வயதும், அனுபவமும்!!

November 12, 2009

உண்மையிலேயே வயதுக்கும், அனுபவத்துக்கும் தொடர்பிருக்கா?
நம்மைவிட பெரியவர்களின் பார்வையில், ”அவருடைய (அல்லது என்னுடைய) வயதென்ன? அவருக்கிருக்கிற (அல்லது எனக்கிருக்கிற) அனுபவம், முதிர்ச்சி உனக்கிருக்கா?” என்ற வார்த்தைகளையும், நம்மைவிட சிறியவர்களின் பார்வையில்,  ”உங்களுக்கு என்னைவிட வயசும் அனுபவமும் அதிகம்தானே, நீங்கதான் சொல்ல வேணும்” என்ற வார்த்தைகளையும், வாழ்க்கையில் ஒரு முறையாவது ஒவ்வொருவரும் கேள்விப்பட்டிருப்போம், இல்லையா? அது உண்மைதானா என்பதில் இன்றைக்கு எனக்கு பலத்த சந்தேகம் வந்திருக்கு .
வயசென்னவோ எங்களைவிட மிகவும் அதிகமாக இருந்தாலும், அவர்கள் வாழ்க்கையில் நம்மைவிட அதிகமானவர்களை [...]

Read the full article →

வாசிப்பு!

November 6, 2009

எனது வாசிப்பு மிகவும் குறைந்து விட்டது. முன்பானால் ஒரு புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினால் கீழே வைக்க மாட்ட்டேன். இப்போதோ நாட்கணக்கு, வாரக்கணக்கு, மாதக் கணக்கு என்று ஆகிறது . நேரமின்மை, அதிகரித்துள்ள பொறுப்புகள் விரும்பியபடி வாசிக்க முடியாமல் செய்கிறது.
பள்ளிக் காலத்தில், இன்னதுதான் என்றில்லாமல், கிடைக்கும் எல்லாவற்றையும் வாசிப்பேன். ஒரு மாமா வீட்டுக்குப் போக மிகவும் விருப்பம். போனால் அங்கேயே சில நாட்கள் தங்கித்தான் வீட்டுக்குத் திரும்புவேன். காரணம் அவரிடம் அளவு கணக்கில்லாமல் புத்தகங்கள் இருப்பதுதான். அவற்றை [...]

Read the full article →

உங்கள் அம்மாவை எப்படி கையாளுவீர்கள்?

November 6, 2009

எப்போதோ எழுத ஆரம்பித்து பின்னர் draft இலேயே இருந்த இடுகை இன்று கண்ணில் பட்டது. அதை இங்கே பதிவேற்றுகிறேன்.
”இண்டைக்கு library க்கு போனீங்களா? என்ன புத்தகம் எடுத்து வந்தீங்க?” என்று மகளிடம் கேட்டேன். அவள் உடனே ஒரு வெட்கச் சிரிப்புடன், ”ஓம், போனனான், புத்தகம் எடுத்தனான். ஆனா உங்களுக்கு காட்டக் கூடாது.” என்றாள். ஆஆஆஆஆஆஆஆஅ, எனக்கு காட்டக் கூடாத அப்படி என்ன புத்தகத்தை மகள் எடுத்து வந்திருக்கிறாள் என்று ஆச்சரியப்ப்பட்டுப் போனேன்.”அதென்ன புத்தகம் எனக்கு காட்டக் கூடாதது? [...]

Read the full article →

குழந்தை வளர்ப்பு!

October 7, 2009

இன்றைக்கு குழந்தை வளர்ப்புபற்றி ஒரு பேச்சு வந்தது.
ஒவ்வொரு குழந்தையும் வளர வளர பிரச்சனை கூடிக் கொண்டே போவதாக ஒருவர் குறைப்பட்டார். உண்மையில் பிள்ளைகளால் பிரச்சனை என்பதை விட, நாமே அதை பிரச்சனையாக உருவாக்கிக் கொள்கிறோமோ என்றுதான் எனக்குத் தோன்றியது.
”நாமெல்லாம் இப்படியா இருந்தோம். அப்பா, அம்மா சொல்வதெல்லாம் கேட்டு அப்படியே இருக்கவில்லையா” என்றார். நாம் வாழ்ந்த காலம், இடம், சூழ்நிலை எல்லாவற்றையும், தற்போதைய காலம், சூழல், இடத்துடன் எப்படி ஒப்பிட்டுப் பேச முடிகிறது. எத்தனை வேறுபாடுகள் இருக்கும்போது, குழந்தைகளில் [...]

Read the full article →

பகிர்தல்!

September 23, 2009

என்னுடன் வேலை செய்யும் ஒரு பெண்மணிக்கு கவலை தரும் விடயங்கள் எதுவுமே கேட்கப் பிடிக்கவில்லை. எவருக்குமே கவலைப்பட பிடிக்காது, மகிழ்ச்சியாக இருக்கத்தான் பிடிக்கும். அது உண்மைதான் என்றாலும், இவரது நடவடிக்கை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது.
யாராவது அவருடைய சினேகிதிகள் வந்து கதைத்துக் கொண்டிருந்தாலும் சரி, அல்லது எங்களுக்கிடையில் ஏதாவது உரையாடல்கள் வந்தாலும் சரி, கவலை தரக் கூடிய விடயங்கள் வந்தால், உடனே ‘வேறு ஏதாவது மகிழ்ச்சியாக நாம் கதைக்கலாமே’ என்கின்றார்.
இன்று அவரது சினேகிதி ஒருவர் வந்து, அவருடைய பிரச்சனைபற்றி [...]

Read the full article →

பதிவெழுத வந்த கதை!

September 19, 2009

சினேகிதி தத்தக்க பித்தக்க வில என்னையும் (நானும் ஒராளெண்டு) பதிவெழுத வந்த கதையை எழுதக் கூப்பிட்டிருக்கிறா. நானும் நாளைக் கடத்திப்போட்டன். இனியும் எழுதாமல் விட்டால், கனடாவில இருந்து நோர்வேக்கு தடியோட வந்து நிண்டாலும் நிப்பா போல கிடக்கு. வாறதுக்கிடையில எழுத வேணும் எண்டு நானும் எழுதத் தொடங்கி விட்டன். முந்தி ஒருக்கால் மழை ஷ்ரேயா இப்படித்தான் ஒரு தொடர் விளையாட்டுக்கு கூப்பிட்டு, அந்த தொடர் விளையாட்டெல்லாம் முடிஞ்சு கன காலத்துக்குப் பிறகு நான் அந்தப் பதிவை எழுதினன். [...]

Read the full article →

பகிர்ந்துகொள்வதற்கு சில!

September 18, 2009

1. கனவு!
என் கடைசி கனவு. நம்ம வீட்டுக்கு பக்கத்துலயே ஒரு காடு. அந்தக் காட்டுக்கு வேலியெல்லாம் போட்டு, நம்ம வீட்டு காணியிலே இருந்து பிரிச்சு வைச்சிருக்காங்க. அந்த வேலியோரத்துல நின்னு, எனக்கு சிங்கம் bye எல்லாம் சொல்லி, tata எல்லாம் காட்டிட்டு போச்சு . என்னோட கனவுகளை நினைச்சால் எனக்கே சிரிப்பா இருக்கு. அது எப்படி எனக்குன்னு பாத்தி இப்படி கனவுகள் வருது??
மேலும் எனது கனவுகளைப் பார்க்க விரும்பினால்?  இன்றைய கனவு, வெறும் கனவா, எனது [...]

Read the full article →

இன்றைய கனவு!

September 8, 2009

வவுனியாவிலுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கான முகாம்களில் ஒன்றில் நானும் போய் இருக்க கனவு கண்டேன் . நான் அங்கே போனபொழுது, ஏற்கனவே அங்கே சில சினேகிதிகளும் இருந்தார்கள். கனவு முடிந்து விழித்தபோது, அந்த கடினமான சூழலை சில மணித்தியாலங்கள் அனுபவித்து விட்டு வந்ததான உணர்வு. கனவில் கண்ட எனக்கே இப்படி வேதனையாக இருக்குமென்றால், அதை உண்மையில் அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்களின் நிலையை நினைத்தால்……. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

Read the full article →

சுதந்திர உணர்வு!

August 21, 2009

ஒருநாள் எனது சினேகிதி ஒருத்தியிடமிருந்து ஒரு ஆச்சரியமான மின்னஞ்சல். எனக்கு மட்டுமல்லாமல், எம்மிருவரதும் பொது சினேகிதிகள் மற்றும் நால்வருக்கும் சேர்த்தே எழுதப்பட்டிருந்தது.
அதில் அவள் கேட்டிருந்தது, நாமெல்லோரும் கேரளாவுக்கு ஒரு பயணம் ஒழுங்கு செய்து போய் வரலாமா என்பதுதான். கேரளாவுக்கு பயணம் செய்வதில் எந்த ஆச்சரியமும் இல்லைத்தான். ஆனால் அவள் சொல்லியிருந்தது, குடும்பத்தை விட்டு விட்டு, தனியாக நாங்கள் சினேகிதிகள் மட்டும் போய் வர வேண்டும். திருமணம், குழந்தை, குடும்பம் என்று ஆன பிறகு, இப்படி தனியாக, அதுவும் [...]

Read the full article →

ஈழத்து முற்றத்தில் நானும்!

August 11, 2009

முற்றம் என்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு இடம். ஈழத்தில், எமது வீட்டு முற்றத்தை நினைக்கும்போது, எத்தனையோ இனிய நினைவுகள். அவற்றையெல்லாம் மீண்டும் எமது வாழ்வில் கொண்டு வர முடியுமா, முடியாமலே போய் விடுமா என்பதுதான் வருத்தம்.
முற்றத்து மாமரம், அதன் நிழலில் மதிய உணவுக்குப் பின்னரான ஓய்வெடுப்பு, முற்றத்தில் விளையாட்டு, இரவு நேரத்தில் முற்றத்தில் படுத்தபடி, வானத்து நட்சத்திரங்களை இரசித்தது, நிலா வெளிச்சத்தில் அமர்ந்து பேசிச் சிரித்தது, அதே வெளிச்சத்தில் விளையாடியது, இரவு உணவை அம்மாவின் [...]

Read the full article →