உயிர்ப்பு

Web Hosting Sale – 1 GB @ 10 USD per year
இந்த வலைப்பதிவு போலவே உங்கள் சொந்தப் பெயரில் தளம் வேண்டுமா? ஆண்டுக்கு 10 US Dollar செலவில் 1 GB இடம் கிடைக்கிறது. மேல் விவரங்களுக்கு Milk Host வழங்கும் Web hosting பார்க்கவும்.

Related posts

No related posts.

வாசிப்பு – The Zahir!
Paulo Coelho எழுதிய The Zahir வாசித்தேன். 350 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை, எனக்கு கிடைக்கும் குறுகிய நேரங்களில் வாசித்து முடிக்க நீண்ட காலம் எடுக்கும் என நினைத்திருந்தேன். ஆனால் நான் நினைத்ததைவிட மிகவும் வேகமாகவே வாசித்துவிட்டேன்.

அப்படி விரைவாக வாசிக்க காரணம் அந்தக் கதையின் கதாபாத்திரங்களின் இயல்புகள் சிலவோ, பலவோ என்னையும், என்னைச் சார்ந்தவர்களையும் ஒத்திருந்தது எனத் தோன்றுகின்றது. இயல்பாக பலரிடம் இருக்கும் இயல்புகள் அனைவருக்கும் தெரிய வருவதில்லை. அதாவது வாழ்க்கையில் ஒரிருவரிடம் மட்டுமே முழுமையாக நாம் நாமாக இருக்க முடியும் எனத் தோன்றுகிறது.

கதாசிரியர் அந்தக் கதையின் கதை சொல்லியாக இருக்கிறார். அவர் இடை இடையே சில பல வாழ்க்கை தத்துவங்களை, தத்துவங்களாக இல்லாமல், இயல்பாக தெளித்துக் கொண்டு போயிருப்பதாகத் தோன்றுகிறது. வீடற்றவர்கள், இரந்துண்போர், நாடோடிகள் வாழ்க்கையிலேயே பல தத்துவங்கள் புதைந்திருப்பதாய் தோன்றுகின்றது.

கதையில் காணாமல்போன (‘இனிமேல் கணவனுடன் வாழுதல் இயலாது என நினைத்து, பிரிந்துபோன’ என்றும் கூறலாம்) மனைவியை மிகவும் சிக்கல்களுக்கு மத்தியில் தேடிக் கண்டு பிடித்து சந்திக்கிறான் கணவன். மனைவி பிரிந்து போனதன் பின்னர்தான், மனைவியின்மேல் தனக்கிருக்கும் உண்மையான காதலை அடையாளம் காண்கின்றான். ஆனாலும் அவளைத் தேடிப் போகும்போது, அவள் தன்னுடன் மீண்டும் திரும்பி வரமாட்டாள் என்பதை உணர்ந்தே போவதாகப் படுகின்றது. இருந்தும் எதற்கும் தயாராகவே தேடிப் போகின்றான். அவ்வளவு சிக்கல்களைத் தாண்டிப் போயும்கூட அவள் அவனுடன் வரவில்லையே என்பது சிறிது உறுத்தலாக இருந்தாலும், அதைத் தவிர வேறு மாதிரியான முடிவு அந்தக் கதைக்கு வர முடியாது என்றுதான் தோன்றுகின்றது.

கதையின் முடிவில் மனைவி கணவனிடம் கூறும் ஒரு வசனம் எதற்காக என்று, இன்னமும் எனக்குப் புரியவில்லை. வாசித்தவர்கள் யாரிடமாவது கேட்க வேண்டும்  .

கதை முடிந்த பின்னர் ‘கதாசிரியர் குறிப்பு’ மிகவும் பிடித்திருந்தது. உதவியவர்களுக்கு நன்றி சொல்வது இயல்புதான். ஆனால் அந்த நன்றியுடன், கதையில் வரும் ஒவ்வொரு சின்ன சின்ன விசயங்களையும் எந்தக் கதை அல்லது கவிதையிலிருந்து பெற்றுக் கொண்டார், எதையெல்லாம் அடிப்படையாக வைத்து குறிப்பிட்ட விசயங்களை எழுதினார், யாருடன் பேசியபோது கதைக்குரிய சில கருத்துக்களைப் பெற்றுக் கொண்டார் என்று குறித்திருக்கிறார். உரியவர் யாரென்று தெரியாமல் இணையத்தில் பெற்றுக் கொண்ட தகவல்களைக் கூட மறக்காமல் குறிப்பிட்டிருக்கிறார். உலகின் சில பகுதிகளூடாக தான் மேற்கொண்ட பயணத்தின்போது இந்தக் கதையை தான் எழுதியதாகவும், பயணத்தின்போது எந்த எந்த இடங்களிலிருந்து கதையை எழுதினார் என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார்.

3 Comments

At March 1, 2010, பொன்ஸ் wrote:

Zahir பற்றி ரொம்ப குறைவா எழுதி இருக்கீங்களோ? எனக்கு ரொம்ப பிடித்த புத்தகம் இது. இதைத் தவிர பாலோ கோயிலோவின் மற்ற புத்தகங்கள் இதே போல மனதில் அறைவதாக இருக்கவில்லை.. (eleven minutes was pretty good though).

மீண்டும் ஒருமுறை படிக்க வேண்டும் என்று எடுத்து வைத்திருக்கிறேன்.. பார்க்கலாம்..

At March 1, 2010, கலை wrote:

வாங்க பொன்ஸ், ரொம்ப நாளாச்சு உங்களைப் பாத்து. வந்ததே வந்தீங்க, அந்த கதையின் முடிவில், மனவி கணவனிடம் கூறும் வசனத்துக்கு அர்த்தமும் சொல்லிட்டுப் போகக் கூடாதா? :) அந்த புத்தகம் வாசிச்ச யாரையாவது தேடிக்கிட்டு இருக்கேன்.

அந்தப் புத்தகத்துக்கு என்னுடைய இந்த இடுகை, உண்மையிலேயே ரொம்ப ரொம்ப குறைச்சல்தான். ஆனா எதை எழுதுறது, எதை விடுறது. அதான் சுருக்கமா முடிச்சிட்டேன். :)

At March 1, 2010, ரவி wrote:

//ஆனால் அந்த நன்றியுடன், கதையில் வரும் ஒவ்வொரு சின்ன சின்ன விசயங்களையும் எந்தக் கதை அல்லது கவிதையிலிருந்து பெற்றுக் கொண்டார், எதையெல்லாம் அடிப்படையாக வைத்து குறிப்பிட்ட விசயங்களை எழுதினார், யாருடன் பேசியபோது கதைக்குரிய சில கருத்துக்களைப் பெற்றுக் கொண்டார் என்று குறித்திருக்கிறார்.//

அவர் சின்னப்பிள்ளையின் வலைப்பதிவு எதில இருந்தும் சுடலையா ;)

Related posts

No related posts.

கோமாளிகள் நாள்!
எப்பவாவது பாடசாலையில் இப்படி ஒருநாள் உங்களுக்கு கொண்டாடப்பட்டதா? எனக்கு இல்லவே இல்லை. அப்படி ஏதாவது இருந்திருக்கக் கூடாதான்னு இப்ப தோணுது.

வேற ஒன்றுமில்லை. மகளுடைய பாடசாலையில இப்படி இருநாள் இன்றைக்கு. இந்த கிழமை முழுமைக்குமே ஒவ்வொருநாளும் ஒவ்வொரு மாதிரி. இது அவர்களுடைய spirit week ஆம்  .

1. திங்கள் – pyjama day

இரவு உடையில் குழந்தைகள் எல்லோரும் பாடசாலைக்கு சென்றார்கள்.

2. செவ்வாய் – gym games day

முழுநாளும் விளையாட்டு. மகளுக்கு முதலாம் வகுப்பு பிள்ளைகளை நெறிப்படுத்தும் வேலை கொடுக்கப்பட்டதாம். அவர்களுக்கு ஒரே விசயத்தை திருப்பி திருப்பி சொல்லி அலுத்துப்போச்சாம். (ரொம்பத்தான் அலட்டிக்கிறா).

2. புதன் – Skiing day

இதற்கென்று தனியார் போக்கு வரத்து ஒழுங்கு செய்து பெரிய மலையொன்றுக்கு தொலைதூரம் போய் வந்தார்கள். தான் 10 தடவைக்கு மேல் விழுந்து எழும்பியதை, பெரிய சாதனையாக, மிகவும் சந்தோசத்துடன் சொல்லி மகிழ்ந்தாள்  . ஆனால், இன்றைக்குத்தான் கொஞ்சம் கழுத்து வலிப்பதாக கூறுகின்றாள்  . விரைவில் குணமாகிவிடும் என்று நம்புகின்றேன்.

3. வியாழன் – crazy day

அப்பாவுடைய T-shirt ஐ எடுத்து அணிந்து கொண்டாள். அப்பாவிடம் ஒரு tie வாங்கி, அது சுற்றப்பட்டிருந்த polythene cover உடன் சேர்த்து t-shirt இல் குற்றிக் கொண்டாள். தலைமுடியை இரண்டாகப் பிரித்து, ஒரு பக்கம் பின்னாமலும், ஒரு பக்கம் பின்னியும் விடச் சொல்லிக் கேட்டாள். போட்டு விட்டேன். உடைக்கு சம்பந்தமேயில்லாத ஒரு sweater எடுத்து அணிந்து கொண்டாள்.  The crazy girl was ready then  . Crazy parade 9 மணிக்கு தொடங்குதாம் என்று சொல்லி அவசரமாக ஓடுகிறாள்.

இப்படியெல்லாம் நாங்க படிக்கும்போது எதுவும் இல்லாம போச்சே என்று கவலையா இருக்கு. நல்லாவே குழந்தைகளை கவனிக்கிறாங்க

2 Comments

At February 25, 2010, sandanamullai wrote:

ஹஹ்ஹா..வித்தியாசமாத்தான் இருக்கு...பப்பு ஸ்கூலுக்கு இதை பிரிண்ட் எடுத்து கொடுத்துவிடறேன்....:-))

At February 26, 2010, கலை wrote:

கட்டாயம் கொடுத்து விடுங்க. குழந்தைகள் மிகவும் விரும்பி செய்கின்றார்கள்.

Related posts

No related posts.

அழகோ அழகு!
இரண்டு நாட்கள் தொடர்ந்த பனிமழையின் பின்னர், இன்றைக்கு வானம் வெளித்து, வெளிச்சம் இருக்கிறது. சாலையோரத்தில் மரங்கள் எல்லாம் வெண்பனி போர்த்திக் கொண்டு அழகாகவும், மிடுக்காகவும், கர்வத்துடனும் இருப்பதாகத் தோன்றுகிறது. பாதையிலிருந்த பனி அகற்றப்பட்டு, பாதையோரங்களில் விடப்பட்டிருப்பதால், சாலைக்கு 3-4 அடி உயரத்தில் (சில இடங்களில் 5-6 அடி கூட) வெள்ளை நிறத்தில் வேலி போட்டதுபோல் அழகாக இருக்கிறது.

எல்லாவற்றையும் விட அழகு ஒன்று என்னை கட்டிப் போட்டது. இந்த படத்தில் தெரிவது, நான் இந்த இடுகையில் குறிப்பிட்டிருந்த கடல்நீரேரி.

இன்று, அந்த கடல்நீரேரியின் வெண்கம்பளத்தை மூடி, ஆளை மறைக்கும் உயரத்துக்கு புகை மூட்டம் சூழ்ந்து அழகோ அழகாக இருக்கு. (ஐயோஓஓஒ அந்த அழகை விபரிக்க முடியேல்லையே). கையில் புகைப்படக் கருவி இருக்கவில்லை. கைத் தொலைபேசியில் எடுக்கும் படம் தெளிவில்லை. அந்த நீரேரியின் மேல் தற்போது நடக்க முடியும். சில நாட்கள் முன்னர், அதன்மேல் நடந்து படம், அசையும் படம் எல்லாம் எடுத்தோம். ஆனாலும் இப்படி இந்த புகை மூட்டத்தி்ற்குள் ஓடி எடுத்தால் நன்றாக இருக்கும். இன்றைக்கு அதை நடை முறைப்படுத்த முடியவில்லை. நாளையும் இந்த அழகு தொடர்ந்து இருந்தால், எப்படியாவது இதை எடுத்தே ஆக வேண்டும். பார்க்கலாம்.

1987 ஆம் ஆண்டுக்குப் பின்னர், இந்த ஆண்டில்தான், பேர்கனில் இவ்வளவு பனிவிழுந்து நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து இருக்கிறதாம். பேர்கன்தான் மழைநகரமாச்சே. அடிக்கடி மழைபெய்து, பனியை கழுவிச் சென்று விடும். ஆனால், இந்த ஆண்டு மழை ஓய்வு பெற்றுக் கொண்டு, பனிமழைக்கு இடம் விட்டுச் சென்றிருக்கிறது  .

1 Comments

At February 23, 2010, sandanamullai wrote:

தங்களது மகிழ்ச்சியை குதூகலத்தை உணர முடிகிறது. பார்க்க ஆவலாகவும் இருக்கிறது. :-)

Related posts

No related posts.

என் செல்லக் குட்டிம்மா!
நேற்றைக்கு என் செல்லக் குட்டி மகளுடன் சின்னதாய் ஒரு குட்டிச் சண்டை.

அந்தச் சண்டையின் காரணமாய், என்னுடைய அறைக்குள்ளே போய் இருக்கும்படி சொன்னேன். இல்லை வெளியே வரப் போகிறேன் என்றாள். வேண்டாமென்றும், ஒரு 15 நிமிடங்கள் இருந்துவிட்டு வரும்படியும் கூறினேன். நடந்த விடயத்தை அவள் மட்டுமல்லாமல், நானும் மீண்டும் யோசிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் அது. 15 நிமிடத்தின் பின்னர் அவள் வெளியே வந்தபின்னர், நான் எதையோ எடுக்க உள்ளே போனேன். அங்கே கிடைத்த ஒரு குட்டி தாளில், அங்கே கிடைத்த ஒரு பேனாவை எடுத்து, ‘I love you, I love you’ என்று எழுதி எனது புத்தகம் ஒன்றின் மேல் வைத்திருந்தாள்.

பின்னர் இருவரும் வெளியே போனோம். ஒரு மணி நேரத்தின் பின்னர், வீடு திரும்பும்போது ஆறுதலாய், நடந்த விடயங்களைப்பற்றி அவளிடம் சமாதானமாகப் பேசினேன். பின்னர் வீடு வந்து குளித்து, சாப்பிட்டு படுக்கைக்குப் போனதும், அவசரமாய் ஒரு தாள் எடுத்து எழுதினாள். ”அப்படி என்ன எழுதுறீங்க?” என்று கேட்டேன். பதிலில்லை. எனக்கு காட்டாமல் ஒளித்து ஒளித்து எழுதினாள். எழுதி முடித்ததும் என்னிடமே கொண்டு வந்து தந்தாள்.

அதில் சின்னதாய் ஒரு கடிதம்.

To my dear mother,

You always love me and kiss me,

But will never, ever miss me.

You are nice and pretty,

and you are also witty.

You are posh and kind,

And you have good thought in your mind,

I do not know what to write,

But one thing

WE SHOULD NOT FIGHT

By: Amma’s favourite Kutty

அன்பாக அணைத்து முத்தமிட்டேன். “நான் அப்பிடி செய்ததுக்கு Sorry அம்மா” என்று சொல்லி முத்தம் தந்து விட்டு, அந்தக் கடிதத்தை கடைசிவரை தொலைக்காமல் வைத்திருக்க வேண்டும் என்று அன்பாய் உத்தரவிட்டுவிட்டு, படுத்து, உடனேயே தூங்கி விட்டாள் என் செல்ல மகள்.

8 Comments

At February 5, 2010, Vidhoosh wrote:

ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கு. வாழ்த்துக்கள்.

At February 5, 2010, Varadaradjalou wrote:

நெகிழவைத்துவிட்டது உங்கள் இந்த பதிவு.

குட்டியுடன் இனி சண்டை போடாதீர்கள், ப்ளீஸ்

At February 5, 2010, sandanamullai wrote:

Very touchy!!

At February 5, 2010, aruna wrote:

ஆஹா...குட்டிம்மா கலக்குறாங்க!

At February 5, 2010, `மழை` ஷ்ரேயா wrote:

நல்லாருக்கு.

இதெல்லாம் பொக்கிசச் சாமான்... பத்திரமா வைச்சிருப்பீங்க என்டு தெரியும். அம்மாமாருக்குக் கை வந்த கலை இது. :)

At February 7, 2010, விஜயநரசிம்மன் wrote:

கவிதை அழகென்றால், அந்தக் குட்டிக் கவிதாயினி அதைவிட அழகு...

அழகான நிகழ்வு... ஒரே ஒரு சின்ன வருத்தம், குழந்தை ஆங்கிலத்தில் எழுதியது, ”குழந்தைக்கு தமிழ் கற்றுக்கொடுங்கள் - கவிதை எழுதும் அளவிற்கு” -என்று நான் உங்களைக் கேட்டுக்கொண்டால் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன்! அழகான ஒரு குட்டிக் கவிதாயினி கிடைக்கப்பெற்றால் தமிழ் மிகவும் பேறுபெறும் - அதற்காகவே சொல்கிறேன்!

பதிவிற்கும் பகிர்விற்கும் மிக்க நன்றி!

விஜய் :)

At February 9, 2010, கலை wrote:

பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் நன்றிகள்.

விஜயநரசிம்மன்!

மகள் தமிழில் நன்றாக கதைக்கவும், அத்தோடு கொஞ்சமாய் எழுதவும், வாசிக்கவும் தெரிந்து வைத்திருக்கிறாள். சின்ன சின்ன கவிதைகள்கூட எழுதியிருக்கிறாள். அம்மம்மா, தாத்தாவிற்கு, (தனக்குத் தெரிந்த) அழகு தமிழில் குட்டிக் கவிதை கூட எழுதிக் கொடுத்திருக்கிறாள். தொடர்ந்து தமிழில் எழுத உற்சாகப்படுத்தி வருகின்றேன். பார்க்கலாம்.

At March 6, 2010, Karitha Shalee wrote:

மிகவும் அருமையான பதிவு

வாழ்த்துக்கள்

Related posts

No related posts.

இது ஒரு பனிக்காலம்!
இது ஒரு அழகான பனிக்காலம்!

நீர்நிலையொன்றில் உள்ள செயற்கையான இந்த தண்ணீரூற்றை பனிக்காலத்தில் மூடாமல் விட்டுவிட்டார்கள். மறந்துபோய் விட்டார்களா, அல்லது தெரிந்தே விட்டார்களா என்று தெரியவில்லை. தண்ணீர் மேலெழுந்து, கீழே விழ முன்னரே உறைநிலைக்குப் போய்விட்ட காரணத்தால், தண்ணீரூற்றில் பனிமலையே உருவாகி இருக்கிறது. எத்தனை அழகாக இருக்கிறது.

அன்றொருநாள் காலையில் கடல்நீரேரியில், நீரின் மேலாக நான் நடந்து சென்றேன். மகளுடன் சேர்ந்து நடந்தது மகிழ்ச்சியாக இருந்தது. மந்திரம் தந்திரமெல்லாம் இல்லை   . வேறொன்றுமில்லை. ஊரில் அதி குறைந்த வெப்பநிலை காரணமாக கடல்நீரேரிகளின் மேல் மட்ட நீரில் 15 cm ஐ கடின உறைபனியாகி விட்டிருக்கிறது. அதனால், நீரின் மேல் நடக்கலாம், ஓடலாம், நடனம் செய்யலாம். Skating, skiing, cycling எது வேண்டுமானாலும் செய்யலாம். மாநகர சபையினர் கடல்நீரேரியை சோதித்துப் பார்த்து, அதன்மேலாக நடப்பது பாதுகாப்பானது என்று அறிவித்திருக்கிறார்கள். இருந்தாலும் ஏதாவது நடந்தால் தாங்கள் பொறுப்பல்ல என்றும் சொல்லியிருக்கிறார்கள்  . ஏரியின் சில இடங்கள் உறைபனியின் கடினத்தன்மை குறைந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் அது எந்த எந்த இடமென்பது சரியாகப் புரியவில்லை  . கடல்நீரேரி முழுவதும் வெள்ளைக் கம்பளம் விரித்த பெரீஈஈஈய விளையாட்டு மைதானம்போன்று அழகாக இருக்கிறது.

வெண்பனி கொட்டிய நிலையில் மரங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கின்றன. விளக்குக் கம்பங்கள், சுவர்கள், வீட்டுக் கூரைகள் எல்லாம் வெள்ளைத் தொப்பியணிந்து அழக்காக இருக்கின்றன.

நாங்கள்தான் இந்த குளிர் காலத்தை குறை சொல்கின்றோம். இந்தக் குளிர் காலத்தையும் மிகவும் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் நோர்வே மக்கள் கடந்து செல்கிறார்கள். அன்றைக்கு கூட வேலை செய்பவர், தானும், மகளும் மலைக்குப் போய் பனிச்சறுக்கல் செய்யப் போவதாய்க் கூறி விடுமுறை எடுத்துப் போகின்றார். நேற்று இன்னொருவர், தனது கணவரும் சினேகிதர்களும், உறைபனியால் மூடியிருக்கும் குளங்களில் மீன் பிடிக்கப் போய் விட்டார்கள் என்கிறார். உறைபனியை துளைத்து, துவாரமிட்டு, அதனூடாக மீன் பிடிக்கும் கொக்கியை செலுத்தி, கீழே நீரில் உற்சாகமாக வளையவரும் மீன்களைப் பிடிக்கப் போகிறார்கள். அத்துடன் உறைபனியில் குகை செய்து, அதற்குள்ளே படுக்க வேறு போகின்றார்களாம்.

அட எங்கட வீட்டுல இருக்கிற 2 முயல்களுக்கு இந்த பனிநிலமை மிகவும் பிடித்திருக்குப் போல இருக்கு. மிகவும் உற்சாகத்துடன் பனியின் மேல் ஓடித் திரிகின்றன. சுரங்கம் அமைத்து ஒளித்து விளையாடுகின்றன. ஓய்வாக இருக்கும்போது கூட, குளிர் படாமல் கூட்டினுள் சென்று இருக்காமல் பனியின் மேலேயே உட்கார்ந்து கொள்கின்றன.

Bergen நகரம் ஏழு மலைகளால் சூழப்பட்ட அழகான நகரம். சுற்றி மலைகள் இருப்பதாலும், அதி குறைந்த வெப்பநிலை, தற்போதைய ஈரப்பதன் காரணமாகவும் மோட்டார் வண்டிகள் வெளிவிடும் புகை மேலெழுந்து செல்ல முடியாமல் சூழல் மாசடைந்து இருப்பதாகக் கூறி, மோட்டார் வண்டிகளை நகரினுள் ஓட்டி வருவதில் பல கட்டுப்பாடுகள் போட்டிருக்கிறார்கள். தொலைவில் உள்ள சிறிய ஊர்களில் மோட்டார் வண்டிகளை நிறுத்திவிட்டு, நகரினுள் செல்வதற்கு இலவச பேருந்து சேவைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். பேருந்து தரிப்பு நிலையத்தில் இரு வெளிநாட்டினர் (ஆசியா, ஆப்பிரிக்கா வைச் சேர்ந்த இருவர்) பேசிக் கொண்டார்கள். ஒருவர், மற்றவரிடம் சொன்னது “எங்கள் நாட்டில் இதனைவிட எத்தனையோ மடங்கு வளிமண்டல மாசு இருக்கிறது. இதற்குப் போய் ஏன் அலட்டிக் கொள்கிறார்கள்”.  மக்களின்மேல் முழு அக்கறையுடன், சூழல் மாசைக் குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்கும் ஒரு நாட்டில் இருப்பதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறது.

இத்தனை அழகுக்கும், திருப்திக்கும் நடுவில், இடை இடையே, ‘இன்னும் எத்தனை காலம்தான் வாழலாம் இந்த நாட்டிலே?’ என்ற கேள்வி எழுந்துள்ளது  . காரணம் வேறொன்றுமில்லை. குளிர்க் கொடுமைதான். இந்த குளிர்காலமும், அதில் இருக்கும் இருளும், குளிரும் இல்லாவிட்டால்,  நோர்வே போன்ற நாட்டில் தாராளமாக எவ்வளவு காலமும் வாழலாம் என்பேன். ஆனால், குளிர்க் கொடுமை தாங்கவில்லை.

பேர்கன் நகரில் பல ஆண்டுகளாக இப்படி குளிர் வரவில்லை. இந்த ஆண்டு நல்ல குளிர். அன்று ஒருநாள் காலையில ‘அட உதில ரெண்டடிதானே’ என்றெண்ணி, வீட்டிலிருந்து garage க்கு கையில கையுறை போடாமல் போனேன். தவிர கையுறை போடமுடியாமல், கையில் ஒரு காயம் வேறு. ஆனால், கொஞ்ச நேரத்தில், கையெல்லாம் விறைச்சு, விரல் நுனியெல்லாம் வலிக்கத் தொடங்கி விட்டது  . இன்னுமொருநாள் கையுறை போட்டிருந்தும் விரல் நுனியெல்லாம் நீலமாகி விட்டது. ‘என்ன தவறு செய்தோம் என்று இந்த தண்டனையோ’ என்று எண்ணத் தொடங்கி விட்டேன்.

அது மட்டுமா, பாதையில் நடந்து செல்லவே பயமாக இருக்கு. காரணம் உறைபனியால், பாதைகள் வழுக்குது. அன்றைக்கு ஒரு பெண் இப்படி வழுக்கி, பேருந்தின் கீழே விழ, ஓட்டுனர் அதை கவனிக்காமல் பேருந்தை எடுக்க, பெண் கீழேயே நசுங்கி இறந்து போனார். பேர்கன் மலைநாடாக இருப்பதால், வளைவுகள், நெளிவுகள் கொண்ட ஒடுங்கிய பாதைகள் வேறு.

5 Comments

At January 25, 2010, sandanamullai wrote:

சுவாரசியமாக இருந்தது வாசிக்க! பகிர்வுக்கு நன்றி!

At January 25, 2010, கண்மணி wrote:

//பேர்கன் நகரில் பல ஆண்டுகளாக இப்படி குளிர் வரவில்லை. இந்த ஆண்டு நல்ல குளிர்//

இங்கு மட்டுமில்லை கலை உலகின் பல்வேறு பகுதியிலும் இந்த வருடம் அளவுக்கதிகமான குளிர்.இந்தியாவில் விமானப் போக்குவரத்து ரத்து செய்யுமளவு டெல்லியில் குளிர்.

ஹூம் எல்லாம் நமக்கு நாமேத் தேடிக் கொண்ட வெப்பமயமாக்கல்தான் தோழி!

இருந்தும் படங்களை இரசித்தேன்;))

At January 25, 2010, KarthigaVasudevan wrote:

சுவாரஸ்யமா இருக்குங்க படிக்க...பகிர்வுக்கு நன்றி

At February 9, 2010, கலை wrote:

பின்னூட்டங்களுக்கு நன்றி. ஒரு சினேகிதியினுடைய வீட்டில், இரவில் கதவை மூடி பனிவிழுந்து உறைந்து போனதில், காலையில் கதவைத் திறக்க முடியாமல், சன்னல் வழியாக ஏறி குதித்து, காலையில் வேலைக்குப் போனார்களாம் :). இப்படி இருக்கு கதை.

At February 23, 2010, அழகோ அழகு! wrote:

[...] போட்டது. இந்த படத்தில் தெரிவது, நான் இந்த இடுகையில் குறிப்பிட்டிருந்த [...]

Related posts

No related posts.

ஆசிரியர் மன்னிப்பு கேட்டார்!
மகளின் பாடசாலையில் ஆசிரியர்களுடன் பெற்றோர் கலந்துரையாடுவதற்கென ஒதுக்கப்பட்ட நாட்கள் வந்தன. மகளின் 4 ஆசிரியர்களுடன் நேரம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொருவரும் மகளைப் பற்றி நன்றாகக் கூறக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது.

நம் குழந்தைகளைப் பற்றி எமக்கு தெரிந்திருந்தாலும், மற்றவர்கள் சொல்லக் கேட்கும்போது ஒரு தனி மகிழ்ச்சிதான். உங்கள் மகள் பாடம் நன்றாகச் செய்கின்றாள், ஏனைய குழந்தைகளுடன் மிகவும் அன்பாகவும், எல்லார்மேலும் அக்கறையாகவும் நடந்து கொள்கிறாள், உங்கள் மகள் நல்ல தைரியசாலி என்று கேட்க யாருக்குத்தான் மகிழ்ச்சி இல்லாமல் போகும்?

ஒவ்வொரு தடவையும் ஒரு புதிய தலைப்பில் எல்லாப் பாடங்களையும் தொடர்புபடுத்தி சொல்லித் தருகிறார்கள். இந்த தடவை வானியல்பற்றி, மகளுக்கு மிகவும் பிடித்தமான பகுதி. அவர்களுக்கு இருக்கும் பாடங்களின் பெயர்கள் நமக்கு இருந்தவை போலில்லை  . ஒரு பாடம் IT & DT (Information Technolgy and Design Technology).

முதலில் சந்தித்தது IT & DT ஆசிரியை. கண்டதுமே, அவர் பாடத்தைப் பற்றி எதுவும் சொல்லாமல், ”போன ஆண்டு நாடகக் குழுவில் உங்கள் மகள் மிக நன்றாகச் செய்தாள். இந்த முறையும் அவள் கட்டாயம் வர வேண்டும்” என்று கூறி, பழைய படங்கள் எல்லாம் காட்டினார்.

கடைசியில் சந்தித்தது மகளின் ஆங்கில ஆசிரியை. அவரே வகுப்பாசிரியரும் என்பதால் நீண்ட நேரம் பேச்சு ஓடியது. அவருக்கு பேசுவது கைவந்த கலைபோலும். நிறைய பேசினார். தனது வீட்டுக் கதை, தனது மகன்களின் கதை, மகன் புகைப்பிடிக்க ஆரம்பித்த கதை, அதை நிறுத்தியது எப்படி என்ற கதை என்று எல்லாம் பேசினார்  . வகுப்பிலும் இப்படியெல்லாம் பேசிக் கொண்டிருப்பாரோ என்ற எண்ணம் உள்ளே ஓடியது. ஆனால் அவர் பேசுவது அனைத்தும் மிகவும் சுவாரசியமாகவே இருந்தது. மகள் வகுப்பில் எப்படி இருக்கிறாள் என்பதுபற்றிய பேச்சு வந்தபோது, ‘சில சமயங்களில், வகுப்பில் அவதானம் குறைகின்றது’ என்று கூறி, ‘ஆனால் அதில் ஒரு பகுதி தவறு என்னுடையதுதான். நான்தான் அதைச் சரி செய்ய வேண்டும்’ என்றார். இப்படி எங்கள் நாட்டில் எந்த ஒரு ஆசிரியராவது சொல்வாரா தெரியவில்லை. மேலும் மகளின் ‘helping mind and caring personality’ தான் மற்றைய காரணம் என்றார். யாராவது உதவி கேட்டால், ‘என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்’ என்றோ, ‘இப்போது சொல்ல முடியாது’ என்றோ உங்கள் மகளால் சொல்லவே முடியாது. அதனால் சில சமயம் வகுப்பில் மற்றவர்களுக்கு உதவப் போவதால், அவளுடைய அவதானம் குறைகின்றது என்றார்.

அப்போது மகளும் கூடவே இருந்தாள். திடீரென்று மகளிடம், ”என்னை மன்னித்து விடு. சில சமயம் சரியாக யோசிக்காமல் உன்மேல் தவறு சொல்லி விடுகிறேன்” என்றார். எனக்கோ ஆச்சரியம். நம் நாட்டில் இப்படி குழந்தைகளிடம், எந்த ஆசிரியராவது மன்னிப்பு கேட்பார்களா என்று எண்ணிப் பார்த்தேன்.

அண்மையில் மகளுடைய வகுப்பில் கொடுக்கப்பட்ட ஒரு assignment (இதுக்கு தமிழ் என்ன) அவரவர் நாட்டிலுள்ள, அல்லது கலாச்சாரத்திலுள்ள அல்லது மொழியிலுள்ள ஏதாவது ஒரு விடயத்தை அல்லது கதையை எடுத்து, அதை அவர்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு வகையில் செய்து காட்ட வேண்டும். மகள் அன்று வந்து தன்னிடம் உள்ள ‘தெனாலிராமன்’ என்ற தமிழ் கதைப் புத்தகம் ஒன்றில் குறிப்பிட்ட ஒருகதையை வாசித்துக் காட்டச் சொன்னாள். பின்னர் அந்தக் கதையை தன் நண்பர்களைச் சேர்த்து ஒரு நாடகமாக மாற்றி வகுப்பில் செய்து காட்டப் போவதாகச் சொன்னாள். வசனம், இயக்கம் மகள்தான்  . Script எல்லாம் தானே தயாரித்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் கொண்டு போய் கொடுத்தாள். அதை வகுப்பில் செய்வதற்கு முதல், எல்லோருமாக செய்து பார்க்கும்படி சொன்னேன். அவளும் சரி என்றாள். பின்னர் ”எல்லாரையும் beg பண்ணிக் கேட்டும் அவையள் practice க்கு வரேல்லை”. ஏனென்றால் அவள் கேட்டது விளையாடப் போகும் நேரமாம்  . பிறகு ஆசிரியை செய்து பார்க்க கொஞ்ச நேரம் ஒதுக்கிக் கொடுத்து, பின்னர் செய்தார்களாம். மிகவும் நன்றாகச் செய்ததாக ஆசிரியை கூறினார். ”அது மட்டுமில்லை, உங்கள் மகள் மிகவும் தைரியசாலிதான். வகுப்பிலே, என்னாலேயே கட்டுப்படுத்த முடியாத இரண்டு பையன்களை தனது நாடகத்துக்கு தெரிவு செய்து, அவர்களை நன்றாக நடிக்கவும் வைத்து விட்டாள்” என்று. மகிழ்ச்சியாக இருந்தது.

8 Comments

At December 16, 2009, அடலேறு wrote:

இந்த காலத்து சுட்டிகள் தான் எவ்வளவு விடயத்தை கற்றுக்கொள்கிறார்கள். ஆசிரியர் நிகழ்வு நெகிழ வைத்தது. மகளுக்கு வாழ்த்து சொன்னன்னு சொல்லுங்க :-)

At December 16, 2009, `மழை` ஷ்ரேயா wrote:

:O)

assignment - ஒப்படை

At December 16, 2009, கலை wrote:

//assignment – ஒப்படை//

நன்றி (நினைவு படுத்தியதற்கு) :)

At December 16, 2009, ரவி wrote:

மகள் கொடுத்து வைத்தவர். நாங்கள் படித்த பள்ளியில் முரட்டு ஆசிரியர் சிலர் சுவற்றோடு சாய்ந்து நிற்கச் சொல்லி பின்பக்கம் பிரம்புக் குச்சியால் அடித்தது நினைவுக்கு வருகிறது :)

ஆனால், நல்ல ஆசிரியர்களும் இருந்தார்கள். எங்கள் தமிழ் ஆசிரியை வலிக்காமல் விளையாட்டுக்கு அடிப்பார். அவர் அடிக்கிறேன் என்று சொன்னால் "என்னை முதலில் அடிங்க"ன்னு வரிசை கட்டி நிற்கும் அளவுக்கு அவர் மேல எங்களுக்குப் பாசம்.

பொதுவாக, என்னுடைய ஆளுமையை வளர்த்ததில் என் மேல் தனிக்கவனம் காட்டிய பல நல்லாசிரியர்களின் பங்கு இருக்கிறது.

At December 16, 2009, ரவி wrote:

assigment = ஒப்படை பொருத்தமாகத் தோன்றவில்லை. விக்சனரி குழுமத்தில் கேட்டுப் பாருங்களேன்.

At December 16, 2009, சயந்தன் wrote:

assignment (இதுக்கு தமிழ் என்ன)  //

ஒப்படை என்றுதான் நாங்களும் செய்தோம். இந்த assignment சமாசாரமெல்லாம் நமக்கு உயர்தரம் படிக்கும் போதுதான் அறிமுகமானது :) அடுத்த நாள் முடிவுத்திகதி - இரவோடு இரவாக இலங்கை போக்குவரத்து - சிக்கல்களும் தீர்வுகளும் என்றொரு ஒப்படையை - கற்பனையிலேயே மக்களை ஓட்டுனர்களை - பெரும் புள்ளிகளை எல்லாம் பேட்டியெடுத்து செய்து முடித்து அடுத்தநாள் ஒப்படைத்தேன். அதற்கு A வேறு போட்டார்கள் :)

At December 16, 2009, கலை wrote:

//கற்பனையிலேயே மக்களை ஓட்டுனர்களை – பெரும் புள்ளிகளை எல்லாம் பேட்டியெடுத்து செய்து முடித்து அடுத்தநாள் ஒப்படைத்தேன்.//

பரவாயில்லையே. கற்பனைதான் என்று ஆசிரியர்களுக்கும் தெரிந்திருக்குமோ. :)

At December 16, 2009, கலை wrote:

//ஆசிரியர் நிகழ்வு நெகிழ வைத்தது.// உண்மைதான். பொதுவாகவே இங்குள்ள சில அல்லது பல ஆசிரியர்களிடம், குழந்தைகளுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நாம் கற்றுக் கொள்ளலாம். மகள் இங்கே பாலர் பாடசாலைக்கு (Kindergarten) போன பொழுதில், அங்கு ஒரு ஆசிரியை (அதுவும் அந்த முழுத் தொகுதிக்கும் பொறுப்பானவர்), மகளைத் தன் வழிக்கு கொண்டு வர முடியாமல், தான் மகளின் வழிக்கு மாறி விட்டதைக் கூறியதும், அதன் பின்னர் மகளும் அந்த ஆசிரியையும் நல்ல சினேகிதர்களாக இருந்ததும் நினைவில் வருகிறது. அது ஒரு பெரிய கதை. அட ஒரு பதிவாவே போடலாம் :)

Related posts

No related posts.

என் குட்டித் தேவதையின் நாடு!
“அம்மா! நான் எனக்கு ஒரு country வைச்சிருக்கிறன்” என்று மகள் வந்து என்னிடம் சொன்னபோது, எனக்கு சரியாகப் புரியவில்லை. பிறகு ‘என்ன அது’ என்று விளக்கமாக கேட்டபிறகு புரிந்தது. அவள் தனக்கு பிடித்தமான வகையில் ஒரு நாட்டை கற்பனையில் உருவாக்கி வைத்திருக்கிறாள்.

அந்த நாடு ஒரு மழைத்துளி வடிவமாம். அழகாத்தான் இருக்கும். நாங்க இலங்கையை மாங்காய் வடிவம் என்று படித்தது நினைவுக்கு வந்தது. அதன் பெயர் ”தாய் மிலோ கனாய் ரோ’ (Thai Milo Canai Ro) வாம். ”என்னம்மா இப்படி ஒரு வாயில நுழையாத பெயராக்கிடக்கு? என்று நான் கேட்டேன். “அது Chinese மாதிரி ஒரு language. ஆனா Chinese இல்லை. அதான் அப்பிடிப் பேர்” என்று பதில் கிடைத்தது. அட, ஏதோ புரியாத மொழியில் (அவளுக்குமே தெரியாத மொழிதான்,   ) அந்த நாட்டின் பெயரை எழுதி வேறு காட்டினாள். ஏதோ கோடுகோடா எழுதினாள். (இந்த இடுகையை எழுதிக் கொண்டிருந்தபோது, திடீரெனத் தோன்றியதால், அந்தப் பெயரை கூகிளின் மொழி மாற்றியில் போட்டுப் பார்த்தேன். இப்படி வந்திருக்கு 泰国米洛煎饼滚装 .   யாராவது சீனமொழி தெரிந்தவர்கள் இதற்கு என்ன அர்த்தம் என்று சொல்லிட்டுப் போங்கப்பா).

மகள், அவளுடைய மாமாக்கும் தன்னுடைய நாட்டைப் பற்றி சொல்லியிருந்தாள். மாமா அவளுக்கு அனுப்பின வாழ்த்து அட்டையின் உறையில The Little Princess, Thai milo kanai ro என்று எழுதியிருந்தார். பார்த்து அவவுக்கு நல்ல மகிழ்ச்சி.

சரி, அவளுடைய அந்த நாட்டின் பெயருக்கு அவள் கொடுத்த ஆங்கிலப் பெயர் The Dragen City. நானும் Thai Milo Canai Ro என்ற பெயர் எதை குறிக்கும் என்று தேடிப் பார்த்தேன். வேறு என்ன வேலையில்லாத வேலைதான்  . Thai என்பதை தேடியபோது, அது முதலாவதா, ஆங்கில விக்கிப்பீடியாவில் தாய்லாந்து பற்றின கட்டுரையில் கொண்டுபோய் விட்டது. அங்கே இப்படி Thai க்கு விளக்கம் கொடுத்திருக்கு.

The word Thai (ไทย) is not, as commonly believed, derived from the word Tai (ไท) meaning “freedom” in the Thai language; it is, however, the name of an ethnic group from the central plains (the Thai people).[citation needed] A famous Thai scholar argued that Tai (ไท) simply means “people” or “human being” since his investigation shows that in some rural areas the word “Tai” was used instead of the usual Thai word “khon” (คน) for people.[13] The phrase “Land of the free” is derived from Thai pride in the fact that Thailand is the only country in Southeast Asia never colonized by a European power.

பரவாயில்லை, என்னமோ தேடிப் போய், இன்றைக்கு புதுசா ஒரு விசயம் தெரிந்து கொண்டன். தென்கிழக்காசிய நாடுகளிலேயே காலனியாதிக்கத்துக்கு உட்படாத ஒரே நாடு தாய்லாந்தாம். ‘Thai’ என்பது ‘சுதந்திரம்’ என்பதைக் குறிக்குமாக இருந்தால், மகள் தன்ரை நாட்டுக்கு மிகப் பொருத்தமாத்தான் பெயர் வைச்சிருக்கிறாள்  .

அடுத்து Milo க்கு அவள் சொன்ன உச்சரிப்பு ‘மிலோ’. ஆனால் எனக்கு இதைப் பார்த்தால் நினைவு வருவது மைலோ. Chocolate கலந்த பால் மா. இலங்கையில இருக்கேக்கை அது குடிச்சிருக்கிறன். அதை தேடினால், அதுவும் அந்த பானம்பற்றி சொல்கிறது. மகளும் தன்னுடைய நாட்டு chocolate பற்றி சொல்லியிருக்கிறாள். அது பிறகு சொல்லுறன்.

அடுத்தது, Canai என்னெண்டு தேடினால், சிங்கப்பூர், மலேசியாவின் ஒரு வகை ரொட்டி உணவாம். அடுத்தது Ro வைத் தேடினால் என்னவோ முக்கியமில்லாமல் வந்தது. அதனால அவளுடைய நாட்டை அவள் விபரிச்ச விதத்துக்கு இப்ப போவம்.

அடடா, நான் எழுதியதில் ஒரு பிழை விட்டிட்டேனாம். ம்ம்ம். தன்னுடைய நாடு எப்படி என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறாள்  . Thai milo kanai ro என்று எழுத வேண்டுமாம். எழுத்துப் பிழையில்லாம, சின்ன எழுத்து பெரிய எழுத்து வேறுபாட்டோட எழுத வேணுமாம்  . Kanai என்று தேடினால், Mika Kanai என்ற யப்பான் நாட்டு பாடகரைப் பற்றி வருகிறது.

அவளுடைய நாட்டுல Government என்று பெரிதாக ஒன்றுமில்லையாம். ஏனெண்டால் ஆக்களெல்லாம் நல்ல சுதந்திரமா இருக்கினம். ரெண்டே ரெண்டு பேர்தானாம் Govt. ல ஒன்று அவள். இன்னொரு ஆளை இப்பதான் தேடிக் கொண்டு இருக்கிறாவாம். அங்க எல்லாம் எல்லாருக்கும் சொந்தமாம்.

எல்லா பழங்களும் ஒரே மரத்தில காய்க்குமாம். தனித்தனி மரமெல்லாம் இல்லையாம். அங்க Chocolate மாதிரி வெள்ளை நிறத்தில ஒரு உணவு இருக்காம். அது இனிப்பாக இருந்தாலும், அதிகம் உண்டால், உடலுக்கு தீங்கு தரக்கூடிய sugar இல்லையாம். அங்க பொதுவான இடங்களிலெல்லாம் மரக்கறி பயிரிட்டிருக்குமாம். யாரும் எங்கயிருந்தும் எடுத்துக் கொண்டு போகலாமாம். அதனால கடையில் மரக்கறி வாங்கத் தேவையில்லையாம். தனிய மீன், இறைச்சி வகைகள்தான் கடையில வாங்க வேணுமாம். அந்த நாட்டில அடிக்கடி Food festival நடக்குமாம்.

அங்க மின்சாரம் எடுக்க solar energy, geothermal energy, windmill, biomass தான் பாவிக்கிறாங்களாம். மோட்டார் வண்டிகளில எல்லாம் solar panels பூட்டி இருக்குமாம். அதுல இருந்து எடுக்கிற சக்தியிலதான் வண்டிகள் ஓட்டப்படுமாம்.

அங்க மரமெல்லாம் வெட்ட சட்டம் அனுமதிக்காதாம். அதால ஒருவரும் வெட்டுறதில்லையாம்.

நாட்டு தேசிய உடையை என்னவோ நிறைய சொல்லி விபரித்தாள். அது கொஞ்சம் யப்பான் உடையும், கொஞ்சம் இலங்கை உடையும் கலந்து இருக்குமாம்.

நாட்டின் காலநிலை, இலங்கையில் மாதிரி நிறையநாள் சூரியன் வருமாம். சில நாட்கள் மட்டும் மழை பெய்யுமாம். சில இடங்களில snow உம் இருக்குமாம். அப்பதானே snow விளையாட்டுகளும் விளையாடலாம்.

Currency பற்றியும் நிறைய விளக்கம் கொடுத்தாள். அந்த currency க்குப் பெயர்… (ம்ம்ம், இப்ப மறந்து போனன், பிறகு கேட்டு எழுதுறன்).

இப்படி இன்னும் என்னென்னவோ இரசிக்கும்படியான விசயங்கள் எல்லாம் நடக்குது அவளின்ரை நாட்டில.

நல்ல நாடுதான், இல்லையா?

10 Comments

At December 16, 2009, kavitha wrote:

ungal kutti devathaiyin naadu migavum alagu

knjm recomment pannunga

engalukkum konjam idam koddukka solli

At December 16, 2009, kavitha wrote:

alaguuuuuuuuuuuuuuuuu

At December 16, 2009, kavitha wrote:

knjm recommend pannunga

engalukkum konjam idam kodukka solli

ungal kutti devathaiyidam

At December 16, 2009, திரு wrote:

泰国米洛煎饼滚装 = Thailand Milo pancake Ro-Ro (source: google translator) :)

குழந்தைகளின் கற்பனைகளில் தான் எவ்வளவு சமத்துவமும், இயற்கை பேணலும்.  குழந்தைகளால் மட்டுமே இத்தகைய உலகை உருவாக்க முடிகிறது. ஆனாலும்  வாசிப்பு, கேள்வி, அனுபவ அறிவுகளின் பாதிப்பு குழந்தைகளின் கற்பனைகளிலும் இருக்கிறது.

மகளின் கற்பனை வளம் அருமை. குழந்தைகளிடமிருந்து அறிய நிறையவே இருக்கிறது.

At December 16, 2009, sandanamullai wrote:

மிகவும் அருமையான கற்பனை!

மகளின் கற்பனைத்திரண் வியக்க வைக்கிறது! வாழ்த்துகள்!!

At December 16, 2009, அடலேறு wrote:

குழந்தைகளின் உலகம் தான் எவ்வளவு அழகானது.

At December 16, 2009, `மழை` ஷ்ரேயா wrote:

அந்த நாட்டில குடியேற என்ன செய்ய வேணும்? :O)

At December 16, 2009, கலை wrote:

ஆம், உண்மைதான், குழந்தைகளின் உலகம் மிக மிக அழகானது. அதை மீண்டும் அடைய முடியாதா என்ற ஏக்கம் எப்போதும் என்னிடம் இருக்கிறது.

//அந்த நாட்டில குடியேற என்ன செய்ய வேணும்? :O)//

கொஞ்சம் பொறுங்கோ, மகளிட்டை கேட்டுச் சொல்லுறன். ஏனெண்டா, அவள்தான் அங்க Govt. ல இருக்கிற ஒரே ஆள் :)

At December 16, 2009, ரவி wrote:

//எல்லா பழங்களும் ஒரே மரத்தில காய்க்குமாம். தனித்தனி மரமெல்லாம் இல்லையாம்.//

இந்த மாதிரி யோசனை எல்லாம் ஏன் நமக்கு வர மாட்டேன்குது? உண்மையிலேயே பெரியவர்கள் கற்பனை வறண்டு போனவர்கள் தான்.

ஆனா, எனக்கு இப்ப ஒன்னு தோணுது.

அவங்கட நாட்டில் ஒரே ஒரு இறுவட்டு வாங்கினா உலகின் எல்லா படம் காட்டுற மாதிரி, ஒரே ஒரு புத்தகம் வாங்கினா உலகின் எல்லா இலக்கியங்களும் படிக்கிற மாதிரி வசதி உண்டா :)

//அங்க பொதுவான இடங்களிலெல்லாம் மரக்கறி பயிரிட்டிருக்குமாம். யாரும் எங்கயிருந்தும் எடுத்துக் கொண்டு போகலாமாம். அதனால கடையில் மரக்கறி வாங்கத் தேவையில்லையாம்.//

இப்பவும் உலகின் பழங்குடிப் பகுதிகளில் இப்படித்தான்.  நகர நாகரிகம் தான் சமத்துவத்தைக் குலைத்து விட்டது.

At December 19, 2009, Karitha shalee wrote:

Really Nice, Dream of your girl will come true.

Related posts

No related posts.

குட்டி இளவரசன்!
‘The Little Prince’ புத்தகம் வாசித்தேன். மீண்டும் நிறைய வாசிக்க ஆரம்பிக்க வேணும் என்று சொல்லிவிட்டு, சும்மா இருக்காம, நான் வாசிக்கத் தொடங்கினதே பெரிய விசயம். கதை என்னவோ சிறுவர்களுக்கான கதை போல இருந்தாலும், மிகப் பெரிய விசயங்கள் எல்லாம் சொல்லப்பட்டிருப்பதாகவே தோன்றுகின்றது. பெரிய விசயங்களை மிகவும் எளிமையாக சொல்லியிருக்கு. சின்ன சின்னதாய் வரையப்பட்ட படங்களுடன் கதை அழகாக பயணிக்கிறது.

The little Prince கதையில, கதையைச் சொல்பவர், தான் 6 வயதில் ஒரு படம் வரைந்ததாகவும், அந்தப் படம் பெரியவர்களுக்குப் புரியவில்லை என்றும் சொல்லிவிட்டு, பெரியவர்களுக்கு எதுவும் இலகுவாக புரியாதென்றும், அவர்களுக்குப் புரியுற மாதிரி எதையும் செய்யுறது இலகுவான காரியமில்லை என்றும் சொல்கிறார். பெரியவர்களுக்கு புரிய வைக்கிறதென்றால், பெரிய விளக்கங்கள் எல்லாம் கொடுக்க வேணுமாம்  . மகள் சில விசயங்களை எனக்கு சொல்ல முயற்சித்துவிட்டு, “என்ன நான் சொல்லுறது உங்களுக்கு விளங்கேல்லையா” என்று பொறுமையிழந்து கேட்பதுதான் எனக்கு நினைவில் வந்தது.

ஆறு வயதில தான் வரைந்த படத்தை ஒருவரும் பொருட்படுத்தாமல் விட்டதால, தான் பெரிய ஒரு ஓவியராக வரும் ஆசையை, தனக்கு மிகப் பிடித்த தொழிலை தான் துறந்துவிட்டதாகக் குறிப்பிடுகிறார். பிறகு பெரியவர்களுக்குப் பிடித்த மாதிரி நான் ஒரு விமான ஓட்டியாக ஆகிவிட்டேன் என்கிறார். இந்த இடத்தில மகள் முதன் முதலில் வரைந்த படத்தை மிகவும் கவனமாக வைத்திருந்து, இப்போது 8 ஆண்டுகளுக்குப் பிறகு, அவளுடைய பாடசாலை வேலைக்காக, ‘Time line of my life’ செய்வதற்கு கொடுத்தது மகிழ்ச்சியாக இருந்தது. அதற்கு முதலும் வரைந்திருந்தாலும் (அல்லது கிறுக்கியிருந்தாலும்), இன்னதுதான் என்று சொல்லி வரைந்த முதல் படங்கள் இவைதான்.

இது ஒரு மரமாம்.

இது ஒரு பெண்மணியின் முகமாம்.

அது மட்டுமில்லை, The Little Prince கதையில அவர் மேலும் சொல்கிறார், பெரியவர்களுக்கு எதையும் எண்களுடன் சேர்த்துத்தான் யோசிக்கத் தெரிகிறதாம். அதுக்கு ஒரு உதாரணமும் சொல்கிறார். ஒரு புதிய நண்பனைப் பற்றி பெரியவர்களிடம் சொன்னால், “அவனது குரல் எப்படி இருக்கும்? அவனுக்கு என்ன விளையாட்டுகள் பிடிக்கும்? அவன் வண்ணத்துப் பூச்சிகள் சேகரிக்கிறானா?” என்றெல்லாம் கேட்பதை விடுத்து, “அவனுக்கு எத்தனை வயது? அவனுக்கு எத்தனை சகோதரர்கள்? அவனது அப்பா எவ்வளவு உழைக்கிறார்?” என்று ஏதாவது எண்களுடன் தொடர்பாகவே பேசிகிறார்களாம். பலர் பேசும்போது இதை உண்மையிலேயே இலகுவாக அவதானிக்க முடியும். வெறும் எண்களையே அவர்கள் மனம் சிந்திக்கிறது. அப்படி பலரும் பேசுவதுடன் நின்று விடாமல், எண்களை நோக்கியே தமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்கின்றார்கள். குழந்தைகள் உலகம் தனித்துவமானது. எத்தனை எளிமையானது. பெரியவர்களானதும் எப்படி நாமும் குழந்தைகளாக இருந்தோம் என்பது மறந்து போகிறது.

ஒருவர் எத்தனை பெரிய காரியத்தைச் செய்தாலும் சூழலுக்கேற்ற அவரது நடை, உடை, பாவனை முக்கியம் என்பதை, 1909 இல் B-612 என்ற சிறுகோளை கண்டுபிடித்த ஒரு துருக்கி வானியலாளரின் அறிக்கையை, அவர் துருக்கி ஆடையில் சென்று வெளியிட்டபோது முதலில் ஏற்றுக் கொள்ளாதவர்கள், பின்னர் நாகரீகமான உடையில் சென்று வெளியிட்டபோது, அதே அறிக்கையை ஏற்றுக் கொண்டார்கள் என்கிறார்.

கதையைச் சொல்பவர் விமான ஓட்டியாக இருக்கையில் ஒரு விபத்தில், யாருமற்ற ஒரு பாலைவனத்தில் தனியாக இருக்க வேண்டி வரும் சூழலில் கதை ஆரம்பிக்கிறது. அங்கே அவர் மிகச் சிறிய உருவத்தில் ஒரு குட்டி இளவரசனை சந்திப்பதாகவும், அந்தக் குட்டி இளவரசன் ஒரு குட்டியூண்டு கிரகத்தில் இருந்து வந்தவனாகவும், அந்த குட்டி இளவரசனும், கதை சொல்பவரும் சேர்ந்து செலவளிக்கும் நாட்களிலும், அந்த இளவரசன் சொல்லும் அனுபவங்களையும் வைத்தே கதையும் போகின்றது.

அந்த குட்டி இளவரசன் இவரிடம் ஆடு வரைந்து தரச் சொல்லிக் கேட்கிறார். முதலில் ஒவ்வொரு குறை சொல்லிய பின்னர், ஒரு பெட்டியை வரைந்து, அதனுள் ஆடு இருப்பதாகச் சொல்ல, அது இளவரசனுக்கு பிடித்துப் போவதுடன், புரியவும் செய்வது அவருக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. பெரியவர்களுக்குப் போல் விளக்கம் கொடுக்கத் தேவையில்லாமல் இருப்பதுவே காரணம்.

அந்த குட்டி இளவரசன் கேள்விகளுக்கு சரியாக பதில் கொடுக்காவிட்டாலும், அவன் கூறும் விசயங்களில் இருந்து விமான ஓட்டி சிறிது சிறிதாய் அவனது கோளைப் பற்றியும், அவனது வாழ்க்கை பற்றியும் புரிந்து கொள்கிறார். குட்டி இளவரசன் ஒரு பூவை தனது இடத்தில் வளர்த்து வந்ததையும், அதனை மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டதையும், ஆனால் அந்த பூ சொன்ன சில வார்த்தைகள் அவனது மனதை சிறிதாய் காயப்படுத்தியதையும் புரிந்து கொள்கிறார். ஆனாலும் அவர் வரைந்து கொடுக்கும் ஆடு ஒருவேளை தனது பூவை உணவாக எடுத்துக் கொள்ளுமோ என்று இளவரசன் பயப்படுகின்றான். அதனால் ஆட்டுக்கு வாய்க்கட்டு ஒன்றையும், அத்துடன் பூவைச் சுற்றி வேலியும் வரைவதன் மூலம் பூவை பாதுகாக்க உதவுவதாக விமான ஓட்டி இளவரசனுக்கு உறுதி அளிக்கிறார்.

அந்த குட்டி இளவரசன் பூமிக்கு வந்து இவரைச் சந்திக்க முன்னர் வெவ்வேறு கிரகங்களுக்குப் போய் வந்த அனுபவங்களில் பல்வேறுபட்ட மனிதர்களின் இயல்புகளை கதை காட்டுகின்றது.

முதலாவது கிரகத்தில், தன்னைத் தவிர வேறெவரும் இல்லாத கிரகத்தை ஆட்சி செய்ய நினைக்கும் ஒரு அரசன். அரசனின் கட்டளைகள் விசித்திரமானவை. ஒருவரால் எதை செய்ய முடியுமோ, அதை மட்டுமே கட்டளையாகப் பிறப்பிக்கும் அபூர்வ, புரிந்துணர்வுள்ள அரசன். இந்த குட்டி இளவரசன் எதை செய்ய விருப்பமில்லை என்றாலும், அதுபற்றிய தனது கட்டளையை மீளப் பெறும் அந்த அரசன், குட்டி இளவரசன் செய்ய விரும்புவதை மட்டுமே கட்டளையாக சொல்கிறான். அந்த அரசன் சொல்லும் முக்கியமான ஒரு விசயம் ‘எவருக்கும் இன்னொருவரை judge பண்ணுவதை விட தன்னைத்தானே judge பண்ணுவதுதான் மிகவும் கடினமானது. எப்போது ஒருவனால் தன்னைத்தானே சரியாக எடைபோட /சீர்தூக்கிப் பார்க்க முடிகிறதோ, அப்போதே அவன் ஒரு உண்மையான அறிவுள்ள/விவேகமுள்ள மனிதனாகிறான்’. ஆனால் அரசனுக்கு தனது அதிகாரத்தை மற்றவர்மேல் செலுத்துவதில் அத்தனை விருப்பம். சிலருக்கு தன்னுடைய அதிகாரத்துக்கு கீழ் மற்றவர் இருப்பதில் அத்தனை விருப்பம். ஏன் குடும்ப அமைப்புக்களிலும் இதை நாம் பார்க்க முடிகிறதே. வெறும் அதிகாரம் செலுத்த உரிமை கொடுத்தாலே அவர்கள் சமாதானமாகி இருப்பார்கள். அந்தக் குட்டி இளவரசன் அந்த கிரகத்திலிருந்து புறப்பட ஆயத்தமாகும்போது, அரசன் அவனைத் தடுக்கிறான். மறுக்கும் இளவரசனிடம் “உன்னை இந்தக் கிரகத்தின் Ambassador ஆக்குகிறேன் என்கிறான். குட்டி இளவரசன் நினைக்கிறான் ‘இந்த பெரியவர்களே விசித்திரமானவர்கள்தான்’.

அகம்பாவம் அல்லது போலித் தற்பெருமை கொண்ட ஒரு மனிதனை அடுத்த கிரகத்தில் இளவரசன் சந்திக்கிறான். தன்னைப்பற்றி மற்றவர் புகழ்பாடுவது தவிர வேறெதையும் கேட்க அவனுக்கு ஆர்வமில்லை. இதுக்கு உதாரணமாக தற்போதைய பல அரசியல் தலைவர்கள் மனதில் வந்து போனார்கள். அந்த தற்பெருமைக்காரனைப் பார்த்து இளவரசன் நினைக்கிறான் ‘பெரியவர்கள் நிச்சயமாய் விநோதமானவர்கள்தான்’.

அடுத்த கிரகத்தில் ஒரு குடிகாரன். அவன் ஏன் குடிக்கிறான் என்று கேட்டால், தான் குடிப்பதையிட்டு வருந்துவதாயும், அந்த கவலையை மறக்க குடிப்பதாயும் கூறுகிறான். சிலபேர் குடிப்பதற்காகவே தமக்கு கவலையை /காரணத்தை உருவாக்கிக் கொள்வதை கண்டிருக்கிறேன். ஊரில் வாழ்ந்த நேரத்தில் பக்கத்து வீட்டில் ஒரு குடிகாரன். தினமும் குடித்து விட்டு வந்து ஏதாவது ஒரு குறை கண்டு பிடித்து, மனைவிக்கு அடிப்பது. மனைவி தன் பெற்றோரிடம் போய் விட்டால், மறுநாள் அந்தக் கவலையில் குடிப்பதாகச் சொல்லி குடிப்பது. அல்லது தங்கைமாரிடம் ‘உங்களாலதான் அவள் போய்ட்டாள்’ என்று சொல்லி அடிப்பது. ‘சே என்ன மனிதன் இவன்’ என்று வெறுப்பாக இருக்கும். கவலையில் குடிக்கிறேன் என்பவர்களிடம் கேட்கத் தோன்றும், ‘குடித்த பின்னர் கவலையில்லாமல் இருக்கிறீர்களா’ என்று. குடித்துவிட்டு கவலையில் அரற்றிக் கொண்டுதானே இருக்கிறார்கள். அந்தக் கிரகத்தை விட்டு வெளியேறும்போது, இளவரசன் நினைக்கிறான் ‘பெரியவர்கள் சந்தேகமேயில்லாமல் மிக மிக விசித்திரமானவர்கள்தான்’.

அதற்கடுத்து குட்டி இளவரசன் செல்லும் கிரகத்தில் சந்திப்பது வணிகர் ஒருவரை. குட்டி இளவரசன் வந்ததைக் கூட நிமிர்ந்து பார்க்க நேரமில்லாமல், ஏதோ கணக்குப் போட்டுக் கொண்டே இருக்கிறார். அவர் நட்சத்திரங்கள் தனக்கு சொந்தமானவை என்றும் அவற்றை எந்நேரமும் எண்ணிக் கொண்டிருப்பதிலுமே பொழுதை கழிக்கிறார். குட்டி இளவரசனுடன் பேசக் கூட நேரமில்லாமல் நட்சத்திரம் எண்ணுகிறார். அவருக்கு சொந்தமான அந்த நட்சத்திரங்களை வைத்து அவர் என்ன செய்வார் என்றால் மேலும் நட்சத்திரங்கள் வாங்குவாராம். அவர் தனக்கு ‘முடிவுகளை அல்லது பலன்களைப் பற்றி (matters of consequence) மட்டுமே அக்கறை’ என்கிறார். பல பணம் சேர்க்க விரும்பும் பணக்காரர்கள் கதையும் இதுதானே? ஓடி ஓடி கோடிக்கணக்கில் சேர்க்கிறார்கள். பேசக் கூட நேரமில்லாமல் அப்படி சேர்ப்பதில்தான் என்ன பலன்? இளவரசன் அவரிடம் ”அதெப்படி நட்சத்திரங்கள் உனக்கு சொந்தமாகும்?” என்று கேட்பதற்கு அவர் கூறும் பதில் “யாருக்கும் சொந்தமில்லாத வைரத்தை நீ கண்டெடுத்தால், அது உனக்கு சொந்தமாகும். யாருக்கும் சொந்தமற்ற தீவை நீ கண்டு பிடித்தால் அது உனக்குச் சொந்தமாகும். எவருக்கும் வராத யோசனை உனக்கு வந்தால், அதற்கான உரிமை உனக்குத்தான். அதேபோல் நட்சத்திரங்களை உரிமையாக்கும் எண்ணம் எனக்கே முதலில் வந்ததால், நட்சத்திரங்கள் எனக்கே சொந்தமானவை’. எமக்கு பிடித்தவற்றை நமக்கே சொந்தமாக்கிக் கொள்ளவே விரும்புகிறோம். அங்கிருந்து புறப்படும் இளவரசன் தனக்குள் ‘பெரியவர்கள் மிக நிச்சயமாய் அசாதாரணமானவர்கள்தான்’ என்று நினைத்தபடி போகின்றான்.

இன்னொரு சிறுகோளில், கடமையே கண்ணாக இருக்கும் ஒரு விளக்குப் போட்டு அணைப்பவரை சந்திக்கிறான் குட்டி இளவரசன். ஆரம்பத்தில் அந்தக் கோள் மெதுவாகச் சுற்றியபோது இரவில் விளக்குப் போட்டு, காலையில் அணைத்துக் கொண்டிருந்த அவர், அந்தக் கோள் மிக விரைவாக சுற்ற ஆரம்பித்த பின்னர் தொடர்ந்து விளக்குப் போடுவதும், அணைப்பதுமாகவே இருக்கிறார். அந்த கோள் ஒரு நிமிடத்துக்கு ஒருமுறை முழுச்சுற்றை செய்வதால், அவருக்கு ஓய்வெடுக்கவே நேரமற்றுப் போகிறது. குட்டி இளவரசனுக்கு அவனே அபத்தமில்லாதவனாகத் தெரிகின்றான். காரணம் அவன் தன்னைப்பற்றி மட்டும் எண்ணாமல் வேறு விடயங்களுக்கும் முக்கியத்துவம் தருகின்றான். எனக்கும்தான் அவனை மிகவும் பிடித்துப் போனது  . குட்டி இளவரசனுக்கு அவனுடன் நட்பாகி அங்கேயே தங்கி விட விருப்பமிருந்தாலும், அந்த கோள் மிகச் சிறியதாக, இரண்டு பேருக்கு இடமற்று இருப்பதால், தனது பயணத்தை தொடர்கின்றான்.

அதற்கும் அடுத்த கிரகத்தில் அவன் சந்தித்தது ஒரு புவியியல் ஆராய்ச்சியாளர். அவர் தனக்கு நிறைய விடயங்கள் தெரியும் என்று நம்புகிறார். ஆனால் ஒரே இடத்தில் இருந்தபடியே எல்லாவற்றையும் செய்யப் பார்க்கிறார். மற்றவர்களின் உழைப்பில் தான் பெயரைப் பெற்றுச் செல்ல விரும்பும் மனிதர்களை நினைவு படுத்தினார். சில ஆராய்ச்சியாளர்களும் இப்படி இருக்கிறார்கள். தமக்கு கீழ் வரும் மாணவர்களின் உழைப்பில் தாம் பெயரைத் தட்டிச் செல்வார்கள்.  சில அமைப்புக்கள், நிறுவனங்களின் பெரிய பொறுப்பில் இருப்பவர்களும் தாம் எதையுமே செய்யாமல், கீழ் உள்ளவர்களின் உழைப்பை தமதாக பிரகடனப்படுத்திக் கொள்வார்கள். அந்த புவியியலாளரே குட்டி இளவரசனுக்கு பூமிக்குப் போகும்படி அறிவுரை சொல்கின்றார்.

இறுதியில் பூமிக்கு வரும் அந்தக் குட்டி இளவரசன் முதலில் ஒரு பாம்பை சந்திக்கிறான். பாம்பிடம் மனிதர்கள் எங்கே என்று விசாரிக்க, பாம்பு அது பாலைவனமென்றும், மக்கள் அங்கே இல்லை என்றும், பூமி மிகப் பெரியது என்றும் கூறுகின்றது. அதன் பின்னர் ஒரு பூக்கன்றை கண்டு ‘மனிதர்கள் எங்கே?’ என்று விசாரிக்கிறான். அதற்கு பூக்கன்று, மனித இனம் அழிந்துகொண்டு போகும் இனமாக கூறுகின்றது. ஒருவேளை எதிர்காலத்தை கற்பனையில் கண்டு எழுதியிருப்பாரோ? மனிதர்களுக்கு வேர்கள் இல்லாமையால், அவர்கள் காற்றோடு எடுத்துச் சொல்லப்படுவதாகவும், அதனால் அவர்களது வாழ்க்கை சிக்கல் நிறைந்ததாய் இருப்பதாகவும் அந்த பூக்கன்று சொல்கின்றது.

பின்னர் ஒரு மலையில் ஏறும் அந்தக் குட்டி இளவரசனுக்கு அவன் சொல்லும் வார்த்தைகளே எதிரொலியாக கேட்கின்றது. அப்போது அந்தக் குட்டி இளவரசன் ‘இந்தப் பூமி மிகவும் வரண்டதாகவும், அங்குள்ளவர்கள் கற்பனையற்றவர்களாகவும் இருக்கிறார்கள்’ என்று நினைத்துக் கொள்கின்றான். பிறகு நெடுந்தூரம் நடந்து சென்று, குட்டி இளவரசன் ஒரு பெரிய ரோசாப்பூத் தோட்டத்தை அடைகின்றான். அப்போது தன்னுடைய கிரகத்தில் தனியாகத் தான் விட்டு வந்த பூவை நினைக்கிறான். அந்தப் பூவோ தான் மட்டுமே இந்த முழு பிரபஞ்சத்திலும் இந்த வகையிலுள்ள ஒரே ஒரு பூ எனக் கூறியிருந்தது. அவனும் தன்னிடம் தனித்துவமான ஒரு ஒரு பொருள் இருப்பதாக பெருமை கொண்டிருந்ததையும், ஆனால் அது ஒரு பொதுவான ரோசாதான் என்றும் எண்ணிக் கொள்கின்றான். அதேவேளை அந்த ரோசாவை தனியே விட்டு வந்ததை எண்ணி கவலையும் கொள்கின்றான்.

அதன் பின்னர் அவன் சந்திக்கும் ஒரு நரி அவனுக்கு பெரிய தத்துவத்தையே சொல்லிக் கொடுக்கிறது. நரி அவனை, தன்னுடன் நட்பாகும்படியும், மனிதர்கள் எதையும் புரிந்து கொள்ளும் மனநிலையை இழந்து விட்டார்கள் என்றும், தயார் செய்யப்படும் பொருட்களை (ready-made) கடைகளில் வாங்குகின்றார்கள், ஆனால் நட்பை வாங்கும் கடைகள் இல்லாமையால் நட்பை மறந்து விட்டதாகவும் கூறுகின்றது. நட்பாவதற்கு எதையும் பேசாமல் இருப்பதே நல்லது என்றும், வார்த்தைகளே மனவேற்றுமைகளுக்கு காரணம் என்றும் அந்த நரி சொல்கின்றது. ஆனால் ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாய் அண்மித்து வருவதனால் நட்பாகலாம் என்று நரி சொல்வது போலவே, குட்டி இளவரசன் நரியுடன் நட்பாகின்றான். ஆனால் குட்டி இளவரசன் போக வேண்டிய நேரம் வரும்போது நரி நட்பை விட்டுப் பிரிவதை எண்ணி கவலை கொள்கின்றது. அப்போது, குட்டி இளவரசன் ”நான் உனக்கு எந்த கெடுதலும் செய்ய நினைக்கவில்லை. ஆனால், நீதான் என்னை நட்பு கொள்ளச் சொன்னாய்” என்று நரியிடம் சொல்கின்றான். நரியோ “ஆம், அது அப்படித்தான். நீ இப்போது அந்த ரோசாத் தோட்டத்துக்கு போய் வா” என்று சொல்கிறது. அங்கே போனபோதுதான் அவனுக்குப் புரிகிறது, ‘அங்கே ஆயிரக் கணக்கில் ரோசாக்கள் இருந்தாலும், அவனது ரோசா தனித்துவமானதுதான். காரணம் அந்த ரோசாமேல் அவன் கொண்டிருக்கும் பாசம். நரியிடம் நட்பு கொண்டதாலேயே, பார்க்கும் எல்லா நரிகளைப் போல அல்லாமல், குறிப்பிட்ட அந்த நரி தனித்துவமானது ஆகியதைப் போல’. அவன் மீண்டும் நரியிடம் வந்தபோது நரி ஒரு இரகசியத்தை சொல்வதாக சொல்கின்றது “இதயத்தால் மட்டுமே சரியாகப் பார்க்க முடியும். கண்களுக்கு முக்கியமானவை தெரியாது. மனிதர்கள் இந்த உண்மையை மறந்து விட்டார்கள். நீ உனது ரோசாவுக்காக செலவு செய்த நேரமே, அந்த ரோசா உனக்கு எவ்வளவு முக்கியமானது என்பதைச் சொல்லும். உனக்கு அந்த ரோசாவில் உள்ள அன்பினால், நீ அந்த ரோசாவுக்கு பொறுப்புள்ளவனாகின்றாய்”. நாங்கள் யார்மேல் உண்மையான அன்பைச் செலுத்துகிறோமோ, அவர்களே எங்களுக்கு மிகவும் முக்கியமானவர்களாகவும், தனித்தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

பின்னர் ஒரு தொடர்வண்டி நிலையத்தை அடையும் அந்தக் குட்டி இளவரசன், ஒரு தொடர்வண்டியில் ஏராளமான மனிதர்கள் போவதைக் கண்டு ”இவர்கள் எங்கே அவசரமாகப் போகின்றார்கள்?” என்று அங்கிருப்பவரிடம் கேட்க, அவர் ”அது யாருக்கும் தெரியாது” என்று சொல்கின்றார். பின்னர் மறு புறமிருந்து ஒரு தொடர் வண்டி வர, ”போனவர்கள் ஏன் திரும்பி வருகின்றார்கள்?” என்று கேட்க, ”இவர்கள் வேறு மனிதர்கள்” என்று பதில் கிடைக்கிறது. ”ஏனப்படி” என்றதற்கு, “அவர்கள் தாம் இருக்குமிடத்தில் திருப்தி அடைவதில்லை” என்கின்றார். ‘இக்கரை மாட்டுக்கு, அக்கரை பச்சை’  . அப்போது குட்டி இளவரசன் நினைக்கிறான், ‘குழந்தைகளுக்கு மட்டுமே தமக்கு என்ன வேண்டும் என்பது தெளிவாகத் தெரியும்’.

ஒரு வியாபாரி, தாகம் எடுப்பதைத் தவிர்க்க குழிகைகள் விற்பதைக் காண்கின்றான். ஏனிப்படி என்று கேட்டால், ”தாகம் தீர்க்க எடுக்கும் நேரத்தை மிச்சப்படுத்தி அந்த நேரத்தில் விரும்பியதைச் செய்யலாம்” என்று வியாபாரி சொல்கின்றார். அப்போது அந்த குட்டி இளவரசன் நினைக்கிறான், அப்படி தனக்கு அந்த நேரம் மிச்சப்படுமானால், ‘அந்த நேரத்தில் நன்னீர் கிடைக்கும் இடத்தை நோக்கி அமைதியாக நடந்து செல்லலாம்’ என்று. நாம் சில சமயம் (அல்லது பல சமயம்) நேரத்தை மிச்சம் பிடிப்பதற்கு ஏதேதோ செய்வோம். ஆனால் அந்த மிச்சம் பிடித்த நேரத்தில் உருப்படியாக எதையும் செய்வதில்லை.

இந்த அனுபவங்களைக் கேட்ட விமான ஓட்டி (கதையை சொல்ல ஆரம்பித்தவர்), குட்டி இளவரசனின் அனுபவங்கள் சுவாரசியமானவை என்கிறார். அந்த அனுபவங்கள் மூலம் நிறைய உண்மைகளை அந்த குட்டி இளவரசன் அவருக்குப் புரிய வைக்கிறான். சில சமயம் எல்லோரையும் ஒரே விதமாகப் பார்த்து, ஒரே விதமாக நட்புகொள்வது நல்லதுதான். இந்த கருத்து வந்த இடத்தை வாசித்தபோது என் செல்ல குட்டி மகள் ஒருநாள் என்னிடம் வந்து “அம்மா, ஒரு best friend இருக்கிறது நல்லதா? அல்லது எல்லாரோடயும் ஒரே மாதிரி friends ஆ இருக்கிறது நல்லதா?” என்று கேட்டது நினைவில் வந்தது. நான் அதற்கு பல விதமாய் யோசித்தேன். அதற்கு அவளே சொன்னாள் “நான் நினைக்கிறன் எல்லாரோடயும் friends ஆ ஒரே மாதிரி இருக்கிறதுதான் நல்லது. ஏனெண்டா நாங்கள் ஒராளோட மட்டும் best friend ஆ இருந்தால், அவ எங்கயாவது போய்டால், கவலையா இருக்கும்தானே?”. நல்ல ஆழமாத்தான் யோசிக்கிறாள் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் எல்லோரிடமும், எல்லாத்தையும் பகிர்ந்து கொள்ள முடியாதே? அதனால் இரண்டும்தான் சரியாகத் தெரிகிறது. என்னுடைய ஒரு நெருங்கிய தோழியை விட்டுப் பிரிந்து கவலைப்பட வேண்டி வந்த ஒரு தருணத்தில் நான் எடுத்த முடிவும் எனது மகளுடையதுதான் என்பதும் கூடவே நினைவு வந்தது. அதற்குப் பின்னர் எவருடனும் நெருங்கி அன்பு செலுத்துவதில்லை என்பதுதான் அந்த முடிவு. ஆனால் அதை என்னால் சரி வர செய்ய முடியவில்லை என்பதும் உண்மையே.

[சரி என்ரை கதையை விட்டுட்டு குட்டி இளவரசனின் கதையின் முடிவுக்கு வாறன்  .]

அந்தக் குட்டி இளவரசனை காண முடியாமல் போன ஒரு காலைப் பொழுதில் அந்த விமான ஓட்டி, அவன் தனது கோளுக்கு திரும்பிப் போய், தனது ரோசாவை கவனமாகப் பார்த்துக் கொள்வான் என்று நம்புவதாக கதையை முடிக்கிறார்.

Matters of importance must be given the priority over the matters of consequence.

எனக்கு கதை மிகவும் பிடித்தது. கதை இணையத்தில் கிடைக்கிறது. The Little Prince (pdf file) ஐத் தரவிறக்கிப் படித்துப் பாருங்களேன்!

நான் இந்தக் குட்டி இளவரசன் கதை வாசிக்க முன்னர் என் குட்டித் தேவதை தனது ”கற்பனை நாடு’ பற்றிய கதை ஒன்று சொன்னாள். அந்த அழகான நாடுபற்றி அடுத்த பதிவில்……

1 Comments

At December 16, 2009, ரவி wrote:

நானும் குட்டி இளவசரன் படித்த பிறகு குழந்தைகளின் உலகத்தை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால், கூடி வரும் ஊடக ஆக்கிரமிப்புகள் குழந்தைகளின் குழந்தைப் பருவத்தைச் சீக்கிரமே சாகடித்து விடுகின்றன :(

Related posts

No related posts.

அஞ்சலியின் இடுகையை மதிக்காத பதிவர் ஹேமா(சுவிஸ்)
’நான் ஒரு பதிவு பாத்தன்’! – ’இப்படியும் நடக்கிறது’

இப்படி ஒரு இடுகையை நான் எழுத வேண்டி வந்தது கவலையாக உள்ளது  . எழுதுவோமா வேண்டாமா என்று பல தடவை யோசித்தேன். ஆனாலும் எழுதத்தான் வேண்டும் என்று தோன்றியதால் எழுதுகிறேன்.

எனது இந்த இடுகையை வாசிக்க முன்னர் தயவு செய்து இங்கே இருக்கும் இணைப்புக்களை முதலில் பாருங்கள்.

அஞ்சலியின் ‘ஒரு குட்டித் தோட்டம்’ வலைப்பதிவில், March of the Penguins இடுகை (10.09.2006 எழுதியது).

உப்பு மடச்சந்தி என்ற வலைப்பதிவில் ‘நான் ஒரு படம் பாத்தன்’ இடுகை (23.11.2009 எழுதியது). இந்த இடுகை முதலில் பதிவு செய்யப்பட்டபோது அங்கே இறுதியில் சிவப்பு நிறத்தில் இருக்கும் வரிகள் இருக்கவில்லை. இடுகை ஒரு தடவை முழுமையாக அகற்றப்பட்டு, மீண்டும் பதிவு செய்யப்பட்டபொதே, அந்த வரிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டிருந்தன.

23.11.09 காலையில் நான் ஒரு இடுகை பாத்தன். அந்த இடுகையின் தலைப்பு ”நான் ஒரு படம் பாத்தன்”. எழுதியவர் ஹேமா(சுவிஸ்). எழுதியிருந்தது ’உப்பு மடச்சந்தி’ என்ற வலைப்பதிவில். அதில் ‘நானும், அப்பாவும், அம்மாவும் ஒரு பென்குயின் படம் பாத்தம். அது ஒரு நல்ல…’ என்று ஆரம்பித்திருந்தது. முதலில் ‘எங்கேயோ வாசித்த நினைவாயிருக்கே’ என்று தோன்றியது. பின்னர் அந்த இடுகையை திறந்து வாசிக்க ஆரம்பித்தபோது, அஞ்சலியின் இடுகைபோல இருக்கே என்று தோன்றியது. முழுமையாக வாசித்தபின் அஞ்சலியின் குறிப்பிட்ட அந்த இடுகையையும் எடுத்து வாசித்தபோது, அஞ்சலியின் இடுகையில் ஆங்கிலச் சொற்களையும், வேறு சில சொற்களையும் மட்டும் மாற்றி அந்த இடுகை உருவாக்கப்பட்டிருப்பது (மெருகேற்றியது   என்பது இதுதான்) புரிந்தது. முதலில் அஞ்சலியின் இடுகை பிடித்துப் போய் அதை இங்கே தனது இடுகையில் போட்டிருக்கிறார் என்றே நினைத்தேன். ஆனால் தேடிப் பார்த்ததில் அஞ்சலி பற்றி எந்த ஒரு வார்த்தையும் அங்கே இருக்கவில்லை. அதே வேளை அஞ்சலியின் இடுகைக்கு இணைப்பும் கொடுக்கப்படவில்லை. எனவே இப்படி செய்வது நியாயமல்லவே என்று தோன்றியது. அந்த இடுகையை வாசிக்கும் எவரும் அந்த இடுகை ஹேமாவினால் எழுதப்பட்டது என்றே நினைப்பார்கள். நான் பார்த்தபோது, அங்கே முதல் ஆறு பின்னூட்டங்கள் இருந்ததென நினைக்கிறேன். அதில் அழகாக எழுதியிருக்கிறீர்கள் என்று பாராட்டியிருந்தார்கள். அதற்கும் ஹேமா எந்த மறுப்பும் தெரிவித்திருக்கவில்லை. எனவே  உடனடியாக நேரமில்லாமையால், ஹேமாவிற்கு இதுபற்றி பின்னர் எழுத வேண்டுமென நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் சிறிது நேரத்தில் பதிவர் ரவி அங்கே ஒரு மறுமொழி போட்டிருந்தார். அந்த மறுமொழி பின்வருமாறு இருந்தது.

வணக்கம்,

இந்த இடுகை http://anjalisplace.blogspot.com/2006/09/march-of-penguins.html என்ற முகவரியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. தயவு செய்து இந்த இடுகையை நீக்குங்கள். அல்லது, மூல இடுகைக்கு இணைப்பு தாருங்கள்.

நன்றி.

ஆனால் அந்த மறுமொழி அங்கே வந்த கொஞ்ச நேரத்தின் பின்னர், ‘நான் ஒரு படம் பாத்தன்’ என்ற அந்த இடுகையே முழுமையாக நீக்கப்பட்டிருந்தது. அஞ்சலியின் இடுகைக்கு இணைப்பு கொடுக்காமல் தனது இடுகையையே முழுமையாக நீக்கியிருந்தார். அவரது அந்தச்செய்கை உறுத்தலாக இருந்தது. அவருக்கு அதுபற்றி தனிப்பட்ட முறையில் எழுத வேண்டுமென எண்ணி மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா எனப் பார்த்தேன் இருக்கவில்லை.

மேலும் பின்னர் அவருடைய வலைப்பதிவில் மட்டிறுத்தல் நடை முறைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. எனவே அன்றிரவே அவருக்கு ஒரு நீண்ட பதில் எழுதினேன். குறிப்பிட்ட அந்தப் பதிவு அகற்றப்பட்டிருந்தமையால், அவரது அதற்கு முந்தைய பதிவான ‘இப்படியும் நடக்கிறது’ (என்ன பொருத்தமான   தலைப்பு) என்ற பதிவில் எனது பதிலை இட்டேன்.

அதில் அந்த இடுகையின் உள்ளடக்கம் அஞ்சலியின் இடுகையிலிருந்து எடுக்கப்பட்டது என, அஞ்சலி என்ற பெயரைக் குறிப்பிட்டு, அஞ்சலியின் அந்த குறிப்பிட்ட இடுகைக்கான இணைய முகவரியையும் மீண்டும் கொடுத்திருந்தேன் (முதலில் ரவியும் கொடுத்திருந்தார்).

மறுநாள் (24.11.09) பார்த்தால், அதே ”நான் ஒரு படம் பாத்தன்” இடுகை மீண்டும் அங்கே இருந்தது. ஆனால், ரவியின் மறுமொழி அங்கே இல்லை. என்னுடைய மறுமொழியும் அடுத்த பதிவில் வரவில்லை. பதிலாக இடுகையின் இறுதியில் கீழ்வருமாறு இருந்தது. இது புதிதாக அவர் சேர்த்துக் கொண்டது.

”யாரோ ஒரு எங்கள் ஊர்க் குழந்தை எழுதியதாக இருக்கலாம் இது. கற்பனையாகவும் இருக்கலாம். எனக்கு மெயிலில் வந்தது. நான் என்னை அக்குழந்தையாக்கி அதை மெருகேற்றிக்கொண்டது இப்பதிவு.”

ஹேமாவுக்கு உண்மையில் வேறு யாரோ அஞ்சலியின் இடுகையை மின்னஞ்சலில் அனுப்பியதாகவே நம்பினாலும், மின்னஞ்சல் அனுப்பியவர் அஞ்சலியின் இடுகைக்குரிய இணைப்பை இவருக்கு கொடுக்கவில்லை என்றே எடுத்துக் கொண்டாலும், அதை முதலே தனது இடுகையில் அவர் குறிப்பிட்டிருக்கலாம். சரி, அதைத்தான் தவறுதலாகச் செய்யாமல் விட்டு விட்டார் என்றே வைத்துக் கொண்டாலும், ரவியும், நானும் மிகத் தெளிவாக அஞ்சலியின் இடுகையின் முகவரியும் கொடுத்து, அஞ்சலி என்ற பெயரையும் கொடுத்த பின்னரும் கூட, ”யாரோ ஒரு எங்கள் ஊர்க் குழந்தை எழுதியதாக இருக்கலாம் இது” என்றும், ”கற்பனையாகவும் இருக்கலாம்” (கற்பனை என்று எதைச் சொல்கிறார் என்று புரியவில்லை) என்றும் எழுதியது ஏன் எனப் புரியவில்லை.

பின்னர் சிறிது நேரத்தில் பார்த்தால் ஹேமாவின் மறுமொழி ஒன்று இவ்வாறு இருக்கிறது.

ஹேமா said…

இப்பதிவுக்கு அஞ்சலி என்கிற குழந்தையின் பதிவு என்று ஒருவர் அறியத் தந்திருக்கிறார்.நன்றியும் வாழ்த்தும். முடிந்தால் அஞ்சலியின் லிங்க் தர முயற்சிக்கிறேன்.

ரவியும், நானும் அந்த இணைப்பை கொடுத்த பின்னரும், ‘லிங்க் தர முயற்சிக்கிறேன்‘ என்று அவர் எழுதியிருப்பதைப் பார்த்தால் ‘இப்படியும் நடக்கிறது’ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது  . வேறென்ன சொல்ல?

இதையெல்லாம் பார்த்த பின்னரே எனக்கு அவர் மிகவும் நேர்மையின்மையுடன் நடந்து கொண்டதாய் தோன்றியது. அதுவே இப்பதிவை எழுதத் தூண்டியது. அவர் எங்களது பதில்களைப் பார்த்த பின்னராவது, அவற்றை மட்டிறுத்தியிருந்தாலும் கூட, பின்னர் புதிதாய் பதிவேற்றியபோது, அஞ்சலியின் இடுகைக்கு இணைப்பை கொடுத்திருக்கலாம். அப்படி செய்திருந்தால், அவரின் நேர்மையை எண்ணி இந்தப் பதிவை எழுதாமல் தவிர்த்திருப்பேன்.

ரவியுடன் இது விடயமாகத் தொடர்பு கொண்ட போது, தான் மறுமொழி போட்டபோது அங்கே மட்டிறுத்தல் இருக்கவில்லையென்றும், தான் பின்னூட்டங்களை மின்னஞ்சலில் பெற தெரிவு செய்திருந்தமையால், தனது மறுமொழிபற்றிய அறிவித்தல் தனது மின்னஞ்சலுக்கே வந்துள்ளதென்றும் கூறினார். எனவே அவரிடம் அவர் போட்ட மறுமொழிக்கான அத்தாட்சி உள்ளது. அந்த மின்னஞ்சலின் screenshot அனுப்பியிருந்தார். அதன்படி, ரவி ஏற்கனவே ஹேமாவுக்கு அஞ்சலியின் இடுகைக்கான இணைப்பு கொடுத்திருப்பது தெரிகிறது. நான் போட்ட மறுமொழிக்கு என்னிடம் அத்தாட்சி எதுவும் இல்லை.

ஒரு குழந்தையின் இடுகையில் மாற்றங்களைச் செய்து தனது வலைப்பதிவில் போட்டுவிட்டு, அதற்கு இணைப்பு கொடுக்கவும் தயங்குவது ஆச்சரியமாகவும், அவரது இந்த நேர்மையின்மை அயர்ச்சியாகவும் உள்ளது.

இப்படியுமா இருப்பார்கள்?

12 Comments

At November 26, 2009, ரவி wrote:

திருடராய் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. நாம் சுட்டிக்காட்டிய பின்னும் அங்கு மறுமொழிகளில் பாராட்டுகளை அனுமதித்துக் கொண்டு இருப்பது எரிச்சலாக இருக்கிறது.

நேற்று இரவு ஓய்வு பெற்ற வழக்கறிஞர் ஒருவர் என்னை அழைத்து, அவருடைய பதிவில் என் இடுகைகள் சிலவற்றை இட அனுமதி கேட்டார். இப்படியும் கூட சிலர் இருக்கிறார்கள்.

At November 26, 2009, Karthik Murugan wrote:

உங்கள் முயற்சிக்கு நன்றிகள். இந்த மாதிரி காப்பியடித்த பதிவுகளை தொடுக்கும் போது rel="nofollow" என்ற சேர்க்கவும். உங்களை அறியாமலே இப்பதிவுகளுக்கு SEO rank-ஐ கொடுக்குறீர்கள் :)

At November 26, 2009, ரகுநாதன் wrote:

அஞ்சலியின் பதிவை படித்தேன். அது ஒரு படித்  தேன்! :)

ரவி அதில் பின்னூட்டம் போட  முடியவில்லை . அதனால்தான் இதிலய போட்டன்.

குழந்தை  எழுதுவதை பாராட்டாமல், திருடி தன்னுடயை பதிவு போல காட்டிக் கொண்ட அந்த பதிவரை என்ன சொல்லித் திட்டுவது....

At November 26, 2009, கௌபாய்மது wrote:

உண்மையில் இவ்வாறான செய்யகைகள் எனக்குக் கவலையையே தோற்றுவிக்கிறது. தொடர்ந்த ஓரிரு நாள் பாராட்டுக்களுக்காக கேவலம் இவ்வாறான களவுகள். வேறெப்படி இதைச் சொல்வது நீங்கள் சுட்டிக்காட்டியபிறகும் பாராட்டு வெறிக்காக இப்படி நடப்பது.

ம்ம்ம்.. நிச்சயமாக ஹேமா அமைதியாக இருக்கமுடியாது...

At November 26, 2009, கலை wrote:

மறுமொழிகளுக்கு நன்றி.

கார்த்திக்! நீங்கள் குறிப்பிட்ட மாற்றம் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது.

ரகுநாதன், கெளபாய்மது! ஹேமா அஞ்சலியின் அந்தப் பதிவிலிருந்துதான் எடுத்தாரா, அல்லது  அவர் சொல்லியிருப்பதுபோல், யாராவது மின்னஞ்சலில் அனுப்பினார்களா என்பது தெரியாது. மின்னஞ்சலில் அனுப்புகிறவர் அஞ்சலியின் இடுகைக்கான இணைப்பை கொடுக்கவில்லை என்பதும் சந்தேகமானதே. ஆனாலும், குறிப்பிட்ட இணைப்பு அவருக்கு ரவியாலும் என்னாலும் கொடுக்கப்பட்ட பின்னரும், அது தனக்கு தெரியாது என்பதுபோல் எழுதியதும், தொடர்ந்து வரும் பாராட்டுக்களை தனக்கானதுமாக ஏற்றுக் கொள்வதுமே எனக்கு மிகவும் உறுத்தலாக இருந்தது. அதனாலேயே இந்தப் பதிவு.

At November 26, 2009, கண்மணி wrote:

ம்ம் என்னத்தைச் சொல்ல?இப்படியும் உண்டு மனிதர்கள்

At November 26, 2009, திரு wrote:

நானும் அவரது 'இப்படியும் நடக்கிறது' பதிவில் 24ம் தேதி ஒரு பின்னூட்டம் போட்டிருந்தேன். அது வெளியிடப்படாமல் இருக்கிறது. அதற்கு பிறகு மீண்டும் அந்த பதிவுக்கு ஒரு குறிப்புடன் உயிரூட்டி, பல பின்னூட்டங்களும் வந்துள்ளன. அதனால் அவர் அறிந்தே இதை செய்வதாகவே கருதுகிறேன். வெளியிடப்படாத எனது பின்னூட்டம்...

//கடன் வாங்கின காசு வராததுக்கு கோபப்படும் நீங்க, ஒரு குழந்தை எழுதிய பதிவை உங்க பெயரில் போட்டது மட்டும் சரியா? சம்பந்தப்பட்டவங்க சுட்டிக்காட்டியதும் கமுக்கமா பதிவையே எடுத்திட்டீங்க. ஆனாலும் நீங்க செய்தது பெரும் தவறு. பிறரது படைப்புகளை பயன்படுத்தும் போது அவர்கள் பெயரோடு போடுவது தான் படைப்புரிமையை மதிக்கும் செயல். ஒரு வரியாக இருந்தாலும் அது பொருந்தும். சின்ன பிள்ளையின் பதிவை எடுத்து மாற்றங்கள் செய்து உங்க பெயரில் போட்டது எந்தவிதத்திலும் நியாயமில்லை.//

மீண்டும் மறுநாள் அவருக்கு எழுத நினைத்து, நான் போடாமல் விட்டது... இங்கேயே பதிவு செய்கிறேன்..

//ஹேமா,

இந்த பதிவு அஞ்சலியுடையது. மூலப்பிரதியை மாற்றி சில வார்த்தைகளை மட்டும் சொருக அஞ்சலியிடம் அனுமதி வாங்கினீர்களா? இது அஞ்சலியின் பதிவு என்று சுட்டி கொடுப்பதில் என்ன தயக்கம் உங்களுக்கு?

அஞ்சலியிடமிருந்து இந்த பதிவு எடுக்கப்பட்டுள்ளதை நேற்று (24 ம் தேதி) பின்னூட்டம் வழியாக தெரிவித்தும், அந்த பின்னூட்டத்தை நீங்கள் இதுவரையில் வெளியிடவில்லை. அது போகட்டும்.

ஆனால், ஒரு குழந்தையின் ஆக்கத்தை உங்கள் பெயருக்கு மாற்றுவது குற்றமில்லையா? அதை சுட்டிக்காட்டியதும் மீண்டும், மீண்டும் பூசி மொழுகுவது நீங்கள் அறிந்தே இந்த குற்றத்தை செய்வதை காட்டுகிறது.//

படைப்புரிமை விசயத்தில் தமிழர்கள் மிக மோசமானவர்களென்றே கருதுகிறேன். பதிப்பகங்கள், படைப்பாளிகள், ஊடகங்கள், தலைவர்கள், வலைப்பதிவாளர்கள் எவரும் இதற்கு விலக்காக இல்லை. அடுத்தவர் ஆக்கங்களை பயன்படுத்துகிற போது குறைந்தபட்சம் ஒரு தகவலை/நன்றியை தெரிவிக்கும் நேர்மையும் இருப்பதில்லை. வலைப்பதிவுகள் அதிகமான இக்காலத்தில் இவை மிக சாதாரணமாக நிகழ்கிறது.

At November 26, 2009, லோஷன் wrote:

ஈனத் தனமான செயல்.. இப்போது இது சர்வசாதாரணமாக மாறி வருகிறது..

மற்றவர் உழைப்பில் தாம் பெருமை தேடும் இந்த செயலை வெளிக்கொண்டுவர நாம் ஒன்று படவேண்டும்..

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்..

இனிமேலும் இந்த திருட்டுப் பதிவர்களின் பதிவுகளை நாம் அனைவரும் புறக்கணிக்க வேண்டும்.

At November 26, 2009, கௌபாய்மது wrote:

நான் அவவுக்கு இரண்டு பின்னூட்டங்கள் போட்டும் அவற்றை அனுமதிக்கவில்லை. என்ர அடுத்த பதிவில இதைப் பற்றி எழுதுவன். கீழ இருக்கிறதெல்லாம் அவவின்ர "இப்படியும் நடக்குமா" என்ற பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள். அப்படியே இங்கும் பொருந்துகின்றன்.

நிரம்ப கடுப்பாயிருக்கு கலை. இவ்வளவு குறிப்பிட்டும் கமுக்கமாய் இருக்கிறதை நினைக்க. :(

நையாண்டி நைனா said...

இது சில பேருக்கு பொழுது போக்கு...

16 November, 2009

S.A. நவாஸுதீன் said...

இப்படியுமா நடக்கிறது?

16 November, 2009

க.பாலாசி said...

அடக்கொடுமையே....பெண்களிலும் இப்படி இருக்கிறார்கள். நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கிறது.

நல்ல பாடம் உங்களுக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது என்றே எண்ணுகிறேன்.

16 November, 2009

கேசவன் .கு said...

உஷார்ர்ர்ர் .............. படுத்தியமைக்கு நன்றி!

16 November, 2009

16 November, 2009

அன்புடன் அருணா said...

16 November, 2009

தேவன் மாயம் said...

we have to be cautious!

16 November, 2009

சந்ரு said...

சிலர் இதனை ஒரு பிழைப்பாகவே வைத்திருக்கின்றனர் அவர்களை திருந்தினால்தான்.

16 November, 2009

டம்பி மேவீ said...

ரொம்ப கொடுமையல இருக்கு...... என்னை கூட நிறைய பேர் ஏமாற்றி இருக்கிறார்கள்...... .

16 November, 2009

டம்பி மேவீ said...

"திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் ; திருட்டை ஓழிக்க முடியாது" அன்றே பட்டு கோட்டை சொல்லிவிட்டார்

16 November, 2009

16 November, 2009

பிரியமுடன்...வசந்த் said...

ம்ம்..இப்படியும் சிலர்...

பொழுதுபோக்காய் செய்கிறார்களா?

இல்லை இதுவே தொழிலா?

நாமதான் ஜாக்கிரதையா இருக்கணும்

16 November, 2009

ber, 2009

16 November, 2009

தமிழ்ப்பறவை said...

எத்தனை பேரு இப்படிக் கிளம்பிருக்காங்கன்னு தெரியலையே.. இதுக்கு ஒரு முடிவே கிடையாதா...?

16 November, 2009

கவிக்கிழவன் said...

நான் இருவரிடம் ௨ இருவரும் நன்றாக உளைபவர்கள் என்ன பண்ண மறந்திடன்

16 November, 2009

இராகவன் நைஜிரியா said...

மிக அழகாக உங்களை மட்டுமல்ல, எல்லோரையும் ஏமாற்றி இருக்கின்றார்.

கொடுமை.. கொடுமை..

16 November, 2009

சின்ன அம்மிணி said...

நம்ம எவ்வளவு ஜாக்கிரதையா இருந்தாலும் இந்த மாதிரி ஒரு சிலர் ஏமாத்திடறாங்க.

16 November, 2009

16 November, 2009

கவிநயா said...

truth is stranger than fiction - என்பது திரும்பத் திரும்ப நிரூபிக்கப் படுகிறது. கவனமாய் இருங்கள்.

16 November, 2009

At November 27, 2009, கலை wrote:

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கண்மணி, திரு, லோஷன், கெளபாய்மது

At November 27, 2009, கலை wrote:

மது! நீங்கள் உப்பு மடச்சந்தி பதிவில் குறிப்பிட்ட இடுகையில் உங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்ததைப் பார்த்தேன். நன்றி.

அதற்கு ஹேமா கொடுத்திருந்த மறுமொழியையும் பார்த்தேன்.

ரவியின் மறுமொழியை அவர் பார்த்து விட்டு, உடனடியாக தனது இடுகையை அன்று நீக்கிவிட்டார். அந்த இடுகை அங்கே இல்லாத காரணத்தால், அன்றே, நான் வேறொரு இடுகையில் போய் எனது பதிலைப் போட வேண்டி வந்தது. நானும் அஞ்சலியின் பதிவுக்கான இணைப்பை அவருக்கு கொடுத்திருந்தேன். இத்தனைக்கும் பின்னர் ‘யாரோ ஒரு குழந்தை எழுதியது' என்ற குறிப்புடன் மீண்டும் அதையே பதிவு செய்தார். பதிவு செய்துவிட்டு, பின்னர் 'அஞ்சலி எழுதியது என்று யாரோ ஒருவர் அறியத் தந்திருக்கிறார்' என்கிறார். அந்த ஒருவர், அல்லது இருவர் :) அஞ்சலியின் பக்கத்துக்கான இணைப்பையும்தானே தந்தார்கள். அப்படியிருக்க, 'முடிந்தால் அஞ்சலியின் லிங்க் தர முயற்சிக்கிறேன்' என்றிருக்கிறார். இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? இதில் 'செய்யாத பிழைக்கு கிடைத்த அடி' என்று குறைப்படுகிறார். என்னத்தை சொல்ல. இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்வதைத் தவிர :)

At November 29, 2009, எம்.கே.முருகானந்தன் wrote:

திருட்டுப் பதிவு பற்றி வெளிப்படுத்தியதற்கு நன்றி.

Related posts

No related posts.