கிரேக்கம் 3 – அக்றோபோலிசு

Posted On பிப்ரவரி 4, 2024

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது uncategorized

Comments Dropped leave a response

Athens – Greece

ஏதன்சில் இரண்டாவது உயரமான (157 மீட்டர்) மலைப்பாறையான அக்கிறோபோலிசு (Acropolis of Athens) புராதன காலத்தில் குடியிருப்புகளைக் கொண்ட ஒரு விளிம்பு நகரமாக இருந்தது. மூன்று பக்கமும் இயற்கையாகவே பாறைகளாலான சுவர்களைக் கொண்டு அங்கு வசித்தவர்களுக்குப் பாதுகாப்பை வழங்கியது. தற்போதும் அந்தச் சுவர்களில் தெரியும் துளைகளும், சிறு குகைகளும் அங்கு வாழ்ந்தவர்களுக்குத் தேவையான நீரை இயற்கைவழி வழங்கியிருக்கிறது. (தற்போது நீரைக் காணோம் – due to global warming? 🤔)

பின்னர் கி.மு. 5 ஆம் நூற்றாண்டில், குடியிருப்புகள் அகற்றப்பட்டு வெண் பளிங்குக் கற்கள் கொண்டு கட்டடங்கள் கட்டப்பட்டன.

மலையில் ஏறிச் செல்லும்போது கிரேக்கத்தின் மிக முக்கிய பாகமான ஒலிவ் மரங்கள் நிறைந்திருந்தன. நமது வழிகாட்டி ஒலிவின் பயன்பாடுகளுக்கு நீண்டதொரு பட்டியலிட்டார். விறகாக மரம், வாசனைப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் இலைகள், உணவாக பழங்கள், பல பயன்பாட்டுடன் கூடிய ஒலிவ் எண்ணெய் என்று பல வகையில் பயன்படுத்தப்படுகிறது. உலகின் Extra Virgin Olive Oil உற்பத்தியில் முதலாம் இடத்தையும், Olive Oil உற்பத்தியில் மூன்றாவது இடத்தையும் கிரேக்கமே தக்க வைத்துள்ளது. ஒலிவ் எண்ணெய் சமையலிலும், விளக்குகள் எரிக்கவும் பயன்படுத்தப்படுவதுடன், ஒலிம்பிக் சுடர் ஏற்றும் விளக்கிலும் பயன்படுத்தப்படும்.

மலையில் ஏறிக்கொண்டு செல்லும்போது Herodeon என்று அழைக்கப்படும் (Odeon of Herodes Atticus) அரங்கத்தைப் பார்க்கலாம். இந்த அரங்கு உரோமர்கள் அங்கு இருந்த காலத்தில், கி.பி. 2 ஆம் நூற்றாண்டில், 5000 இருக்கைகள், சுவர்கள் என்று யாவும் பளிங்குக் கற்களைக் கொண்டு கட்டப்பட்டது. அடுத்து வந்த நூற்றாண்டில் போரினால் அழிக்கப்பட்டபோது, இந்தக் கட்டடம் கூரையையும் இழந்தது. அந்தக் காலத்தில் இசை நிகழ்வுகள் அங்கே நடத்தப்பட்டன. தற்போது விசேடமான விழாக்கள் திறந்த அரங்கில் நிகழ்த்தப்படுகிறது.

ஏதன்சின் அக்றோபோலிசில் இருக்கும் போர் அழிவின் எச்சங்கள்:

  1. நினைவுச்சின்ன நுழைவாயில் (Propylaia)
  2. அதீனா பெண் தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட பார்தினோன் தேவாலயம் (Parthenon)
  3. பெண் தெய்வம் அதீனாவுக்கும் நைக்கிற்குமான (Temple of Athena Nike) ஆலயம் (இவர்கள் பற்றி இன்னொரு பதிவில் விரிவாக)
  4. உள்ளே பழங்கால கலாச்சார நினைவுகளை எடுத்துக் காட்டும், அதீனாவுக்கும், இன்னொரு தெய்வமான எரெக்தியுசுவுக்குமாகக் கட்டப்பட்ட எரெக்தியோன் (Erechtheion) கட்டடம்

இவை பண்டைய கிரேக்கக் கட்டடக்கலையின் (Greek Architecture) சிறப்பை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. அங்குள்ள சிற்பங்களும் கிரேக்கக் கலையின் (Greek Art) உயர்வை எடுத்துக் காட்டுகிறது.

இங்குள்ள கட்டடங்கள் யாவும் பளிங்குக் கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளன. அந்தப் பளிங்குக் கற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்ட மலைகளையும் அங்கிருந்தே பார்க்க முடிந்தது.

ஏதன்சு நகரம் பூமி அதிர்ச்சிக்கு ஆட்படும் இடமாக இருந்தது. ஆனால் இங்கு ஏற்பட்ட அழிவுகள் எதுவும் இயற்கை அழிவினால் ஏற்படவில்லையாம். காரணம் அத்தகைய அதிர்ச்சிகளைத் தாங்குவதற்கேற்பவே கட்டடங்கள் அமைக்கப்பட்டதாம். பார்த்தினோன் கட்டடத்தின் தூண் நிரல்களும் படிக்கட்டு நிரல்களும் ஒரு சாய்வுடன் அமைக்கப்பட்டுள்ளன. தூண்களின் நடுவில் துளைகளைக் கொண்டிருப்பதனால், ஒரு நெகிழ்வுத் தன்மையை (இரும்பையும், ஈயத்தையும் கலந்து செய்தது போன்ற) அளிக்கிறது. நீள அகலங்கள், உயரங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள பிரிவுகள் என்று எல்லாம் ஒரு விகிதாசாரத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும், ஒன்றை ஒன்றால் வகுக்கும்போது, golden ratio, Phi (φ), அதாவது 1.618 கிடைப்பதாகவும் சொல்கிறார்கள். இக் கருத்துக்கு ஆதரவு அளிப்போர், ஆதரவு வழங்காதோர் என்று இரு தரப்பினர் உள்ளனர்.
(நேரம் போதாமல் இருந்தமையால் எங்களால் அளந்து பார்த்து உறுதிப்படுத்த முடியவில்லை 😜).

பழைய பார்த்தினோன் கட்டடம் ஒன்று இருந்ததாகவும், அது பேர்சியர்களினால் அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் பார்த்தினோன் தேவாலயம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் அதீனா பெண் தெய்வத்திற்கான அர்ப்பணிப்பாகக் கட்டப்பட்டது என்கின்றனர். பார்த்தினோன் தேவாலயத்தை 9 ஆண்டுகளில் கட்டி முடித்து, பின்னர் அலங்கார வேலைகளைச் செய்தார்கள். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளில் முற்றாக வேலைகள் நிறைவடைந்தன. இந்த கட்டுமானத்தில் உள் நாட்டவருடன் இணைந்து வெளிநாட்டவர்களும் (அடிமைகள் உட்பட) வேலை செய்ததாகவும், ஆனால் அனைவருக்கும் ஒரேயளவான சம்பளம் வழங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. வெளி நாட்டவர் தங்கியிருக்க அமைக்கப்பட்ட வீடுகளில், அவர்களது வழித் தோன்றல்கள் பல தலை முறைகளாக இன்றும் வாழ்ந்து வருகின்றனர். அந்த வீடுகள் அக்றோபோலிசிற்கு அருகில் வித்தியாசமான தோற்றத்தில் உள்ளன.

17 ஆம் நூற்றாண்டில் வெனிசியர்களால் இந்த இடம் அழிக்கப்பட்டது. அழிவடைந்த நிலையில் காணப்படும் பார்த்தினோன் ஆலயத்தில் நாங்கள் சென்றபோது திருத்த வேலைகள் நடந்து கொண்டிருந்தது. இங்கே விலங்குகளைக் காணிக்கையாகக் கொடுக்கும் வழக்கமும் இருந்தது.

இந்த மலையிலிருந்து பார்க்கும்போது, இத்தனை அழிவுகளை ஏற்படுத்திய பீரங்கிகளை எங்கிருந்து ஏவினார்களோ அந்த மலையான Philopappos hill (பீரங்கி பயன்படுத்தினார்களா, குண்டு(?) போட்டார்களா என்பதிலும் கருத்து முரண்பாடு உள்ளது), முதன் முதலில் ஜனநாயகக் கொள்கையைக் கூட்டம் போட்டு பரப்பத் தொடங்கிய இடமான Pnyx hill, தீர்ப்புகளை வழங்க கூட்டம் கூடிய Mars’ hill எல்லாவற்றையும் அக்றோபோலிசிருந்தே பார்க்க முடிந்தது. பின்னர் சுண்ணாம்புக் கல் பாறையாலான Mars’ hill இலும் ஏறி இறங்கினோம்.

மலையிலிருந்து இறங்கிச் செல்லும்போது, அக்றோபோலிசின் அடிவாரத்தில் Theatre of Dionysus அரங்கைப் பார்த்தோம். திறந்தவெளியில் அழிவடைந்த நிலையில் உள்ளது. மிகப் பிரபலமான, பழைய கிரேக்க கவிஞர்கள் இங்கே தமது முதல் நிகழ்ச்சியைச் செய்துள்ளார்கள்.

இந்தக் கட்டடங்களை மிக உயரமான மலையான லீகாபேத்துசில் (Mount Lycabettus) அமைக்காததற்கான காரணம், அது கூரான மலையாகவும், அதனால் உச்சியில் சிறிய இடத்தையே கொண்டிருப்பதுமாகும்.

ஏதன்சு நகரமெங்கும் (6 பெண்கள் கொண்ட குழுவாக) அலைந்து திரிந்த வேளையில், பல இடங்களில் இருந்து, பல கோணங்களில் இந்த அக்றோபோலிசு மலையைப் பார்க்க முடிந்தது.

கிரேக்கம் 1 – பயணம் ஆரம்பம்

Posted On ஜனவரி 21, 2024

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது uncategorized

Comments Dropped leave a response

கிரேக்கம் 1

சில மாதங்களுக்கு முன்னர் ஆறு பெண்கள் அடங்கிய குழுவொன்று கிரேக்க நாட்டுக்கு ஒரு சூறாவளிச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டது. அந்தக் குழுவில் அடியேனும் அடக்கம் 🤣.

ஒரு சனிக்கிழமை இரவு ஏதன்சு நகரம் சென்று இறங்கினோம்.

ஞாயிறு, திங்கள் இரு நாட்கள் hop in hop off bus இல் ஏறி, இறங்கி ஏதன்சு நகரை வலம் வந்து ஒரு அலசு அலசினோம். ஒரு ஆச்சரியம் என்னவென்றால், ஒரு நிறுவனத்திற்குரிய hop in hop off bus இல் ஏறப் போனபோது, இன்னொரு நிறுவனத்தினர் பயணச் சீட்டின் விலையைக் குறைத்து எங்களை ஏற்றினார்கள். பேரம் பேசி பயணச் சீட்டின் விலையைக் குறைக்கலாம். 😜

ஏதன்சு நகரம் இரு மருங்கிலும் எலுமிச்சை மரங்களைக் கொண்டு, சுத்தமான வீதிகளுடன் இருந்தது.

கிரேக்க நாகரீகத்தின் பல கோணங்களை இரசிக்க முடிந்தது.

மூன்றாம் நாள் Meteora என்ற, ஒரு அழகான இடத்திற்குப் போய் வந்ததில் முழு நாளைச் செலவழித்தோம்.

நான்காம் நாள் மீண்டும் ஏதன்சு நகரத்தினுள் சுற்றிவிட்டு திரும்பி வந்துவிட்டோம்.

பயணத்தின்போது வானில் பறக்கத் தொடங்கியபோது, இந்தத் தடவை பேர்கன் நகரின் மையப் பகுதியை முழுமையாகப் பார்த்தேன். படத்தில் ஓரளவுக்குப் பிடிக்க முடிந்ததைப் பகிர்கிறேன்.

பி.கு: கிரேக்க நாட்டில் எடுத்த படங்கள் தொடரப் போகிறது 😉

பழைய நினைவுகள்!

Posted On செப்ரெம்பர் 28, 2023

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது uncategorized

Comments Dropped leave a response

கேரதீவு – சங்குப்பிட்டி பாதை இப்போது இப்படி (படங்களில்) உள்ளது. பாதை எனப்படும ferry ஓடிய இடத்தில் இப்போது பாலம். சூரியத் தகடுகளால் ஆற்றல் பெற்று ஒளியூட்டம் பெறும் பாதை.

போர்க் காலத்தில் இதே பாதையில், துவிச்சக்கரவண்டியில் பல தடவைகள் பயணம் செய்து வேலை செய்த இடமான கிளிநொச்சி, வட்டக்கச்சி போயிருக்கிறோம். பொதுவாக இரவு நேரங்களில்தான் பயணம். பயணத்தின் இடையில் பூநகரியில், மரங்களின் கீழ் நிலத்தில் துணி விரித்துத் தூங்கியது, நீண்ட நேர துவிச்சக்கர வண்டிப் பயணத்தில் (பல மணித்தியாலங்கள்) கால் வலிக்கும் என்பதால் முதலிலேயே paracetamol போட்டுவிட்டு ஓடத் தொடங்குவது, மேலே சூடுகள் தொடங்கினால், துவிச்சக்கர வண்டியை ஒரு புறம் எறிந்துவிட்டு நடுப் பாதையிலேயே விழுந்து படுப்பது என்று பல நினைவுகள்.

இந்தப் பாதை மட்டுமா? கொம்படி, கிளாலி, ஆனையிறவு படைத்தளத்தை ஒட்டி ஊரியான் என்று எத்தனை பாதைகளூடான பயணங்கள் அவை.

ஊரியானூடான பயணங்கள் பரபரப்பானவை. மழைக் காலத்தில் தண்ணீர் இருக்கும் நேரங்களில் வள்ளத்தில் பயணம். தண்ணீர் இல்லாத நேரத்தில் அதே பாதையில் துவிச்சக்கர வண்டி மிதிப்போம். ஆனையிறவு படைத்தளத்திற்கு அண்மையாகச் செல்லும் பாதை என்பதால் ஆபத்தானதாகவும், சிலிர்ப்பூட்டுவதாகவும் இருந்ததுண்டு. வள்ளத்தால் இறங்கி சிறிது தூரம் புதை சேற்றில் நடக்கையில் கால் புதைந்து போவதும், பக்கத்தில் போகிறவர்கள் இழுத்தெடுக்கும் முயற்சியில், அவர்கள் கால்களும் புதைவதுமாக அல்லோல கல்லோலம். தண்ணீர் இல்லாக் காலத்தில் எதிர்க் காற்றில் துவிச்சக்கர வண்டியை மிதிக்க முடியாமல் கஷ்டப்பட்டு உளக்கி, முடியாமல் இறங்கி உருட்டுவது, உப்புக் காற்றின் தாக்கத்தால் நா வரண்டு, தலை சுற்றிப் போவது… இப்படி எத்தனை…

கிளிநொச்சியிலிருந்து வவுனியாவிற்கு துவிச்சக்கர வண்டிப் பயணம். ஏதோ ஒரு பாடசாலையில் தூங்கி, யாரோ ஒருவர் வீட்டில் தங்கி என்று பல ஞாபகங்கள். பூந்தோட்டத்தில் துவிச்சக்கர வண்டியை விட்டுவிட்டு, no-man zone வயல்களூடாக வவுனியாவுக்கு நடை. திரும்பி வரும்போது, அதே வயலில் crossfiring இல் மாட்டிக்கொண்டு, உயிர் தப்புவதற்காக விழுந்தெழும்பி ஓடிய ஓட்டம் எல்லாம் மறக்க முடியாத வடுக்கள்.

தற்கால மனிதன் – தொடர்

Posted On ஜூலை 1, 2023

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது uncategorized

Comments Dropped leave a response

தொடராக எழுதும் தற்கால மனிதனின் வரலாறு பலராலும் (சிறியவர்கள் + பெரியவர்கள்) வாசிக்கப்படுவதில் மகிழ்ச்சி. முகநூலில் பின்னூட்டங்கள் மூலமாகவும், WhatsApp செய்திகள் மூலமாகவும், தொலைபேசி உரையாடல்கள் வழியாகவும் கருத்துக்கள் தருபவர்களுக்கும், என்னை தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்துபவர்களுக்கும் மிகவும் நன்றி.

“புத்தகம் வாங்கி வைச்சிருக்கிறன். வாசிக்கேல்லை. உங்கடை தொடரை இப்போதைக்கு வாசிப்பம் எண்டு இருக்கிறன்” என்று ஒரு நண்பர் சொன்னார். இன்னொரு சிநேகிதி “நான் புத்தகம் வாங்கி வாசிக்கலாமா எண்டு யோசிச்சன். ஆனா பிறகு நீங்கள் சுருக்கமா எழுதுறதால, அதையே வாசிச்சாப் போதும்தானே” என்றாள்.

நான் நூலில் எனக்கு சுவாரசியமாக இருக்கும் விடயங்களை உள்ளடக்கி, சுருக்கமாகவே எழுதுகிறேன். ஒவ்வொருவருக்கும் அந்த நூலில் நான் தொட்டுச் செல்லாத பல விடயங்கள் சுவாரசியமாக இருக்கலாம். எனவே நூலை வாங்கி வாசிக்கப் பரிந்துரைக்கிறேன். தமிழிலும் ஒருவர் மொழிபெயர்த்து நூல் வெளி வந்துள்ளதாக அறிந்தேன்.

சிலர் தாங்கள் தொடர்ந்து வாசிப்பதாகத் தொலைபேசும்போது சொன்னார்கள். இவர்கள் இதையெல்லாம் வாசிப்பார்களா என்று நினைத்திராதவர்கள்கூட வாசிப்பது தொடர்ந்து எழுத  உந்துதலைத் தருகிறது. (இவர்கள் வாசிப்பார்கள் என்று எண்ணியிருக்க, அவர்கள் வாசிக்காமல் போகவும் கூடும் )

பதிவுகளில் படம் இருந்தால், கண்ணை இழுக்கும் என்று ஒரு இளையவர் சொன்னார்.

ஏன் ஒவ்வொரு பதிவுக்குமிடையில் நீண்ட இடைவெளி என்று ஒரு சிநேகிதி கேட்டா. என்ன செய்வது இந்த நேரப் பிரச்சனை பெரும் பிரச்சனையாக உள்ளது. 

சிலர் வாசித்துவிட்டு தொலைபேசியில் அழைத்து, புரியாதவற்றைக் கேட்டுச் சந்தேகம் தீர்த்துக் கொள்கிறார்கள். 

நமது இனம் எப்படியெல்லாம் வாழ்ந்தது என்ற வரலாற்றை அறிவது மிகவும் சுவாரசியமாகவே உள்ளது.

இந்தத் தொடரை எனது வலைப்பதிவில் சேகரித்து வருகிறேன். இப்படி இன்னும் ஏதாவது எழுதலாமே என்ற எண்ணத்தால், to have a proper blog, got my personal domain kalaiarasy.com 珞.

சில படங்கள்!

Posted On ஏப்ரல் 4, 2023

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது uncategorized

Comments Dropped leave a response

‘அயலி’ பார்த்தாச்சு. பின் பகுதியில் சில இடங்கள் யதார்த்தத்தை கொஞ்சம் மீறியதாகத் தோன்றினாலும், சொல்லப்பட வேண்டிய பல விடயங்கள் சொல்லப்பட்டுள்ளது 👌🏻.

எனக்கு ஒரு விடயம் புரிவதில்லை… 🤔. ஒரு பெண் தெய்வமாகவே இருந்தாலும் பெண்களின் பிரச்சனைகளை அந்தத் தெய்வம் புரிந்து கொள்வதில்லை என்று பெண்களே எப்படி நம்புகிறார்கள் அல்லது நம்ப வைக்கப்படுகிறார்கள்? இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் இன்னமும் சில விடயங்கள் நம்ப வைக்கப்படுவதுதான் ஆச்சரியம்.

அண்மையில் பார்த்த இரு படங்கள் மிகவும் பிடித்தது.

  1. செம்பி:
    கோவை சரளா நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் இருந்து விலகி, இங்கே வேறுபட்ட ஒரு உணர்வுபூர்வமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதில் நடிக்கும் குழந்தையும் கூட மிகை நடிப்பில்லாமல், இயல்பாக நடித்திருக்கிறாள். சில காட்சிகள் யதார்த்தத்திற்கு மீறியதாகத் தோன்றினும் படத்தின் கதையும், முடிவும் பிடித்தது. 🙂
  2. நண்பகல் நேரத்து மயக்கம்:
    மலையாளப் படம் என்று எண்ணிப் பார்க்கத் தொடங்கினாலும், தமிழ்ப் படம் என்று நினைக்க வைக்குமளவு தமிழ் வாசனை. மம்முட்டியினதும், சில பார்த்த முகங்களினதும், பல முகமறிந்திராத கதாபாத்திரங்களினதும் இயல்பான நடிப்புடன் படம் நகர்கிறது.
    நீண்ட கதை எதுவுமில்லை. ஒவ்வொரு பாத்திரத்தினதும் உணர்வுகளை இலகுவாகப் புரிந்து கொள்ள முடிந்தது.
    காதை அடைக்கும் பின்னணி இசை இல்லை, பதற வைக்கும் வன்முறை இல்லை.
    பின்னணியில் போகும் தமிழ்ப் பட வசனங்கள் சில இடங்களில் சத்தமாக இருப்பதால் காட்சியை மனம் முழுமையாக உள் வாங்க முடியாமல் செய்தது. அதே வேளை சில இடங்களில் சத்தம் மிகக் குறைவாக இருப்பதால் text மட்டும் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது. அதனால் இரண்டு தடவை படம் பார்த்தேன் 😀.

படத்தின் முடிவில் எல்லோரும் நடந்து பேருந்தை நோக்கிப் போகிறார்கள். அடுத்த காட்சியில் பேருந்து புறப்பட முன் மம்முட்டி மட்டுமே விளித்திருக்க மற்ற அனைவரும் தூக்கத்தில். அப்படியானால், அனைத்துமே மம்முட்டியின் ஒரு நண்பகல் மயக்கத்தில், அல்லது கனவில் நடந்ததுதானா? 🤔

எப்படியோ… கதையில் யதார்த்தம் உண்டா என்று ஆராயாமல் பார்த்தால், அங்கு வரும் மனிதர்களின் உணர்வுகளுடன் ஒன்றிப் போக முடிகிறது.

Artificial Intelligence’s poem on Sapiens!

Posted On ஏப்ரல் 3, 2023

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது uncategorized

Comments Dropped leave a response

What a positive view that the AI has 👏🏻

I asked chatGPT to give a poem on Sapiens!
(My request originated by the influence of the book I’m reading 😜)

ChatGPT’s poem below:

Sapiens, wise beyond measure
Our minds so vast, so full of pleasure
We walk upright, we use our hands
To build great things across the lands

Our language skills are honed and sharp
We communicate from heart to heart
Our thoughts and dreams are deep and grand
As we explore this wondrous land

From ancient times to modern day
We’ve carved our path along the way
We’ve made our mark on history
Advancing with each mystery

Sapiens, we’ve come so far
Our future bright just like a star
With knowledge, hope, and empathy
We’ll build a better world, you’ll see.

ஒரு நல்ல மனிதரை இழந்தோம்!

Posted On ஜூன் 21, 2020

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது uncategorized

Comments Dropped leave a response

இந்தப் பழைய பதிவை என்னுடன் பகிர்ந்தமைக்கு முதலில் நன்றி ஜெயகுமார்!

https://m.facebook.com/story.php?story_fbid=1530599960289175&id=100000175560903

அருமையான, இனிமையான, அன்பான இரவீந்திரநாத் sir ஐப் பற்றியும், அவரது குடும்பம் பற்றியதுமான நினைவுகளை உங்கள் பதிவு மீண்டும் கிளறிச் சென்றுள்ளது.

பேராதனையிலிருந்து வேலைக்காக கிழக்கிலங்கைப் பல்கலைக்கு வந்தபோது, என்னை நேர்காணல் செய்தவர்களில் முக்கியமானவர். நேர்காணலின்போதும், அதன் பின்னர் அவர் தலைவராக இருந்த துறையில் வேலையில் இணைத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னர், துறைத் தலைவராக அவருடனான சந்திப்பிலும், அதன் பின்னர் அவருடைய துறையில் துணை விரிவுரையாளராகப் பணியாற்றியபோதும் அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டவை ஏராளம்.

பழகுவதற்கு மிகவும் இனிமையானவர், எளிமையானவர். வேலை தொடர்பான விடயங்களாக இருந்தாலும் சரி, தனிப்பட்ட விடயங்களாக இருந்தாலும் சரி, தயங்காமல் ஆலோசனை பெற அவரை அணுகுவது மிகவும் இலகுவாக இருந்தது. வேலைத் தளத்தில், தான் துறைத் தலைவர் என்ற எந்தவித ஆடம்பரமுமின்றி மிகவும் எளிமையாக பல விடயங்களையும் பகிர்ந்து கொள்வார். திறமைகளை அடையாளம் கண்டு கொள்வதில், பாராட்டுக்களைத் தாராளமாக வழங்குவதில், நகைச்சுவையாக உரையாடலை இனிமையாகச் நகர்த்திச் செல்வதில் வல்லவர்.

அவர் மட்டுமல்ல, அவரது குடும்பத்தினர் அனைவருமே அன்பானவர்கள்தான். நான் அங்கேயிருந்த காலத்தில், மிக நெருங்கிப் பழகிய நண்பிகள் மூவரும் (ஜெயரதி, சொர்ணா, சீதா), எனக்கு முன்னரே கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தில் இருந்து போய்விட்டார்கள். அப்போது நான் தனித்து விடப்பட்டதான ஒரு உணர்வு எனக்கும் இருந்தது. நாங்கள் ஒன்றாக சென்று வருவதைப் பார்த்திருந்த இரவீந்திரநாத் sir இன் அருமை மகள்கள், நான் தனியாக இருப்பதாக உணர்ந்து அவரிடம் சென்று “அவ இப்ப தனியா இருக்கிறா. நாங்கள் அவவோட friends ஆக இருக்கலாமா? அவவோட போய் உடன் இருக்கலாமா?” என்று கேட்டதாகவும், தான் “தாராளமாகப் போய் இருங்கோ” என்று சொன்னதாகவும் என்னிடம் கூறினார். அவர்கள் இருவரும் மாலை நேரங்களில் வந்து என்னையும் கூட்டிக்கொண்டு, நான் முன்னர் எனது நண்பிகளுடன் மாலை வேளைகளில் நடந்து செல்லும் இடங்களெல்லாம் நடப்பார்கள். தங்கள் வீட்டிற்கும் அடிக்கடி கூட்டிப் போவார்கள்.
நான் முன்னர் நண்பிகளுடன் இருந்து கதைத்த இடங்களில் என்னுடன் இருந்து கதைப்பார்கள் / பாடுவோம். அப்போது (1988-89) அவர்கள் இருவரும் குழந்தைகள். நாம் என்ன கதைத்தோம் என்பது நினைவில் இல்லை. ஆனால் அவர்களது அன்பு என்னைக் கட்டிப் போட்டது என்னவோ உண்மை. இப்போது நினைத்தாலும், கண்கள் பனிக்கின்றன. அவர்கள் மிகச் சிறியவர்களாக இருந்தமையால் என்னை நினைவிருக்காது என்றே நினைக்கிறேன். ஒரு சில மாதங்களில் நானும் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தை விட்டு, வவுனியா விவசாயக் கல்லூரியில் விரிவுரையாளராகப் போய்விட்டேன். நான் வேலை விட்டு நீங்கும்போது, அவர் எனக்கு எழுதித் தந்த சான்றிதழ் சிறந்ததாகவும், இன்னொருவரின் முன்னேற்றத்திற்காக அடி மனதிலிருந்து எழும் வார்த்தைகளாகவும் அமைந்திருந்தது. விரிவுரையாளர் பணியுடன் மட்டும் நின்றுவிடாமல், ஆராய்ச்சித் தளத்திலும் காலூன்றுவது நல்லது என்று எடுத்துக்கூறி, என்னை உற்சாகப்படுத்தி, தானே ஓர் ஆய்வுக்கான திட்டத்தையும் தொடக்கித் தந்தார்.

பின்னர் 1993 இறுதியில் நோர்வேக்கு இடம் பெயர்ந்து விட்டேன். நான் இங்கு வந்த பின்னர் அவர் இரு தடவைகள் நோர்வேக்கு தொழில் நிமித்தமாக வந்து போனார். ஒவ்வொரு தடவையும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கதைக்க மறக்கவில்லை. அவர் வந்திருந்த இடமும், நாம் வசிக்கும் இடமும் தூரமாக இருந்தமையாலும், மிகக் குறுகிய நாட்களே அவர் நோர்வேயில் இருந்தமையாலும் அவர் எங்களை வந்து சந்திக்க முடியாமல் போயிற்று. அப்போது அவர் என்னிடம் கூறிய “அடுத்த தடவை நோர்வே வரும்போது, உங்களிடம் வருவேன்” என்று கூறிய வார்த்தைகளே இறுதியாகப் போனது வேதனை ☹.

எனக்கு மட்டுமல்ல எல்லோரிடமும் அவர் இதே அன்புடனும், அக்கறையுடனும்தான் நடந்து கொண்டிருப்பார் என்பது தெரியும். அவரின் இயல்பே அதுதானே. மேலும் நான் திருமணம் முடித்து வந்த பின்னர் எனது மாமனார், மாமியார் இவரைத் தெரியும் என்றும், அவர் ஆராய்ச்சிப் பிரிவில் பணி புரிந்த காலத்தில் தங்கள் வீட்டிற்கு ஒவ்வொரு நாளும் வருவது பற்றியும், அவரது நல் இயல்புகள் பற்றியும் கூறக் கேட்டிருக்கிறேன். நல்ல ஒரு மனிதரை இழந்து விட்டோம்.

‘ஆறிப்போன காயங்களின் வலி’ – நூல்

Posted On ஏப்ரல் 20, 2018

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது uncategorized

Comments Dropped leave a response

வெற்றிச் செல்வியின் தடுப்பு முகாம் / புனர்வாழ்வு நிலைய வாழ்க்கையின் பதிவான ‘ஆறிப்போன காயங்களின் வலி’ வாசித்து முடித்தேன். எதையும் அனுபவித்தால்தான் உண்மையான வலி புரியும். இருந்தாலும் வாசிப்பினூடே, தொடரும் வலியும், ஏதோவொரு இனம்புரியாத குற்றவுணர்வும் இருந்துகொண்டே இருந்தது. பல இடங்கள் (அல்லது முழுமையுமே) ஒரு கலக்கத்தைத் தருவதாய் இருந்தது.

மனதை மிகவும் பாதித்த சில வரிகள்:

  • “அவங்கள் யாருக்குப் பதில் சொல்லணும் எண்டு தேவை கிடக்குது இங்க. விட்டாச்சுது எண்டு சொல்லியாச்சுது. பத்துப்பேரை விட்டிட்டு, இருபதுபேரைக் கொன்று போட்டாலும் இங்க உலகமும் கேக்காது. ஊராக்களும் கேக்க மாட்டாங்க.” எத்தனை விரக்தியான வார்த்தைகள்.
  • “போர் அவளது மேல் கையொன்றில் தன் பதிவைச் செய்வதற்காக அக் கையின் உணர்வைப் பறித்திருந்தது. சூம்பிய கையில் விரல்கள் தம் பாட்டில் விரிந்து வேலை செய்வதில்லை. ஆனால் அந்தக் கையால் நாளொன்றுக்கு எத்தனை பேருக்கு அந்த ஆழக் கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்துக் கொடுக்கிறாள்! இயலாமை என்பது எல்லாம் உடலில் இல்லை என்பதற்கு அவள் ஒரு உதாரணம்.”
  • “மனிதம். புனர்வாழ்வு என்றால் என்ன? யாராவதுஎதற்காவது பயிற்றுவிக்கப்படவுமில்லை. தொழில்துறைகள்பற்றி அறிமுகங்களைத் தரவுமில்லை. பின்பென்ன புனர்வாழ்வும் கத்தரிக்காயும்?”

அலை அழித்த தமிழ்!

Posted On நவம்பர் 13, 2016

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது uncategorized

Comments Dropped leave a response

அலை அழித்த தமிழ்!

இரு பல்கலை மாணவர்கள், அதுவும் அறிவியல் கல்விப் பிரிவில் இருக்கும் மாணவர்கள் ஆழமான அழகு தமிழில் இப்படி ஒரு நூலை எழுதியது உண்மையிலேயே ஆச்சரியப்படுத்தியது.

20161113_110403

அலை அழித்த தமிழ் – சுஜீந்தன் பரமேஸ், நீதுஜன் பாலா

கல்வி பயிலும் காலத்தில் வரலாறு எனக்குப் பிடிக்காத பாடமாகவே இருந்தது. அதற்கு, அதனைக் கற்பித்த ஆசிரியரும் ஒரு முக்கியமான காரணம். ஆனால் வரலாற்றை எப்படி ஆர்வமுடன் கேட்கும்படி (வாசிக்கும்படி) செய்வது என்று இந்த இருவரும் நன்கே தெரிந்து வைத்திருக்கின்றார்கள். மிகவும் விறுவிறுப்பாக, ஆர்வத்தைத் தூண்டும்படியாக எழுத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார்கள்.

புனைவும், கற்பனையும் கலந்திருப்பதாக அவர்கள் சொல்லியிருப்பதால், வாசிப்பினூடே (முக்கியமாக இறந்த காலம் பற்றிய பக்கங்களில்) எது கற்பனை என்றும் சேர்த்தே ஆராய்ந்து கொண்டு செல்ல வேண்டியிருந்தது. இன்னும் சில முக்கியமான வரலாற்று விடயங்களையும் எழுதியிருக்கலாமோ என்றும் எண்ணத் தோன்றியது. அவர்களுக்கே இன்னமும் மேலதிகமாக எழுதும் உத்வேகம் இருப்பதையும் கூறிவிட்டார்கள். எனவே அவர்களிடமிருந்து மேலும் எதிர்பார்க்கலாம்.

எதிர்காலம் பற்றிய கற்பனை (அல்லது எதிர்வுகூறல் என்றும் கொள்ளலாமோ), கவலைக்குரியதாக இருந்தாலும், வித்தியாசமாக எழுதப்பட்டிருந்க்கிறது. எதிர்காலம் மட்டுமன்றி, எழுத்தின் போக்கே வித்தியாசமாக இருந்ததால், எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

எனது வாசிப்பு!

Posted On நவம்பர் 13, 2016

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது நூல், ரசித்தவை, uncategorized

Comments Dropped leave a response

மலாவியில் இருந்து மீண்டும் நோர்வே வந்தாயிற்று. இந்த குளிரும், இருட்டும் கொஞ்சம் கடினமாக இருந்தாலும், நோர்வேயில் மீண்டும் இருப்பதும் நன்றாகத்தான் இருக்கிறது.

norway norway1 norway2 norway3 norway4 norway5 norway6

மலாவியில் இருந்த மெதுவான இணைய இணைப்பு வேகம், என்னை வாசிப்பின் பக்கம் மீண்டும் இழுத்து வந்தது. வாசித்த நூல்கள்:

1. Long walk to freedom – Nelson Mandela

2. நினைவாற்றல் – அகணி, சி.அ.சுரேஷ்

3. வெகுளாமை – அகணி, சி.அ.சுரேஷ்

4. ஒரு கூர் வாளின் நிழலில் – தமிழினி (மின்னூல்)

5. ஆதிரை – சயந்தன்

6. ஆறிப்போன காயங்களின் வலி – வெற்றிச் செல்வி

7. அலை அழித்த தமிழ் – சுஜீந்தன் பரமேஸ், நீதுஜன் பாலா

எல்லா நூல்களுமே நன்றாக இருந்தன. அனைத்தையும்பற்றி எழுத நினைத்திருந்தாலும் எழுத முடியவில்லை. இறுதியாக வாசித்தது அலை அழித்த தமிழ். அதைப் பற்றியாவது எழுதிவிடும் எண்ணம்.

அடுத்து வாசிக்க இருப்பது> The Monk who sold his Ferrari By Robin Sharma

அடுத்த பக்கம் »