நான் வித்யா – லிவிங் ஸ்மைல்!

Posted On மார்ச் 24, 2010

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது சமூகம், நூல், ரசித்தவை

Comments Dropped 3 responses

லிவிங் ஸ்மைல் வித்யா எழுதிய ‘நான் சரவணன் வித்யா’ வாசித்தேன். வாசிக்கும்போது தோன்றியது.

எத்தனை விதமான வலிகள், வேதனைகள், இரணங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருந்தாலும், பல பிரச்சனைகள் பொதுவானவையாக இருப்பதால், அவை காட்சிப்படுத்தப்படும்போது நாம் அந்த வலியை உணரா விட்டாலும், அனுபவிக்காவிட்டாலும், புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் திருநங்கைகளின் வலிகளும் வேதனைகளும் அத்தனை தெளிவாக எழுதப்படவோ, பேசப்படவோ, காட்சிப்படுத்தப்படவோ இல்லையாதலால், பலரும் அதை புரிந்து கொள்வதில்லை. வலிகளை புரிந்து கொள்ளாமல், கேலி, கிண்டல்களால் மேலும் மேலும் காயப்படுத்துகிறார்கள். அவர்களையும் சரிவரப் புரிந்து கொள்ளும் காலம் வர வேண்டும்.

3 Responses to “நான் வித்யா – லிவிங் ஸ்மைல்!”

  1. sandanamullai

    உண்மைதான் கலை, அந்த புத்தகத்தினால் என் கண்ணோட்டமும் மாறிப் போனது. ரோடில் பார்த்தாலே ஒதுங்கி போவதும் அல்லது வித்தியாசமாக பார்ப்பதுமாக இருந்திருக்கிறேன். 😦

    கருத்து பகிர்வுக்கு நன்றி!

    Like

  2. கலை

    எனக்கும் திருநங்கைகள்பற்றி சரியான புரிந்துணர்வு இல்லாமல் இருந்தது. பின்னர் ஆனந்த விகடனில் பல வருடங்கள் முன்னால் வந்த திருநங்கைகள் தொடர்பான ஒரு கதை படிக்கக் கிடைத்தது. அதன்பின்னர் ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது.

    ‘நான் வித்யா’ வை ஒரு திருநங்கையே எழுதியிருக்கையில் அதற்கான பெறுமதியும், நிதர்சன நிலமைகளும் இன்னும் அதிகமாக புரிந்து கொள்ள முடிகிறது.

    Like

  3. kubendran

    sir i want to contact living smile vidya.pl send this news to her.my id; rkubend@gmail.com

    Like

பின்னூட்டமொன்றை இடுக