்றது. இந்த ஆறுதல் வார்த்தைகள் உதவுவது மரணத்தை நோக்கிச் செல்பவர்களுக்கு மட்டுமல்ல. மரணத்தைப் பற்றி சிந்திக்காத, உடலால் வாழ்ந்து கொண்டு, உணர்வால் இறந்து கொண்டிருக்கும் சிலருக்கு கூட இப்படி சில ஆறுதல் வார்த்தைகளோ, அன்றில், வார்த்தைகள் எதுவுமற்ற செயல்களோ அவருள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். //

I totally agree wit your post and especially with the above!

Very nice one!

At March 17, 2007, மங்கை wrote:

//இந்த வார்த்தைகள் தற்கொலை செய்து கொள்ளப் போகும் நபர்களுக்கு மட்டுமல்ல. அனைவருக்கும் பொருந்தும் என்று தோன்றுகின்றது. இந்த ஆறுதல் வார்த்தைகள் உதவுவது மரணத்தை நோக்கிச் செல்பவர்களுக்கு மட்டுமல்ல. மரணத்தைப் பற்றி சிந்திக்காத, உடலால் வாழ்ந்து கொண்டு, உணர்வால் இறந்து கொண்டிருக்கும் சிலருக்கு கூட இப்படி சில ஆறுதல் வார்த்தைகளோ, அன்றில், வார்த்தைகள் எதுவுமற்ற செயல்களோ அவருள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். //

உண்மை கலை..அருமையான பதிவு

At March 17, 2007, கலை wrote:

வருகைக்கு நன்றி தமிழ்நதி, SK, மங்கை.

At May 8, 2007, ரவிசங்கர் wrote:

அன்பை வெளிப்படையாகக் காட்டாததாலேயே மனித உறவுகளில் பல பிரச்சினைகள். " சொன்னால் தான் தெரியுமா" என்று வெற்று வாதத்தை வைத்திருப்பார்கள். இருந்தாலும், சொல்லாமலே, காட்டாமலே இருப்பதால் என்ன பயன்?

At May 8, 2007, கலை wrote:

உண்மைதான் ரவி. என்னைப் பொறுத்த அளவில் இருக்கும் அன்பை எல்லாம் வெளியே அவரவரிடம் கொட்டி விட வேண்டும். நாம அதை நமக்குள்ளே வைச்சிருந்து என்ன பண்ணப் போறோம். :)

ஆனாலும் சில சந்தர்ப்பங்களில் நமக்குள்ளேயே வைத்திருக்க வேண்டியும் வந்து விடுகின்றது. :(

At May 8, 2007, ரவிசங்கர் wrote:

எதிர்த் தரப்பில் எதிர்ப்பார்ப்பு இருந்தால் தாராளமாக காட்டலாம் தானே? இல்லாவிட்டால் குப்பையில் கொட்டிய மாணிக்கமாகி விடும் :(

இரு தரப்பிலும் எதிர்ப்பார்ப்பு இருந்தும் வெளிப்படையாய் காட்ட முடியாத சமயங்களும் நிறைய உண்டு..எல்லாம் வீணாய்ப் போன சமூக அமைப்புகள், உறவு முறை, பண்பாடு, மரபு முதலியத் தடைகளால்

At May 8, 2007, கலை wrote:

உண்மைதான்.

Related posts

No related posts.

எனது ஆசிரியர்!
ஆட்டோகிராஃப் இன் கதை சொன்னேன்தானே. அங்கே பக்கங்களைப் ஒவ்வொன்றாக புரட்டிச் செல்கையில், அழகான கையெழுத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு ஆசிரியர் எழுதியிருந்ததைப் பார்த்தேன். அவரைப் பற்றி இத்தனை நாளும் எப்படி நினைக்காமல் இருந்துவிட்டேன் என்று ஆச்சரியத்துடன் எண்ணிப் பார்க்கிறேன்.அந்தப் பாடசாலையில், நாம் ஒரு குறிப்பிட்ட வகுப்பில் இருந்து வகுப்பேற்றம் செய்யப்பட்டு, புதிய வகுப்புக்கு ஒரு தை மாதத்தில் போகிறோம். எங்களுக்கு ஒரு புதிய வகுப்பாசிரியர் வரப் போகிறார் என்று சொல்லியிருந்தார்கள். வகுப்பிற்கு மட்டும் அவர் புதியவர் அல்ல, அந்தப் பாடசாலைக்கே புதிதாக வருகிறார் என்றதும், அனைவரிடமும் அவரைப் பார்ப்பதில் அதீதமான ஆவல் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

முதலாம்நாள், முதலாம் பாடம், மிகவும் ஆர்வத்துடன், யார் வந்து நமது வகுப்பினுள் நுழையப் போகிறார் என்று காத்திருந்தோம். அந்த ஆசிரியர் மெதுவாக வந்து வகுப்பறையினுள் நுழைந்தார். மெல்லிய உருவம், பொது நிறத்தைக் கொண்டவர். சுமாரான உயரம். ஆனால், அவர் கண்களில் மட்டும் ஒரு ஒளி. அத்தனை மாணவர்களையும் கட்டிப் போடக் கூடிய ஏதோ ஒரு கவர்ச்சி. அவர் வகுப்பில் வந்து பேச ஆரம்பித்ததும், அனைத்து மாணவர்களும், ஏதோ ப்ரேயரில் இருந்ததுபோல், ஒரு சிறு சத்தமும் செய்யாமல் கேட்டுக்கொண்டு இருந்தோம். அன்று அவர் எந்த பாடமும் நடத்தவில்லை. முதல் பாடம் முழுமையும் நம்முடன் கதைத்தார்.

அவர் அப்படி என்ன கதைத்தார் என்று கேள்வி எழுகிறதா? நம்முடன் ஒரு நண்பனைப் போல், சகோதரன்போல், இதமாக, இனிமையாக பல விஷயங்களையும் கதைத்தார். அதுவரை காலத்தில் (ஏன் அதற்குப் பிறகும் கூட) அப்படி ஒரு ஆசிரியரை சந்தித்திருக்கவில்லை. மாணவர்களுடன் பல ஆசிரியர்கள் நட்புடன் பழக விரும்புவதேயில்லை. அப்படி பழகினால், மாணவர்கள் தம்மை மதிக்க மாட்டார்கள் என்பது அவர்களது எண்ணம். வேறு சில ஆசிரியர்கள் நட்புடன் இருக்க விரும்பினாலும், அதை காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இவரோ மிகவும் நட்புடன் பழகுவார்.

நாம் அனைவரும், அவர்மேல் அளவு கடந்த அன்பும், அதீத மரியாதையும் வைத்திருந்தோம் என்பதுதான் உண்மை. காரணம் எங்களுக்கு வகுப்பாசிரியராக இருந்த அந்த ஒரு வருடமும், அவர் எங்களுடன் பழகிய விதம், அப்படி நம்மை அவர்பால் இழுத்து வைத்திருந்தது. அவரது குழந்தையின் பிறந்த நாளுக்கு நம்மைத்தான் முக்கிய விருந்தினராக அழைத்திருந்தார் என்பதே நமக்கு பெருமையாக இருந்தது. அவரது வகுப்பு மாணவர்கள் என்று சொல்லிக் கொள்வதில் அத்தனை பெருமை நமக்கு. அவரால் நமது வகுப்பிற்கே ஒரு தனி மரியாதை இருந்தது என்று சொன்னால் மிகையில்லை.

அவர் எனது ஆட்டொகிராஃப் இல் எழுதியிருப்பதை வாசிக்க ஆரம்பிக்கையிலேயே, அந்த வரிகள் மனப்பாடம் செய்தது போல் எனக்கு வந்தது. அது என்னவென்றால்…..

அன்புத்தங்கை கலா!

இறை நம்பிக்கையும், உண்மையும் மனித வாழ்வினைச் சிறப்புடன் பார்க்க உதவும் இரு கண்கள். இவைகட்கு ஒளி கொடுப்பது அன்பு. எனவே அன்பெனும் ஒளிகொண்டு, இறை நம்பிக்கை, உண்மை எனும் இரு கண்களாலும் மனித வாழ்க்கைப் பாதையில் நீங்கள் செல்ல வேண்டிய இலக்கை நோக்கி வீறுநடை போடுங்கள். வாழ்வின் வெற்றி உங்களுக்கே!

அண்ணன்,

அ.மு.அருணாசலம்.

இதை வாசிக்கும்போது எனது கண்கள் பனித்தன. எத்தனை அருமையாக ஒரு அண்ணனாக இருந்து இதை எழுதியிருக்கிறார். அவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியும். ஆனால் அங்கே எந்த இடம் என்பது நினைவில் இல்லை. அதை விலாசத்தில் எழுதியிருக்கிறாரா என்று பார்த்தால், அங்கேயும் ‘நு/கைலன்ஸ் கல்லூரி, ஹட்டன்’ என்றுதான் உள்ளது.

நாங்கள் இடம் மாறி யாழ் வந்த பின்னர் சில காலம் நானும் அவருக்கு கடிதம் போட்டிருக்கிறேன். அவரும் பதில் போட்டிருந்தார். ஆனால் எப்போது, எப்படி அந்த தொடர்பு விடுபட்டது என்பது சரியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் தொடர்பு நின்று போனது.

அவருக்கு நம்மையெல்லாம் நினைவிருக்குமா என்று எண்ணிப் பார்க்கிறேன். அவரிடம் எம்மைப் போல் எத்தனை மாணவர்கள் வந்து போயிருப்பார்கள். எனது அப்பாவும் அதே பாடசாலையில் ஆசிரியராக கடமை ஆற்றியதால், ஒருவேளை நினைவில் வைத்திருப்பாரோ, என்றால் அதற்கும் சாத்தியமில்லை. காரணம், அவர் அந்த பாடசாலைக்கு வந்த வருடத்தில் அப்பா, ஆசிரிய பயிற்சிக் கலாசாலைக்குப் போய் விட்டார். அருணாசலம் மாஸ்டர் நமக்கு எடுத்த பாடம் கணக்கு. அதில் நான் நன்றாகவே செய்வதால், ஒருவேளை என்னை நினைவில் வைத்திருப்பாரோ என்று எண்ணிப் பார்க்கிறேன். அவரிடம் அப்படி எத்தனை பேர் வந்து போயிருப்பார்கள். மேலும் எல்லோரையும் கணக்கை நன்றாகச் செய்யச்செய்யும் வல்லமை அவரிடம் உண்டே.

அவர்பற்றி அறிய மிகவும் ஆவலாயுள்ளது. ஒருவேளை இதை வாசிப்பவர்களில் அவரது உறவினர்களோ, அவரைத் தெரிந்தவர்களோ, ஏன் அவரது பிள்ளைகளோ கூட இருக்கக் கூடும். அப்படி யாராவது இருந்தால், தயவு செய்து எனக்கு அறியத் தாருங்கள்..

6 Comments

At September 28, 2005, `மழை` ஷ்ரேயா(Shreya) wrote:

நல்ல தோழர்களைப்போல ஆசிரியர்கள் கிடைப்பது அரிது. ஆசிரியரைக் கண்டு பிடித்தால் எங்களுக்கும் சொல்லுங்கள்.

சிலவேளை அந்தப் பள்ளிக்கூடத்தில் கேட்டால் கண்டுபிடிக்க/ தற்போதைய வசிப்பிடம் பற்றி அறிந்து கொள்ளச்  சந்தர்ப்பமுண்டு.

At October 6, 2005, வீ. எம் wrote:

புதிய வகுப்புக்கு ஒரு தை மாதத்தில் போகிறோம்
அடேங்கப்பா .. சூப்பர்..

பொது நிறத்தைக் கொண்டவர்

அப்படினா?? அது என்ன நிறம்ங்க??

இப்படி ஆசிரியர்கள் கிடைப்பது அரிது... கவலை வேண்டும்... ஒரு நாள் அவரின் தொடர்பு கிடைக்கும் கலை அவர்களே

At November 4, 2005, கயல்விழி wrote:

எனக்கும் ஒரு ஆசிரியரை மறக்க முடியாது. அந்த ரீச்சர் வீட்டிலை நடக்கிற கோவங்களைக்காட்ட செய்த வேலைகளை எப்படி மறக்க. கொப்பி முகத்திற்கு வரும். துணி டஸ்ரர் சோக் கட்டி என்று எத்தனை வரும் முகத்தில். வளர்ந்ததன் பின்னர் நிறைய ஆசிரியர் நண்பர்களாக பழகியதுண்டு . இருந்தாலும் அந்த ரீச்சரை மறக்க முடியாது.

At November 4, 2005, கலை wrote:

இங்கே கருத்தெழுதிய ஷ்ரேயா, வீ.எம். கயல்விழி அனைவருக்கும் நன்றிகள். இன்றைக்கு போட்ட பதிவிலும், எனக்கு பிடித்தமான இன்னொரு ஆசிரியைபற்றி வருகிறது. (எனக்கு பிடிக்காத ஒரு ஆசிரியரைப்பற்றியும் எழுத வேண்டும் இன்னொரு பதிவில்).

At November 5, 2005, சிங். செயகுமார். wrote:

ஒன்பதாம் கிளாசில எனக்கும் ஒரு தமிழ் வாத்தியார்,முதல் நாள் கிளாஸ் எடுதார் ,ரெண்டு பீரியட்  .பெல் அடிக்கிற சமயம் அப்போதான் சொல்றார்  முத நாளே ஒரு சாப்டர் முடிஞ்சுதுன்னார். புத்தகத்த திறந்து பார்த்தா  அவர் சொன்ன விழயங்கள்ள பத்து பர்சன்ட்தான் அப்பிடியே  பாடத்துல இருந்திச்சி , இன்னிக்கும் அவர் அன்னிக்கி நடத்துன பாடம்  மனசில நிக்கிதுங்கோ

At November 5, 2005, சிங். செயகுமார். wrote:

ஒன்பதாம் கிளாசில எனக்கும் ஒரு தமிழ் வாத்தியார்,முதல் நாள் கிளாஸ் எடுதார் ,ரெண்டு பீரியட்  .பெல் அடிக்கிற சமயம் அப்போதான் சொல்றார்  முத நாளே ஒரு சாப்டர் முடிஞ்சுதுன்னார். புத்தகத்த திறந்து பார்த்தா  அவர் சொன்ன விழயங்கள்ள பத்து பர்சன்ட்தான் அப்பிடியே  பாடத்துல இருந்திச்சி , இன்னிக்கும் அவர் அன்னிக்கி நடத்துன பாடம்  மனசில நிக்கிதுங்கோ

Related posts

No related posts.

Autograph!
கடந்த வருடம் கோடை விடுமுறைக்கு இலங்கைக்குப் போயிருந்தோம். அப்போது யாழ்ப்பாணமும் போய் வந்தோம். அப்போது எனது பழைய ஆட்டோகிராஃப் கையில் கிடைத்தது. நமது வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஆளுக்கொரு திசையில் கிளம்பிய பின்னர், எங்களது வீட்டை வேறு ஒருவரிடம் ஒப்படைப்பது என்று முடிவெடுத்தபோது, தம்பி அங்கிருந்த சில பொருட்களை தன்னுடன் எடுத்துச் சென்று வைத்திருந்தார். அதில் ஒன்று இந்த ஆட்டோகிராஃப்கள். என்னிடம் இருந்த 4 ஆட்டொகிராஃப்களில், இரண்டைக் காணவில்லை. இரண்டு மட்டுமே அங்கே இருந்தது. இரண்டு தொலைந்து விட்டாலும், தம்பி மற்ற இரண்டையாவது மிகவும் பொறுப்புடன் வைத்திருந்து என்னிடம் தந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அங்கு அப்போது அதை பொறுமையாக வாசிக்க முடியாது என்பதால், அவற்றை, அப்படியே என்னுடன் இங்கே எடுத்து வந்திருந்தேன்.இங்கு வந்து சேர்ந்ததும், பெட்டிகளை அடுக்கியபோது, இவை மீண்டும் கையில் கிடைத்தது. ஆறுதலாக இருக்கும் வேளையில் வாசிக்கலாம் என்று, அவற்றை ஒரு மேசை இழுப்பறையினுள் போட்டேன். பின்னர் அதை மறந்தே போனேன். இதோ ஒரு வருடத்துக்கு மேல் முடிந்து விட்டது. இந்த வாழ்க்கையின் அவசரகதி நிலைதான் இதற்குக் காரணம் போலும் என்று எண்ணியபடியே அந்த ஆட்டொகிராஃப் இல் ஒன்றை எடுத்துப் பார்த்தேன். அதன் நிறம் மங்கி, தாள்களின் நிறம் பழுப்பாகி, சோபையிழந்து காணப்பட்டது. பக்கங்களைப் புரட்ட ஆரம்பித்தேன். கவர் தனியாக கழன்று வந்திருந்தது. உள்ளேயும் சில பக்கங்கள் கிழிந்திருந்தது. ஒரு காலத்தில், பொக்கிஷமாக நான் பாதுகாத்து வைத்த பொருட்களில் ஒன்றான இந்த ஆட்டோகிராஃப் க்கு நேர்ந்த கதியை எண்ணிப் பார்க்கிறேன்.

அந்த ஆட்டொகிராஃப் நான் Hatton Highlands College (இலங்கையில் மலை நாட்டிலுள்ள ஒரு பாடசாலை) இல் படித்துவிட்டு, அப்பா, அம்மாவின் இடமாற்றம் காரணமாக யாழ்ப்பாணத்துப் போக வேண்டி வந்த சூழ்நிலையில் அங்கிருந்தவர்களிடம், அவர்களது நினைவாக வாங்கிய ஆட்டோகிராஃப். அதில் எனக்குப் பிடித்த ஆசிரியர்கள், சினேகிதிகள் என்று பலரும் கையொப்பமிட்டிருந்தார்கள்.(அவர்களில் குறிப்பாக ஒரு ஆசிரியர்பற்றி நிச்சயம் இங்கே சொல்லியே ஆகவேண்டும். அதை இன்னொரு பதிவில் சொல்கிறேன்). அத்துடன் பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடின்றி வகுப்பிலிருந்த அனைவருமே அதில் கையொப்பமிட்டிருந்தனர். அங்கிருந்து புறப்பட வேண்டி வந்த நாளில் நான் அழுத அழுகையை எண்ணிப் பார்க்கிறேன். அந்த சிறிய வயதில், ஏதோ அந்த சினேகிதிகளை எல்லாம் பிரிந்து விட்டால், எனது வாழ்க்கையே அஸ்தமித்துவிடும் என்பதுபோல், அப்படி அழுதேன். ஆனால், இப்போது நினைக்கையில் ஆச்சரியமாக உள்ளது. காலம்தான் நமது வாழ்வில் எத்தனை மாற்றங்களை செய்து விடுகிறது.

நெருங்கிய சினேகிதிகளை நான் மறக்கவில்லைத்தான் என்றாலும், அவர்களது தொடர்பு எல்லாம் இப்போது முற்றாக நின்று போய் விட்டது. அதில் பலரும் எங்கே இருக்கிறார்கள் என்பதுகூட இப்போது தெரியாது. அப்போது மிக மிக முக்கியமாக மனதிற்குப்பட்ட அந்த நட்பு, இப்போது முக்கியத்தை இழந்துபோய் இருக்கிறது. அங்கிருந்து நான் புறப்பட்ட சிறிது காலத்திற்கு, கிழமைக்கு ஒரு கடிதமாவது எனது நெருங்கிய தோழிகளுக்குப் போடுவேன். அவர்களும் அடிக்கடி போடுவார்கள். அவர்கள் எழுதும் கடிதங்களின் நீள, அகலம் இப்போதும் மனதில் வருகிறது. எத்தனை நீளமான கடிதம். பெரிய பேப்பரில் 4, 5 பக்கங்கள் வரை கூட கடிதங்கள் நீண்டிருக்கின்றன. அப்படி என்னதான் எழுதிக் கொண்டோமோ, இப்போது நினைவில் இல்லை. அதிலும் உஷா என்ற எனது நெருங்கிய தோழியின், அழகான, குண்டுக் குண்டு எழுத்துக்களைத் தாங்கி வரும் அந்த நீளமான கடிதங்களை வாசிப்பதே இனிமையாக இருக்கும். எனக்குப் புதிய இடம், புதிய மனிதர்கள் என்பதால், நான் தவறாது கடிதம் போடுவேன். அவர்களிடமிருந்து வரும் கடிதங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்து ஒரு கால கட்டத்தில் நின்றே போய் விட்டது.

அவர்களை எல்லாம் விட்டுப் பிரிந்த பின்னர், உஷா என்ற தோழியை மட்டும் இரு தடவைகள் சந்திக்க முடிந்தது. இன்னொரு தோழி பேபி இறந்துவிட்டாள் என்பதை உஷா மூலம் அறிந்துகொண்டேன். அவளின் இறப்பு ஒரு அதிர்ச்சி நிறைந்தது. அதைப் பற்றி இன்னொரு பதிவில் சொல்லலாம். மற்றவர்கள்பற்றி உஷாவுக்கே கூட அதிகமாய் தெரியவில்லை. உஷாவும் தற்போது எங்கே என்று தெரியவில்லை.

இப்போது இந்த ஆட்டோகிராஃப் ஐப் பார்க்கையில் அதில் கையொப்பமிட்டுள்ள ஒரு சிலரை நினைவில் கூட இல்லை என்பது கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது. ஆனால் அதுதான் உண்மை..

4 Comments

At September 28, 2005, `மழை` ஷ்ரேயா(Shreya) wrote:

இந்த ஆட்டோக்ராபில் இருக்கின்ற வசனங்கள், கவிதைகளையும் கொஞ்சம் எடுத்து விடுறது தானே!

At October 1, 2005, வீ. எம் wrote:

கலை,
ஆட்டோகிராப் அருமை... ஒவ்வொரு பூக்களுமே  மாதிரி ஏதாச்சும் பாடல் இருக்கா  :)?

At November 5, 2005, கலை wrote:

நன்றி ஷ்ரேயா, வீ.எம்.

ஷ்ரேயா தொடரபோகும் பதிவுகளில் சில வசனக்களை எடுத்து விடலாம் என்றுதான் இருக்கிறேன். :)

அப்படி பாடல் எதுவும் இருப்பதா என்று இன்னும் தேடிப் பார்க்க வேண்டும் வீ. எம். முழுவதுமாய் இன்னும் பார்த்து முடிக்கவில்லை.

At March 17, 2007, சினேகிதி wrote:

aha...enadaum gr9 ila en nanbargal thanthuvida autograph iruku athil sila teachers um sign pani irukinam...epavavthu eduthu vasipen.Akkada niraya autographs iruku (poramai than).

Related posts

No related posts.

உன் கை பிடித்து……
உன் கை பிடித்து

நான் எழுந்து

என் முதலடியை

எடுத்து வைத்தேன்

உன் கைகள்

எந்தனுக்குசெய்துவிட்ட

சேவைகளோ ஏராளம்

விளையாடிக் களைத்து நான்

வியர்வையில் குளித்து வந்தால்

முந்தானை எடுத்து என்

முகம் துடைத்தாய்

மழையில் நனைந்து வந்தால்

மார்பில் சளி பிடிக்குமென்று

தாயே நீ ஓடி வந்து

தலை துடைத்தாய்

நான் விரும்பும் இடமெல்லாம்

நாளும் நீ அலுக்காமல்

அன்பாய் அரவணைத்து

அழைத்துச் செல்வாய்

காயங்கள் எனக்கு வந்தால்

கருத்துடனே மருந்திடுவாய்

வாடாமல் நான் நின்றாலும்

வலி தெரியும் உன் முகத்தில்

என் கை பிடித்து

ஏட்டில் நீ எழுத வைத்தாய்

என் கரம்பற்றும் கணவரிடம்

ஏக்கமுடம் அனுப்பி வைத்தாய்

உன் கைகள் எந்தனுக்கு

செய்துவிட்ட சேவைகளோ ஏராளம்

நான் உனக்கு சேவை செய்யும்

சந்தர்ப்பம் வந்திடுமா????

1 Comments

At August 12, 2005, `மழை` ஷ்ரேயா(Shreya) wrote:

இந்தக் கிழமை கனபேருக்கு பெற்றோரைப் பற்றின எண்ணங்கள் போல் இருக்கு.

//என் கரம்பற்றும் கணவரிடம்
ஏக்கமுடம் அனுப்பி வைத்தாய்//

தொலைபேசியில கதைக்கும் போது, "என் வீட்டில் கேட்க வேண்டிய சிரிப்பு உம்மட வீட்டில் கேட்குது" என்று அம்மா என் கணவரிடம் சொல்லும் போது மனதை என்னவோ செய்யும். :O|

Related posts

No related posts.

கண்களுக்குள் கண்ணீர்!!!
அன்னை தெரெசாவுக்கு ரா.பார்த்திபனின் கிறுக்கல்களில் இருந்து……..

கண்களுக்குள் கண்ணீர்!!!

கருவுற்றதால் தாயாகாமல்

கருணையுற்றதால்

அகில உலகத்திற்கே

‘அன்னை’ ஆனவளே! – உன்

முக வரிகளில் மனித நேயத்தின் முகவரி!

உன் ஆத்மா,

காற்றோடு கலந்து விட்டதால் – இனி

அன்பை மட்டுமே நாங்கள்

ஆக்சிஜனாக சுவாசிப்போம்!

நன்றி: ரா.பார்த்திபன்

கிறுக்கல்கள்

Related posts

No related posts.